திருப்புகழ் - இருவினை அஞ்ச (Thiruppugazh 401)

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2018
  • மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
    ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
    ACCOUNT NUMBER - 602701518901
    BANK - ICICI BANK LTD
    BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
    IFSC CODE - ICIC0001912
    CITY - MAYURAM (MAYILADUTHURAI)
    DISTRICT - NAGAPATTINAM
    STATE - TAMIL NADU
    MICR CODE - 609229005
    BRANCH CODE - 001912
    ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
    நன்றி - இங்கர்சால்
    .
    இருவினை யஞ்ச மலவகை மங்க
    இருள்பிணி மங்க, மயிலேறி
    இனவரு ளன்பு மொழியக டம்பு
    வினதக முங்கொ, டளிபாடக்
    கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
    களிமலர் சிந்த, அடியேன்முன்
    கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
    கடுகிந டங்கொ, டருள்வாயே
    திரிபுர மங்க மதனுடல் மங்க
    திகழ்நகை கொண்ட, விடையேறிச்
    சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
    திகழந டஞ்செய், தெமையீண
    அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
    அமலன்ம கிழ்ந்த, குருநாதா
    அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
    அமளிந லங்கொள், பெருமாளே

Komentáře • 259

  • @prabhakaran6502
    @prabhakaran6502 Před 3 lety +18

    இருவினை யஞ்ச மலவகை மங்க
    இருள்பிணி மங்க ...... மயிலேறி
    இனவரு ளன்பு மொழியக டம்பு
    வினதக முங்கொ ...... டளிபாடக்
    கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
    களிமலர் சிந்த ...... அடியேன்முன்
    கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
    கடுகிந டங்கொ ...... டருள்வாயே
    திரிபுர மங்க மதனுடல் மங்க
    திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
    சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
    திகழந டஞ்செய் ...... தெமையீண
    அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
    அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
    அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
    அமளிந லங்கொள் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    இருவினை யஞ்ச ... நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய,
    மலவகை மங்க ... மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய,
    இருள்பிணி மங்க ... அஞ்ஞானமும், நோய்களும் அகல,
    மயிலேறி ... நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து,
    இனவருள் அன்பு மொழிய ... அருள் வாக்குகளும், அன்பான
    மொழிகளும் கூற,
    க டம்புவின் அதகமும் கொடு ... உன் கடப்பமலரின் உயிர்தரு
    மருந்தாம் தேனைச்சுற்றி
    அளிபாட ... வண்டுகள் ரீங்காரம் செய்து முரல,
    கரிமுகன் எம்பி முருகனென ... யானைமுகன் கணபதி
    'என் தம்பியே, முருகா' என்றழைக்க,
    அண்டர் களிமலர் சிந்த ... தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய,
    அடியேன்முன் கருணைபொழிந்து ... என் முன்னே கருணை
    மிகக் காட்டி
    முகமும் மலர்ந்து கடுகி ... மலர்ந்த முகத்தோடு வேகமாக
    நடங்கொடு அருள்வாயே ... நடனம் செய்தவாறு வந்து அருள்
    புரியவேண்டும்.
    திரிபுர மங்க மதனுடல் மங்க ... திரிபுரம் அழியவும், மன்மதனின்
    உடல் எரியவும்,
    திகழ்நகை கொண்ட ... விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த
    விடையேறிச் சிவம் ... ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான்
    வெளி யங்கண்அருள் குடிகொண்டு ... பரவெளியில் திருவருளோடு
    வீற்றிருந்து,
    திகழந டஞ்செய்து ... விளங்க நடனம் செய்து,
    எமையீண் அரசியிடங்கொள ... எம்மைப் பெற்ற தேவியை இடது
    பாகத்தில் ஏற்றுக்கொண்டு,
    மழுவுடை யெந்தை அமலன் ... மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை
    மாசற்றவன்
    மகிழ்ந்த குருநாதா ... மகிழ்ச்சியடைந்த குருநாதனே,
    அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை ... திருஅண்ணாமலைக்
    குன்றிலே மகிழும் குறமங்கையின்
    அமளிந லங்கொள் பெருமாளே. ... மலர்ப்படுக்கையிலே மனமகிழும்
    பெருமாளே.

    • @rajith2383
      @rajith2383 Před 2 lety +1

      அருமையான பாடல் விளக்கம். இன்னும் யோக நிலையைவிளக்கும் ஆழமனா பாடல் இது

    • @Lallissamayalarai
      @Lallissamayalarai Před 2 měsíci

      மிக்க நன்றி

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan2693 Před 3 měsíci +15

    இந்த பாடலை கேட்க நான் மூஞ்சேன்மதில் புண்ணியம் seidiruken என நினைக்கிறன்
    முருகனுக்கு அரோஹரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dmathivanan9579
    @dmathivanan9579 Před 3 měsíci +11

    முருகா ! என் வாழ்நாள் முழுவதும் திருப்புகழ் கேட்டுக் கொண்டே இருப்பேன்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @DiniSmart427
    @DiniSmart427 Před 3 lety +101

    நான் கேட்டு ஈர்ப்புக்கொண்ட முதல் திருப்புகழ் பாடல் திருப்புகழைப் படிக்க செய்த என் தலைவர் சம்பந்த குருக்கள் ஐயா நன்றி....குருநாதர் அருணகிரிநாதர்....

  • @thamizhmadhu
    @thamizhmadhu Před 4 lety +69

    முருகன் உருவப்படத்தொடு வளமான குரலில் திருப்புகழை காலையில் கேட்கும்போதே மனதில் பரவசம் ஆட்கொள்கிறது. எத்தனை சொத்துக்களுக்கு நாம் தமிழர்கள் சொந்தக்காரர்கள் என்கிற பெருமிதம் வருகிறது

    • @karthikn5
      @karthikn5 Před 2 lety +3

      முருகா சரணம் 🙏

    • @chanakyagan
      @chanakyagan Před rokem +1

      THIS IS CHUCH FUNDED PICTURISATION OF MURUGA THANKS TO NAAM THAMIZAR CRYPTO CHRISTIAN SIMON

    • @thamizhmadhu
      @thamizhmadhu Před rokem

      @@chanakyagan அபபோ முருகன் பெயரை சு பிராமிணன் ஆக்கி பூணுல் போட்டவர் யாரு?

  • @kalainesanrethinam4696
    @kalainesanrethinam4696 Před rokem +28

    திருபுகழை இத்தனை அருமையாக பாடீ கண்ணில் நீர் வரவழைத்ததர்க்கு நன்றி ஐயா

  • @trendingviralvideo6
    @trendingviralvideo6 Před rokem +29

    வாழ்க்கைல, வாழ்வா சாவானு ஒரு நிலைமை வரும் போது... வீரர்கள் சொல்ர ஒரே வார்த்தை... வெற்றிவேல்! வீரவேல்!... செத்தாலும் முருகா சரணம்... 🙏

  • @suganthimani6191
    @suganthimani6191 Před 2 lety +33

    தமிழ் என்றால் அழகு
    முருகன் என்றாலும் அழகு.
    இனிமை.

  • @rajasekaran-75
    @rajasekaran-75 Před 2 lety +39

    என்ன‌ தவம் செய்தேனோ நானறியேன்..
    இது முன்னைப் பிறவிப் பயனன்றி வேறில்லை..
    பனிவான வணக்கங்களுடன் நெஞ்சார்ந்த நன்றிகள்...🙏🙏

  • @devi01130
    @devi01130 Před 2 lety +31

    தெய்வீக குரலில் திருப்புகழை கேட்க இனிமையாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻

  • @parimalaravi1282
    @parimalaravi1282 Před rokem +22

    உருகி பாடிய அய்யா வை வணக்குகிறேன்

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 Před 2 lety +28

    எத்துணை என் மனத்தில் என் தமிழ்க் கடவுளையும் தமிழையும் தோழுதெழுவதில் முருகா இப்பிறப்பில் இது போதும் எம்பெருமானே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Před 2 lety +16

    முருகப்பெருமான் அருளுடன் ஐயா நலமாக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் 🙂

  • @Shivakumar2810
    @Shivakumar2810 Před 4 lety +40

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் நாவில்
    அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.

    • @manimekalaip3427
      @manimekalaip3427 Před 2 lety

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @Thayuphysio
      @Thayuphysio Před 4 měsíci

      @@manimekalaip3427wat da hell??!!!!

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 Před 4 lety +13

    கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி கார்த்திகேயா போற்றி எம்பெருமானே போற்றி முருகப்பெருமானே போற்றி போற்றி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 Před 4 lety +25

    சம்பந்த குருவே முருகன் உங்களுக்கு எல்லா வளமும் புகழம் தருவார். நீடூழி வாழ்க.

    • @malininaganathan4852
      @malininaganathan4852 Před 3 lety

      i think the singer is aunagiri .the voice belong to arunagiri . he passed away .

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 10 měsíci +7

    ஓம் ஶ்ரீ சக்திவேலே போற்றி🙏🌺போற்றி🙏🌺போற்றி🙏🌺

  • @krishnasamypodhur768
    @krishnasamypodhur768 Před rokem +6

    உங்கள் தெய்வத்திருப்பணி தொடர்ந்து என்றும் நிலை பெற்று ஓங்கி ஒழிக்கப்படும் வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Před rokem +5

    முருகப்பெருமான் அருளுடன் ஐயா நலமாக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன்

  • @velayuthamsaravanakudam2914

    நமது வழிபடு கடவுளாகிய முருகப்பெருமானின் திருவடிதாமரையில் நீங்காத பற்றுடன் .வாக்கு சற்குருநாதர் அருணகிநாதர் சுவாமிகள். வாழ்க்கைக்கு திருப்புகழ்.

  • @anjanakshi2539
    @anjanakshi2539 Před 2 lety +6

    மாயோனின் திருவடியில் லயித்திருந்தேன்.மாயோன் மருகனின் புகழை இன்றுதான் கேட்டேன்.மிகவும் அருமை.பாடியவரின் குரலும் அற்புதம்

  • @farithabanu3199
    @farithabanu3199 Před 3 měsíci +1

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் அப்பா எனக்கு துணை 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚

  • @chandramuthukrishnan7546
    @chandramuthukrishnan7546 Před 2 lety +10

    அருமையான பாடல்கள்.நன்றாக தெய்விககுரலில்பாடுகிறார்.

  • @swaminathanv6827
    @swaminathanv6827 Před 6 měsíci +2

    இவ்வளவு சிறப்புடன் மனமுருக பாடிய திருப்புகழை கேட்டு சப்த நாடியும் அடங்கி கண்ணில் நீர் பெருக இன்புற்றேன்.
    பாடடைபாடியவர் முருகபெருமானின் முழு கருணையும் பெற்ற மகான் ஆவார்'
    மேலும் அவர் நீடுழி வாழ, எல்லாம் வல்ல வயலூர் வள்ளல் பெருமான் தனிப் பெருங்கருணை என்றென்றும் துணை நிற்கும்.

  • @kannanperiyasamy5893
    @kannanperiyasamy5893 Před 5 lety +37

    தமிழின் தலைவா போற்றி!தமிழர்களின் இறைவா போற்றி!குறிஞ்சி நிலத்தலைவா போற்றி!செந்தமிழ் செயோனே போற்றி!
    முப்பாட்டன் முருகனே போற்றி!போற்றி!!🙏🙏🙏🙏

    • @Bharathiyan.
      @Bharathiyan. Před 4 lety +5

      மனநோயாளிகளா திருப்புகழும் திருமுருகாற்றுப்படையும் முருகனது உருவ அமைப்பை தெளிவாக சொல்கிறது...
      ஈனத்தனமான ஆபிரகாமிய மத அடிமைகள் முருகனின் உருவை மாற்றி இழிவுசெய்கின்றனர்...
      முப்பாட்டன் தாத்தா என்பது பிறகு முப்பாட்டன் எப்படி கடவுளாவான் ஏசுவே மெய்யான தெய்வமென்பான்.
      தமிழறியாத தற்குறிகள் தமிழ்தேசியம் பேசுவது தமிழினத்திற்கே வாய்த்த சாபக்கேடு...
      "துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க என நினைக்கிற் அவர் குலத்தை முதல் அரக்கனையும் எனக்கொரு துணையாகும்... திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை நிறுத்தன் எனதுளத்தில் உறை கருத்தன் மயில் நடத்தும் குகன் வேலே"

    • @Bharathiyan.
      @Bharathiyan. Před 2 lety

      @Kailasa Vaasi அப்போ கண்ணன் தமிழ் கடவுள் தான் கருப்பாதான் இருப்பான்.
      நா உங்களமாதி கற்பனைல பேசல போய் சங்கத்தமிழ் இலக்கியங்கள் படிங்க திருமுருகாற்றுப்படை தொல்காப்பியம் திருப்புகழ் எல்லாமே தெள்ளதெளிவா முருகன சொல்லுது. எப்படி வழிபட்டாலும் அவன் இறைவன் தான். ஆனா வெத்து அரசியலுக்காக அவனது உருவத்தை மாத்தி வாய்க்கு வந்ததை உளறாதீங்க நண்பா. திருப்புகழ் படிச்சு மனம் தெளிவாகுங்க

  • @jayasreejayachandran2989

    மிகவும் அருமை ஐயா 🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @ramarraamar6556
    @ramarraamar6556 Před rokem +6

    தமிழ் அழகனுக்கு திருப்புகழ் இனிமை. குருவே சரணம்.

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 Před 3 lety +14

    அற்புதம் !
    அற்புதம்!!
    அற்புதம்!!!

  • @nammamuscat3328
    @nammamuscat3328 Před 4 lety +6

    வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு.
    சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த முருகன் புகழ் ஓங்குக......

  • @palanichami7082
    @palanichami7082 Před 2 lety +6

    ஓம் சரவணபவாய
    ஓம் சரவணபவாய
    ஓம் சரவணபவாய . . . .

  • @kulanayagamrajaculeswara4131

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா.

  • @muruhavelmuruhavel1775
    @muruhavelmuruhavel1775 Před 5 lety +18

    வாழ்க தமிழ்
    வாழ்க தமிழ் பட உள்
    ஓம் சரவணபவ,,

  • @MohanRaj-bj4ht
    @MohanRaj-bj4ht Před rokem +11

    குரல் மிகவும் அழகு!!!💐

  • @user-uq2xb8vf4l
    @user-uq2xb8vf4l Před 2 měsíci

    முருகா நீ வாமுருகா உண்னை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பாட்டி

  • @vijayasharathigaming3441
    @vijayasharathigaming3441 Před 5 měsíci +2

    Ohm murugan pottrrii🙏🙏🙏 ohm saravana bava ohm 🙏🙏🙏

  • @somusundaram3047
    @somusundaram3047 Před rokem +4

    ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Thayuphysio
    @Thayuphysio Před 4 měsíci +2

    One nice fine song!!!

  • @anurabbitsfarm3143
    @anurabbitsfarm3143 Před 6 měsíci +2

    ஐயா வணக்கம் உங்கள் பாடல் மிகவும் அருமையாக உள்ளது முருகன் அருளால் உலகம் நல்வாழ்வில் உயர வேண்டும்

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln Před 5 měsíci +1

    அருமையாக உள்ளது என்பதை சொல்ல வேண்ட

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +4

    Arunagiri Nathar swamigal Thiruvadikal Saranam 🙏🙏🙏🙏🙏🙏 Guruve Saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @SambathVengadachalam-er1os
    @SambathVengadachalam-er1os Před 3 měsíci

    திருச்செந்தூர் முருகாஎனக்குஉடல்நிலலைநல்லவைஇறைவா

  • @prabhusmart6602
    @prabhusmart6602 Před 2 lety +8

    ஓம் சரவணபவ அப்பா 🙏

  • @hgr1645
    @hgr1645 Před 5 lety +30

    Every devotee of lord Dhandayuthapani imagines him with his mind and heart. You see him as a warrior who defeated the suras... Best wishes

  • @gurunathan2384
    @gurunathan2384 Před 2 lety +8

    ஐயா அருமையான குரல்....

  • @navajeethss
    @navajeethss Před 3 lety +5

    அருமையான முயற்சி தொடரட்டும் உங்கள் சேவை....

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +3

    மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்க வையகம்
    வெற்றி வேல்முருகனுக்கு அரகரோகரா 🌺🌺🌺

  • @kowsalyamunisamy8461
    @kowsalyamunisamy8461 Před 2 měsíci +1

    Ivaroda kural vazham . Katti ilukkudhu 😮❤❤

  • @kavithaj3334
    @kavithaj3334 Před měsícem

    இருவினை யஞ்ச மலவகை மங்க
    இருள்பிணி மங்க ...... மயிலேறி
    இனவரு ளன்பு மொழியக டம்பு
    வினதக முங்கொ ...... டளிபாடக்
    கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
    களிமலர் சிந்த ...... அடியேன்முன்
    கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
    கடுகிந டங்கொ ...... டருள்வாயே
    திரிபுர மங்க மதனுடல் மங்க
    திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
    சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
    திகழந டஞ்செய் ...... தெமையீண
    அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
    அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
    அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
    அமளிந லங்கொள் ...... பெருமாளே.

  • @vijayakumar-os1ks
    @vijayakumar-os1ks Před 4 lety +16

    WHAT A SWEET RECITATION! YOUR RARE WORK IS HIGHLY APPRECIATED! MAY GOD BLESS YOU TO IGNITE THE FUTURE GENERATION WITH YOUR SPIRIT AND DEVOTION.........................!

  • @callmeshan6087
    @callmeshan6087 Před 3 lety +6

    பாடலைக்கேட்டவுடன்தீவினையென்பதுதீர்ந்தேவிடும்முருகா🙏🙏

  • @mohansamimuthu6301
    @mohansamimuthu6301 Před rokem +3

    சம்மந்த குருக்கள் அய்யா
    நன்றி.

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 Před 8 měsíci +3

    Soul enriching songs. We gain enormous mental strength on hearing thirupugazh

  • @rikky0078
    @rikky0078 Před 5 lety +16

    அருமை. ஓம் சரவண பவ🙏

  • @shanmugamganapathy9093
    @shanmugamganapathy9093 Před 9 měsíci +1

    இந்த பாடலை கேட்க்கும் போது புரசை அருணகிரி ஐயா ஞாபகம் நன்றிங்க வணக்கம்

  • @naatchiarvel
    @naatchiarvel Před 10 měsíci +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Před 3 lety +12

    Very nice to listen ..soo nice refreshes body and soul..everyday I listen

  • @asohanchidambaram4478
    @asohanchidambaram4478 Před rokem +5

    Very beautiful song. Very sweet voice

  • @sandhamanin5278
    @sandhamanin5278 Před 3 měsíci

    ஓம் சரவண பவா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +3

    மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க 🌺🌺🌺

  • @mogandossrao6952
    @mogandossrao6952 Před 5 lety +18

    Nalla tamizh karka kelungal thirupughai padalgal by this gurukkal voice .

  • @naatchiarvel
    @naatchiarvel Před rokem +1

    முருகா

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Před 2 měsíci

    முருகா அரோகரா முருகா நன்றி🙏

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Před rokem +1

    எல்லாப் பாடல்களையும் இப்படி பதிவேற்றுங்கள்.

  • @Thayuphysio
    @Thayuphysio Před 4 měsíci +1

    ஒரு நல்ல பாட்டு

  • @Vision.2026
    @Vision.2026 Před 4 měsíci +1

    Getting addicted to this song

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Před 9 měsíci

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @shanmugamsangarapillai1975

    nandri selvaraj iyya migga nandri atputhmana thirupugal sambantha gurugal iyyavin divine voice of bakthi took me lotus feet of murugan without any doubts at once vetri vel murugankku arohara Australia

  • @damodaransivagurunathan8954
    @damodaransivagurunathan8954 Před 5 měsíci

    அருணகிரியாரின் முருகபற்று சொல்லாட்சி உங்கள் குரலில் அமுதமாக பாய்கிறது, ஐயா.

  • @pramodhnarayanaswamy5155
    @pramodhnarayanaswamy5155 Před 4 lety +4

    முருக முருக

  • @sivacnccentre4917
    @sivacnccentre4917 Před 3 lety +3

    OM MURUGA

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +2

    Muruga enaku kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @tharini8521
    @tharini8521 Před 3 lety +4

    அருமை அருமை.

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +1

    Om Muruga 🙏🙏🙏🙏🙏🙏 nan intha month unaithan nambi ullen enakku kulanthai vaitril thanga vendim nee than thunai puriya vendum 🙏🙏🙏🙏🙏

    • @ncwannapoorni1089
      @ncwannapoorni1089 Před rokem +1

      Intha matham baby confirm aakum 🙏🙏🙏🙏🙏🙏

  • @pramodhnarayanaswamy5155
    @pramodhnarayanaswamy5155 Před 9 měsíci

    Om namah shivaya
    திருமயிலை சிங்காரவேலவர் போற்றி
    ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிங்காரவேலவர் துணை

  • @nirmalabalasingam4319
    @nirmalabalasingam4319 Před 3 lety +1

    உங்கள் குரல் கேட்க இனிமையாக

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Před 4 měsíci

    ஓம் முருகா போற்றி போற்றி..

  • @user-cn5ns9gy5p
    @user-cn5ns9gy5p Před 2 měsíci

    மெய்சிலிர்க்கின்றதே.....

  • @surissoul
    @surissoul Před 3 měsíci

    Skandan Arul is felt in hearing this 🎶

  • @patchaiperumal6145
    @patchaiperumal6145 Před měsícem

    Muruga Saranam saranam

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +2

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +1

    Om Muruga nandri 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanannellaiappan1628
    @saravanannellaiappan1628 Před 3 lety +3

    Sampandam gurukal vananugukiren 🙏🙏🙏🙏

  • @anandkumarn5892
    @anandkumarn5892 Před 2 lety +5

    Divine feel...

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +4

    Thank you very much you have a great day 🌺🌺🌺 God Bless you and your family 🌷🌷🌷

  • @saralamala206
    @saralamala206 Před 3 lety +1

    Vetri vel murugan

  • @gs.gowtham6541
    @gs.gowtham6541 Před 4 měsíci

    முருகா சரணம்

  • @Thayuphysio
    @Thayuphysio Před 28 dny

    ஒரு நல்ல பாடல்

  • @vishwa9678
    @vishwa9678 Před 7 měsíci

    மண் மட்டுமே 1:17

  • @silambamprabakaran6060
    @silambamprabakaran6060 Před 5 lety +15

    குரல் அருமை, முருகன் படத்தை மாற்றவும்,

    • @senthilkumarns4077
      @senthilkumarns4077 Před 5 lety +3

      You cant accept Lord Muruga in Black color, right?!

    • @DiniSmart427
      @DiniSmart427 Před 5 lety +1

      @@senthilkumarns4077 அப்படி அல்ல எந்த ஒரு தமிழ் நூலிலும் தமிழ் கடவுள் இப்படி இருந்ததாக குறிப்பிடவில்லை.

    • @seenimsenthil
      @seenimsenthil Před 5 lety

      @@DiniSmart427 மார்வாடி போல் இருப்பார் என்று எவ்வாறு நம்புகிறீர்கள்

    • @DiniSmart427
      @DiniSmart427 Před 5 lety +1

      நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை

    • @seenimsenthil
      @seenimsenthil Před 5 lety

      @@DiniSmart427 எப்பொழுதும் இறைவனை மிகைப்படுத்தி தான் பாடல்கள் எழுதப்படும்

  • @simplesamayal2385
    @simplesamayal2385 Před 3 lety +2

    Arumai

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 Před 3 lety +1

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +1

    Om Muruga Potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarvydian7274
    @shankarvydian7274 Před měsícem

    It will be helpful if the singer mention Ragam and thalam for Each thirupugazh

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 Před 4 lety +4

    Sir nan dinamum ketkiren. Naal thavaramal

  • @sathyamoorthy7519
    @sathyamoorthy7519 Před rokem +1

    கோடி நன்றிகள் நண்பரே

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před 4 lety +1

    Thirupugaz Padi Muruganin Arellano Perwom! Gna Pandidha Om!

  • @kandasamymani4911
    @kandasamymani4911 Před 2 lety +3

    Very good voice

  • @chandransinnathurai7216

    மிக்க நன்றி ஐயா முருகா போற்றி😡😡😡😕😕😕Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @vsmkrish
    @vsmkrish Před 4 lety +5

    Enna voice superrrrrr

  • @karthikn5
    @karthikn5 Před 5 lety +10

    Work of Art. God bless you