லிங்கத்தில் மர்மத்தை ஒளித்து வைத்த முன்னோர்கள்? பலநூறு வருடங்களாக புதைந்து கிடந்த பொக்கிஷம்!

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - முன்னுரை
    00:48 - புதைந்திருந்த லிங்கம்
    01:49 - வழவழப்பான லிங்கம்
    02:53 - இத எப்படி செஞ்சாங்க
    04:03 - இத உளிய வச்சு செய்யல
    05:22 - Advanced கருவியால் உருவாக்கப்பட்டதா?
    06:50 - முடிவுரை
    Hey guys, இது தான் Warangal Fort. இது ஒரு பழைய இடம். இருக்கறதுலயே ரொம்ப அற்புதமான சிலைகள நீங்க உங்க வலது பக்கமும் இடது பக்கமும் பாத்துட்டு இருக்கீங்க. இத செதுக்கி கிட்ட தட்ட 800 வருஷங்கள் இருக்கும். ஆனா உங்க கண்கள் நேரா நடுவுல என்ன இருக்கன்றத தான் கவனிக்கும். அதோட இந்த லிங்கத்த பாத்தா இந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு பாருங்க. இப்ப, ஏன் உங்களுக்கு இப்படி தோணுது? இது இந்த இடத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு லிங்கமா நமக்கு ஏன் தெரியுது.
    ஏன்னா உங்களுக்கு உடனடியா உங்க உள்ளுணர்வு என்ன சொல்லுதுன்னா இயந்திரங்களோட உதவி இல்லாம இந்த லிங்கத்த செய்ய முடியாதுன்னு சொல்லுது. அதனால் தான் இது பாக்கறதுக்கே இவ்வளவு வித்யாசமா இருக்கு.
    இங்க பக்கத்துல இருக்கற எல்லா சிலைகளும் சுத்தியல் , உளி மாதிரி சாதாரண கருவிகள வச்சி செஞ்சிடலாம். ஆனா இந்த லிங்கம், அந்த மாதிரி கருவிகள வச்சி செய்ய முடியாது. இவ்வளவு கச்சிதமான ஒரு லிங்கத்த ரொம்ப மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள்வச்சி மட்டும் தான் செஞ்சிருக்க முடியும்.
    இந்த லிங்கம் மொதல்ல இந்த இடத்தை சேர்ந்ததே இல்ல. பல நூற்றாண்டுகளா புதைஞ்சி இருந்த இந்த லிங்கத்த Archeologists தோண்டி எடுத்து இருக்காங்க .
    சாதாரண கருவிகள வச்சி செஞ்சிருக்கற இந்த பீடம் மேல வச்சிருக்காங்க.
    இத தோண்டி எடுக்கும் போது இந்த கீறல்கள் எல்லாம் பட்டுடுச்சி அதோடஇத சில துல்லியமான கருவிகள் வச்சி சோதனை பண்ணி பாத்தப்ப ,நெறைய அதிர்ச்சியான விஷயங்கள் தெரியவந்தது. இது எந்த கருவிகளோட தடயங்களும், அதாவது tool marksம் இல்லாத ஒரு கச்சிதமான ரொம்ப perfectஆன லிங்கமா தெரியுது.
    அந்த காலத்துல இவ்வளவு துல்லியமா இத எப்படி செஞ்சாங்க? இதோட finishing level எப்படி இருக்கு பாருங்க. இந்த லிங்கத்தோட மேல் பக்கத்த கண்ணாடி மாதிரி உபயோகிக்கலாம் போல இருக்கு. இப்ப இந்த விலை மதிக்க முடியாத லிங்கத்த சோதனை பண்ணி பாக்கறதுக்கோ இல்ல விளக்கம் கொடுக்கறதுக்கோ நான் உபயோகிக்க மாட்டேன். ஆனா இத விட கம்மியான பளபளப்போட இருக்கற வேற ஏதாவது ஒன்ன எடுத்துக்க போறேன்.
    இதே எடத்துல இருக்கற இந்த தூண் எப்படி இருக்கு பாருங்க. இதோட finishing ,அந்த லிங்கம் மாதிரி , அவ்வளவு அற்புதமா இல்ல. ஆனா இது மேல தண்ணி ஊத்துனா என்னோட பிரதிபலிப்ப நீங்க அதுல பாக்க முடியுது பாருங்க.
    இதையே அந்த லிங்கம் மேல பண்ணா எப்படி இருக்கும்ன்னு யோசிங்க.
    அதோட எப்பவுமே லிங்கமெல்லாம் கிழக்கு பாத்து இருக்கற மாதிரி தான் வச்சிருப்பாங்க. காலைல முதல் சூரிய வெளிச்சம் படும்போது இது எப்படி இருக்கும்ன்னு, just கற்பன பண்ணி பாருங்க. இப்ப, 800 வருஷங்கள் முன்னாடி இருந்த பழங்காலத்து ஸ்தபதிகள்,இந்த லிங்கத்த எப்படி செஞ்சாங்கன்றதுதான் உண்மையான பிரச்சனையா எனக்கு தோணுது .
    ஒரு வேள ஒரு கரடுமுரடா இருக்கற cylinderஅ மொதல்ல உளி வச்சி செதுக்கிட்டு அப்பறம் அது மேல மண் மாதிரி abrasives, அதாவது உராயர பொருட்கள வச்சி கையால polish பண்ணி, இவ்வளவு துல்லியமான ஒரு perfectionஅ கொண்டு வந்து இருப்பாங்களா? ஆனா ரொம்ப துல்லியமான கருவிகள் வச்சி இந்த லிங்கத்த சோதன பண்ண experts சொல்றது இன்னும் அசாதாரணமா இருக்கு. இந்த லிங்கம் அவ்வளவு துல்லியமான ஒரு வட்டமா , குறுகி போயிடாம, ரொம்ப நேரா ரொம்ப நேர்த்தியா இருக்கு. இத பாத்த உடனே experts சொல்றது என்னன்னா இத கண்டிப்பா சாதாரண கருவிகள் வச்சி கையால செஞ்சிருக்க முடியாதன்றது தான்.
    இவ்வளவு துல்லியமா இயந்திரங்கள்வச்சி மட்டும் தான் செய்ய முடியும். இப்ப உங்கள ஒரு கேள்வி கேக்கறேன். இன்னிக்கி நம்ப கிட்ட இருக்கற சாதாரண கருவிகள வச்சி இந்த மாதிரி ஒரு நேர்த்தியான cylinder பண்ண முடியுமா?
    இந்த லிங்கம் black basaltல செஞ்சி இருக்காங்க அன்றாத மறந்துடுங்க. அது ரொம்ப கடினமான கல்லு. இது களிமண் மாதிரி ரொம்ப softஆ இளகி இருக்குன்னு வச்சிகோங்க. சாதாரண கருவிகளமட்டும் வச்சி, கையாலயே, களிமண்ல, இன்னிக்கு ஒரு perfect cylinder செய்ய முடியுமா? ஒரு நேர்த்தியான லிங்கம் செய்யறதன்றது rotating mechanism, அதாவது சுழல்றmechanism, இல்லாம சாத்தியமே இல்லன்னு Engineers உறுதியா சொல்ராங்க. கொறஞ்சது ஒரு பானை செய்யரவரோட சக்கரம் மாதிரியாவது இருக்கணும்.களிமண்ல cylinder செய்யணும்னா கூட, அதுக்கு ஒரே வழி, அத இந்த சுழல்ற (சுத்தர) சக்கரத்து மேல வச்சி தான் செய்ய முடியும்.
    So, ஒரு விஷயம் உறுதியா தெரியுது. இந்த லிங்கம் உளி வச்சி செய்யல, ஆனா ஒரு சுழல்ற mechanism அதாவது ஒரு rotating mechanismவச்சி தான் செஞ்சி இருக்காங்க. இப்ப, அடுத்த கேள்வி நமக்கு என்ன தோணுதுன்னா, பழங்காலத்து சிற்பிகள் இந்த லிங்கத்தை பானை செய்யறவங்களோட சக்கரத்து மேல வச்சி அத கையால சுத்தியா இவ்வளவு நேர்தியானcylinderஆ செஞ்சி இருப்பாங்க? நம்ப இப்ப இது ரொம்ப கடினமான கல்லு அன்றாத மறந்துடுவோம், அதோட இதுல வேலை செய்யணும்னா அதுக்கு இன்னும் கடினமான steel இல்லன்னா வைரத்துல செஞ்ச கருவிகள் வேணுமன்றத கூட மறந்துடுவோம்.
    #PraveenMohanTamil #warangal #ancienttechnology #ancientindia

Komentáře • 355

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +37

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. நிற்காமல் ஓடும் கடிகாரம் - y2u.be/PX5Fe4JpWIE
    2. ஹம்பியில் லேத் இயந்திரம் - y2u.be/bVCFPywqW38
    3. இது கடவுள்களோட தொழில்நுட்பமா - y2u.be/BQsYzDUr5I0

    • @KALIMAINTHAN
      @KALIMAINTHAN Před 3 lety

      czcams.com/video/DYPrlTGFf1A/video.html

    • @yokesh_765
      @yokesh_765 Před 3 lety

      Our village too has very smooth Lingam which is of Sola Raja in 1824

    • @traveltohe-ven2603
      @traveltohe-ven2603 Před 3 lety

      Praveen mohan love ❤you

    • @om-od1ii
      @om-od1ii Před 3 lety +2

      சார்.உங்கள்.விளக்கங்கள்
      மிக.நன்று.மாதேஸ்வரன்.
      மலைக்கோவில்.விளக்கங்கள்
      சொல்லுங்க.
      நன்றிகள்.பல🙏🙏

    • @shriabicostumedesigner9427
      @shriabicostumedesigner9427 Před 3 lety

      Oru Velai China pasanga vilaiyDum pambaram pola oru rope vachi suthirukalam. Because normala suthuratavida rope vachi suthina vegamaga suthirukalam oru base vachi...

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 Před 3 lety +68

    தமிழ் நாட்டின் தவ புதல்வன் நீ‌ங்க‌ள் பல்லாண்டு வாழ்க. வாழ்க. வாழ்க. உங்கள் காணொளி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 💐

  • @sswayamprakash
    @sswayamprakash Před 3 lety +165

    வாய்ப்பு கிடைத்தால் கீழடியை குறித்து தமது ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை காணொளியாக பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பா

    • @sswayamprakash
      @sswayamprakash Před 3 lety

      @Kris Harasha ஏன் ராஜா

    • @lillydivine6234
      @lillydivine6234 Před 3 lety +3

      எனக்குத் தெரிந்து அங்கு பாணை ஓட்டை தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை

    • @sswayamprakash
      @sswayamprakash Před 3 lety +8

      @@lillydivine6234 எதுவாக இருக்கும் என்று போய் பார்த்தால் தானே தெரியும்.

    • @vathsalatm1250
      @vathsalatm1250 Před 3 lety +3

      @@sswayamprakash I agree with swayam .

    • @BM-et3vb
      @BM-et3vb Před 3 lety +1

      எதுக்கு கீழடி ல போஸ்ட் மார்ட்டம்

  • @ThiruManivasagam
    @ThiruManivasagam Před 3 lety +38

    உங்கள் channel தமிழில் தற்போது தான் பார்த்து வருகிறேன் ஆங்கிலத்தை விட தமிழில் கேட்க மிகவும் இனிமையாகவும் எளிதில் புரியும்படியும் அமைகிறது. நன்றிகள் கோடி.

  • @seenivasan.n4268
    @seenivasan.n4268 Před 2 lety +4

    உங்கள் ஆராய்சியால் நாங்கள் பற்பல கோணங்களில் நம் முன்னோர்கள் திறமையை தெரிந்து கொண்டோம் நன்றி

  • @SunShine-nk9qb
    @SunShine-nk9qb Před 2 lety +12

    அருமையான பதிவு எனக்கு யோசிக்க யோசிக்க தலை சுத்துது உங்க வீடியோவைத் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறோம் நன்றி

  • @sridevi109
    @sridevi109 Před 3 lety +29

    தமிழில் கேட்க மகிழ்ச்சியா இருக்கு சகோ ஏன்னா ஆங்கிலம் ஒரளவுக்குதான் எனக்கு புரியும்

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 Před 2 lety +2

    வாழ்க பல்லாண்டு
    ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பேச்சு
    அற்புதமான காட்சி
    படிப்படியாக விளக்கம்
    தமிழன் வாழ்வும் வளமும்
    உலகுக்கு எடுத்துக் கொண்டு
    செல்லும் முறையில் இது போன்ற உரையாடல்கள் நன்றி நன்றி

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 Před 2 lety +5

    சிவனின் அருள் தங்களுக்கு இருக்கிறது நண்பா.
    தங்கள் ஆராய்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Před 3 lety +13

    உங்கள்பதிவு
    சிவன் ஆசீர்வாதம்.ௐ

  • @ThillaiSundaramurthy
    @ThillaiSundaramurthy Před 2 lety +4

    அன்று.. மன்னர்களின் கீழ் அப்படி செயல்பட்டிருந்தவர்கள்.. ... இப்போது இவ்வளவு தரம் தாழ்ந்து உறங்கிக் கொண்டு இருக்கிறார்களே... தமிழர்கள்!
    💐🙏

  • @om-od1ii
    @om-od1ii Před 3 lety +20

    நம்.முன்னோர்கள்
    எத்தனை.பத்திசாலிகள்
    கோவில்.மர்மங்களாகவே
    வைத்துள்ளனர்
    🙏

  • @rathakrishnan5741
    @rathakrishnan5741 Před 3 lety +9

    உங்கள் பணி மென்மேலும் பலநூறு ஆண்டுகள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் ஐயா! இறைவனின் அருளும் மறைபொருளை வெளிக்கொணர பெரிதும் அருளும் கேது பகவான் ஸ்ரீ ஆதிசேஷனின் அருளும் என்றென்றும் கிட்டட்டும்!

    • @janabairajendran9487
      @janabairajendran9487 Před 2 lety +1

      அற்புதம் வாழ்க தங்கள் பணி👍👍👍

  • @kumarashok8280
    @kumarashok8280 Před 3 lety +11

    உண்மையில் ஆச்சரியம் பெருகுகிறது. வியக்கத்தக்க வகையில் செய்யப்பட்ட லிங்கம் இது.

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Před 3 lety +34

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @varshavv2440
    @varshavv2440 Před 3 lety +55

    இந்த மாதிரி கோவில் சிற்பங்கள்
    சம்மந்தப்பட்ட பதிவுக்கு தொல்லியல் துறை சார்ந்த கருத்துக்கள் மட்டுமே போதாது ஒரு நல்ல பழைய மரபு சார்ந்த சிற்பியையும் இந்த மாதிரி பதிவுகளில் அவர்கள் கருத்தையும் நேரடியாக பதிவுகளில் போட்டால் ஆய்வுகள் விளக்கம் நன்றாக இருக்கும். அவர்கள் துறை சார்ந்த விளக்கத்தை காணும் போது மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

  • @meenakshimuthia2466
    @meenakshimuthia2466 Před 2 lety +1

    நம் முன்னோர்கள் சித்தர்களின் மாணவர்கள் (சீடர்கள்) வழி வந்தவர்கள் போலும். அதனால் தான் நுண்ணியம், துல்லியம், கணக்கு, புவியியல், கலைநயம் எல்லாமே ரொம்ப சரியாக இருக்கிறது !!! சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி !
    நன்றி ப்ரவீன் மோஹன்.

  • @maramvettidevatactors4561

    வாழ்க வாழ்க நமச்சிவாய வாழ்க சைவம் வாழ்க சைவத் திருத்தலங்கள் ஓங்கி வளர்க வாழ்க செழிக்க இறைவனின் திருவுளம் வாழ்க

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Před 3 lety +12

    மூளிகைகளின் உதவியும் தெய்வ அருளால் சுயம்புவாகவும் உருவாகவும் வாய்ப்ப்புகள் அதிகம்

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 Před 3 lety +3

    அருமையான ஆராய்ச்சி விளக்கங்கள். பாராட்டுக்கள். மேலும் அதிக அளவில் கோயில்களை ஆராய்ந்து அவற்றின் விவரங்களையும் அதிசயங்களையும் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety

      கண்டிப்பாக தொடர்ந்து வரும்..! நன்றிகள் பல!

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Před 3 lety +9

    அறிவியல் கலை தொழில் நுட்ப தெளிவு..... மக்கள் வேற லெவல்🔥

  • @karupaiya1
    @karupaiya1 Před 3 lety +6

    இது தங்களின் சொந்த குரலா சகோ? ஜெய் ஸ்ரீராம்.

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 Před 3 lety +1

      தமிழ் செல்வன் ஆமாம் சகோதரா. இது பிரவீன் மோகனின் சொந்த குரல் தான்.

    • @karupaiya1
      @karupaiya1 Před 3 lety

      @@varalakshmivasudevan3296 நான் இவர் வட இந்தியர் என்று நினைத்தேன். தகவலுக்கு நன்றி.வணக்கம்.

  • @kumarg4723
    @kumarg4723 Před 3 lety +11

    இந்தகோயில்லாம் எங்கஇருக்குன்றத சொன்னா மக்கலுக்கு மிகவும் பயனுல்லதாக இருக்கும் நன்றி

    • @SunnyAkira
      @SunnyAkira Před 3 lety +1

      Warangal Telangana Near Hyderabad

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 3 lety +19

    அட பிரவின் நீங்க தமிழ் பேசுவிங்களா?உங்க தாய் மொழி தமிழா?big surprise 😁👍👍👍👍👍👍👍

  • @ponmurugan2097
    @ponmurugan2097 Před 2 lety +1

    நண்பரே நீங்க பேசும் தமிழ் அழகு தெளிவான விளக்கம்
    கிட்ட தட்ட என்னூறூ ஆண்டு களுக்குமேல் இருந்த சிவலிங்கத்தை பார்த்த புண்ணியம் எங்களுக்கு கிடைத்தது லிங்கத்தை ஆராந்து பார்க்க விரும்பல நண்பரே🙏
    ஓம் நமச்சிவாய வாழ்க நன்றி🙏

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Před 3 lety +14

    சர்வம் சிவமயம்

  • @mcmurugan4239
    @mcmurugan4239 Před 3 lety +6

    நவீன தொழில்நுட்பம் மறைக்கப்பட்ட உள்ளது! நன்றி 👍

  • @vikramdharma9044
    @vikramdharma9044 Před 3 lety +11

    We love you, Mr.Praveen❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiarun5252
    @rajiarun5252 Před 3 lety +8

    அருமை சகோ. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பற்றி ஒரு காணொளி போடுங்க.

  • @spmdesign4023
    @spmdesign4023 Před 3 lety +1

    உங்களுடைய இந்த சிந்தனை மிகவும் வியப்பாக உள்ளது

  • @newworld1959
    @newworld1959 Před 3 lety +1

    ப்ரம்ம முராரே ஸூராச்சித லிங்கம் 🙏நிர்மல. பாஷித சோபித லிங்கம் 🙏ஜன்மஐ துக்க விநாசன லிங்கம் 🙏தத்ப் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️

  • @cosmicpower9102
    @cosmicpower9102 Před 3 lety +31

    Fan from New Jersey City US, but iam Chennai Tamil guy 😇🙏🏼, Praveen bro we need live session on weekends 👑👑🙌🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✌️

  • @user-gy7rl8hx8i
    @user-gy7rl8hx8i Před 3 lety +6

    சகோதரர் கோயில் எந்த ஊரில் உள்ளது என்பதை தெளிவாக சொல்லுங்கள்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +3

    அருமை நண்பா சொல்ல வார்த்தையே இல்லை அற்புதம் நண்பா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @ykaudionovels
    @ykaudionovels Před 3 lety

    இதுபோல லிங்கம் எங்கள் கிராமத்தில் உள்ளது. முற்காலத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக சொல்லி வழிவழியாய் வழிப்பட்டு வருகிறார்கள். சிற்பங்களை புதிய பார்வையில் விளக்குகிறீர்கள்... நன்றிகள் 🙏🙏🙏

  • @vishvish4092
    @vishvish4092 Před 3 lety +9

    Subscribe panniyachu 🙏 Thank you for this gift, dear Praveen 🙏💐

  • @sudheebajershith9141
    @sudheebajershith9141 Před 3 lety +1

    சகோதரரே நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழ வேண்டும். உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக மிக அருமை.

  • @seelanlithiya1318
    @seelanlithiya1318 Před 3 lety +6

    Good job sir.. Well explained. 👌🇲🇾

  • @paramasivans570
    @paramasivans570 Před 2 lety +1

    அவன் அருள் ளாலேஅவன் தாழ் வனங்கி

  • @apoosarun4162
    @apoosarun4162 Před 3 lety +27

    Excellent narration sir..
    Goosebump movements on knowing about our ancestors..
    Macaulay education system have ruined our knowledge.. Restricted us from knowing about our superior culture, traditions, history etc etc..

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx Před 2 lety +1

    அருமை பிரவீன் சூப்பர் சூப்பர்

  • @kreb6083
    @kreb6083 Před 3 lety +37

    Ji, your tamil great work is divine...these structures needs to be preserved, our govt nor our people care....you deserve more views and
    But Our people are more interested in bucket biriyani or goat intestine foods or KFC and useless bigboss...

    • @sanjosh80
      @sanjosh80 Před 3 lety +8

      True tamil nadu has become a mindless peoples haven, thanks to dravidian parties, for making worlds spiritual center as joke if not preseved now then never

    • @bristolsbio2137
      @bristolsbio2137 Před 3 lety +1

      Yes, bro

    • @rathakrishnan5741
      @rathakrishnan5741 Před 3 lety

      😭😭😭

    • @ggopal7435
      @ggopal7435 Před 3 lety +1

      Get rid of the DMKs and all other undesirable KKKKKKs and related characters damaging the established icons. Youngsters has to be pulled in for serious inolvement like what non-Indians are keeping Buddhism alive. Three University branches were established in Singapore/some in Malaysia to propagate studies in Indian architecture from basic to doctrate level. This is accompanied by visits to SEAsian countries where many ruins are. Students/Visitors dismayed at the site where many hindu structures lay "dead" and among them Shiva/Ghanesh and other related icons. Natives in these countries do take care of these fallen structures in the hope of restoring them. Thank you Brother Pravin. We pray for your safety and good health. The great Shiva is watching you and he will give you all the energy.

    • @kreb6083
      @kreb6083 Před 3 lety

      @@ggopal7435 🙏🙏🙏🙏🌹.. हरी ॐ नारायणाय

  • @madras2quare
    @madras2quare Před 3 lety

    வணக்கம் பிரவீன்.நம் முன்னோர்கள் நம்மை விட எல்லாத் துறைகளிலும் மேம்பட்டவர்களாக இருந்திருக்கலாம்.மேற்கு நாட்டவர்கள் நம் நாட்டு கோயிகளையே இ
    ஏலியன்ஸ் கட்டியது என்று சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் இருக்கலாம். நன்றி வாழ்க நலமுடன்.

  • @prasadrs89
    @prasadrs89 Před 2 lety +2

    விஸ்வகர்மா சிற்பிகள் கை வண்ணம் .... போற்றுங்கள்...

  • @seevaratnamsubramaniam2206

    Excellent explanation Praveen Sir.

  • @muralidharan2727
    @muralidharan2727 Před 3 lety +1

    அருமையான காணொலி சகோதரரே 👍👍👍

  • @M-50
    @M-50 Před 3 lety +2

    லிங்கங்களில் இப்படியான வரைகோடுகள் காணப்படும்

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Před 3 lety +1

    மிகவும் பிரமிப்பாக உள்ளது . நானும் இதைப்போன்று யோசிப்பதுண்டு.அருமை நன்றி

  • @ramamoorthychockalingam8103

    நம் சிந்தனைக்கு எட்டாத மேம்பட்ட தொழில் நுட்பம் மாயன் மக்களிடம் இருந்துள்ளது

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 Před 3 lety +7

    யூகிக்க முடியாத நிலையில் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வேண்டுமோ

  • @Arjun-2015
    @Arjun-2015 Před rokem +2

    தினமும் உங்க வீடியோ பாக்குறேன் சகோதரா

  • @mamamayil2011
    @mamamayil2011 Před 2 lety +1

    அருமையான காணொலி அண்ணா....

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 Před 3 lety +2

    Anna your service to Indian heritage and culture associated with sanadhan dharmam is quite laudable . I bow my head down to your service with folded hands and with lots of appreciations

  • @dhanapalpal190
    @dhanapalpal190 Před 3 lety +1

    Om Namashivaya Appa

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 3 lety +1

    நான் பார்த்து பிரமிப்படைகிறேன்
    இன்னும் நிறைய எங்களுக்காக விளக்கம்
    கொடுங்கள்🙏🙏🙏

  • @pianoforme122
    @pianoforme122 Před 3 lety +3

    I hope no other religious fanatics will mess up these

  • @ggopal7435
    @ggopal7435 Před 3 lety +3

    I am learning from your enthusiastic involvement. Your hard work benefits all our hindus and others who are very much involved in hindu studies. Keep up your good work. My friends and I pray for your good health.

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Před 3 lety +2

    Thank you Mr Praveen, you always surprise us with new discoveries, so interesting to hear to your talk, too many interesting hidden treasures in the temples only you can point it out. Too many and it may takes years to solve the findings, it will be possible only by you. May God bless you, good health n take care.

  • @gobalpillai1750
    @gobalpillai1750 Před 3 lety +2

    Super

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 3 lety +1

    நன்று.. நல்ல முறையில்🙏 ஒரு👍

  • @jayanthikrishnan4769
    @jayanthikrishnan4769 Před 3 lety +1

    Super praveen

  • @karthigk833
    @karthigk833 Před 3 lety +2

    Super sir

  • @krishunni9576
    @krishunni9576 Před 3 lety

    Excellent and astonishing too. Well done, man!. We are very grateful to you to bringing this info in Tamil.🙏👍

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 3 lety +1

    Very interesting to watch it in our mother tongue . Praveen well done. My Heartly wishes to you. வாழ்த்துக்கள் .

  • @sstar163
    @sstar163 Před 3 lety +1

    nice to see in tamil video praveen.. good work.. valthukal nanba

  • @saroandsara9687
    @saroandsara9687 Před 3 lety +3

    ஒவ்வொரு பதிவும் அற்புதம் நன்றி

  • @balaks5834
    @balaks5834 Před 3 lety +1

    Very nice

  • @girijaravindran5533
    @girijaravindran5533 Před 2 lety +1

    ஆச்சரியமான ஒரு பதிவு .

  • @muralirmenon7924
    @muralirmenon7924 Před 3 lety

    Thanks Praveen. 👍
    Good presentation. Keep it up. 🙏

  • @narayanaswamyhariharan3177

    Ungal tamil miga arumai
    👍👍🙏🏼🙏🏼

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Před 2 lety +1

    Very interesting,Lingathill ulla kodugal Brahma Suthiram,miga veshashamanadu endru kelvipatten

  • @obikandan7121
    @obikandan7121 Před 3 lety

    செமா சூப்பர் தொடரட்டும் உங்கள்

  • @ilavarasudimanche9954
    @ilavarasudimanche9954 Před 3 lety +9

    Secrets of 108 mathiri conscepts ah tamil la solunga bro

  • @anupriya1630
    @anupriya1630 Před 3 lety +3

    good work.. keep rocking

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety +3

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @kathiraishu70
    @kathiraishu70 Před 2 lety +1

    Thanjai periya kovil paththi innum video podunga

  • @shanthimahalinga.9945
    @shanthimahalinga.9945 Před 3 lety +8

    சித்தர்கள் உருவாக்கின லிங்கத்தில் இந்த குறீயீடு இருக்கும் என கேள்வி பட்டிருக்கிறேன்.

  • @dineshji7528
    @dineshji7528 Před 3 lety

    Unga Video Epo Varumnu Wait panikutey iruken Thanks Praveen Mohan Anna Ji

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 3 lety +1

    Execellent explanation......soopper...

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před rokem +1

    Excited to watch your videos, always, sir

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 Před 2 lety

    Unggal pathivu ovondrum arumai aacharyam. Vaalga valamudan

  • @kohilasubramanian9170
    @kohilasubramanian9170 Před 2 lety

    Wonderful....Om Namashivaya

  • @sbssivaguru
    @sbssivaguru Před 3 lety +1

    மூலிகை பயன் படுத்தி வழவழப்பாக பன்ன இயலும்!

  • @omprakashar9038
    @omprakashar9038 Před 3 lety +1

    Vazhthukkal PraveeMohan 👍🙏

  • @saravananharisamy8085
    @saravananharisamy8085 Před 3 lety +2

    This type of Lingam is also seen in the Kanchipuram Kailasanathar temple ( stone looks like same shiny finishing and the design pattern found on the Lingam was more like Vel in Kailasanathar Temple )

  • @d.rajathi7869
    @d.rajathi7869 Před 3 lety +3

    I felt I'm going nearly to God 🙏 Om namashivaaya

  • @sukumarshanmugham6176
    @sukumarshanmugham6176 Před 3 lety

    Super Praveen bro, keep up ur good job, nice to see ur tamil videos

  • @22.jananidileepan44
    @22.jananidileepan44 Před 3 lety +1

    Good work!

  • @karthicks859
    @karthicks859 Před 3 lety +1

    Keep going !! It's really amazing and our ancestors left most of these scientific things without knowledge sharing.. That's why we are now depends & wondering recently innovated foreigners products 😭

  • @manimuthu9411
    @manimuthu9411 Před 3 lety +2

    அற்புதம்.

  • @tharsanraja9383
    @tharsanraja9383 Před 2 lety +1

    Amzing explained 👌 👏

  • @rathna363
    @rathna363 Před 3 lety +1

    Super a irukku

  • @villacreations7968
    @villacreations7968 Před 3 lety

    Super and you blessed man. And very bright future you. All the best. Thank you. And I am watching your vedio daily very interested. Truste me

  • @yokesh_765
    @yokesh_765 Před 3 lety +2

    We have similar Lingam in our village too. See it on Google map on mark as "Lord Shiva Temple Sengundram".

  • @naveennimalanr2842
    @naveennimalanr2842 Před 3 lety +1

    சிறப்பு

  • @tisascience388
    @tisascience388 Před 3 lety

    annaa... i refer this "Basalt melts at about 984° to 1260°"
    and this "fine-grained extrusive igneous rock formed from the rapid cooling of low-viscosity lava rich in magnesium and iron" from wiki.
    why not this a simple melt and pour art form??
    for the cyclindrical template (அடுக்கு பாத்திரம் kind of) melting temperature above this is suitable. so why not iron (1538 deg celsius) or alumina 1538 deg celsius or why not some alloy??

  • @Ryuing2020
    @Ryuing2020 Před 3 lety

    Please add in english sub! even simple one will do in the description! tq.

  • @thayalanthayalan3430
    @thayalanthayalan3430 Před 3 lety +2

    This is first time. I never expected. good good good

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Před 3 lety +2

    சிவ சிவ

  • @ezhilfavpaulraj9787
    @ezhilfavpaulraj9787 Před 3 lety +2

    Thankq so much