மீட்டாத வீணை இது-Meettaadha veenai idhu - P Susheela

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • தென்றல் வீசும் திரைப்படத்தில் இடம் பெற்ற பி சுஷீலாவின் இனிய பாடல்களில் ஒன்று
    தென்றல் வீசும் 'தொலைத்த வீடியோ இதுவரை அகப்படவில்லை ..எனினும்
    கிருஷ்ணகுமாரி நடித்த படம் என்பதால் edited with அவரது தெலுங்குப் பாடல்
    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்
    பாடல்களை மாயவனாதன் ,கண்ணதாஸன் இருவரும் இயற்றி இருந்தார்கள்.
    *´°◦¸¸.◦°˚°◦☙
    பெண் வர்ணனைகளுக்கு பஞ்சமில்லை அன்றும் இன்றும்
    கருத்தைக் கவர்ந்த ஒன்றிரண்டு ཌ꧂
    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
    நிகர்‘ஒவ்வா மதியே! மானே!!
    செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்
    திருநகையைத் தெய்வ மாக
    இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ
    நானறியேன்! உண்மை யாகக்
    கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
    படைத்தனன் நல்கமலத் தோனே! ”
    கம்பனின் மகன் அம்பிகாபதி
    பொருள் :
    இவள் முக அழகுக்கு மதியும் மானும் கூட ஈடாகாது
    கூடவே இவள் இடையழகு தோள் அழகு சேர்த்து
    இவள் உருவம் படைத்தது யாரோ என்று அறியேன்
    எனினும் படைத்தவன் /உருவாகக் காட்டுகிறவன்
    நிச்சயமாக திருமகளை உருவாக்கிய அதே கைகளினால்
    பின்னர் அதை சீர் திருத்தியே இவளை மாசின்றி அமைத்திருக்கிறான் ..
    ཌ꧂
    ஆசையுடன் ஓடிவரும் அழகு முகம் ஒன்று
    அஞ்சியே நடுங்கி வரும் அன்பு முகம் ஒன்று
    பாச மலர் கொண்டு வரும் பருவ முகம் ஒன்று
    பார்த்தவுடன் நாணமென சிவந்த முகம் ஒன்று ཌ꧂
    'நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே
    மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய்
    ꧁ད கலித்தொகை
    பொருள் :
    உன் முகத்தை அவன் காணப்பெறுவதே அன்றி சிறந்த
    மருந்து வேறு ஒன்றும் இல்லையே!
    ཌ꧂
    மை வடியும் கண் பார்த்து மலரென்று சொல்வார்
    மயங்கி வரும் நடை பார்த்து அன்ன நடை என்பார்
    கையழகு பார்த்தவுடன் கவிதை மழை பொழிவார்
    காலமகள் பெற்றதொரு கோல மயில் என்பார்
    ◦°´*•.அன்னமே நீயுரைத்த அன்னத்தை என்னாவி
    உன்னவே சோரும் உனக்கவளோ - டென்ன
    அடைவென்றான் மற்றந்த அன்னத்தை முன்னே
    நடைவென்றாள் தன்பால் நயந்து ◦°´*•.
    பொருள் :
    அன்னமே! நீ சொல்லிய உன்னையே வெற்றி கொண்ட அந்த நடையழகி தமயந்தி எனும் அன்னத்தை நினைக்கும்போதே என் உயிர் சோர்கின்றது. ‘உனக்கு அவளுடன் எத்தகைய நெருக்கமோ ? அதனை எனக்கும் விளக்கிக் கூறுக’ என்கிறான் நளன்
    ◥꧁ད ॐ பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாம்;
    அவள் தன்மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள்
    காமன் படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள்
    பாதநடைகற்பான் வந்தடைந்தோம் யாம். °◦¸¸.◦°˚°◦☙
    பொருள் :
    பூஞ்சோலையில் வாழும் பறவைகள் நாங்கள் . தமயந்தியின் அரண்மனைக்கு செல்வோம்
    அங்கே இருக்கும் மயில்களும் நாங்களும் அவளை பார்த்து நடை பயில செல்கிறோம் மன்மதன் அவள் கண் பார்வையைப் பார்த்து தன் படையை எப்படி ஏவுவது என்று படை கற்க வருகிறான் .ཌ꧂◤
    நளவெண்பா-புகழேந்திப் புலவர்
    ( வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி பாட்டிலும் வருகிறது )
    ꧁ད
    மஞ்சும் அஞ்சும் கைப் பரராஜ சேகர மன்னன் வேற்பில்
    பஞ்சும் அஞ்சும் பதப்பாவை நல்லாய் படைவேள் பகழி
    அஞ்சும் அஞ்சும் கயல் அஞ்சும் அஞ்சும் கடல் அஞ்சும்
    நஞ்சும் அஞ்சும் வெற்றி வேலோ உனது நயனங்களே.
    °◦¸¸.◦°˚நமச்சிவாயப் புலவர்
    பொருள் :
    மேகமும் பயந்து நடுங்கும் படியான ஈகை கைகளையுடையவனாகிய பரராஜ சேகர வேந்தனது மலையிலே இருக்கின்ற , மென்மையான பஞ்சும் பயப்படும் அடிகளைக் கொண்ட பதுமை போன்ற பாவையே ! மன்மதனின் அம்புகள் ஐந்தும் . கயல் மீன்களும் , கொடிய விஷமும் , கடலும் கூட பெரிதும் பயப்படும். வண்ணம் தோன்றும் உன்னுடைய கண்கள் வெற்றியைத் தருகின்ற வேல் போன்றனவோ? ཌ꧂◤
    ❧◦°˚°◦.¸¸◦°
    இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
    நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
    டெழுத்தின் வனப்பே வனப்பு.
    ❧◦°˚°ஏலாதி கணிமேதாவியார்
    பொருள் :
    இடையழகு , நடையழகு தோள் அழகு , ,மேனி அழகு ,
    ஈடு கொடுக்கும் நாணத்தின் அழகு ,கழுத்தின் அழகு என்ற
    எந்த அழகும் அழகு அன்று..பெண்ணுக்கு எண்ணும் எழுத்தும்
    கற்றிருக்கும் அழகுதான் உண்மையான அழகு!
    ◦❧◦°˚°◦.¸¸◦°´❤*•.¸♥ ♥¸.•*❤´°◦¸¸.◦°˚°◦☙◦
    மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
    வாடாத முல்லை இது பாடி வரும் தேனீ ◦¸¸.◦°˚°◦☙◦
    இசை ஊஞ்சலிலே அசைந்தாடட்டுமா
    மறந்த அந்தப் பாடலுக்கு
    அடி எடுத்துக் கொடுக்கவா
    நடந்து செல்லும் வழி முழுதும்
    பனியைப் பார்த்தே தீர்ந்தது தாகம்◦❧◦°˚°

Komentáře • 22

  • @seethamurali6099
    @seethamurali6099 Před 6 lety +6

    ஒட்ட வைத்த பாடல் எங்கள் மனதில் ஒட்டி விட்டது

  • @kathirvel3798
    @kathirvel3798 Před 6 lety +2

    தென்றல்வீசும்படநாயகன் கல்யாண்குமார்என்பதுநினைவிருக்கிறது.

  • @vandalorerajaraman1139
    @vandalorerajaraman1139 Před 6 lety +1

    கிருஷ்ணகுமாரியின் நினைவாக சுசீலாவின் பாடலும் அருமை!

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l Před 6 lety +1

    முதன்முறையாக கேட்கிறேன் இனிய கீதம் நன்றி சார்.

  • @baskarramasamy1637
    @baskarramasamy1637 Před 6 lety +2

    I HAVE HEARD THIS SONG IN CEYLON RADIO IN 1970s NOW I AM HEARING AGAIN YOU HAVE BROUGHT BACK OLD MEMORIES A MELODIOUS SONG WHICH ARE A RARE COMMODITY NOWADAYS WE HAVE TO THANK YOU FOR YOUR EFFORTS TO SATISFY OTHERS THAT TOO IN A MATERIALISTIC WORLD

  • @senthivelan316
    @senthivelan316 Před 6 lety +3

    i enjoy all your songs they bring back my radio ceylon memories , also your videos are beautifully edited i like them too , wonderful job thank you

  • @jayaramsuganthi8264
    @jayaramsuganthi8264 Před 6 lety +2

    "Meettadha veenai" padalai pala madhangalaga net-il thedikondullen.indru suddena andha padalai parthadhum, en manam paravasamagi vittadhu.kidaikkadha ondru kidaithadhu pol manam santhoshamaga ulladhu.thanQ thanQ thanQ

  • @columbioaudioskrishnamoort649

    Supper song thank you sir

  • @jaelraphael1151
    @jaelraphael1151 Před 6 lety +7

    Sir, my heartfelt gratitude for finding this beautiful gem.
    Susheela voice is so gentle in this, it's one of the few songs I use to sing in my 20s. Once again a thousand thanks 🙇

    • @jaelraphael1151
      @jaelraphael1151 Před 6 lety

      TFMLover1983 தங்களுக்கு எனது மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌠

    • @ramayeesivakumar1347
      @ramayeesivakumar1347 Před 5 lety

      wopk Rapmhgrhael

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 Před 6 lety +1

    ALL SONGS IN THENDRAL VEESUM ARE NICE

  • @vsubbumani9492
    @vsubbumani9492 Před 6 lety +1

    Super song heroin ah partha suvalaxhmi ya pakkara mari iruku

  • @jayaramsuganthi8264
    @jayaramsuganthi8264 Před 6 lety +1

    Enakku, innum oru pattu vendum.mudindhal nan sollum pattaium kandu pidiungal.old cylon radio pona pin andha padalum poi vittadhu.andha padal "naga devadhai" endra padathil suseela padiya "mullai malar-ndha ravilay inba nila kulavudhay " endra pattu.try panni parungal.nandri.

  • @srikishore3483
    @srikishore3483 Před 4 lety

    Nice song

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 6 lety +2

    அருமை. நடுவே எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் வந்து போகிறது , கவனித்தீர்களா ?

    • @rangrajansrinivasan1496
      @rangrajansrinivasan1496 Před 4 lety

      கந்தன் கருனையிலொ ஆருமுகமான பொருள் வான் மகிழ வந்தான் என்ற ராகம் போல்...

  • @rajagopalt8400
    @rajagopalt8400 Před 5 lety +2

    T M S Voice is the
    Disturbance Sir in
    between the song
    Meettatha Veenai
    Song sung by P.Suseela
    Can you please Set Right THAMBI? Thanks

    • @KrishnamurthiBalaji
      @KrishnamurthiBalaji Před 5 lety

      Exactly. In this song it is very disturbing

    • @MrMahendren
      @MrMahendren Před 2 lety

      Why is TMSs clip appearing? Spoils the otherwise beautiful song.😔😔😔