Video není dostupné.
Omlouváme se.

நம் முன்னோர்கள் இவ்வளவு அறிவாளிகளா? 5000 வருஷத்துக்கு முன்னாடியே லேசர்-சோலார் தொழில்நுட்பம்?

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - வாரங்கள் கதவுகள்
    00:32 - இது என்ன டெக்னாலஜி?
    02:32 - சிக்கலான அமைப்பு
    03:40 - புரிஞ்சிக்க கொஞ்சோ கஷ்டம்
    04:17 - இப்படியும் பாக்கலாம்
    05:38 - Advanced டெக்னாலஜி
    06:30 - இது நாள்காட்டியா?
    07:09 - ஜந்தர் மந்தர்
    07:48 - Advanced-ஆன கருவிகள்
    08:38 - காந்தப் பறவைகள்
    09:30 - புனிதமான Geometry
    10:28 - புனிதமான Ratio
    11:02 - முடிவுரை
    Hey guys, இன்னைக்கு நாம வாரங்கல் gates அப்படின்ற இந்த இடத்த பத்தி தான் பாக்க போறோம். இந்த பழங்கால structures எல்லாம் வெறும் entrance gatesஓ இல்ல கதவுகளோ இல்லன்றது நமக்கு நல்லா தெரியும். இத எதுக்காக கட்டியிருப்பாங்கன்னு நம்மளால இப்ப புரிஞ்சிக்க முடியுதான்னு பாப்போம். நெறைய experts இந்த structuresஅ எல்லாம் சரியா ஆராய்ச்சி பண்ணல, ஆனா நாம அத பத்தி இன்னிக்கி கொஞ்சம் கவனமா பாக்க போறோம். இந்த entranceக்கு மேல ஒரு நேரான வெட்டு ஒன்னு இருக்கு பாருங்க. கிட்டத்தட்ட ஒரு laser வெட்டு மாதிரியே அது இருக்கு. சரியா நடுவுல இருக்கு. அதோட அது வழியா சூரிய வெளிச்சம் நல்லா பளிச்சுன்னு வருது.
    ஆரம்பத்துல, இது சிற்பியோட தப்பா இருக்கும்ன்னு தான் நான் நெனச்சேன். ஆனா இந்த ஓட்டைய, தெரிஞ்சேதான் அந்த 4 வாசல்லயும் போட்டிருக்காங்க. இந்த ஓட்டைகள கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குன்னு எல்லா entranceலயும் பாக்கலாம். ஆனா இதெல்லாம் ஒரே மாதிரி இல்ல. இந்த entranceகளோட உச்சில, இந்த சாவிதுவரம் அதாவது இந்த keyhole... இனிமே இத நான் keyholeன்னு தான் சொல்லப்போறேன். Keyhole மாதிரி ஓட்டைகள் இருக்கு பாத்திங்களா?
    இந்த வெட்டுக்களோட எடம் ஒவ்வொரு வாசல்லயும் வேற வேற keyholeல இருக்கு. இப்ப நாம இந்த கிழக்கு பக்க வாசல்ல இருந்து ஆரம்பிக்கலாம். இங்க இந்த வெட்டு right sideல இருந்து நாலாவது ஓட்டைல இருக்கறது தெரியுது. இந்த வெட்டோட சரியான இடம் மூன்றரை keyhole இல்லன்னா 3.5. இப்போ நீங்க இதோட இன்னொரு பக்கத்துல இதுக்கு நேர் எதிர்ல இருக்கற structureக்கு போனா, இந்த மேற்கு வாசல்ல அந்த வெட்டு leftsideல இருந்து மூணாவது ஓட்டைல இருக்குது, கிழக்கு வாசல்ல இருந்த மாதிரி 4வது ஓட்டைல இல்ல. அப்படினா, மேற்கு வாசல்ல இந்த வெட்டு இருக்கற இடம் 2.5. இப்போ ஞாபகம் வச்சிகோங்க, இது எல்லாத்தையும் நான் இந்த இடத்தோட நடுவுல இருந்து தான் கவனிக்கிறேன்.
    அதோட இந்த கிழக்கு அப்பறம் மேற்கு வாசல்கள நீங்க பக்கத்துல பக்கத்துல வச்சி பாத்தா, அது ரெண்டும் இப்படித்தான் இருக்கும். பாக்கறதுக்கு ஒரே மாதிரி இருக்காது. இந்த வெட்டுக்களோட இடம் வேறவேறயா இருக்கு. நிச்சயமா இந்த காலத்து experts இது பழங்கால சிற்பிகளோட சின்ன தப்பு அப்படின்னு தான் சொல்லுவாங்க. அதோட இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லன்னு கூட argue பண்ணுவாங்க. ஆனா இந்த experts சொல்றது ஏன் தப்புன்னு நான் உங்களுக்கு இப்ப காட்டறேன். இப்போ, நாம வடக்குப் பக்கத்துல இருகற வாசலுக்கு போவோம். அந்த நேரான வெட்டு மறுபடியும் 4 வது keyholeல இருக்கு அதாவது, 3.5ல இருக்கு. இப்போ இதோட நேர் எதிர் வாசலான தெற்கு பக்கத்துல, இந்த வெட்டு 3வது keyholeல இருக்கு அதாவது 2.5ல இருக்கு. அதாவது நீங்க இங்க ஒரு patternஅ பாக்கலாம். அந்த கிழக்கு, மேற்கு entranceல 3.5, 2.5 keyholeலயும், வடக்கு தெற்கு entranceல மறுபடியும் 3.5 , 2.5 keyholeலயும் இந்த வெட்டுக்கள் இருக்கு. இப்படிப்பட்ட இந்த சிக்கலான patternஓட அர்த்தம் என்ன?
    நம்ம historybooksல basicஆவே ஏதோ தப்பு இருக்குன்னு இது தெளிவா காட்டுது.
    பல நூறு வருஷம் கழிச்சும் நாம இன்னும் பழங்கால நாகரிகத்துல இருந்து ஒரு advanced நாகரிகமா உருவாகலன்னு தெரியுது. அதுக்கு பதிலா, இந்த மாதிரியான பழய இடங்களயெல்லாம் பாக்கும்போது என்ன தோணுதுன்னா இன்னிக்கு இருக்கற தலைமுறைக்கு, அதாவது நமக்கு தாங்க , அந்த காலத்துல அவங்க என்ன பண்ணிகிட்டு இருந்தாங்கங்கிறத புரிஞ்சிக்கக் கூட முடியல. அந்த அளவுக்குஅவ்ளோ தெறமசாலிங்களா நம்ப இருக்கோம்.
    ஆனா இப்ப நாம இந்த entrance எல்லாத்தையும் ஒரு மனுஷனோட பார்வையில இருந்து தான் பாக்கறோம்.அதோட நாம இத, இந்த எடத்தோட நடுவுல இருந்து பாக்கறோம். இப்ப இப்பிடி வச்சிக்கோங்க. நீங்க ஒரு ராட்சசரா இருக்கீங்கன்னு வச்சிக்கோங்க. உங்களுக்கு இந்த entrance எல்லாம் சின்ன lego blocks ஆ இருந்துச்சுனா, நீங்க இந்த இடத்த விட்டு வெளியே இருந்து இத ஒரு பக்கத்துல இருந்து மட்டும் தான் பாப்பீங்க.
    இந்த எடத்த விட்டு வெளியே பொய் அந்த கிழக்கு வாசல்ல நின்னு பாத்தீங்கனா அந்த வெட்டு 3.5 ல இல்ல 2.5 ல இருக்குன்னு புரிஞ்சிப்பீங்க.
    இப்போ கெழக்கு மேற்கு இந்த ரெண்டு entranceஓட வெளில ஒரு இடத்துல இருந்து பாத்தீங்கனா, இந்த வெட்டெல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதா தெரியும். மறுபடியும் நீங்க வடக்கு பக்கம் போய், வெளியே இருந்து வடக்கு தெற்கு, இந்த ரெண்டு entranceல பாத்தீங்கனா, அந்த வெட்டுங்க ரெண்டும் ஒரே மாதிரி தெரியும். இந்த வெட்டுங்க எல்லாம் 3வது இல்லன்னா 4வது keyholeல இருக்குற மாதிரியான இந்த மொத்த குழப்பமும் நாம இத இந்த இடத்தோட நடுவுல நின்னுகிட்டு ஒரு மனுஷ இத எப்டி பாப்பாரோ அப்டி பாக்கறதால தான் வருது.
    இந்த entrance எல்லாமே சரியா 33 அடி உயரம் இருக்கு. அதுமட்டுமில்ல, இதெல்லாத்தையும் முக்கியமான 4 directionsல correctஆ நிறுத்தியிருக்காங்க.
    #Warangal #India #praveenmohantamil

Komentáře • 369

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +101

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. பிரமிக்கவைக்கும் வாரங்கல் ரகசியம் - czcams.com/video/YRsbN82az4c/video.html
    2. என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை! - czcams.com/video/zGoWH3FFXl0/video.html
    3. ஹம்பியில் பழங்காலத்து லேத் இயந்திரம் - czcams.com/video/bVCFPywqW38/video.html

    • @ramalingamperiamuthu3231
      @ramalingamperiamuthu3231 Před 3 lety +4

      Arumai inta alavirku itu varai yarume aivu seitatu illai Arputam nalla telivaana vilakam tq bro

    • @naan_apdi_than
      @naan_apdi_than Před 3 lety +1

      Naanum idhe partheruken.. But ippadi yosikalle.... Brilliant.. anna keep it up

    • @thuglife6701
      @thuglife6701 Před 3 lety

      தயவு செஞ்சு இத விற்றாதீங்க சகோதரா,,,,,

    • @buvaneswaris7363
      @buvaneswaris7363 Před 3 lety

      Enna soldradunu theriyala. Oru pakkam amarnda idathileye dyanam seidu vaaniyal kanippugai seidargal munnorgal endru nazhuva mudiyadu. Migapperiya brammanda padaippugal kan munne irundum namakku puriyavillai. Adhe samayam engalai pondrorku samakalathil irukkum neengal engalin adirshtam endrudan solla vendum. Vaazhukkal bro.

    • @traveltohe-ven2603
      @traveltohe-ven2603 Před 3 lety +1

      Doing a good job

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 Před 3 lety +29

    பிரவீன் மோகன் உங்களை போல தமிழர்களின் அறிவு கண்ணை திறக்கும் அறிவில் சிறந்த ஒரு தங்க பிள்ளையை பெற்று வளர்த்த உங்களின் பெற்றோர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் தமிழர்களின் புதையல். நீங்கள் போற்றி பாதுக்காக்க படவேண்டியவர். உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.. ஈசன் உங்கள் மகத்தான பணிக்கு என்றும் துணையிருப்பார் சகோதரா.

    • @sivathee-mr2of
      @sivathee-mr2of Před 3 lety +10

      வரலட்சுமி வாசுதேவன் அவர்களே
      அருமையாக ஆத்மார்த்தமாக சொன்னீர்கள்
      பிரவின் மோகனை பெற்வர்கள் பாக்கியவான்கள்
      அதே போல் பிரவின் மோகன் அர்வகளும் புண்ய ஆத்மா
      பிரவின் மோகன் அவர்கள்
      பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க வளமுடன்

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 Před 3 lety +3

      @@sivathee-mr2of 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அய்யா.

  • @madras2quare
    @madras2quare Před 3 lety +65

    வணக்கம் பிரவீன் அவர்களே. ஒரு தனிப்பட்ட மனிதராக நீங்கள் நம் கோயில்கள் பற்றியும் அதில் உள்ள ஒவ்வொரு சிற்பங்கள் பற்றியும் எவ்வளவு அழகாக ஆராய்ந்து சொல்கிறீர்கள் இது நம் அரசுக்கு தெரியாமல் இருக்குமா . நம் இளைஞர்களக்கு இது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஏன் ஊக்கப் படுத்தவில்லை. இங்கு நம் தமிழ் நாட்டின் சாபக்கேடு நம் தமிழர்களின் பண்பாட்டை சிதைத்து கொண்டிருக்கும் கூட்டங்களை மட்டுமே தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் ஒரு வேண்டு கோள். உங்களுக்கு தெரிந்த இந்த விஷயங்களை நீங்கள் நம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுங்கள். நம் தலைமுறையோடு முடிந்து போகக்கூடாது பிரவீன். தயவுசெய்து நீங்கள் இதை நம் இனத்திற்காக முடிந்த வரை செய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நன்றி வாழ்க நலமுடன். வெற்றி வேல் வீரவேல்.

    • @ramalingamperiamuthu3231
      @ramalingamperiamuthu3231 Před 3 lety +5

      Arumai Nalla Yosanai

    • @nagarathinammani7279
      @nagarathinammani7279 Před 3 lety +7

      எப்படி சொல்ல மொழி கிடைக்கவில்லை
      நீங்கள் எல்லாருக்கும் தெரியும் படி பிரபலமாக
      செய்யுங்கள் தலைவரே 🙏🏻❣️ 💥👍.......,

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 Před 3 lety +6

      ஆம், திரு.தங்கம், இதை மிகவும் முன்னிரிமை கொடுத்துச் செய்ய வேண்டும்.
      நம் இளைஞர் கூட்டத்தை அடியோடு மண்ணாந்தைகளாக மாற்றி அவர்களைச் சிந்திக்க விடாமல் அடிக்கும் அரசியல் வாதிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகவாதிகளும் தீவிரமாக வேலை செய்கிறார்கள். டீவி, இண்ட்டர்நெட், பத்திரிக்கைகள், சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை விளையாட்டுக்கள், மதுப்பழக்கம், பாலியல் கவர்ச்சி என அவர்களுடைய சிந்தனையில் திணித்து, வேறு ஆழமான எதற்கும் இடம் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறான்கள்.
      ஏதோ வாழ்க்கை என்பதே இவைதான் என்று நம்ப இவர்களை வைத்து அவன்கள் லாபம் பார்க்கிறான்கள்.
      வாழ்க்கை என்பது நமது பாரம்பரியம் சார்ந்ததும் முன்னோருடைய அநுபவ அறிவின் தொடர்ச்சியாகவும் இருந்தால்தான் மன அமைதியும் துணிச்சலும் தைரியமும் உண்மையான் அறியோவும் நிலையாக இருக்கும்.
      வரலாற்றுச் சின்னங்களை அழித்தால், நம் தொடர்பும் அறுந்து விடும்.
      அதனால் இன்றைய இளைஞருக்குத் திரு.பிரவீன் இந்த நுட்பங்களைக் கண்டறிவதை, அவர்கள் தாமாக் விரும்பிக் கேட்கா விட்டாலும் கூட ஆவணப் படுத்த வேண்டும்.
      நம் முன்னோரின் அறிவுத் திறன் அனைத்தும் அப்படியே நமக்குள்ளும் பொதிந்திருக்கிறது.
      "ஏழாம் அறிவு" கதையில் செய்த மாதிரி, இவர், அவற்றைத்தூண்டி வெளிக் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.

    • @madras2quare
      @madras2quare Před 3 lety +4

      வணக்கம் ரொம்ப நன்றி. நம் எல்லோருக்குள்ளும் இப்படி நம் பண்பாட்டை காப்பாற்ற ஆசை நிறைந்துள்ளது இந்த ஆசை நிறைவேற அந்த கந்தக்கடவுள் முருகன் அருள் செய்ய வேண்டும். நன்றி வாழ்க நலமுடன்.

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +59

    கேட்கவே மிகவும் சுவாரஸ்யமான இருந்தது பழங்கால அறிவியலை புரிந்து கொள்வது கூர்மையான கத்திமேல் நடப்பது போல உங்களால் மட்டுமே முடியும் சகோ

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +3

      தங்களது அன்பான வார்த்தைக்கு நன்றிகள்!!!

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 Před 3 lety +2

      நீங்களும் அவரை போல் யோசிங்க நீங்களும் உங்கள்💯✨ ஊருக்கு அருகில் உள்ள கோவில் அறிவியல் கண்டு பிடித்து ☝️ போஸ்ட் போடுங்கள் ஏன் பிரவுன் சில 🔬அறிவியல்கள் அவர் கண்ணுக்கு புலப்படாத கண்டு பிடித்து சாதனை👌👍💪👏 படைத்தார்.. நான்🙋🌏 நிறைய வைத்து உள்ளேன் முதலில் பிரவினுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது
      அவர் எப்பொழுது என்னால் முடியவில்லை என்று சக்ஷறும் வரை நான் உங்கள்💯✨ மாணவன்...

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před 3 lety +13

    மிகவும் அருமையான பதிவுகள், திரு.ப்ரவீன் மோகன்!
    மனமர்ந்த பாராட்டுக்கள் பலமுறை!
    "நம் முன்னோர்கள் இவ்வளவு அறியோவாளிகளா?"
    இது உங்களுடைய வீடியோக்களைப் பார்க்கும் இளைஞர் பலரும் வியந்து சொல்லும் சொற்கள்!
    அவர்களுடைய ஆர்வம் தணியும் முன் அதைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும் அல்லவா?
    நம் இளைஞர் கூட்டம் ஒன்றும் இயற்கை அறிவில்லாதவர்கள் இல்லை.
    அவர்களுக்கு வழி காட்ட வேண்டிய பெற்றோரும, ஆசிரியர்களும், முன்னோரும் தமது கடமை மறந்து அரசியல் சாக்கடையால் சுழப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கே தமது வழி எது என்பது தெரியாது! அவர்கள் இளைஞருக்கு வழி காட்டுவது எங்கே?
    இதை மிகவும் முன்னிரிமை கொடுத்துச் செய்ய வேண்டும். பாரம்பரியச் சின்னங்களில் பொதித்து வைக்கப் பட்டுள்ள வரலற்றுத் தகவல்களை, வாழ்வியல் அறிவியலை, தொழில் நுட்பங்களை எப்படிச் சரியாகப் புரிந்து கொள்வது என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
    நம் இளைஞர் கூட்டத்தை அடியோடு மண்ணாந்தைகளாக மாற்றி அவர்களைச் சிந்திக்க விடாமல் அடிக்கும் அரசியல் வாதிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகவாதிகளும் தீவிரமாக வேலை செய்கிறார்கள். டீவி, இண்ட்டர்நெட், பத்திரிக்கைகள், சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை விளையாட்டுக்கள், மதுப்பழக்கம், பாலியல் கவர்ச்சி என அவர்களுடைய சிந்தனையில் திணித்து, வேறு ஆழமான எதற்கும் இடம் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறான்கள்.
    ஏதோ வாழ்க்கை என்பதே இவைதான் என்று நம்ப இவர்களை வைத்து அவன்கள் லாபம் பார்க்கிறான்கள்.
    வாழ்க்கை என்பது நமது பாரம்பரியம் சார்ந்ததும் முன்னோருடைய அநுபவ அறிவின் தொடர்ச்சியாகவும் இருந்தால்தான் மன அமைதியும் துணிச்சலும் தைரியமும் உண்மையான் அறியோவும் நிலையாக இருக்கும்.
    வரலாற்றுச் சின்னங்களை அழித்தால், நம் தொடர்பும் அறுந்து விடும்.
    அதனால் இன்றைய இளைஞருக்கு நீங்கள் இந்த நுட்பங்களைக் கண்டறிவதை, அவர்கள் தாமாக் விரும்பிக் கேட்கா விட்டாலும் கூட ஆவணப் படுத்த வேண்டும்.
    நம் முன்னோரின் அறிவுத் திறன் அனைத்தும் அப்படியே நமக்குள்ளும் பொதிந்திருக்கிறது.
    "ஏழாம் அறிவு" கதையில் செய்த மாதிரி, இவர், அவற்றைத்தூண்டி வெளிக் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.
    உங்களுடைய இந்த முயற்சிகளில் எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றிப் பங்கெடுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
    உங்களுடைய ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் சானல்களுக்கு இளைஞர் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பார்த்தாலே அவர்களுக்கு அளவற்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருப்பது தெரிகிறது.
    இதைச் சரியான திசையில் திருப்பி உதவ நீங்கள் தயவு செய்து முன் வர வேண்டும்.
    மிக்க நன்றி, வணக்கம்.

  • @deepakumar309
    @deepakumar309 Před 3 lety +27

    Wow.பிரவீன் உங்களுடைய பார்வையும் கோணமும் எல்லா விஷயங்களிலும் வித்தியாசமாகவே இருக்கின்றன.மிக மிக அருமை.எத்தகைய அற்புதமான கலை நுணுகங்கள் இருந்திருக்க கூடும்.நன்றி.தொடரட்டும் உங்களின் பணி 🙏🙏🙏

  • @skqueen3890
    @skqueen3890 Před 3 lety +46

    தங்களின் தமிழ் உச்சரிப்புக்கு தலைவணங்குகிறேன்..அண்ணா..

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 3 lety +7

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வளவு ஆச்சரியமான பிரமிப்பான விஷயங்கள். இதை இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து இவ்வளவு தெளிவாக விளக்கியுள்ளீர்கள்
    நன்றி
    உங்களைப் பற்றி ஒரு அறிமுகம
    கொடுங்கள் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம்

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 2 lety +2

    தங்களுடைய ஆராய்ச்சிகள் மிக அருமை,you tube உலகத்திற்கு ஒரு வரபிரசாதம்.

  • @kavisari
    @kavisari Před 3 lety +20

    மேல உள்ள துவாரங்கள் பார்த்தால் அது தேய்பிறை மற்றும் வளர் பிறை போல் உள்ளது.இது நீங்கள் சொல்வது போல் நேரத்தை காட்டுவது போல் உள்ளன

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 3 lety +7

    இதைத்தான் நான் மனக் கணக்கு போட்டு பார்த்தேன்.. அருமை அருமை மாணாக்கர்களே கவனிக்க வேண்டும்..

  • @vijayakumarkumar5255
    @vijayakumarkumar5255 Před 3 lety +6

    சூரியன் சில மாதங்கள் வலது பக்கம் சில மாதங்கள் இடப்பக்கம் . சென்று வரும் அந்த காலகட்டத்தை தெரிந்து கொள்ள தான் இந்த அடையாளம்.

  • @umaramanan8671
    @umaramanan8671 Před 3 lety +14

    வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் சூரியன் கிழக்கு பகுதியில் உதிக்கும் அந்த நாள் தமிழ் மாதம் சித்திரை1ம் தேதியில் தமிழ் வாழ்க

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 3 lety

      Orea.... oru naal thaan kilakku uthikkuma !!? Ennaachu ungalukku.. !!?

    • @vadiveluvaigai9310
      @vadiveluvaigai9310 Před 3 lety +5

      @@shivasundari2183 sun exactly(chithirai 1) pointing the east...rest of the year sun won't be exact to the east.. that was he is saying👍

  • @kannanravanth2002
    @kannanravanth2002 Před 3 lety +5

    வித்தியாசமான தொடர்ப்பு படுத்தி விளக்கம தருகிறீர்கள். எப்படி உங்களால் முடிகிறது. ???
    கடவுள் ஆசிர்வாதம், மக்களின் ஆசிர்வாதம் உங்களிடம் இருக்கிறது.
    மிக அருமை... வாழ்த்துக்கள்....

  • @hkp715
    @hkp715 Před 3 lety +43

    நமது முன்னோர்களின் அறிவைப் புரிந்துக் கொள்ள நமக்கு இன்னும் ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம்.

  • @mangaimangai6250
    @mangaimangai6250 Před 3 lety +2

    ஆழமான ஆராய்ச்சிகள் , ஆச்சர்யமான உண்மைகள் மிகவும் தெளிவான விளக்கம் என உங்கள் பதிவு விறுவிறுப்பாக தொடர்கிறது , இன்னும் தமிழிலேயே நிறைய வீடியோ போடுங்க சகோ , இந்த வீடியோக்கள் மூலமாக நிறைய விசயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது , நன்றி நன்றி சகோ

  • @gayathrid251
    @gayathrid251 Před 3 lety +7

    Wonderful observation Sir...You are such an talented person.👏👏👏

  • @krishnan701
    @krishnan701 Před 3 lety +58

    இதை பற்றி எல்லாம் நம் அரசு ஆராய்ச்சி செய்து உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.

  • @chandram9299
    @chandram9299 Před rokem +1

    என்ன தம்பி சொல்றீங்க சோலார் அன்றே கண்டு பிடிச்சாங்களா ஒரே ஆச்சர்யம்மா இருக்கு இது நமக்குமிகவும் பெருமைபட வேண்டிய அருமையான செய்தி மகிழ்ச்சி

  • @spmoorthy2597
    @spmoorthy2597 Před 3 lety +15

    உங்களுடைய கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன 👌👌👌👍👍👍

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 3 lety +2

    இந்த வாரங்கல் நான்கு கல் தூண் கதவுகள் பற்றி தாங்கள் கூறியதைப்பார்த்தால் விண்வெளியை ஆய்வு செய்யும் கூடமாகத்தான் இருந்திருக்க வேண்டும் தமிழ் அறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்தல் வேண்டும், நன்றி பிரவீன் 👌

  • @sundaribalu6465
    @sundaribalu6465 Před 2 lety +2

    My good God 🤗 how beatifully they designed in such a proper way. Amazingly they calculate very scientific and numerical analystic way ....very interesting 👏👏👏🙌🤗👍

  • @vasanthamalligadhanasekara4660

    இப்படி எத்தனை எத்தனை நமக்கு புரியாத புதிராகவே நம் முன்னோர்கள் அறிவியல் கணிதவியல் இவற்றில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது வியப்பாக உள்ளது. எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நமக்கு ???. 👍👍🙏🙏

  • @naturebeauty7789
    @naturebeauty7789 Před 3 lety +3

    வானில் உள்ள தேவர்களில் எண்ணிக்கை முப்பத்து முக்கோடி தேவர்கள் அவர்கள் வணங்கும் தெய்வம் மூன்று பேர் பிரம்மா விஷ்ணு சிவன் மொத்தம் 33 இவர்கள் அனைவரையும் மண்ணுலகில் இருந்து இந்துக்களாகிய நாம் விண்ணுலகில் உள்ளவர்களை தெய்வங்களாக வணங்குகின்றோம்

  • @rohith6512
    @rohith6512 Před 3 lety +7

    👍👍நாளைய சுவராஸ்யத்திற்காக காத்திருப்போம் பாஸ் 👍 இன்றைய பதிவிற்காக நன்றி 🙏🌹

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +7

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு 🙏

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 3 lety +14

    ஒரு தனி மனிதனாக இத்தனை விஷயங்களை வெளிக்கொனர முடிகிறது என்றால் ,ஆராட்சியாளர்கள் வேண்டுமென்றே மறைக்கிறார்களா. அல்லது அலட்சியமா ?

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 Před 3 lety

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா பிரவீன் மோகன் அவர்களே! நீங்கள் ஒரு சிறந்த விஞ்ஞானி, ஒவ்வொன்றாக ஆழ்ந்து ஆராய்ந்து நீங்கள் எங்கள் அனைவருக்கும் விளக்குகின்றீர்கள். மிக அற்புதம், வாழ்க வளமுடன் 🙌

  • @devisrinivasan726
    @devisrinivasan726 Před 3 lety +2

    வேறு வேறு வேறு leval explanation ji,,,we can't imagine that but how you found it ,,it's a miracle,வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நச்சுன்னு சொன்னீர் நன்றிகள் பல 🙏🙏

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 3 lety +29

    நம் கடவுளர் அனுப்பிய அவதாரம் நீங்கள். இளைய சமுதாயம் இதை எல்லாம் தெரிந்து பாதுகாத்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +3

      தங்களது அன்பான வார்த்தைக்கு நன்றிகள்!!!

    • @gcharan6022
      @gcharan6022 Před 3 lety +2

      உண்மையா சரியா சொன்னிங்க.
      இந்திய அரசு எல்லாவித உதவிகளை செய்தால் என்னும் சிறப்பாக இருக்கும்.

  • @RajRudraksha
    @RajRudraksha Před 3 lety +6

    நியாயமான விளக்கத்துடன் மற்றொரு பெரிய கண்டுபிடிப்பு

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 3 lety +1

    your brain works specially, I think so. I am very happy to listen your ideas that reveals lot of things. God Bless You.

  • @padmanabmariyappa6524
    @padmanabmariyappa6524 Před 3 lety +5

    Some engineering done in construction is even now unexplainable.older generation were brilliant because their mind was devoted to the woŕk.

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Před 3 lety +1

    Height of the Arches are 33 feet as told. It represents 40 meter wave length..or..7Mc/s in Radio frequency. Band. However, I could not arrive at any conclusion dear Praveen... Just to let you know.

  • @varmanalmighty
    @varmanalmighty Před 3 lety

    N & E has the key 🗝️ on 4th. But if u see from the outside. It 🗝️ will be on the 3rd.
    From the insides if u see S &W the key 🗝️ is on the 3rd. From the outside it would be on 4th.
    So it could mean Entrances and Exits?
    If the key is on the 3rd you can enter. And the one's with 4th are not to enter.
    In that way we have exits without exits.

  • @puppy6560
    @puppy6560 Před 3 lety +3

    Hi.. i'm your big fan.. i really love your way of thinking.. pls discuss about birth of mahabharatha characters (dronacharya, pandavas, gowravas) and compare it with modern day.. technology..

  • @muruganlakshmimurugan3086

    Yepadilam yosikireenga thalaiva...vera level...naanga munnadi pona summa yetho arts nu ninaichitu varuvom...ipolam partha yentha kovilaum yethachum artham irukomonnu than pathutu varom😍😍

  • @kannans9785
    @kannans9785 Před 3 lety +3

    அருமையான விள௧்௧ம் மிகவும் நன்றி....

  • @ranganathantharmalingham5486

    Hi Praveen
    Ramanujan too died in his 33rd year. 1887- 1920. Thank you Praveen. We learn a lot from you!

  • @ChinmayGNayak
    @ChinmayGNayak Před 3 lety +2

    Congratulations Praveen mohan, you are creator on rise

  • @madabhushigopalanbalasubra6503

    You are Brilliant Spiritual person. Such reasonable and bright thoughts. God bless you with along and healthy life.

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +2

    Hlo praveen mohan sir I am a die hard fan of your channel....mark my words sure ul be awarded on the basis of your fabulous works sir....my childhood ambition is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see thank you sir.... I wish to see you. At least once in lifetime sir... I have a huge respect for you but here I could see some comments stating that you are praising tamilans nd tamilnadu only in tamil dubbed videos but in hindi nd English videos you are calling it as south India... No sir pls if it's actly tamilians Pride do not hesitate to reveal it to The world sir

  • @vasudevant8752
    @vasudevant8752 Před 2 lety +1

    Your invention very grateful Praveen mohan

  • @harianithaharianitha9835
    @harianithaharianitha9835 Před 3 lety +1

    நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தாலும் ஒரு அறிவியல் கூற்றுப்படி தான் செய்து இருக்கின்றனர். அதை நாம் தான் சரியா புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நன்றி சகோ உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ 👌👌🙏 🙏

  • @Manamaduraisamayal
    @Manamaduraisamayal Před 3 lety +1

    Arumaiyana velakkam praveen

  • @cjayanthnithin6903
    @cjayanthnithin6903 Před 3 lety +3

    உங்கள் கணிப்பு என்னை பிரம்மிக்க வைக்கிறது😃

  • @vallinayagi.
    @vallinayagi. Před 2 lety +1

    God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍👍👍👍👍👍

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +1

    Our ancestors are very intelligent...We can't reach their knowledge even 1%...Thank you for these excellent videos sir...🙏🙏🙏

  • @murugesanabinaya7500
    @murugesanabinaya7500 Před 3 lety +5

    நீங்க இந்திய அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்து வீடியோவை போடுங்க சகோ! பெரிய அளவில் பெயர் கிடைக்கும், உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Před 3 lety +1

    1. Yes, your research on the ancient temple sculptures is appreciable.
    2. Every one aware that Sun raises in the East & sets in the West. This is an universal truth as per geography.
    3. But Sun raises exactly on the East only on three days out of 365 days in a year. Out of 3 days, the middle day sun raise is very exact, may be on June-21st; & on this day & night are exactly 12 hours, which is the longest day time in the world. Other two prefix & suffix days Viz; 20 & 22 of June day time will be slightly lower than that of 21st-June.
    4. Remaining days the Sun raises partly on North-East , South-East & sets at North-West, South-West respectively. This happens due to earth🌍 rotation in 23&half ° slanting position. The Sun rays peeping through the Key holes in the arches & passing to other Arch on the opposite direction. Considering the radiation of Sunlights in different angular directions, then Astronomical Engineers might have given an idea to the Slaves who built the Ancient monuments.In those days, Kings used the Slaves & War-Prisoners for construction of Palaces, Forts, Temples, Arches, Memorials etc under ancient Technology with the help of Elephants, Camels, Donkeys to transport/ lift heavy stones/rocks.
    5. Besides, one more advantage during monsoon that every country gets rain partly through South-West monsoon & partly through North-East monsoon as the earth 🌍 slantingly rotates at 23 & half °
    6. Even in Ajantha cave paintings in Maharashtra, couldn't be assessed till date by present day Engineers. Similarly, 33 cave sculptures in Ellora in Maharashtra state were curved out in single rock of mountain is also Exclamatory to every one who are all visited those caves.
    7.These news will be useful as project work for Architect Engineers as many Engineers/Architect from Foreign countries also are doing Research on Indian Monuments ( built by Kings several centuries ago) located all over India.

  • @priscyjen
    @priscyjen Před 3 lety +1

    I never skip any ad for Praveen Mohan’s Video ☺️👍

  • @user-yy3fy1eq8l
    @user-yy3fy1eq8l Před 3 lety

    Vaalthukkal sagorhara,thangalin intha Ariya pani thodaratum,Nalla pala thagavalgal therinthu kondom.

  • @sivasakti6774
    @sivasakti6774 Před 3 lety

    I'm from MALAYSIA.
    En arivukku ettana siru vilakkam...
    33 adi uyaram...athu muppattu mukkodi thevargalai kurikkirathu.
    Key hole nu sonna right and left side...athu valar pirai and thei piraiyai kurikkirathu...athil pauramiyum ullathu.
    Mun vasalil right side and left side la irukkura paravai name anna patchi....intha patchi perum balum neengga sonnatu phol ella thisaiyilum amarum antha oru thisaiyai tavira...ithai pala pala palaiya aalayanggalil koburattil kanalam.
    En kan parvaikku mattrum sintanaikku ettiyatu.

  • @svenkatesh7347
    @svenkatesh7347 Před 3 lety +1

    Nice observations, please post a detailed video on more minute unobserved features

  • @youvaradjvidjeyarangane402

    How you are connecting all the nook and corners? Again a great Hat's off you...

  • @malinicibi2002
    @malinicibi2002 Před 3 lety +5

    Every thing is questionable...
    Who we are?
    Very interesting documentary anna.

  • @klndollar
    @klndollar Před 2 lety +1

    Really Brilliant! Such a detailed analysis is not an easy task 🤔

  • @vishvish4092
    @vishvish4092 Před 3 lety +6

    Once again, nandri Praveen 🙏 💐
    Owing to your invaluable discoveries, nammalku ippo puriyardhu our Ancestors were The Real Deal -
    Sophisticated Masterminds of the highest order 🧠
    Now, it's in our benefit to identify and cherish these Magnificent Gifts 💝
    By doing so, we shall not only Enrich our lives 🥰 but also leave behind a better world for our children 🌎💞

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Před 3 lety

    சூப்பர். எப்படிப்பட்ட அறிவியல் கருவிகள். நிறையப் பேர் ஆராச்சி செய்ய வேண்டும் நீங்கள் எடுக்கும் புள்ளி விபரங்களை எழுதி வையுங்கள். வரலாறாக ஒருநாள் மாறும்.

  • @vijayalakshmikumaran7380

    The eyes does not see , what the mind does not know...You are super scientific, and have spiritual knowledge too..
    Praveen I appreciate your impeccable tamil fluency...முப்பத்து முக்கோடி தேவர்கள்...

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Před 3 lety

    Great job bro thanks.. Thanku so much please keep up ur wrk more 🙏🙏

  • @srishailambangari2434
    @srishailambangari2434 Před 3 lety +2

    Iam from Warangal,telangana

  • @parthibasamy7752
    @parthibasamy7752 Před 3 lety

    முதன் முதலில் ஆங்கிலத்தில் உங்கள் வீடுயோ பார்த்தேன் தமிழில் இருக்காதா என்று ஏங்கினேன் இப்போது உங்கள் வீடுயோ அனைத்தையும் தேடி பார்க்கிறேன்

  • @ramyasathyanathan
    @ramyasathyanathan Před 3 lety

    I think the shadow will pass daily in different dimension through those splits which may depict uttarayana and dakshinayana

  • @Netshankar11
    @Netshankar11 Před 3 lety +2

    நன்றிகள் கோடி உங்களுக்கு

  • @divyaskitchen6018
    @divyaskitchen6018 Před 3 lety +3

    Such a good job brother👌

  • @mytrades9063
    @mytrades9063 Před 3 lety

    Sun travels towards north to south time 6 months..
    Then travel towards south to north time 6 months..
    The month chithirai and ipasi date 1 the sun raises at the perfect east. After chithirai 1st sun travels towards north and up to aadi 1st ... From aadi 1st it takes to travel south wards .. on ipasi 1st again sun center point at east. Then travels towards south.. thai month 1st is the turn point to reach south and change to north direction... With this info you can do more research...
    Always Almighty gives help to researchers...
    Many thanks ans thank God..

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Před 3 lety

    அற்புதமான தகவல் ஐயா 🙏🔥

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 2 lety +2

    அருமை அருமை வேறு என்ன சொல்ல 🤔👌👌

    • @mahalakshmin590
      @mahalakshmin590 Před 2 lety

      முன்னோர்கள் அறிவு அறிவியல் திறன் அபாரம் 👏👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety

      😇😇🙏🙏🙏

  • @jayasri8935
    @jayasri8935 Před 3 lety +4

    என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை

    • @mr.lazy_.
      @mr.lazy_. Před 3 lety

      Bro athu irrikarathu telungana la

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety

    அற்புதமான தகவல் 👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏

  • @kksk8737
    @kksk8737 Před 3 lety +1

    33 அடி சரியாக 10 மீட்டர்🙏
    33 feet water column is equal to atmospheric pressure

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 Před 3 lety +1

    பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது இந்த காணொளி. நீ‌ங்க‌ள் ஒரு மா பெரும் விஞ்ஞானி.!!!!!!

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 3 lety +4

    வணக்கம் 🙏

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 Před 2 lety

    Ovaru video um avlo info koti kidaku. Thank you🙏

  • @-Rakesh-gv5jf
    @-Rakesh-gv5jf Před 3 lety +2

    Iam from Warangal 🖐️

  • @DTDDancecompany
    @DTDDancecompany Před 3 lety

    Brilliant work brother. Indian government need to give important to you to find out many things. Need to give special permission to go all the places in the world. Ur work is very important to this world. I think, I can understand clearly by all ur videos. There is a connection between earth and different Planets in other galaxy. Maybe our God are Aliens

  • @muthukumarb8347
    @muthukumarb8347 Před 3 lety

    Wonderful explanation.

  • @shiva-te9ee
    @shiva-te9ee Před 3 lety +1

    Super explanation

  • @saivarma2627
    @saivarma2627 Před 3 lety +1

    Anyone from telangana, Warangal.

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před 3 lety

    Supeb video bro
    Nice voice unga voice kettutey erukklam bro unga speech and explain supeb
    Am from bangalore

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 3 lety +3

    அருமை

  • @ashokdharshini2280
    @ashokdharshini2280 Před 3 lety +1

    Vadakku pakkam kandha adhirvu irupadhu avargalukku theriyum, adhanala andha paravaigalai vaikkavillai......

  • @puvaneswarig2061
    @puvaneswarig2061 Před 2 lety +1

    Good work sir.

  • @krishnaswamys4306
    @krishnaswamys4306 Před 2 lety +1

    Appreciate if you could share the location. It will really be helpful.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 2 lety +1

    No Words.....Thank u sir

  • @hemalatha2337
    @hemalatha2337 Před 2 lety +1

    Excellent.......👌🙏

  • @ch.v.raghunandhan8584
    @ch.v.raghunandhan8584 Před 3 lety

    Sir am from warangal ongaluku history theriyum ana en eppidi solrenge kakatiya rullers dha constract panirikanga , Rani rudrama devi, ganapathi deva kakatiya densty rulled. indha history therijum ningal a eppidi
    solrenge

  • @user-ge2se4pq3t
    @user-ge2se4pq3t Před 3 lety

    Praveen bro Ungal pani thodara valththukkal...

  • @mr_rowdy7455
    @mr_rowdy7455 Před 3 lety +2

    Iam from warangal

  • @sriranjini7462
    @sriranjini7462 Před 3 lety +1

    Amazing architect 👏

  • @wildcraft2095
    @wildcraft2095 Před 3 lety +1

    I think he is not south Indian...but he is doing fantastic..

  • @sridharmanoharan8329
    @sridharmanoharan8329 Před 3 lety +2

    Really super explaination brother

  • @Shivathedestroyer04
    @Shivathedestroyer04 Před 3 lety +1

    Good job praveen mohan.

  • @SS-eg2en
    @SS-eg2en Před 3 lety

    Super Thank you sir 🙏🙏🙏

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Před 3 lety

    Unknown facts. Thanks. Good efforts

  • @penstories
    @penstories Před 3 lety

    I'm From Warangal it's my hometown 🏠🏡
    Please upload this video in Your English channel 🙏🙏🙏

  • @radhamani6824
    @radhamani6824 Před 3 lety +1

    முன்னோர்களின் அறிவை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை

  • @selviarumugam2062
    @selviarumugam2062 Před 3 lety +1

    மிக அருமை

  • @arkhamcreations9075
    @arkhamcreations9075 Před 3 lety

    I didn't understand can anyone explain in English or telugu as it's my city please explain