இயற்கையால் சூறையாடப்பட்டதா மகாபலிபுர சிற்பங்கள்? இதுவரை யார் கண்ணிலும் படாத ஆழ்கடல் அதிசயங்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - யாருக்கும் தெரியாத கோவில்கள்
    01:10 - மறைக்கப்பட்ட ரகசியம்
    02:32 - ரகசிய அறை
    03:27 - யாருமே போக முடியாத இடங்கள்
    04:58 - கடற்கரை கோவில்
    06:07 - இந்தக் கோவில்களின் நோக்கம்
    06:55 - மர்மமான மகாபலிபுரம்
    08:10 - விலங்குகளின் சிற்பம்
    09:51 - புலி குகைகளின் Model
    11:39 - முன்னோர்களின் adavanced brain
    12:28 - முடிவுரை
    hey guys, இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு சில கர்கோவில்கள காட்டபோறேன். இதெல்லாம் மஹாபலிபுரத்துல இருக்கற ரொம்ப பழைய கர்கோவில்கள். நீங்க முன்னாடியே மஹாபலிபுரம் போயிருந்திங்கன்னாக்கூட இதெல்லாம் கண்டிப்பா பாத்திருக்க மாட்டிங்க. இதெல்லாம் யாரும் உங்களுக்கு கண்டிப்பா காட்டி இருக்கவும் மாட்டாங்க. இது சுற்றுலா பயணிகள் வர்ற இடமும் கிடையாது. And பெரும்பாலும் tour guidesக்கும் இப்படி ஒரு இடம் இருக்குன்னு கூட தெரியாது.
    You tubeல கூட எல்லா channelகளும் ரொம்ப பெருசா ரொம்ப அழகா இருக்கற கோபுரங்கள், சின்னங்கள தான் திரும்ப திரும்ப காட்றாங்க. நான் கூட அதையே தான் பண்ணியிருக்கேன்ற குற்றவுணர்வு எனக்கும் இருக்கு. ஆனா இன்னிக்கி, இந்த video, ரொம்ப வித்யாசமா இருக்க போகுது. சரியா ??
    அதோ அங்க கடற்கரையில கல்லு கல்லா தெரியுது பாருங்க. அங்க தான் போகப்போறோம். இந்த கல் எல்லாம் வெறும் கற்கள் தானா இல்ல ஏதாவது பழைய காலத்து கோவிலான்னு கிட்ட போய் பாக்கலாம் வாங்க.
    archaeological paperல கூட இந்த இடங்களை பத்தி எதுவும் சொல்லல. ஏன்னா இதை எல்லாம் வெறும் கற்களாத்தான் எல்லாரும் பாக்காரங்க. சிற்பங்களா பாக்கல. ஆனா நிஜமாவே ஒரு பெரிய ரகசியத்தை எல்லாரும் மறைக்கறாங்க.
    சரி. இப்ப இத பாருங்க. இது தண்ணிக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு. இது இயற்கையாவே இப்படித்தான் இருக்கா இல்ல இந்த மாதிரி செதுக்கி இருக்காங்களா?
    இதுல உங்களுக்கு ஏதாவது கருவிகளை உபயோகிச்ச அடையாளம் தெரியுதா? இப்ப பாருங்க இத வேற angleல இருந்து எடுத்து இருக்கோம்.
    இதுல வித்யாசமா ஏதாவது தெரியுதா? உங்களுக்கு, ஏதாவது செதுக்கி இருக்கற மாதிரி தெரியுதா ?
    ரொம்ப வித்யாசமா தெரியுது. அது ஓரு கையா இல்ல ஒரு எருமையோட தலையா என்ன ?
    தண்ணி பட்டு பட்டு இந்த சிற்பங்கள் எல்லாமே ரொம்ப smooth ஆயிடுச்சு அதனால பாக்கறதுக்கு ரொம்ப வித்யாசமா கூட தெரியுது.
    இது தான் மஹிஷாசுரன், எருமை தலையோட இருக்கற ஒரு அரக்கன். அவரோட வலது கைய வாய்கிட்டயும் இடது கைய தலைக்கு மேல தூக்கியும் வச்சிருக்காரு பாருங்க.
    இது ஒரு இயற்கையான கல்லு இல்லன்றது இப்ப நமக்கு நல்லா தெரியுது. இது எல்லாமே செயற்கையா செய்யப்பட்ட சிற்பங்கள் தான்.
    அந்த எருமையோட நாக்கு வெளியில தள்ளி இருக்கு பாருங்க. அவர் கைல இருக்கற bracelet கூட எனக்கு நல்லா தெரியுது.
    அப்பறம் இன்னொன்னு, இன்னும் கவனிச்சி பாத்தீங்கன்னா, அந்த கள்ளுக்குள்ள நடுவுல சின்னதா ஒரு சதுரமான அறை இருக்கு பாருங்க. அந்த அறைல ஒரு பெண் தெய்வம் இருக்கு பாருங்க. அவங்க தான் மஹிஷாசுர மர்த்தினி. அந்த எருமைத் தலையோட இருக்கற அரக்கன கொன்னதுனால இவங்களுக்கு இந்த பேரு வந்திருக்கு.
    அந்த அறைக்கு ரெண்டு பக்கத்துலயும் ரெண்டு சிங்கங்கள் காவல் காத்துகிட்டு இருக்கு. இந்த அம்மனுக்கு ரெண்டு பக்கத்துலயும் எப்பவுமே சிங்கங்கள் இருக்கும்.
    அப்பறம் இன்னொன்னு அந்த சதுரமான அறைக்குள்ள மஞ்சள், குங்குமம் எல்லாம் வச்சிருக்காங்க பாருங்க. அப்படின்னா இங்க இருக்கற ஜனங்கள் இங்க வந்து இந்த அம்மன வழிபடறத வழக்கமா வச்சிருக்காங்க.
    அவங்க இங்க இந்த அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் எல்லாம் வச்சி பூஜைகளும் பண்ணிட்டு போராங்கன்றது நல்லா தெரியுது.
    இந்த விஷயம் தான் எனக்கு ரொம்ப interestingஆ இருக்கு ஏன்னா, வருஷத்துல பாதி நாள் இந்த கோவிலுக்கு வரவே முடியாது. ஏன்னா கடல் தண்ணி இங்க அவ்வளவு இருக்கும்.
    இப்ப இங்க நடந்து வர்றது சுலபமா இருக்கு and தண்ணியும் கொஞ்சம் தூரமாத்தான் இருக்கு. என்னவோ நான் தான் ஒண்ணுமில்லாதத பெருசாக்கி சொல்றேன் அப்படின்னு நினைச்சிகாதிங்க. நான் முன்னாடியே நெறைய முறை இங்க வந்துருக்கேன்ங்க. பெரும்பாலான நேரம் இவ்வளவு தூரம் கூட உள்ள வர முடியாதபடி கடல் தண்ணி அதிகமா தான் இருக்கும்.
    இன்னிக்கு என்னவோ என்னோட அதிரஷ்டம், படம் புடிக்க முடியுது and அது கூட nature, இயற்கை, கொஞ்சம் வழி விட்டு அனுமதி கொடுத்ததுனால தான் முடியுது.
    இயற்கையன்றது எவ்வளவு சக்தி வாய்ந்த விஷயமா இருக்கு இல்ல? இங்கிருந்து கிட்ட தட்ட ஒரு 100 அடி தள்ளி அங்க தண்ணியில ரெண்டு கல்லு இருக்கு பாருங்க.
    இங்க இருக்கற ஜனங்கள் என்ன சொல்ராங்கன்னா, அந்த ரெண்டு கற்கள் கூட, இப்ப இங்க பாத்தோமே, இதே மாதிரி கோவில்கள் தான் அப்படின்னு சொல்ராங்க.
    ஆனா அந்த எடத்துல தண்ணி எப்பவுமே குறையாம இருக்கு. என்னிகாச்சும் ஒரு நாள் நான் அந்த கோவில்களையும் கண்டிப்பா video எடுத்து காட்டறேன். உங்களுக்கும் பாக்கணும் போல இருக்கு இல்ல? ஆனா இப்போதைக்கு அந்த கோவில்கள் ரெண்டும் மொத்தமா இயற்கையோட கட்டுப்பாட்டுல இருக்கு. அதனால நாம ஒன்னும் பண்ண முடியாது.
    இயற்கை அன்றது ஏவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த விஷயம் பாருங்க.
    archaeology departmentல இருந்து இந்த கோவில்களை காப்பாத்தணும்னு நினைச்சா கூட அவங்கலால என்ன செஞ்சிட முடியும்?
    #Mahabalipuram #India #praveenmohantamil

Komentáře • 194