TAMIL OLD--Thanga ratham vanthathu(vMv)--KALAI KOVIL

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2014
  • "தங்கரதம் வந்தது வீதியிலே"...
    கலைக்கோயில் (1964)
    கவியரசர் கண்ணதாசன்
    எம் எஸ் விஸ்வநாதன் & டி கே ராமமூர்த்தி
    Dr. பாலமுரளிகிருஷ்ணா & பி சுசீலா
  • Hudba

Komentáře • 31

  • @guru1990
    @guru1990 Před rokem +4

    சிறுவயதில் இருந்தே என் மனத்தை வருடிய பாடல்!!!! இப்போது என் வயது 63

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 10 dny

    Veey beautiful song.The legend Dr.Balamurali krishana,P.Susila,MSV,TKR and Kannadasan are unbeatable persons.I am addicted this song.Evergreen claasical song.Hats off veenai Chittibabu sir.

  • @ravichandran1610
    @ravichandran1610 Před 9 měsíci +3

    காலத்தை வென்று நிற்கும் கவியரசரின் வரிகள்
    தெய்வீகக் குரலில் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் சுசிலா அம்மையாரும் இணைந்து பாடிய தமிழின் பெருமை பொங்கும் பாடல் 💐

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 Před 6 měsíci +3

    🎉❤16/1/24 Kalai Koyil 🎥🎼🎵🎶📻🇸🇬🇮🇳 beautiful sublimal lyrics

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před rokem +4

    ஆபோகியைப் பிழிந்து எடுத்த பாடல்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 lety +7

    முத்துராமன் சந்திரகாந்தா நடிப்பு ஸ்ரீதர் இயக்கம் மெல்லிசை மன்னர்கள் இசை கவிஞர் கண்ணதாசன் வரிகள் எல்லாம் அருமையாக அமைந்த பாடல் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 3 lety +5

    Dr பாலமுரளி கிருஷ்ணா சுசீலா குரல்களில் நெஞ்சில் நின்ற பாடல் எத்தனையோ முறை பார்த்தும் கேட்டும் திகட்டாத பாடல் கண்ணதாசன் வரிகள் மெல்லிசை மன்னர்கள் இசை அற்புதம் நன்றி மணிவண்ணன்

  • @felixdurairajl4020
    @felixdurairajl4020 Před 10 měsíci +3

    Divinely Song

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před 2 lety +11

    இந்தமாதிரி நன்றாக பாட ஆளில்லை..இசை அமைக்க ஆளில்லை.நடிக்க ஆளில்லை.பாட்டெழுத ஆளில்லை.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 Před rokem +2

      Mudhalil indha mathiri nalla isai paadalgalai ketka ippozhudhu aall illai.

  • @balann9990
    @balann9990 Před rokem +2

    அருமையான பாடல்கள்

  • @iyengarsoundararajan7041

    As a student, I listened to and enjoyed the song in 1964. After over 60 years, this song is as fresh and sweet as it was. Beautiful.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +2

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤

  • @user-wb8he2ls1j
    @user-wb8he2ls1j Před 7 měsíci +2

    ‘Old Is Gold’ . Sweet Melody. This Song Is From ‘KALAI KOVIL’. Ragam:- ADana.

  • @nagarajansridhar7457
    @nagarajansridhar7457 Před 9 lety +6

    The classic example of Abhogi

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 7 lety +6

    ஆண்:- ஆஆஆ..ஆஆஆ..ஆ.., பெண்: ஆ..ஆ..ஆ..ஆஆஆ..ஆ..ஆஆஆஆஆ..ஆ.., ஆண்:- ஆஆ..ஆஆஆ..ஆ.., பெண்:- ஆ..ஆ..ஆ..ஆஆஆ..ஆ..ஆஆஆஆஆ..ஆ.., இருவரும்:- ஆஆ..ஆஆஆ..ஆ, ஆண்:- ஆஆஆ..ஆஆஆ..ஆ.., தங்கரதம் வந்தது, வீதியிலே, தங்கரதம் வந்தது, வீதியிலே.., ஒரு, தளிர்மேனி வந்தது, தேரினிலே.., தங்கரதம் வந்தது, வீதியிலே.., ஒரு, தளிர்மேனி வந்தது, தேரினிலே.., மரகதத் தோரணம், அசைந்தாட.., நல்ல மாணிக்க, மாலைகள்.., கவிபாட.., பெண்:- மரகதத் தோரணம், அசைந்தாட.., நல்ல மாணிக்க, மாலைகள்.., இருவரும்:- கவிபாட.., தங்கரதம் வந்தது, வீதியிலே.., ஒரு, தளிர்மேனி வந்தது, தேரினிலே.., பெண்:- தங்கரதம் வந்தது, வீதியிலே.., ஏ..,ஏ.., ஏ.., ஆண்:- ஆஆஆ..ஆஆஆ..ஆ, பெண்:- செவ்விள நீரின்.., கண் திறந்து.., செம்மா.., துளையின், மணி.., வாய் பிளந்து.., செவ்விள நீரின்.., கண் திறந்து.., செம்மா.., துளையின், மணி, வாய் பிளந்து.., முளைவிடும் தண்டில்.., கோலமிட்டு.., மூவருலா வந்த, காலங்கள் போலே, முளைவிடும் தண்டில்.., கோலமிட்டு.., மூவருலா வந்த, காலங்கள் போலே.., தங்கரதம் வந்தது.., வீதியிலே.., ஒரு, தளிர்மேனி வந்தது, தேரினிலே.., ஆண்:- தங்கரதம் வந்தது, வீதியிலே.., ஏ..,ஏ.., ஏ.., பெண்:- ஆ..ஆ..ஆ..ஆஆஆ..ஆ..ஆஆஆஆஆ..ஆ.., ஆண்:- மாங்கனிக் கன்னத்தில், தேனூற.., சிறு மைவிழிக்.., கிண்ணத்தில்.., மீன் ஆட.., மாங்கனிக் கன்னத்தில், தேனூற.., சிறு மைவிழிக்.., கிண்ணத்தில்.., மீன் ஆட.., தேன் தரும் போதைகள், போராட.., தேன் தரும் போதைகள், போராட.., தேவியின், பொன் மேனி, தள்ளாட.., தேன் தரும் போதைகள், போராட.., தேவியின், பொன் மேனி, தள்ளாட ஆட.., இருவரும்:- தங்கரதம் வந்தது, வீதியிலே, ஒரு, தளிர்மேனி வந்தது, தேரினிலே.., மரகதத் தோரணம், அசைந்தாட, நல்ல, மாணிக்க மாலைகள், கவிபாட.., ஏ..,ஏ.., ஏ.., தங்கரதம் வந்தது, வீதியிலே, ஏ..,ஏ.., ஏ.., ஆண்:- ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ.., THANGA RATHAM VANTHATHU VEETHIYILEY - movie: Kalai Kovil (கலைக்கோயில்)

  • @user-dw3is9nl5t
    @user-dw3is9nl5t Před 3 lety +2

    இன்று மட்டுமல்ல என்றென்றும் இனியவை

  • @ganeshr66
    @ganeshr66 Před rokem +1

    Like a good bottle of wine, Dr. BMK voice got better with age - his later renditions are even better!

  • @jmohan7094
    @jmohan7094 Před 2 lety +1

    Very nice Exlant song

  • @Gnanam50
    @Gnanam50 Před 6 lety +3

    What a composition and singing. No words to describe.

  • @mohanrajd3366
    @mohanrajd3366 Před 2 lety

    நல்ல பாடல் வரிகள் சூப்பர் அழகு

  • @ssaravanan2010
    @ssaravanan2010 Před 4 lety +1

    What a Song, very nice.

  • @thagavellualretnamshegar7452

    Pls change to HD song Thanga ratham... This song too noisy

  • @hariniragu8235
    @hariniragu8235 Před 2 lety +1

    1964 balamuralikrishnas 1st song

  • @hariniragu8235
    @hariniragu8235 Před 2 lety

    Nice

  • @VijayavelMama
    @VijayavelMama Před 9 lety +5

    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
    மரகதத் தோரணம் அசைந்தாட
    நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
    மரகதத் தோரணம் அசைந்தாட
    நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
    செவ்விளநீரின் கண் திறந்து
    செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
    முளைவிடும் தண்டில் கோலமிட்டு
    மூவருலா வந்த காலங்கள் போலே
    தங்கரதம் வந்தது வீதியிலே
    மாங்கனிக் கன்னத்தில் தேனூற
    சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
    தேன் தரும் போதைகள் போராட
    தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட
    தங்கரதம் வந்தது வீதியிலே...
    திரைப் படம்: கலைக்கோவில்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
    பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா

    • @vijayankv2397
      @vijayankv2397 Před 4 lety +1

      முளைவிடும் செந்நெல் ,
      தேன்தரும் வாழைகள் ,,

  • @rathnavel65
    @rathnavel65 Před 7 měsíci +3

    இயக்குநர் ஸ்ரீதருக்காக கொள்கையை தளர்த்திய நடிகர்...
    கலைக்கோயில்
    முத்துராமன், ரவிச்சந்திரன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், ராஜஸ்ரீ நடித்து சூப்பர் ஹிட்டான 'காதலிக்க நேரமில்லை' படத்தை அடுத்து, சி.வி.ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம், 'கலைக்கோயில்' வீணை வித்வானான ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. இதைக் கேட்டதும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தனது பாக்கியலட்சுமி புரொடக்சன்ஸ் சார்பில், தானே தயாரிக்கிறேன் என்றார். அவருடன் கலை இயக்குநர் கங்காவும் இணைந்து கொண்டார்.
    இதில், எஸ்.வி.சுப்பையா, ஆர்.முத்துராமன், நாகேஷ், சந்திரகாந்தா, ராஜஸ்ரீ, ஜெயந்தி, வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்தனர். இதில் எஸ்.வி.சுப்பையா கதாபாத்திரத்துக்கு முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தவர், ரங்காராவ். அவர் சரியான நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற புகார்கள் அப்போது இருந்தன. அதையும் மீறி, அவரை நேராக அழைத்துப் பேசி, ஒப்பந்தம் செய்தார்
    ஸ்ரீதர்.
    சொன்ன நேரத்துக்கு ஸ்பாட்டில் நிற்பேன் என்று உறுதியளித்தார் ரங்காராவ். ஆனால், முதல் நாள் படப்பிடிப்பில் எல்லோரும் காத்திருக்க, அவர் மட்டும் ஆப்சென்ட். அவர் வீட்டுக்கு போன் செய்தால், 'காலையிலேயே கிளம்பி போய்விட்டாரே' என்றார்கள். அவர் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த ஸ்ரீதர்,
    எஸ். வி.சுப்பையாவுக்கு உடனடியாக போன் செய்து ஸ்பாட்டுக்கு வரவழைத்தார். அவரிடம் இன்னொரு சிக்கல். அவர் ஒட்டு மீசை, தாடியுடன் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடையவர். ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.வி.சுப்பையா,
    கேரக்டரை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.
    ஆனால், அந்த
    தாடி மேட்டரை சொன்னதும், எதிர்
    பார்த்தது போலவே நடிக்க மறுத்துவிட்டார்.
    பிறகு அந்த கேரக்டரின் முக்கியத்துவம், பேச வேண்டிய வசனங்கள் ஆகியவற்றை ஸ்ரீதர் விளக்கியதும், 'உங்களுக்காக என் கொள்கையைத் தளர்த்தி நடிக்கிறேன்' என்று சம்மதித்தார் எஸ்.வி.சுப்பையா. இதில் முத்துராமன் வீணை வித்வான். அவருக்காக, வீணை வாசித்தவர், இசை மேதை சிட்டி பாபு.
    டி.ராமமூர்த்தியுடன் இணைந்து இசை அமைத்திருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா குரலில் 'நான் உன்னைச் சேர்ந்த செல்வம்', பாலமுரளி கிருஷ்ணா, பி.சுசீலா குரலில் 'தங்கரதம் வந்தது வீதியிலே', பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர். ஈஸ்வரி குரலில், 'முள்ளில் ரோஜா', எல்.ஆர்.ஈஸ்வரி குரலில், 'வரவேண்டும் ஒரு பொழுது', சுசீலா பாடிய 'தேவியர் இருவர் முருகனுக்கு' ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
    26 நாளில் இந்தப் படத்தை எடுத்து முடித்தார் ஸ்ரீதர். இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கையும் வைத்திருந்தார் அவர். ஆனால், விமர்சன ரீதியாகப் பாராட்டைப்பெற்ற இந்தப்படம், வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. 'காதலிக்க நேரமில்லை' வெற்றி காரணமாக விநியோகஸ்தர்கள் பலர், 'கலைக் கோயில்' படத்தைப் போட்டிப்போட்டு வாங்கினர்.
    அவர்களுக்கு நஷ்டம் என்பதை உணர்ந்த ஸ்ரீதர், கணிசமான தொகையைத் திருப்பி வழங்கியிருக்கிறார், அப்போதே!
    25.9.1964-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.
    -நன்றி " இந்து தமிழ்"
    25.9.23

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety

    How sridharsir selected this lady

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety

    Super song but the actress is not match to muthuraman