ஊருக்குள் உருப்படாதவன், பாருக்கே பயன்படுவானவன்

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2023
  • அறம் உயிர்நாடியாய், அருந்தமிழனன்னையாய் மறம் மாறா மல்லன் புறம் காட்டா திறமுடையோனவன் தினவெடுத்து புயம் துடிக்கும் தென்னிமயம் எழுவது; தீரப்புயல் தாக்கியும் கோரத்தீ மூட்டியும் பொய்துயில் கலையா பொன்னரங்கன் அறிதுயிலும் பூநிலத்தெற்கில் தேவதேவப் பொறியெழுமே. அவன் ஆய கலை அறுபத்தி நான்கும் ஆதிமுனியருளுமுன்னர் உற்ற குடிக்கும் நயம் கொடாதவன் ஊருக்குள் உருப்படாதவன்
    பாருக்கே பயன்படுவானவன் யாருக்கும் பயப்பாடானவன் நீதிக்கே உடன்படுவானென நெஞ்சார வாக்குரைத்தேன். நஞ்சர் நரிகளை நாடெல்லாம் கருவறுத்து நல்லோரகம் குளிர்வித்து அஞ்சாப்புலிகளை அரவணைத்து பொல்லா அடும் பூனையை புறம் ஓட்டி அனைவர் வலியையும் அவனுணர்ந்து ஆழமாய் நிலைக்கும் இன்பமுற காலமெலாம் வாழவைக்கும் வள்ளல் அவனுக்காய் வானமே வாழ்த்து பாடும்.
    செருக்குறு சீழ்த்தலைகள் சிறுமையொடு இயக்குகின்ற அழுக்கியலுள் அங்கம் புதைக்காது அறனுக்கு அடிபணியும் எம் அஞ்சான் இழிநிலை இயக்கம் எதனையும் இயக்கிடும் ஈடுபாடு எள்ளளவும் கொள்ளான். அழுக்குறு வேந்தர்களால் அழுக்காறு மாந்தர்களால் செழித்திடும் அரசியல் ஆலம் தொட்டு அகங்கெட்டு அலப்பறையாகிட அண்ணலே துயிலிலும் உள்ளான். எள்ளளவே ஆயிடினும் இயலும் பொருள் விதைத்து இருள் மாந்தர் மனம் பிடித்து பயனறுக்கும் பண்பு கூட பாவம் அவனுக்கில்லை யென்று பரமனே சொன்னானென்றால் பாராய் ! எம் பரிமேலழகனே பரந்ததோர் பேரரசையே வெல்வான் கேளாய் !

Komentáře • 12

  • @thiru5636
    @thiru5636 Před 11 měsíci

    அருமையான பாடல் தேர்வு
    கருஞ்சட்டை கூட்டத்திற்கும்
    கழகத்திற்கும் அண்ணா கூறியதை அப்படியேகூறியது
    சிறப்பு.

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 11 měsíci +1

    ❤🙏 வாழ்த்துகள் ஐயா.
    அறம்பாடி சித்தர் பாடல் 163
    🌸 ஒரு கண்ணன் மடமமைப்பான் அதில் ஒளிந்து கொண்டே பொய்க்கண்ணன் பலபேரும் படையமைக்க கருங்கண்ணாயிரம்பேர் காசினியில் பதிந்து கொண்டு பாதகங்கள் புரிந்து வென்றே பங்கய பாவையரின் பால்மனம் புகுந்து கொள்ள பக்தி வேடம் பூண்டபடி பன்னக அரவங்களாய் களைகளையே கொல்லாது கருணையின்றி உயிர் கொல்லும் இழி மாந்தர் விளைந்தவண்ணம் கண்டமெலாம் கடந்து நிற்கும். அது அண்டங்களில் பூமி பந்தின் அடிவயிறு தனை விடுத்து அத்தனை அங்கத்திலும் அவையமைத்து அஞ்சனவன் அவதார பெருமைதனை உலகறிய உயர்த்திவிட்டு அறங்கெட்ட அற்பரையும் நிரப்பிவிட்டு சிவநெறிமேல் அவதூறு செய்திகளை பரப்பி விடும். செவ்வேள் வாழ்வியலை சிந்தை பாய்ச்சி சிதைக்க எழும். அது தமிழ் மரபின் தனித்துவத்தை தயங்காது தகர்த்தெறியும் நோக்கினிலே ஆட்டுத்தோலுடுத்தபடி அதனுள்ளே அரவமின்றி ஒளிந்திருக்கும் ஓநாயின் உருவேற்று உயர் தமிழர் ஒருமையினை ஒரு வழியாய் பிரிக்க வரும் உண்மையினை உணராது அண்ணலின் காலம் வரை அறிவிலியாய் அதிலுறைந்து அடிமையராய் தொடருவரே. புலாலுண்ணா பொய்வடக்கர் புதைத்து வைத்த வலைக்குள்ளே கலாலுண்ட கிறுக்கரைப்போல் கண்டதெல்லாம் கரும்பெனவும் கொண்டதெல்லாம் குருவெனவும் இறவா இலக்கியத்தை ஈன்றெடுத்த தமிழுக்கு எள்ளளவும் உதவாத உறவிலி போல் உயிர்க்காத பயிர் வளர்த்து உய்யவிடா தத்துவத்தை ஓதச் சொல்லி பாதையிடும். மேதைகட்கு மேதையாம் எம் மேன்மகன் மிளிர்ந்ததுமே சோதனைகள் முற்று பெற்று சூத்திரங்கள் சித்து பெற்று தீதனைத்தும் திரும்ப பெற்றே தீக்கண்ணன் விருப்பமுற்றே சாதனைகள் சறுக்கலின்றி சரித்திரத்தின் சிகரம் தொடும். சாகா வரமுற்றோன் மூவாமுகுந்தனென்று சாத்தனுக்கும் சங்கறுக்கும் சூத்தனுக்கும் சாவு வந்து தீண்டுமென சவால் விட்டு சாற்றுகின்றேன்.

  • @thiru5636
    @thiru5636 Před 11 měsíci

    சிறப்பு ஐயா

  • @GM-R
    @GM-R Před 11 měsíci

    👍

  • @shoprite2015
    @shoprite2015 Před 11 měsíci

    🙏🙏🙏

  • @user-mx2qc4jz6i
    @user-mx2qc4jz6i Před 11 měsíci

    ஓம் நமசிவாய

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci +1

      ஓம் நமசிவாய ஜெய ஜெய நமசிவாய

    • @thiru5636
      @thiru5636 Před 11 měsíci

      ஓம் அறம்பாடி சித்தாய நம:
      நன்றி இராதாகிருஷ்ணன் ஐயா

  • @velayuthamable
    @velayuthamable Před 11 měsíci

    வாழ்த்தி வரவேற்கிறோம் ஐயா

  • @user-wk6cs5do3b
    @user-wk6cs5do3b Před 11 měsíci

    அருமை ஐயா , கலிகாலத்தில் கலியும் கல்கி என்றே சொல்லிக்கொள்ளும் போல😂