புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்/St.Michael's Prayer In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2021
  • புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்
    வானக தூதரணியின் தலைமை தளபதியே! இறைவனின் அரியணை முன் நிற்க பேறு பெற்ற பிரபுவே !இறைவனின் கட்டளைப் படியே விண்ணுலக வாசலை திறக்கவும் பூட்டவும் அதிகாரம் உள்ள வானவரே!
    லூசிஃபரோடு இணைந்து கடவுளை எதிர்த்த வானக அரூபிகளை கடவுளுக்கு நிகர் யார் என்று கூறி உன் ஈட்டியால் குத்தி, எரி நரகில் தள்ளியவரே! வான்வழி ஆவிகளையும் பாதாள ஆவிகளையும் எதிர்த்து போராடி மனிதரை காக்கும் மேலான காவலரே! உம் தயவை நாடிவரும் எங்கள் விண்ணப்பங்களை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் அது தூதரே ! சாத்தானை துரத்தி முறியடிக்கும் சர்வ வல்லமை பெற்ற மிக்கேல் அதிதூதரே! கண்ணீர் மல்க உம்மை நாடிவரும் எங்கள் வேதனைகளை நீக்குவீராக. எங்களுக்கு எதிரான மனிதரின் சூழ்ச்சிகள் நோய்களையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் சாத்தானின் தீச்செயல்கள், பில்லி சூனிய கட்டுகள், ஏவல்கள், வழி போக்குகள்,கண் பார்வை திருஷ்டிகள் போன்ற தீய சக்திகளை, குத்தி எடுத்து ,இரும்பு கவசம் அணிந்த உம் கால்களால் நசுக்கி, நெருப்பு போன்ற உம் கண்களால் சுட்டெரித்து, எரி நரக பாதாளத்தில் தள்ளி எங்கள் அனைவரையும் காப்பீராக !
    விண்ணுலக படைகளின் அதிபதியே !என்றும் வாழும் அரூபிகளில் மகிமை நிறைந்த வானதூதரே!உன்னத கடவுளின் நம்பிக்கையை பெற்ற தலைவரே! இறைவனின் அரியணை அருகே நிற்க பேறு பெற்றவரே! கடவுளின் கட்டளை படியே விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வல்லமை பெற்ற வானவரே! கடவுளின் நீதி அரியணை முன் எங்களை அழைத்துச் செல்லும் அதிதுதரே! இறுதி வேதனையில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் ஆதரவாளரே! வலுவற்ற எளியேனைக் கருணையுடன் பார்த்து ,என் வாழ்நாள் முழுவதிலும், சிறப்பாக, என் இறப்பு நேரத்திலும் எனக்கு தயை புரிந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறேன்.
    அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களை காத்தருளும். பசாசின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டை கேட்டு, இறைவன் பசாசைக் கண்டிப்பாராக .நீரும், விண்ணகப்படையின் தலைவரே, மக்களைக் கெடுக்க உலகில் சுற்றித் திரியும் பேயையும் மற்ற கெட்ட அரூபிகளையும் இறை வலிமையால் நரகத்தில் தள்ளுவீராக.- ஆமென்.
    அதிதூதரான புனித மிக்கேலே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.(3) ஆமென்.
    தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.
    #stmichael
    #tamilchristianprayers
    #holyfamilyaj
    #romancatholic
    #saints
    #dailyprayers
    #familyprayers
    #punithargal
    #prayerintamil
    #arcangel
    #stmichael
    #tamil
    #tamilchristianprayers
    #holyfamilyaj
    #todaysgospel
    #bible
    #jesus
    #madha
    #whatsapp
    #whatsappstatus
    #whatappstatus
    #omg
    #trending
    #viralvideos
    #blessing
    #iraivarthai
    #andradairaivarthai
    #narcheithi
    #vailankanni
    #velanganni
    #arockiamadha
    #shrine
    #basilica
    #catholic
    #christian
    #prayersintamil
    #jebangal
    #dailyprayers
    #familyprayers
    #tamilchristiansongs
    #christmassongs
    #xmas
    #churchsongs
    #keyboardtutorial
    #piano
    #youtube
    #shorts
    #ytshorts
    #youtubeshorts
    #myfirstshorts
    #shortvideos
    #youtubeshortvideos
    #poondi
    #vadipatti
    #saints
    #punithargal
    #all
    #francisxavier
    #saveriyar
    #josephs
    #soosaiyappar
    #yoseppu
    #anthoniyar
    #saint
    #st
    #marymatha
    #mothermary
    #mother
    #yesu
    #jesuschrist
    #madhawhatsappstatus
    #jesuswhatsappstatus
    #litanyof
    #chaplet
    #divinemercy
    #mandrattumalai
    #pirarthanai
    #jebamalaiintamil
    #sacredheart
    #yesuvinthiruiruthayam
    #feastday
    #thiruvizha
    #holymass
    #sagayamadha
    #viyagulamadha
    #lentdays
    #pasca
    #thavakaalam
    #morningprayers
    #newyear
    #christmastamil
    #christmasnewmasssongs
    #xmassongstamil
    #christmaschurchsongs
    #churchdecoration

Komentáře • 700

  • @a.daicymacharles713
    @a.daicymacharles713 Před rokem +24

    எனக்கு துரோகம் செய்தவங்களை.
    தண்டிக்காமல் புரிய வையுங்கள் மிக்கேல் தூதரே 😔😔😔

  • @sugasinisababathi2625
    @sugasinisababathi2625 Před 5 měsíci +7

    எங்கள் அப்பா அம்மா உடல் நலம் பெற வேண்டும் அப்பா🙏🙏

  • @alosiyesramesh7472
    @alosiyesramesh7472 Před rokem +14

    மிக்கேல் அதிதூதரே
    எங்களை பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன் அப்பா

  • @lillysundari6426
    @lillysundari6426 Před rokem +47

    கடன் பிரச்சினை தீர, குடும்ப சமாதானம், இறை பக்தி, பரிசுத்த வாழ்க்கை காக ,பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா 🙏🙏🙏😭

  • @mickalraj5127
    @mickalraj5127 Před 7 měsíci +5

    என்னுடைய குடும்பத்தில் உள்ள சாத்தான் சூழ்ச்சியை முறியடித்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.அதி தூதரே ❤

  • @rejoyannie9513
    @rejoyannie9513 Před rokem +7

    மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்ப கஷ்டங்களை நீக்கி சமாதானமாக வாழ உதவி செய்யுங்க ஐயா.😭😭😭

  • @ffbadboy726
    @ffbadboy726 Před rokem +33

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் சுகத்துடன் இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏

  • @rohinis7896
    @rohinis7896 Před 2 lety +7

    அப்பா எனக்கு கால்வலி குணமாக்கும் அப்பா pl அப்பா

    • @rohinis7896
      @rohinis7896 Před 2 lety

      அப்பா எனக்கு மேலாளர் பதவி உயர்வுக்கு பெயர் பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள் நீங்கதான் எனக்கு Head Officela இடம் வாங்கி தர வேண்டும் அப்பா நீங்க எனக்கு செய்யனும் pl pl ப்பா

  • @kingsleywilfredtharmini4758

    எங்கள்ளை ஏமாற்றியவர்கள் அவமானபடுத்தினவர்கள் முன் எங்களை வால் ஆக்காமல் தலையாக்கி வாழவையுங்கள் இயேசு அப்பா

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 Před 2 lety +80

    எங்களை சாத்தானீன் தீய சக்தியிடம் இருந்து காத்தருளும்❤

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 Před rokem +6

    அதிதூதரான புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jagenjeron7084
    @jagenjeron7084 Před 11 měsíci +7

    தீய சக்திகளில் இருந்து எனக்கு முழுமையான சுகம் தாங்க மிக்கேல் ஐயா வே

  • @irudhayamary3982
    @irudhayamary3982 Před 2 lety +224

    எங்களை ஏமாற்றியவர்களுக்கு முன்பாக எங்களை வாழ வையுங்கள் அப்பா.

  • @elizebathrani243
    @elizebathrani243 Před rokem +16

    புனித மிக்கேல் அதிதுதரே!என் குழந்தைகள் இயேசுகற்றுதந்த ஜெபங்களை நன்றாகபடித்து ஞாபகசக்தி தந்து அக்குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் தரவேண்டிய மான்றடிக்கிறேன்.ஆமென்.....

    • @eugenemary2473
      @eugenemary2473 Před 4 měsíci

      புனித மிக்கேல் அதி தூதரே என் உடம்பில் இருக்கும் கேன்சர் என்னும் கொடிய நோயை அகற்றும்.என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என் மகன் படிப்பிற்கு ஏற்ற வேலையைக் கொடுத்து அவனை ஆசீர் வதிக்க உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என் பிள்ளைகள் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக வாழ வரம் வேண்டுகிறேன்.நன்றி புனித ரே நன்றி.

  • @parthibansesumariakemideep8110

    சாத்தானின் தீய சக்திகளை விரட்டும் ஆமென்

  • @arockiadossarockiadoss4531

    புனித தூதரே எங்களையும் எங்கள் குழந்தைகளையும்ஆசீர்வதித்தருளும். எங்களை கண்திருஷ்டி பொறாமை பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றிலிருந்து எங்களை பாதுகாத்து எங்களை இறைவனின் சித்தத்தோடு வாழ அருள் புரியும் எங்களுக்கு வரும் தீய நாட்டங்களில் இருந்து விடுவித்து பாதுகாத்து அருளும்.

  • @jmjm4595
    @jmjm4595 Před 2 lety +23

    புனித மிக்கேல் ஆண்டவரே. எங்களுக்காவும் எங்களைசார்ந்தவர்களுக்கவும். வேன்டிக் கொள்ளும். ஆமேன்

    • @arunasharma795
      @arunasharma795 Před rokem +1

      Michael is not aandavar. He is a created Archangel. Jesus only is the Lord of Lords. He only died for us on the cross, saving us from the power of Satan and hell. Our prayers should not stop at Michael Angel's feet. It should be raised before our Lord Jesus. It is Jesus Christ Who answers our prayers. We can pray to Michael Archangel to protect us because he is kept by Jesus to protect us..

    • @jervinraj6218
      @jervinraj6218 Před rokem

      Nengale Directave kekalame Yen Nenga ketta avaru kekkamatara???

  • @daisyr4337
    @daisyr4337 Před rokem +11

    அதிதூதரான புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🙏

  • @godsgrace2551
    @godsgrace2551 Před 8 měsíci +14

    எங்களைச் சூழ்ந்து வரும் தீமைகளில் இருந்து எங்களைக் காப்பாற்றும் மிக்கேல் ஐயா

  • @ffbadboy726
    @ffbadboy726 Před rokem +44

    எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏

  • @reenumedia3598
    @reenumedia3598 Před 2 lety +30

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித மிக்கேல் ஜயா என்னால முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் வாழ்க்கையை போறட்டாம என்னால முடியல 😭 😭 😭 😭

    • @arunasharma795
      @arunasharma795 Před rokem +3

      Believe in Jesus. He is with you.

    • @puvirajanthonypillai2963
      @puvirajanthonypillai2963 Před rokem +1

      Vavuniya sindhu hai naan saudila seven years miss you

    • @soniabenish7078
      @soniabenish7078 Před rokem +1

      Enachu

    • @rx100z
      @rx100z Před rokem +1

      எல்லோர வாழ்க்கையும் அப்படி தான்.. வெளி காட்டி கொள்வதில்லை..நானெல்லாம் 12 வருடங்களாக குடும்பம் இல்லாமல் ஒற்றை ஆளாக மனித மிருகங்களிடம் போராடி கொண்டு இருக்கேன்.. அப்பா jesus christ ஒருவரே எனக்கு தாய் அன்பு தந்து என்னை வழிநடத்தி வருகிறார்.. ஒன்று உங்களுக்கு ரகசியம் சொல்கிறேன் அப்பாவிடம் ஜெபிபதை விட பேசுங்கள்.... இனி எல்லாம் உங்கள் வசம் . உங்கள் குணம் மாறும் .. பிரச்சினை மாறும் . அதிலிருந்து புரிவாய் ...விரைவில் தமிழ்நாட்டில் ஒரு ஆலயம் கட்ட பட போகிறது . அது உலகை திரும்பிப் பார்க்க வைக்கும்.. இது தேவரகசியம் ...... அப்போது நான் இட்ட பதிவு உங்களுக்கு புரியும்..

  • @RaniRani-um2zy
    @RaniRani-um2zy Před 2 lety +17

    எங்களுக்கு காவலாய் இருக்கிற புனித மிக்கேல் அதிதுதரே எனக்கு இருக்கிற கடன் எல்லாம் தீரவேண்டும் என்றும் எனக்கு பணம் தர வேண்டியவர்கள் உடனே தருவதற்க்கும் அருள் புரிய வேண்டும் என்று புனித மிக்கேல் அதிதுதரே உம்னம பார்த்து கெஞ்சி மன்றாடி கேட்கிறேன் எனக்கு அருள் புரியும் அப்பா

  • @thenmozhim9054
    @thenmozhim9054 Před 2 lety +9

    ஆண்டவரே என் பிள்ளைகளுக்கு திருமண தடையை நீக்கி அருளும் எங்களுக்கு கருணை கட்ட வேண்டும்

  • @amalajacintha6951
    @amalajacintha6951 Před 2 lety +33

    எங்களை ஏழ்மையான நிலையில் உள்ளதை பார்த்து எள்ளி நகையாடியவர் முன் என்னையும் என் குடும்பத்தையும் தலைநிமிர வைய்யும் மிக்கேல் அதி தூதரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்

    • @suthasutha5632
      @suthasutha5632 Před 2 lety +1

      எங்கள் கடன்களை தீர்க்க ஆசிவழங்கும் ஆமேன்

  • @pfprince1524
    @pfprince1524 Před 2 lety +9

    அருமையான ஜெபம் .அன்பு சகோதிரிக்கு நன்றிகள் பல.அன்பு ஆண்டவரே வானதூதரை காவல் லாக வைத்தவரே உமக்கு கோடன கோடி நன்றிகள் இயேசப்பா . ஆமென்.

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  Před 2 lety +1

      மிக்க நன்றி சகோதரி🙏🙏

    • @sahayamary139
      @sahayamary139 Před rokem

      Punitha Michael Athithoothare engalai kuthikondulla mullai eduthuvidum

  • @Jollykidzzz
    @Jollykidzzz Před 2 lety +42

    புனித மிக்கேல் அதிதுதரே! எங்களுக்கு எதிராக உள்ள எல்லா தீய சக்திகளையும் ஒடுக்கி, அழிந்து, எங்களுக்காக தந்தையாம் இறைவனை மன்றாடுவிராக . ஆமென்

  • @lourdulionel3017
    @lourdulionel3017 Před rokem +27

    எங்கள் குடும்பத்திற்கு வழி விடாமல் தடுக்கும் சாத்தானின் சுழ்சிகளை ஒழிய செய்யும் புனித மிக்கேல் அதிதூதரே

  • @rohinis7896
    @rohinis7896 Před 2 lety +15

    அப்பா என்ன இந்த நரக வாழ்க்கைல இருந்து காப்பாற்றும் அப்பா

  • @davidarulraj3241
    @davidarulraj3241 Před rokem +11

    புனித மிக்கேல் அதி தூதரே நான் நன்றாக வேலை செய்யவும் எந்த தடையும் இடையிரும் வராத படிக்கும் என்னை பாதுகாத்து எந்த துணையும் இல்லாமல் இருக்கும் என் குடும்பத்தையும் உம் நிழலில் வைத்து பாதுகாத்து வாரும் ஐயா என் தகாப்பானே என் மண்டாட்டை கேட்டாருளும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏😭

  • @lillysundari6426
    @lillysundari6426 Před rokem +8

    எங்களை காப்பாற்றும் ஐயா 🙏🙏

    • @kalangjiamkalangjiam
      @kalangjiamkalangjiam Před rokem

      புனித மிக்கேல் அதிதூதரே எங்களை கடன் பிரச்சனையிலுருந்துவிடுதலை தரும் இந்த போராட்டம் முடிந்து போகட்டும்

  • @antanetravindran3838
    @antanetravindran3838 Před 2 lety +22

    எங்களுக்கு காவலாய் இருக்கிற காவல் சம்மனசானவரே எப்போதும் எங்களை காத்துக்கொள்ளும் நாங்கள் உறங்கும் போதும் நித்திரை விட்டு எழும்போதும் எமக்கு காவலாய் இருந்தருளும் ஆமென்

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  Před 2 lety

      Amen

    • @benitamerlin3554
      @benitamerlin3554 Před 2 lety

      11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      அப்போஸ்தலர் 1
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Před rokem +5

    அதி தூதரான புனித மிக்கேலே இறைவனிடம் எங்களுக்காக பரிந்துரைத்தருளும்

  • @lillysundari6426
    @lillysundari6426 Před rokem +8

    எங்களை ஏம்மாற்றியவர்கள் மனம் மாற வேண்டும் ஐயா, 🙏🙏எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

  • @lillysundari6426
    @lillysundari6426 Před rokem +11

    கடன் ,குடும்ப சமாதானம் சொல்லி ஜெபிகவும் 🙏🙏

  • @johnsundar568
    @johnsundar568 Před rokem +6

    அதி தூதரான மிக்கேலே எல்லா நேரங்களிலும் எங்களுக்கு துணையயிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தினர் யாவரையும்
    பாது காத்தருளும்..
    ஆமென்.

  • @saraswathijjayabalan223
    @saraswathijjayabalan223 Před 11 měsíci +3

    என்னை ஏமாற்றியவர் முன்பு எங்களை வாழ வைக்கனும் அப்பா😢😢😢😢😢😢😢

  • @francisxavier3338
    @francisxavier3338 Před 2 lety +16

    எங்களை ஏமாற்றியவர்களுக்கு முன்பாக எங்களை வாழவைங்கப்பா.

    • @benitamerlin3554
      @benitamerlin3554 Před 2 lety

      11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      அப்போஸ்தலர் 1
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது

    • @greencity7261
      @greencity7261 Před rokem

      🙏

    • @greencity7261
      @greencity7261 Před rokem

      சமாதானம் தாருங்கள் ஐயா🙏

  • @ancymolv163
    @ancymolv163 Před 2 lety +3

    நான் நீனைதா து நிறை வேற னும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joyelanthoney1825
    @joyelanthoney1825 Před 2 lety +7

    புனித. மிக்கேல் சம்மனசே எங்கள்குடும்பத்தை பாதுகாத்துக்கொள்ளும்

  • @arockiamsathish1598
    @arockiamsathish1598 Před rokem +7

    எங்கள் குடும்பங்களை காத்தருளும்

  • @stalinastalin5438
    @stalinastalin5438 Před 2 lety +13

    கடன் பிரச்சனைகள் நீங்கவும். எங்களை ஏமாற்றியவர்கள் தங்கள் பிழைகளை உணரவும். அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @kavipriya7490
      @kavipriya7490 Před rokem

      கடன் பிரச்சினைகள் நீக்கவும்.எங்களை ஏமாற்றியவர்கள் தங்கள் பிழைகளை உணரவும. அருள் புரிய வேண்டுகிறேன்

  • @arul495
    @arul495 Před 2 lety +26

    புனித ஆதி தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤🙏🙏🙏

  • @selvan4263
    @selvan4263 Před rokem +12

    அதி தூதரான அர்ச்சிஷ்ட மிக்கேலே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🌹🌹🌹

  • @violapanner6379
    @violapanner6379 Před rokem +2

    புனித மிக்கேல் சம்மனசானவரோஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்ஆமொன்

  • @vinnarasialex0804
    @vinnarasialex0804 Před rokem +7

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 dny +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு நல்ல வாழ்க்கை ‌துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anthonippillaimariyampilai8615

    அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசானவரே எங்களுக்குள் இருக்கும் தீய ஆவிகளை அகற்றி எங்கள் குடும்பங்களை ஆசிர்வதித்து ஆமென்

  • @silvesterambrose5552
    @silvesterambrose5552 Před rokem +5

    என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்தருளும் அய்யா

  • @helenrani6555
    @helenrani6555 Před rokem +2

    இயேசப்பா என் நோய்கள் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா. ஆமென்.

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 Před 2 lety +12

    ஆமென். எங்களை பாதுகாத்து வழி நடத்தும்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 dny +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினைலிருந்து காப்பாற்ற உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @newchannel-cu4zq
    @newchannel-cu4zq Před 11 měsíci +2

    புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இறைவனிடம் பரிந்து பேசும் வியாபாரம் இல்லாமல் இருக்கும் தடை சாத்தானின் பிடியில் இருந்து காப்பாற்றும் ❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 9 dny +1

    அப்பா கடன் பிரச்சினைகளிலிருந்து எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 9 dny +1

    St.Michael the archangel please save our family from all financial problems and harmful illness please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 27 dny +1

    St Michael the archangel please protect my family from all financial problems financial problems and harmful diseases please 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @umakumar7097
    @umakumar7097 Před 2 lety +36

    சாத்தானின் சதிகளை முறியடித்து எங்களை பாதுகாத்து கொள்ளும் ஆமென்

    • @benitamerlin3554
      @benitamerlin3554 Před 2 lety

      11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      அப்போஸ்தலர் 1
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது

    • @florarosari5609
      @florarosari5609 Před 2 lety

      St.Michael pray for me and save me from the evil doings of my relatives

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 3 dny +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினைலிருந்து காப்பாற்ற அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jackulineputhumailogan16

    அதி தூதரான மிக்கேலே எங்களுக்காக வேண்டிக்கொளீளும்❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 8 dny +1

    அப்பா என் உடல் நலம் பெற உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rosalixaverpraisethelord9121

    எங்கள் எங்கள்கூடவே இருந்தருளும் அதிதூதரே.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 3 dny +1

    புனித மிக்கேல் அதிதூதரே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி எனக்கு முற்றிலும் பலனளிக்க அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saral4136
    @saral4136 Před 11 měsíci +2

    புனித மிக்கேல் அதிதூதர்ரே என் குடும்பத்தை ஒன்று சேரும் ஐயா

  • @karolinkarolin7907
    @karolinkarolin7907 Před 2 lety +7

    புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +17

    எங்களை காப்பாற்றும் புனிதரே

  • @glorarani8706
    @glorarani8706 Před 2 lety +9

    புனிதமிக்கேல் அதிதூதரே என்னுடைய மகளை சாத்தானின் தீயசக்தியிலிருந்து காப்பாற்றிதந்ததற்கு கோடானகோடி நன்றிகள்

  • @victorarunachalam8954
    @victorarunachalam8954 Před 10 měsíci +1

    புனித மிக்கேலே தீய உலகில் வாழும் எங்களை ஆசாபாச புயல் கவ்விக் கொள்ளாமல் பாதுகாத்தருளும்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 12 dny +1

    St.Michael the archangel please save my family from all financial problems and harmful illness please be with us

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 3 dny +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் அம்மாவிற்கு நல்ல உடல் நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏

  • @SasiKumar-ge6eg
    @SasiKumar-ge6eg Před rokem +2

    அப்பா எனக்கு நல்ல உடல் சுகம் தாரும் அப்பா. நல்ல எதிர்காலம் தாரும் மிக்கேல் அய்யா 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 4 dny +1

    அப்பா புனித மிக்கேல் அதிதூதரே நான் எடுத்து கொண்ட Rtms தெரபி முற்றிலும் பலனளித்து நான் மன‌நோயிலிருந்து விடுதலை பெற்று நல்ல உடல் உள்ள நலத்தோடு இருக்க என்னை ஆசீர்வதியும்.

  • @satheeshsp183
    @satheeshsp183 Před rokem +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு தொழில் நல்லபடியாக நடந்திட உம்மை மன்றாடுகிறேன் என்மன்றாட்டை கேட்டருளும் ஆமென்

  • @subasuba2466
    @subasuba2466 Před 2 lety +3

    புனித மிக்கேல் ஆதிதூதரே எங்ககாளுக்காகவேண்டிக்கொள்ளும்ஆமென் நல்ல உடல் சுகம் கிடைக்க வேண்டும் என்று மன்றடிகிறோம்

  • @annamal194
    @annamal194 Před 2 měsíci +1

    வழி பாதை கிடைக்க தடையாக இருப்பவர்களை மனமாற்றம் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 6 dny +1

    Be with me St.Michael the archangel be with me during all my ups and downs and circumstances please be with me

  • @GnanatheepannGnanapragas-oh9go
    @GnanatheepannGnanapragas-oh9go Před 11 měsíci +2

    Amen praise the Lord hallelujah

  • @michaelthatheu6620
    @michaelthatheu6620 Před rokem +4

    உம் பேர் கொண்ட என்னையும் என் குடும்பத்தையும் உம் பாதுகாப்பில் வைத்து காத்தருள உம்மை வேண்டுகிறேன் நன்றி வேண்டுகிறேன்

  • @rohinis7896
    @rohinis7896 Před rokem +1

    அப்பா மிக்கேல் அப்பா ரொம்ப நன்றி அப்பா நீங்க என்னோட இருந்து என்ன காப்பாத்தி விட்டீர்கள்

  • @josephedison1905
    @josephedison1905 Před 2 lety +6

    அதிதூதரான புனித மிக்கேலே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

  • @alexandarswamy8893
    @alexandarswamy8893 Před 3 měsíci +1

    🙏🙏🙏 அதி தூதரான புனித மிக்கேலே....எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....🙏🙏🙏

  • @anbujebin5188
    @anbujebin5188 Před rokem +1

    குடும்பத்த்தில் அனைவரரூக்கும் நற்சுகம் பெற புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்ம்

  • @yashinthaagnanasothy3644

    St Michel protect us from all the evils and others.

  • @prathibareju152
    @prathibareju152 Před rokem +1

    Punitha
    Micheal athithutharey velinatil tholil pureum en kanavarukum en annavukum naila tholil valathaium udal arockiyathaium thara vendum endru ummai manttadukeren amen

  • @saranyasaranya3122
    @saranyasaranya3122 Před rokem +3

    🙏🙏🤲🤲 மிக்கேல் ஐய்யா
    எங்கள் கடன் தெல்லயிந்து தாரும் ஐய்யா 🤲🤲🤲🤲

  • @suganthianthonipillai4457

    புனித மிக்கேலே என் கவலைகள் வேதனைகள் கஸ்ரங்கள் துன்பங்கள் எல்லாம் நிரந்தரமாக தீரவேண்டும்.
    என் இரண்டு பிள்ளைகள்ளால எனக்கு சந்தோதசம் நின்மதி வேண்டும்
    ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 23 dny +1

    Appa grant eternal peace to my husband Ibin soul.forgive all his sins.Save his soul from purgatory please Appa🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 19 dny +1

    Appa save our family members from all evils 🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 4 měsíci +3

    என் பரிசுத்த தன்மையை யாராலும் பறிக்க முடியாது அதை கெடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்து விடுங்கள் நான் தேவனின் குழந்தை என்னை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டியது அனைத்து ஏஞ்சல்ஸ்களின் கடமை

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Před 4 měsíci

      உங்களின் இறைமகனை இன்றும் இரத்தம் சிந்த வைத்து விட்டனர்

  • @anuleon2423
    @anuleon2423 Před rokem +1

    Michael aandavare en kanavaruku neenda aaul koduthu asir vathingappa,en baby ku nalla valarchi kuduthu arivu kuduthu neenda aaul kuduthu asirvathingappa,deo ku noi kunamaga asirvathingappa,gift arivu kuduthu neenda aaul kuduthu asirvathingappa amen

  • @jebins3601
    @jebins3601 Před rokem +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @kavithaammu3057
    @kavithaammu3057 Před rokem +1

    அப்பா எங்களோட கஷ்டம் தீரனூம் நாங்கள் நல்லமுறையில் வீடு கட்டி முடிக்கனும் கண் திருஷ்டி செய்வினை நீங்கள் முறியடிக்கனும் அப்பா.

  • @premelar3954
    @premelar3954 Před 2 lety +1

    Punith migal appa en udal nalugaga vanti kolum 🕯🤲

  • @lillysundari6426
    @lillysundari6426 Před rokem +1

    எங்களை ஏமாற்றியவர்களை இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன் ஐயா🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 8 dny +1

    Appa please grant eternal peace to my husband Ibin soul. Please save my husband Ibin soul from purgatory. Please forgive all his sins May his soul enjoy the eternal peace Amen 🙏

  • @jeyachitra7824
    @jeyachitra7824 Před rokem +1

    எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சி தரும் இனிய குடும்ப மாக மாற்றி தாரும் மிக்கேல் அதி துதரே

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 Před 2 lety +10

    மிக்கேல் அதிதூதரே!எங்கள் குடும்பத்தினருக்காக வேண்டிக்கொள்ளும் ❤

  • @arul495
    @arul495 Před rokem +5

    புனிதா ஆதி தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்கு துணை புரியும்🙏✝️🙏

  • @mikefrancis6869
    @mikefrancis6869 Před 2 lety +7

    நன்றி இயேசுவே கோடி நன்றி ஆண்டவரே
    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jaikkar
      @jaikkar Před rokem

      இறை அதி தூதரே சர்வ வல்லமை பெற்ற மிக்கேல் ஐயா எங்கள் கஷ்டங்கள் கவலைகடன் தீர வியாதி சாத்தானகள் எங்களை விட்டு அகல எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஈமென்

  • @charlesfran7805
    @charlesfran7805 Před 2 lety +6

    வாழ்க வான் தளபதியே வாழ்க

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 17 dny +1

    Please be with me St.Michael the archangel be with me during this rtms therapy yennaku success aaganum appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @malarsubi5420
    @malarsubi5420 Před rokem +1

    மிக்கேள் அதி தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்