இது தான் நம்ம முன்னோர்களோட தந்திரம்! கோவில் Ceiling-ல் ராசி பலன்கள்..? |பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - முன்னுரை
    01:09 - Celling- ல் உள்ள ராசி குறிப்புகள்.
    03:16 - 10X10 கட்டத்தில் இருப்பது என்ன?
    05:56 - 28-வது நட்சத்திரம் இருக்கா?
    07:29 - ஜாதக கட்டம் வட்ட வடிவமா?
    09:25 - Advanced- ஆக யோசித்த முன்னோர்கள்!
    10:38 - ராசிபலன் பற்றிய சிற்பத்தின் ரகசியம்!
    11:34 - முடிவுரை
    Hey guys, இன்னிக்கு நான் உங்களுக்கு ஒரு ரொம்ப special ஆனா விஷயத்த காட்ட போறேன். இது ஒரு ரொம்ப முக்கியமான சிற்பம், பழைய இந்திய கோவிலோட ceilingல இத செதுக்கி வச்சிருக்காங்க. இது தான் Panchavarnaswamy கோவில் and இங்க நெறைய சிற்பங்கள் காலப் பயணம் சம்பந்தப்பட்டதா இருக்கு. நீங்களே பாருங்க இங்க ரொம்ப இருட்டா இருக்கு. And அங்க மேல நிஜமாவே என்ன இருக்குன்னு பாக்கறதுக்கும் கஷ்டமா இருக்கு. ஆனா நான் வேற ஒரு cameraல zoom பண்ணி படங்கள் எடுத்துட்டேன். Once அந்த படங்கள பாத்த உடனே எனக்கு ரொம்ப ஆச்சர்யமாயிடிச்சு. முக்கியமா அதுல செதுக்கி இருந்த சின்னங்கள் ? தான் அதுக்கு காரணம். இந்த ஜீவராசி என்னது? பல்லு எல்லாம் வெளிய தெரிஞ்சிகிட்டு ஏதோ முறுக்கிகிட்டு இருக்கற shark மாதிரி இருக்கு. இது ஏதாவது prehistoric மிருகமா?
    இங்க பானை வச்சிருக்கற ஆள் யாரு? மொத்த படத்தையும் கவனமா பாத்தா அதுல 12 ராசிக்கான படங்கள் இருக்கும். இன்னிக்கு ஜாதகம் பாக்கும்போது உபயோகிக்கறா மாதிரியே இருக்கு. ஒரு Circleஆ இங்கிருந்து போகலாம். மொதல்ல Aries இல்லனா மேஷம், Taurus ரிஷபம், ஜெமினி மிதுனம், கேன்சர் கடகம், Leo சிம்மம், and Virgo கன்னி. நியாபகம் வச்சிகோங்க. இந்தியால ஒரு வித்யாசமான மொற படி ஜாதகம் பாத்தாங்க. அதுக்கு பேரு Vedic Astrology, இது கிட்ட தட்ட Western ஜாதக மொற படித்தான் இருக்கும். ஆனா ரெண்டுத்துக்கும் சில பெரிய வித்யாசங்களும் இருக்கு.
    மத்த ராசிக்கான signs எல்லாம் Libra இல்லன்னா துலாம், Scorpio இல்ல விருச்சிகம், Sagittarius இல்ல தனுசு இவருக்கு பாதி மிருக உடம்பு இருக்கும்., Capricorn இல்ல மகரம், இது ஒரு ரெக்க இருக்கற முதல மாதிரி இருக்கும்.
    கடைசியில Aquarius இல்லனா கும்பம் and Pisces இல்ல மீனம்.
    இப்ப இந்த கோவில்ல எதுக்கு இந்த 12 ராசிகளையும் ceilingல செதுக்கி வச்சிருக்காங்க?
    நியாபகம் வச்சிக்கோங்க, நெறைய கோவில்கள்ள இந்த சிற்பங்கள் எல்லாம் நம்ப அணுக முடியாத இடங்கள்ள தான் இருக்கு. உதாரணத்துக்கு இந்த மாதிரி சிற்பங்கள நம்ப சாதாரண கண்களால பாக்க முடியாது. So, முக்கியமா வெளிச்சம்கூட இல்லாத ஒரு உயரத்துல இத ஏன் செதுக்கனும்? இந்த கோவில் கட்டி கிட்டதட்ட 2000 வருஷங்கள் இருக்கும். ஆனா இப்ப நாம இன்னொரு கோவிலுக்கு போகலாம். Gangai கொண்ட Cholapuram, இத கட்டி 1000 வருஷங்களாவது ஆகி இருக்கும். மறுபடியும் , இங்கையும், கோவில்லுக்குள்ள ஒரு இருட்டான இடம் இருக்கு and யாருமே இந்த ceilingல இருக்கற சிற்பங்கள கவனிக்கறது இல்ல. But இங்கையும் அதே மாதிரி 12 ராசிக்கான சின்னங்கள் இருக்கு. எதுக்கு ஒருத்தர் இந்த சிற்பங்கள எல்லாம் செதுக்கனும்,?அப்பறம் அத யாரும் பாக்க முடியாத எடத்துல வைக்கணும் ?
    நீங்க ஒருவேள என்ன மாதிரி இருட்டா இருக்கற இடத்துக்குள்ள எல்லாம் flashlight ஓட போகலன்னா இத எல்லாம் கண்டிப்பா பாக்க முடியாது.
    இத எல்லாம் ஏன் செதுக்குநாங்கன்னு உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிதா?
    இந்த ரகசியத்தை decode பண்ண நம்ப இப்ப Kalugasalamoorthy கோவிலுக்கு போகணும். இது ஒரு 1300 வருஷ பழைய கோவில் and இந்த கோவிலோட ceilingல நீங்க பாக்க போற விஷயம் உங்கள ரொம்ப ஆச்சர்யப்பட வைக்கும்.
    This is the map, this is the key that explains everything about astrology and even ancient இது தான் அந்த வரைபடம் . இது தான் ஜாதகம் ஜோசியம் வானியல் எல்லாத்தையும் விளக்கற ஒரு key map. எவ்வளவு சிக்கலா இருக்கு பாருங்க. என்ன வடிவங்கள் (patterns )இதெல்லாம்? உங்களுக்கு இதுல இருந்து ஏதாவது புரியுதா? இதுல அளவுக்கு அதிகமான விஷயங்கள் இருக்கும் போல இருக்கு. So நம்ப இப்ப இந்த குறிப்பிட்ட சதுரத்துக்குள்ள (square) மட்டும் கவனிக்கலாம். இங்க 12 ராசிகளுக்கான சின்னங்கள் இருக்கு. நீங்க இதுல எல்லா ராசிகளையும் பாக்கலாம் like வில்லு அம்போட இருக்கற தனுசு ராசி, விருச்சிகம், துலாம்ன்னு எல்லாம் இருக்கு.
    இத நான் mainstream archeologists and historians கிட்ட காட்டினப்ப அவங்களும் இந்த குறிப்பிட்ட சதுரத்துக்குள்ள இருக்கறது 12 ராசிகளுக்கான சின்னங்கள் தான்னு ஒத்துக்கிட்டாங்க
    ஆனா அங்க இருக்கற மத்ததெல்லாம் just randomஆ செதுக்குன ஏதோ சிற்பங்கள் அப்படின்னு அவங்க நினைக்கறாங்க அதாவது இங்க மிருகங்கள் இருக்கு, வட்டங்கள் இருக்கு, And நடுவுல பாத்தா நெறைய விதமான சின்னங்கள் கூட இருக்கு. இது மொத்தமா அர்த்தமில்லாம இருக்கு. இதெல்லாம் இந்த (expertsக்கு )வல்லுநர்களுக்கு அர்த்தமில்லாததா இருக்கலாம், ஏன்னா இன்னைக்கு இருக்கற expertsக்கு நம்ப vedic Astrology பத்தி எதுவும் தெரியாது. நடுவுல இருக்கற 9 symbolsம் Vedic astrologyல 9 factorsஅ இல்ல நவகிரகங்கள குறிக்கிது பொதுவா இத 9 planetsன்னு தப்பா புரிஞ்சிக்கராங்க. இந்த 9 factorsம் நம்பள பாதிக்கும் அப்படின்னு சொல்ராங்க.
    #PraveenMohanTamil #Astrology #ஜோசியம்

Komentáře • 464

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +81

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. 800 வருட தமிழர் கலை!- czcams.com/video/qbZkysB0oYk/video.html
    2. தமிழர்களின் தனித்திறமை! - czcams.com/video/dobxhlnSSL0/video.html
    3. வழி காட்டும் அடையாளங்கள்! - czcams.com/video/E5FYOnzpK_c/video.html

    • @iniank8663
      @iniank8663 Před 3 lety

      Ceiling placement reason, there would have been chandelier hanging from the center with some specially made glass/light lamp which would have acted as map like thing - if turned or increasing the light one can predict future of that day or to the person or something like that
      the rays coming out from lamp will touch/reach certain boxes or circles if tweaked from down
      Just my idea around it - not sure

    • @sanjeev9015
      @sanjeev9015 Před 3 lety +1

      Bro. Ravanan ,sigiriya pathi tamil video podunga plz

    • @baboosingh8633
      @baboosingh8633 Před 3 lety

      . Mo

    • @mathasri6768
      @mathasri6768 Před 3 lety

      மிக்க நன்றி.வாழ்க தமிழ். நிறைய விடயங்களை எதிர்பார்க்கிறோம். வாழ்க.

    • @murugeshr8545
      @murugeshr8545 Před 3 lety

      Ganagai konda sozapuram,darasuram build by rajarajan - I choola king🙏

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 Před 3 lety +278

    இதற்கு முன்பு ஆங்கிலத்தில் தங்கள் பதிவை புரிந்தும் புரியாமலும் பார்த்தேன் இப்போது புரிந்து பார்த்தும் மலைப்பாக இருக்கின்றது நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +39

      தங்களின் ஆதரவிற்கு நன்றிகள், உங்களின் தமிழ் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்🙏🏼

    • @karpagamsubramanian9212
      @karpagamsubramanian9212 Před 3 lety

      9.34 thamilargal pirpokka irukangangu yepadi sola mudiyum

    • @vvarshini8308
      @vvarshini8308 Před 3 lety +4

      @@karpagamsubramanian9212 Avar athula sarcastic ah sirikrathulaye puriyuthu. Tamilargal pirpokka irukaanganu sollala. Apdi solravangala thaan Avar challenge panraaru.

    • @karpagamsubramanian9212
      @karpagamsubramanian9212 Před 3 lety +2

      @@vvarshini8308 ok sis... Everyone understand in that way means kkay

  • @historylover5042
    @historylover5042 Před 3 lety +174

    கண்ணில் அதிகம் படாத, கவனிக்காத விஷயங்களை அறிந்து அனைவர் கவனத்திற்கும் கொண்டு வருவதற்கு
    பாராட்டுக்கள். அதுவும் தமிழில்.❤❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +8

      தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் நண்பா

    • @kannanr4323
      @kannanr4323 Před 3 lety +4

      @@PraveenMohanTamil praveen sir you are awesome... you deserve more 🥳🤗

    • @ppadmini5326
      @ppadmini5326 Před 3 lety

      Super

  • @deepakumar309
    @deepakumar309 Před 3 lety +158

    நம்முடைய பாரம்பரியத்தை விட்டுவிட்டு எதையோ தேடிக் கொண்டு இருக்கிறோம்.உங்கள் பணி அற்புதம்.💐💐💐👍👍👍

  • @GurujiMaSi
    @GurujiMaSi Před 3 lety +79

    ஆன்மிகம் தழைக்க, ஆண்டவனால் அனுப்பப்பட்ட, தனிப்பிறவி நீங்கள் . தங்களின் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +3

      சரியாகச் சொன்னீர்கள்

  • @Rudresh101
    @Rudresh101 Před 3 lety +69

    என் பெற்றோரிடம் உங்கள் விழியத்தை காட்ட ஆசைப்பட்டத்துண்டு.
    தமிழில் பதிவிடுவதால் தற்போது அவர்களிடம் காட்டுகின்றேன். எளிமையாக புறிந்து கொள்கின்றனர்.
    மிகவும் நன்றி🙏
    தொடரட்டும் உங்கள் நற்பணி 🔥

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +2

      தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் நண்பா🙏

  • @komalasaravanan4459
    @komalasaravanan4459 Před 3 lety +31

    பிரீவீன் உங்கள் பதிவுகள் ஆங்கிலத்தில் பார்த்த எனக்கு , தமிழில்
    பார்த்த பின் இன்னும் அருமையாக புரிகிறது.... நன்றி..

  • @muralidharan2727
    @muralidharan2727 Před 3 lety +21

    அருமையான காணொலி சகோதரரே 👏👏👏 இந்த காணொலியை ஆங்கிலத்தில் முன்பு பார்த்தேன். தமிழில் பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது.

  • @ramkrishnan6197
    @ramkrishnan6197 Před 3 lety +18

    அருமையான ஆராய்ச்சி, இளைஞர்களுக்கு அதிகம் பகிருங்கள், நம் பிரம்மிக்க வைக்கும் வரலாறுகள் எவ்வாறு அழிக்கப்படுகின்றது என்பதை அவர்கள் உணரட்டும்

  • @ramakrishnan-qb4uz
    @ramakrishnan-qb4uz Před 3 lety +36

    தமிழ் பேசுறீங்க ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப அழகா தெளிவா பேசுறீங்க இப்போதுதான் எல்லாம் புரியுது நன்றி வாழ்த்துக்கள் 👍

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Před 3 lety +2

    உங்களுடைய ஆராய்ச்சி ஆழ்ந்த சிந்தனை பல உண்மைகளை மக்களுக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது

  • @mcmurugan4239
    @mcmurugan4239 Před 3 lety +57

    தொடரட்டும் உங்களின் சேவைகள்!!! வாழ்த்துக்கள் 🎉🎉

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 Před 3 lety +3

    ப்ரவீன்:ராசி, க்ரஹ ங்கள் பற்றியநிகழ்சி அருமையோ அருமை. அபிஜித் பற்றிய தகவல்fantastic. நன்றி

  • @sivaarunasiva9703
    @sivaarunasiva9703 Před 3 lety +6

    மிக அருமை.. மழலை தமிழ்.... கேட்க சந்தோஷமா இருக்கு.....

  • @janarthananr9473
    @janarthananr9473 Před 3 lety +24

    Dear sir, My respect full
    Salute to you.
    Your posting in Tamil is very helpful and knowledgeable.
    Many many thanks to you.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +3

      thank you so much for your support

    • @mohanselvakumar728
      @mohanselvakumar728 Před 2 lety

      அன்பான வாழ்த்துக்கள்

    • @mohanselvakumar728
      @mohanselvakumar728 Před 2 lety

      உங்கள் பனி சிறப்பாக நடத்த இறைவன் அருள் புரியட்டும் தமிழர்கள் அறிவுத்திறன் உலகம் முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும் நாத்திக மூடர்கள் தெளிவு பெறட்டும் வாழ்த்துக்கள்

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 Před 3 lety +6

    ரொம்ப நல்ல தமிழ் நடையில் பேசுகிறீர்கள். தமிழ் வளர்க்கிறோம் என்று சொல்லி ல ள ழ உச்சரிப்பே நாக்கில் வராமல்( தமில் )பேசும் தமிழ் படித்த மக்களுக்கு நடுவில் அழகாக தமிழில் சரளமாக பேசி அசத்துகிறீர்கள். காதுக்கு இனிமையாக இருக்கிறது. பல்லாண்டு வாழ்க. நீர் கூறும் விவரங்களும் அருமையாக இருக்கின்றன. 🙏🙏

    • @ndinakaran311
      @ndinakaran311 Před 3 lety

      தமிழில் இவ்வளவு அழகாக பேசுவீர்கள் என்று தெரிந்து மிக்க வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தோம். உங்கள் தொண்டு தொடரட்டும் உங்களுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. தமிழில் நீங்கள் பேசியதற்காக உங்களுக்கு ஒரு பாராட்டு மழையை பொழிந்து இருக்கிறது. ஆன்மீகத்தையும் அறிவியலையும் கலந்து நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது வாழ்க நீங்கள். வளரட்டும் உங்கள் தமிழ் தொண்டு. நன்றி. மிக்க நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @mkjmsms5618
    @mkjmsms5618 Před 3 lety +12

    தமிழில் பார்ப்பது மிக அருமை யாக உள்ளது. தொடரட்டும் தங்கள் பணி.

  • @jayanthiv1479
    @jayanthiv1479 Před 2 lety +3

    சூப்பர் சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மெய் சிலிக்க வைக்கிறது, நாமும் இந்த தமிழ் மண்ணை சேர்ந்தவர்கள் என்று பெருமை கொள்ள வைக்கிறது உங்கள் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் சார்

  • @deepikasrinivasan4205
    @deepikasrinivasan4205 Před 3 lety +30

    You can see these kind of 12 rasi inscriptions in and around temple in thanjavur. I have seen in Thittai guru bagawan kovil near thanjavur. Towards kumbakonam route. That temple is called vashishteswarar temple.

  • @sarojasiva2385
    @sarojasiva2385 Před 3 lety +3

    நன்றி பிரவீன்.தமிழில் கேட்கும் போது இன்னும் நிறைய புரிகிறது.

  • @sampaths1807
    @sampaths1807 Před 3 lety +18

    Great video again. Praveen... I wish you should be in archeologist of India...

  • @Kathaikuviyal2023
    @Kathaikuviyal2023 Před 3 lety +4

    அண்ணா English. ல உங்க Video பாத்துட்டு இப்ப தமிழ் ல பார்ப்பது மகிழ்ச்சி..... தமிழில் உங்க குரல் வித்தியாசமா இருக்கு...

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +3

    கடவுளுக்கும் ௨ங்களுக்கும் கண்டிப்பாக தொடர்பு இ௫க்கும் ௮தனால் இப்படிப்பட்ட நம் முன்னோா்கள் நமக்காக கொடுத்து சென்ற கலையும் விஞ்ஞானமும் ௨ங்களுக்கு புரிகிறது ௮தை பொறுப்புடன் ௭ங்களுக்கு ௭டுத்துச் சொல்கின்றீா்கள் நன்றி🙏💕🙏💕

  • @manjuc777
    @manjuc777 Před 3 lety +22

    Always superb Praveen sir

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      thanks nanba

    • @manjuc777
      @manjuc777 Před 3 lety

      @@PraveenMohanTamil I have improved my communications by watching your video also learning our historical temple technologies

    • @manjuc777
      @manjuc777 Před 3 lety

      I have many photos of old temples, let me know how to share it with you.

  • @Angel26618
    @Angel26618 Před 3 lety +5

    Super bro tamil ah video poda matendreengale nu niraya naal nenachuruken enna dhan english la video pathalum tamil ah pakura madhiri varadhu. Great job

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் பல

  • @Thi_Vallavan
    @Thi_Vallavan Před 3 lety +9

    நன்தேடல் அண்ணா... மிகச் சிற‌ப்பு 😍🙏🏼

  • @prakasharun2929
    @prakasharun2929 Před 2 lety +3

    கடைசில எப்பவும் போல ஆச்சர்யம் தான்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 3 lety +4

    அருமையான காணொளி தமிழில் கூறுனிர்கள்ர்கள் மென்மேலும் உங்கள் பணி தொடர்வதற்கு நன்றி

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 Před 3 lety +2

    அருமையான பதிவு
    அற்புதமான செய்தி
    எளிதில் புரிந்து கொள்ள உதவியமைக்கு மனமார்ந்த நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 3 lety +2

    உண்மையாவே நீங்க தமிழ்ல சொல்லும் போது எனக்கு ரொம்ப பிடிக்குது சகோ 👍👍👍👍👍👍👍👍👍மிக்க நன்றி தமிழ்ல நீங்க சேனல் ஆரம்பிச்துக்கு பிரவின் 🙏

  • @deepika1278
    @deepika1278 Před 3 lety +1

    அருமை அருமை பிரவீன் நன்றி அதீத அறிவு தங்களுக்கு சொல்லும் விதம் அருமை

  • @sekarg8968
    @sekarg8968 Před 2 lety +2

    super explain and super speech all tamil nadu temple u see and explain very exland

  • @meenag9192
    @meenag9192 Před rokem +1

    Mr Praveen ungal vedio ovondrum miga miga அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
    ஒவ்வொரு ராசிக்கும் அதி தேவதை மரம் விலங்கு சாதகமான திசை என்று இருக்கிறதால் அதை குறிக்கும் அம்சமாக இதை செய்திருக்க கூடும்

  • @abcabc2179
    @abcabc2179 Před 3 lety +2

    அருமையான காணொளியை தமிழில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்று..உங்களின் அரிய பணி மென்மேலும் சிறப்புற என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @boxy6643
    @boxy6643 Před 2 lety +1

    அருமை பிரவீன் சார்..,

  • @eantrumanandham7824
    @eantrumanandham7824 Před 3 lety +4

    அந்த கோவில் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த ஜாதக பலனை கணிக்க கூடியதாக இருக்கும்

  • @kalpanar6761
    @kalpanar6761 Před rokem +1

    Amazing Sir, Kathavu pinnadi Miga periya Rahasiyam irukkumnu ninaikren,
    Agayam Rasiyangal nu ninaikren💐

  • @thamilalaganthamil8740
    @thamilalaganthamil8740 Před 2 lety +1

    அருமை அருமை அருமை பிரவீன் மோகன் நாங்கள் ஆண்டவன் சன்னதி போனால் இவையெல்லாம் பார்க்க மாட்டோம் உங்கள் தேடல்கள் மூலம் பார்த்து பிரமிக்கின்றோம் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் பிரவின் மோகன்

  • @arun1037
    @arun1037 Před 3 lety +1

    அருமையான தகவல்

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Před 3 lety +2

    As usual your descriptions are Very useful and Educating Thanks for your efforts

  • @deepikasrinivasan4205
    @deepikasrinivasan4205 Před 3 lety +10

    Im the first viewer praveen...

  • @rxvinodh135
    @rxvinodh135 Před 2 lety +1

    அருமையான விளக்கம் ஆச்சரியமாக இருக்கிறது

  • @funnykids6140
    @funnykids6140 Před 3 lety +12

    As always superb video Praveen Anna!!🙏🙏🚩🕉️

  • @sivaiyer7302
    @sivaiyer7302 Před 3 lety +1

    மிகவும் ஆதாரம் பூர்வமான விளக்கம் சொன்னதற்கு நன்றி.

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 3 lety +1

    Wonderful episode excellent expression of picturising astrology

  • @chellappansadayappan2062
    @chellappansadayappan2062 Před 3 lety +2

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @prabhakar1897
    @prabhakar1897 Před 3 lety +1

    Thanks for this valuables, could you also help us find how this was used to foresee

  • @user-jk1qb5qf9x
    @user-jk1qb5qf9x Před rokem +1

    வணக்கம் என்னுடைய பெயர் ராஜவேலு சேலம் மாவட்டம் உங்கள் ஆய்வு அறிவியல் திரன் எல்லாம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் ஆய்வுகளில் கலந்து கெல்லாமா எனக்கு பிற்கால வாழ்க்கை மிகவும் விரும்புவேன் அவைதான் எனக்கு பிடித்தவை உங்கள் ஆய்வுகளிலன் மூலம் நான் நிரையவிசியங்கள் கற்றுக் கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 Před 3 lety +1

    அருமை! அருமை! நன்றி ப்ரவீண்!

  • @wlanbox4732
    @wlanbox4732 Před 2 lety +1

    அருமை சகோ.

  • @mullairajasekaran5739
    @mullairajasekaran5739 Před 3 lety +2

    Amezing , I should appreciate your language where every one can easily understand . Awesome explanation . Looking forward to know and see more of your updates and videos . Thanks a lot

  • @udhayabanu6814
    @udhayabanu6814 Před 3 lety +1

    Super praveen.we dont have knowledge to understand it. In between the information not passed on to us there was vast gap in passing knowledge. May be due to invasion. I feel happy atleast few people like you are interested and presenting us such valuable videos.

  • @prasyv4675
    @prasyv4675 Před 3 lety +3

    Excellent information 🙌✌️🤝👍👌👏🙏✌️

  • @balasmusings
    @balasmusings Před 2 lety +1

    Truly amazing...our ancient knowledge is like an ocean. Thank you for showing new perspectives.

  • @Yuvastanza
    @Yuvastanza Před 3 lety +2

    மிகவும் சிறப்பான பதிவு!

  • @devisrinivasan726
    @devisrinivasan726 Před 3 lety

    Vera level ji, hats off 🙏

  • @timetraveller22
    @timetraveller22 Před 2 lety +2

    Amazing..i was always interested in vedic astrology but this is so mindblowing..this alters the astrology knowledge we have today..i wonder why my soul accepted the choice of being born on earth..too many wrongly interpreted knowledge.u r truly doing a great job Praveen.

  • @rajaramans2312
    @rajaramans2312 Před 3 lety +6

    Super bro ❤️❤️👍👍🙏

  • @araghupathy8597
    @araghupathy8597 Před 2 lety +1

    I am learning so many things.oh God only because of you Praveen

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 3 lety +2

    Wow ivlavu nal puriyama ippa super thamilla solradhu excellent thanks valga valamudan praveen sir god bless you

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +1

    Thank you for revealing complicated things in an easy manner. God Bless You.👌🙏

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 Před 3 lety +2

    மிகவும் சிறப்பாக உள்ளது இந்த பதிவு நன்றி

  • @TamilVaanam
    @TamilVaanam Před 2 lety +1

    Lots of information bro thanks for your hard work 🙏🙏🙏👌, but why our archiology department not to research again ?

  • @JaiKishoreTheSacredSprit
    @JaiKishoreTheSacredSprit Před 3 lety +5

    Amazing !!!!!

  • @commonmanvignesh2623
    @commonmanvignesh2623 Před 3 lety +4

    Super bro Tamil la Chanel open panathuku valthukal ❤️

  • @mnatarajan7382
    @mnatarajan7382 Před 3 lety +1

    Super valthukkal sir

  • @sugunasenthilkumar145
    @sugunasenthilkumar145 Před 2 lety +2

    அருமை அருமை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 2 lety +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @adhavandev5086
    @adhavandev5086 Před 3 lety +1

    உங்கள் தமிழ் பதிவு மிக அருமை

  • @munusamyk4701
    @munusamyk4701 Před 2 lety +1

    அருமையான செய்திகள் !
    மிக்க நன்றி !
    வாழ்த்துக்கள் !!

  • @gpandiyan8537
    @gpandiyan8537 Před 3 lety +1

    Super sir,
    . Great job ❤️❤️

  • @sathya4785
    @sathya4785 Před 2 lety +1

    All our old temples are science laboratory... Good job.

  • @arjunan617
    @arjunan617 Před 2 lety +1

    Praveen Mohan sir am also see this Vellore temple

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 Před 3 lety +1

    Good explanation. Nice expression . Informative. Pour more videos. God bless you.

  • @gskrishnan4059
    @gskrishnan4059 Před 2 lety +1

    Super explanation. Kalladadhu Kadalalavu.

  • @bhuvaneswariswaminathan6687

    Great job, hatsoff,thanks🙏👍

  • @palanikumar8173
    @palanikumar8173 Před 3 lety +1

    Wonderful things you explained, thank you for the same

  • @orangeorganics
    @orangeorganics Před 3 lety +1

    Incredible messages.thanks Praveen

  • @b.sathyanarayanan6081
    @b.sathyanarayanan6081 Před 2 lety +1

    Avudaiyar kovilil natsaththirangalin vadivam ethey mathiri erukku

  • @ananthashreemadavan9274
    @ananthashreemadavan9274 Před 2 lety +1

    6 circles dakshinayan, 6 utharayan, 4 weeks

  • @venkateshmuthusamy5351
    @venkateshmuthusamy5351 Před 3 lety +2

    கோவில்கட்டும்போது.பார்த்தஜாதக.கட்டமாக இருக்கலாம்என்றுநினைக்கிறேன்

  • @praveenkumar-oq9fg
    @praveenkumar-oq9fg Před 3 lety +1

    Thank you praveen mohan. I am a follower of your English channel. Just now I saw your tamil one. Cool.
    Doing great job.

  • @Brindavanam...
    @Brindavanam... Před 3 lety +1

    சிறப்பு....
    வாழ்த்துகள்

  • @kalyanisree4025
    @kalyanisree4025 Před 3 lety +1

    Amazing but sensible findings. Keep up with the good work👍

  • @kishnanovitha6206
    @kishnanovitha6206 Před 3 lety +1

    Very smart sir👍

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 3 lety +1

    இது ஒரு சிறப்பான பதிவு. நன்றி.
    💐💐💐💐💐

  • @shenbagaraj740
    @shenbagaraj740 Před 2 lety +1

    Eppa ithellam pathutu koncham thala suthunavunga irukingala. Praveen sir super.

  • @wilsonwilson8870
    @wilsonwilson8870 Před 3 lety

    Your really astonishing person and your are lucky enough to visit these beautiful, ancient places.even your knowledge is level with those who built these historical constructions and sculptures.simple language of your channel is valuable.

  • @gvkengineering74
    @gvkengineering74 Před 3 lety +2

    அருமை சகோதரா...
    வியக்க வைக்கும் இந்து மதம்...
    மேலும் எதிர்பார்க்கிறோம்...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @varalakshmebalakrishnnan9293

    Superb sir. Good luck for all your future work.

  • @miracoloustiruvannamalai5728

    அருமை .நல்வாழ்த்துக்கள் .

  • @lrkmusings
    @lrkmusings Před 2 lety +1

    I saw a similar one in kudimiyal malai temple.. was reminded of ur vdo only.. thanks for tuning us to observe such treasures...

  • @agenttom960
    @agenttom960 Před 3 lety +4

    recent ah கழுகுமலை போய்ருந்தேன் அப்ப சாமிகூம்புட்டு கிளம்புறதுக்கு முன்னாடி மேல இது இருக்குறத பாத்தேன் உடனே போட்டோ எடுத்தேன் ஆனா வீட்டு வந்து இதபத்தி"தேடிப்பாத்தேன் சரியா ஒன்னுமே கிடைக்கல ஆனா தற்செயலா உங்க வீடியோவுல பாத்ததும் அய்யோ செம

  • @jpdys
    @jpdys Před 2 lety +1

    Super, wonderful video Praveen

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 Před 3 lety +1

    great ji

  • @nithyakalyani1619
    @nithyakalyani1619 Před 3 lety +1

    Continue your good job, bro

  • @uvaraja5050
    @uvaraja5050 Před 3 lety +1

    Super sir.. very fentatic.. amazing.. I am support you..

  • @sunpower610
    @sunpower610 Před rokem +1

    அண்ணா அவர்களுக்கு வணக்கம் இதேபோல திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சீலிங் கில் ராசிகட்டங்கள் நட்சத்திரங்கள் உள்ளது நான் பார்த்து இருக்கிறேன் நீங்கள் ஒரு முறை பார்த்து ஆய்வு செய்து ஒரு காணோலி போடுமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி.

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 Před 3 lety +1

    அருமை அருமை
    நின் ஆராய்ச்சி மேலும் வளரட்டும்

  • @prasannakumar6512
    @prasannakumar6512 Před 3 lety +4

    Oru velai atha kathava thorakka suriya kirakanam athe mari nerkottala erukkumpodhu, antha rendu rasikku naduvula vara time la atha kathava thorakka mudiyumo, apdi atha vaipu kidaika ennum ethanai nal erukku, Edhu ennoda thought....

  • @j.revathireva4909
    @j.revathireva4909 Před 2 lety +1

    Yes as you mentioned before
    Each person birth chart differ.
    Based on permutations and combination . Their characters differs. Each one have their own uniqueness.
    I believe. When we think deeply. We can get more information.
    Thank you so much brother