aankaviyai_klcb_film002_song_04_Vanambadi

Sdílet
Vložit

Komentáře • 182

  • @smanian5862
    @smanian5862 Před rokem +18

    இவர்கள்தான் உண்மையிலேயே தமிழ் கவிஞர்கள் ஒரு வார்த்தை ஆபாசமும் இல்லை அனாவசியமான மொழியும் இல்லை ஐயா கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி

  • @u.rajamanickamu.rajamanick6574

    கவியரசரின் வார்த்தை விளையாட்டு பாடலில் எதிரொலிக்கிறது.இலக்கியத்தரம் வாய்ந்த இனிய பாடல்..

  • @panneerselvamnatesapillai2036

    காளமேகப் புலவரின் பாடலின் சாயலில் கவிஞர் எழுதிய பாடல். இது போன்ற பாடல்கள் இனி வருங்கால சந்ததியினர் கேட்பது அரிது.

  • @gindiragandhi3328
    @gindiragandhi3328 Před 2 lety +23

    அருமையான பாடல்.இதுபோன்றபாடல்களை கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத புத்துணர்ச்சி அளிக்கிறது.

  • @elanchezhiyanelanchezhiyan7033

    இப்படி ஒரு அருமையான பாடலை பதிவேற்றம் செய்த சிட்டிபாபு உண்மையில் ஒரு கெட்டி பாபு அன்புடன் இ. பொன்வதனா தேனி அரசு மருத்துவக் கல்லூரி அன்னை இந்திரா நகர்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +12

    நல்ல ப் பாடல்!! போட்டிப் பாட்டு! எல்லாத்திலும் ஜெயிப்பது பெண்தான்! இதிலும் தேவிகாதான் ஜெயிச்சிட்டார்!! கேவீஎம்மின் அருமையான டியூன் !!முதலில் தொகையறாவுடன் ஆரம்பிக்கும்!! அப்புறம் சுசீலாம்மாவும் டிஎம் எஸ் ஐயாவும் பாட களைகட்டிவிடும்! அதும் சுசீம்மா வேற பாஷை பாட ஆரம்பிக்க எஸ் எஸ் ஆர் முகத்தைப் பாக்கையில் சிரிப்பாருக்கும்! தேவிகா அமர்க்களமா இருக்கார்!! கண்ணதாசனின் இலக்குயச்சுவையுடன் கூடிய அற்புதப்பாடல்!! அருமை!! நன்றீ!

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 5 lety +27

    வானம்பாடி படத்தில் வரும் கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலும் இலக்கிய நயமிக்கவை எஸ எஸ் ஆர் தேவிகா நடிப்பு அருமை

    • @sdsms8285
      @sdsms8285 Před 2 lety

      ஆம் பாடல்கள் அத்தனையும் மிகவும் சிறந்தவை. அதிலும் குறிப்பாக கண்ணன் பாட்டு...

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +19

    21.11.2021...
    இந்த பாடலை கேட்கிறேன்.
    தமிழ் பாடல் வரிகள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது... அருமையான பாடல். கேட்க இனிமை...

  • @rajendrans3555
    @rajendrans3555 Před 3 lety +21

    நன்றி திரு.சிட்டி பாபு அவர்களே இந்த பாடலை கூகிளில் தேடி பிடிக்க ஒருவாரம் ஆனது.நனறி வாழ்த்துக்கள் வணக்கம்.இது போன்ற பழைய பாடல்களை நிறைய போடவும்.

  • @perumaldingu5471
    @perumaldingu5471 Před 4 lety +11

    பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே அருமை

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk Před 3 lety +20

    கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே❤️

  • @vinayagamthanga9204
    @vinayagamthanga9204 Před rokem +3

    என்றும் வாழும் பாடல்! *தெய்வத்தையே தொழுது நின்றால் பயன் இருக்காது* எப்படி? நமக்கான வேலைகளையும் செய்யவேண்டும்!

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz Před 3 lety +14

    பெண்ணின் கேள்வியா வந்த வரிகள் கவி காளமேகம் பாடல் மிகவும் அருமை

  • @thangavelm.r7722
    @thangavelm.r7722 Před rokem +2

    Oமீண்டும் இது மாதிரி பாடல் வேண்டுமென்றால் கவிஞரே பிறந்து வர வேண்டும்

  • @Thambimama
    @Thambimama Před 10 lety +53

    கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
    கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
    சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
    துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க !
    பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே
    பூங்கவிதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே
    மதியறியாச் சிறு மகளும் கவி பாட வந்தேன்
    மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே !
    ஆங்.. நடக்கட்டும்
    ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ
    அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக,
    பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக - உங்கள்
    பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக
    இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா? - அது
    இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலரையா
    வலையில்லாமல் மீனைப் பிடிக்கும் தேசம் என்ன தேசம்?- அது
    வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்
    (ஆண் கவியை )
    காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்? - அது
    கன்னியரைக் கண்டவுடன் கால்கள் தள்ளாடும்
    காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்? - அன்பு
    காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்
    ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு - அந்த
    ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
    வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு ? - தன்
    வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது
    (ஆண் கவியை)
    உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க
    இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?
    ம்ம் கேக்க சொல்லுங்க,
    தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது.. (ஆ..)
    தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது.. (என்னது?)
    தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது (ஓஹோஹோஹோஹோ) - இங்கு
    துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..
    ஹாஹா.. கேள்வியா இது ?
    என்ன உளர்றாங்க ?
    ஊக்கும்.. அவங்க ஒண்ணும் உளறலே..
    நீதான் திணர்றே
    நான் திணர்றேனாவது..
    பின்ன என்ன ?
    வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க..
    அவங்களே அர்த்தம் சொல்றாங்க
    முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க..
    அப்புறம் பேசலாம்
    சரி சொல்லுங்க,
    அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
    அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
    தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
    தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு
    பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக - உங்கள்
    பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக...

    • @hemanathan4193
      @hemanathan4193 Před 4 lety +4

      கவியரசருக்கே இந்த வார்த்தை வித்தை வரும்......

    • @amuthavenkatachalam6924
      @amuthavenkatachalam6924 Před 4 lety

      Thanks for the lyrics..
      What is the meaning of
      *Ilam themal konda kanni vaazha iniyadhu kooru*...
      Someone please explain...

    • @sakthivelg2192
      @sakthivelg2192 Před 3 lety +2

      ##### ( அருணகிரிநாதர் பாடல் ) ( கந்தர் அந்தாதி பாடல் எண் 54 ) திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
      திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
      திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
      திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே ###### பொருள் விளக்கம் கீழ் உள்ளது ##### ### ( ஆசு கவி காளமேகம் பாடல்களுள் ஒன்று ) தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
      துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
      தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
      தெத்தாதோ தித்தித்த தாது? ### பொருள் விளக்கம் கீழ் உள்ளது ### (இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றார்). திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
      திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
      திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
      திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே ...... 54
      ......... சொற்பிரிவு .........
      திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி
      (தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து
      (ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து
      (உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.
      ......... பதவுரை .........
      திதத்த ததித்த ... திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை,
      திதி ... தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
      தாதை ... உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
      தாத ... மறை கிழவோனாகிய பிரம்மனும்,
      துத்தி ... புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
      தத்தி ... பாம்பாகிய ஆதிசேஷனின்,
      தா ... முதுகாகிய இடத்தையும்,
      தித ... இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்)
      தத்து ... அலை வீசுகின்ற,
      அத்தி ... சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு),
      ததி ... அயர்பாடியில் தயிர்,
      தித்தித்ததே ... மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
      து ... அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்),
      துதித்து ... போற்றி வணங்குகின்ற,
      இதத்து ... பேரின்ப சொரூபியாகிய,
      ஆதி ... மூலப்பொருளே,
      தத்தத்து ... தந்தங்களை உடைய,
      அத்தி ... யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
      தத்தை ... கிளி போன்ற தேவயானையின்,
      தாத ... தாசனே,
      திதே துதை ... பல தீமைகள் நிறைந்ததும்,
      தாது ... ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
      அதத்து உதி ... மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
      தத்து அத்து ... பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
      அத்தி தித்தி ... எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு),
      தீ ... அக்னியினால்,
      தீ ... தகிக்கப்படும்,
      திதி ... அந்த அந்திம நாளில்,
      துதி தீ ... உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
      தொத்ததே ... உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
      ......... பொழிப்புரை .........
      நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும். ######## ( கவி காளமேகம் பாடல் பொருள் விளக்கம் ) பொருள்: தத்தித் தாது ஊதுதி - தாவிச் சென்று (தாது=பூவின் மகரந்தம்) பூவின் மகரந்தத்தை ஊதுகிறாய்;
      தாது ஊதித் தத்துதி - மகரந்தத்தை ஊதி உண்ட பின் வேறேங்கோ செல்கிறாய்
      துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய்
      துதைது அத்தா ஊதி - அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய்
      தித்தித்த தித்தித்த தாதெது - இரண்டிலும் தித்திப்பாக இருந்த மகரந்தம் எது?
      தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது?
      இந்தப் பாடலில் “தாது” என்னும் சொல் “மகரந்தம்”, “பூ”, “பூவின் இதழ்” ஆகிய மூன்றையும் குறிப்பிடுகிறது.
      விளக்கம்: வண்டைப் பார்த்துப் பாடும் விதமாக அமைந்தது இந்தப் பாடல். தத்தித் தாவி பூவில் (மலரில்) இருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே! (நீ) ஒரு பூவினுள் (மலரினுள்) உள்ள தாதுவை உண்ட பின்பு மீண்டும் மற்றொரு பூவிற்குச் சென்று தாதெடுத்து (மகரந்தத்தை எடுத்து) உண்கிறாய். வண்டே உனக்கு எந்தப் பூவில் உள்ள தேன் (எத்தாது) தித்தித்தது (இனித்தது)? இதுவே பாடல் விளக்கம்

    • @elangovanmallianathan7978
      @elangovanmallianathan7978 Před 2 lety +1

      @@sakthivelg2192 அருமை அபாரம் உங்கள் விளக்கம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வாழ்க உங்கள் பணி 07.08.2021 10.22.pm
      சனி கிழமை

    • @naga7516
      @naga7516 Před 2 lety

      @@sakthivelg2192 ஐயா.. இத்தனை சிரமம் எடுத்து தமிழ்த் தேனின் சுவையைப் பருக வைத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. தங்களை வணங்கி மகிழ்கிறேன் ஐயா..

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 Před rokem +3

    கவலையை மறக்க கூடிய பாடல் 👌👌👌

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před rokem +3

    இந்த போட்டி பாடல் சூப்பர் சூப்பர்.இதிலும் முத்து பதிந்துள்ளனர், TMS.SUSILA

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +42

    ஆரோக்கியமான போட்டி பாடல்.இனிவரும் காலங்களில் இது போல் ஒருபாடல் வருமா.பதில் யார் சொல்வது.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 4 lety +3

      Kandipaga varathu

    • @pushpacreative2165
      @pushpacreative2165 Před 3 lety

      Mmmmm Kandippa

    • @devi1964
      @devi1964 Před 2 lety +1

      இது நடக்காத விஷயம் இந்த கேள்வி கேட்கவே கூடாது தோழி

    • @narayanana2891
      @narayanana2891 Před 2 lety +3

      நாக்க முக்கு நாக்கமூக்கு என்ற பாடல்கள் உங்களுக்கு தெரியாதா?

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 Před 2 lety +3

      எல்லோருக்கும் நாளை பொழுது நிச்சியம் இல்லை. எனவே இருக்கும் போதே கேட்டு மகிழ்ச்சி அடைந்து விடுங்கள்.

  • @bathreebathree4178
    @bathreebathree4178 Před rokem +3

    💕💕💕dhevika ammavoda muga lakshshanam vera endha heroinesukkum illa😍😍😍💕💕💕💕

  • @smanian5862
    @smanian5862 Před rokem +1

    தமிழ் இலக்கணத்தில் இலை காய் மறைகள் இந்த பாடலில் தான் நான் உணர்கிறேன் அவள் அருமையான பாடல்அந்தப் பாடல்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @kodeeswaranks6947
    @kodeeswaranks6947 Před 2 lety +4

    மாலை வணக்கம்
    1963 ஆண்டு வானம்பாடி
    படம் வந்த து...இது தமிழ் மொழி சிறப்பு க்கூறும்பாடல். ஆண் பாடகர்/ நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
    பெண் பாடகி தேவிகா/நடிகை போட்டி பாடல் எழுதிய கவிஞருக்கு
    வாழ்த்துக்கள்.
    தேவிகா பாடல் வரிகள்
    அந்தாதி வகை.
    தாதி தூது என்று தொடங்கி சலனமின்றி பாடல் வரிகள் ஒலிக்கிறது.
    இதே போல் திருப்புகழ் தந்த பெரும் புகழ் அருணகிரிநாதர் வில்லிப்புத்தூரார் செருக்கு அடக்ககந்தர்அந்தாதிபாடுவார். பாடல் 54ல்
    திதத்த்த் என்று தொடங்கி
    பாடல் முடித்து பொழிப்புரை கூறுவார்.
    அந்தாதி தமிழுக்கே உரிய
    சொல்லாட்சி மிகுந்த பாடல்.அந்தாதி பாடிய முதல் பெண்மணி புனிதவதியார் என்று சொல்லப்படும் காரைக்கால் அம்மையார் ஆகும்.
    அவர் இயற்றியது.
    அற்புததிருவந்தாதி.நல்ல
    திரைப்படம் தமிழ் மொழி வளர்ச்சிக்குஉதவிபுரிந்தது....
    இன்று நடிப்பு பாடல்
    இசை எத்தனை பேர் மனதில் நிற்கிறது?!?!
    முத்திரை பதிக்கும் சித்திரை முழுநிலவு
    ஆண்கவியைவெல்லவந்த பெண் கவியேவருகபாடல்.
    தாளம் இராகம் பாடலில் தோன்றியது அருணகிரி நாதர் நாவன்மை யால்ஆகு. ம்
    நல்லதோர் பதிவு
    கே.எஸ்.கோடீஸ்வரன்
    உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
    28-2-2022

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety

      அந்தாதி என்பது, ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, சொல்லோ, தொடரோ அடுத்த பாடலின் முதலெழுத்தாகவோ, சொல்லாகவோ, தொடராகவோ அமைவது!
      'பாசம்' படத்தில் சரோஜாதேவி பாடும் "தேரேது சிலையேது திருநாள் ஏது?" என்ற பாடலில், இடம்பெற்ற சரணங்களான,
      "இனம்தேடி குணம்தேடி மனம் சென்றது!
      மனம் சென்ற வழிதேடி உயிர் சென்றது!
      உயிர் சென்ற பின்னாலும் உடல் நின்றது!
      உதவாத உடலிங்கு அசைகின்றது!
      உதவாத உடலிங்கு அசைகின்றது!"
      என்று சோகம் ததும்ப சரோ பாடும் ஒவ்வொரு வரியிலும் அந்தாதி அமைப்பு உள்ளது!
      தன் காதலன் எம்ஜிஆரைக் கண்ட மகிழ்ச்சியில் முன் பாடியதற்கு மாற்றமாக,
      " அசைகின்ற உடல்தேடி உயிர் வந்தது!
      உயிர் வந்த வழிதேடி மனம் வந்தது!
      மனத்தோடும் குணத்தோடும் இனம் வந்தது!
      இனத்தோடு இனம் சேரும் தினம் வந்தது!"
      எனும் வரிகளும் அந்தாதி அமைப்பில் அமைந்திருப்பதோடு சரணங்களின் பொருளும் அந்தாதி அமைப்பில் அமைந்திருக்கக் காணலாம்!
      காளமேகத்தின் இந்தப் பாடல் 'த' வருக்கத்தில் அமைந்த சித்திரக்கவி வகையைச் சார்ந்த பாடல்! சித்திரக்கவி என்பது எளிதில் பொருள் விளங்காமல் வந்த சொற்களே மீண்டும் மீண்டும் வந்து சொற்களைப் பிரித்துப் படித்தால் மட்டுமே பொருள் விளங்குவது!
      எளிமையான எடுத்துக்காட்டு:
      "தங்கச்சிவந்தியா?" இந்தச் சொல் ஒரு பாடலில் இரு இடங்களில் வருவதாக வைத்துக் கொள்வோம்! ஓர் இடத்தில் 'தங்க சிவந்தியா?' (தங்கநிற செவ்வந்திப் பூக்களா?) என்றும், பிறிதொரு இடத்தில் 'தங்கச்சி வந்தியா?' (தங்கையே நீ வந்துவிட்டாயா?) என்றும் பொருள் கொள்ளும்படி இருக்கும்!
      காளமேகத்தின் 'தாதி தூது' என்ற பாடலும் இத்தகைய சித்திரக்கவிதான்!

    • @prabakaris3675
      @prabakaris3675 Před rokem

      அந்தாதி வகையில் ஒரு பாடல் பின்னாளில் சேரன் நடித்த பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் இடம் பெற்றது.
      m.czcams.com/video/SrsIj14ndmQ/video.html

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    'அழகா'ன....தமிழ்க் கவிதை!!

  • @suseelaregunathan132
    @suseelaregunathan132 Před 2 lety +8

    Magical song Devika' acting magical so is her beauty Unlike Sarojadevi who always spoke tamil with accent and whose tamil pronunciation was irritating Devika spoke flawless tamil and Devika's tamil pronunciation was always impeccable

  • @balubalamanickam307
    @balubalamanickam307 Před rokem +3

    Brilliant Sir.

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 Před 3 lety +5

    நல்ல போட்டிப் பாடல்.
    பன்னீருக்குநன்றி.

  • @royalbeautytraining
    @royalbeautytraining Před 9 lety +17

    தெய்வத்தை தொளுது நின்றால் பயனிருக்காது...!!!
    Super...!!!

  • @Thambimama
    @Thambimama Před 10 lety +40

    படம்:- வானம்பாடி;
    ( கண்ணதாசன் புரோடக்சன்ஸ் அளிக்கும் );
    வெளியீடு:- 09th மார்ச், 1963;
    இசை:- கே.வி. மகாதேவன்; (KVM);
    பாடல்கள்:- கவிஞர் கண்ணதாசன்;
    உதவி:- பஞ்சு அருணாச்சலம்;
    பாடியவர்கள்:- டி.எம்.எஸ்., P.சுசீலா; (TMS & PS);
    நடிகர்கள்:- எஸ்.எஸ்.ஆர்., (SSR) & தேவிகா;
    மூலக்கதை:- ஷீஷ்பரிஷ் (வங்காளி கதை);
    திரைக்கதை - வசனம்:- வலம்புரி சோமநாதன்;
    ஸ்டூடியோ:- மெஜஸ்டிக்;
    தயாரிப்பு:- K. முருகேசன்;
    ஒளிப்பதிவு & டைரக்சன்:- G.R. நாதன்.

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 Před 5 lety +2

      ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் கொடுக்கும் தகவல்கள் வியக்க வைக்கிறது

    • @vedrockgamerz2027
      @vedrockgamerz2027 Před 4 lety +4

      Great details. Thanks

    • @jayapalveragopal8901
      @jayapalveragopal8901 Před 2 lety +4

      தங்கள் தகவல் சினிமா ரசிகர்களுக்கும் சிறப்பு தரும் நற்பதிவு ஐயா. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +2

    இலையில்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா
    அது இளமை பொங்க‌ வீற்றிருக்கும் கன்னி மலரய்யா

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +13

    Superb, meaningful song, lyrics very nice.Music ,PS+TMS,Devika+SSR nice combination.

  • @gisakstone5917
    @gisakstone5917 Před rokem +2

    அனைத்துபாடல்கள்அருமைஅருமைங்க

  • @gayathrirameshbabu6454
    @gayathrirameshbabu6454 Před 4 lety +15

    No words to praise the creators of this wonderful song.

  • @SureshKumar-po2nf
    @SureshKumar-po2nf Před 2 lety +5

    What a great meaning in the song not even a song now a days We have respect all of them

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před 4 lety +7

    தமிழுக்கு நன்றி அருமையாணபாட்டுக்கு🙏🙏🙏

    • @narayanana2891
      @narayanana2891 Před 2 lety +1

      தமிழைப் பிழையின்று எழுதுக. அப்பொழுதுதான் தமிழ் வாழும், வளரும்.

  • @priyasiva311
    @priyasiva311 Před rokem +3

    My dad favorite song

  • @sridevi1739
    @sridevi1739 Před 4 měsíci

    இந்த பாடலை நான் ரொம்ப நாட்களாக தேடிக்கண்டு பிடித்தேன் மிக அருமையான பாடல்

  • @krishnavenikrishnaveni6676

    கவலை மறக்க கூடிய பாடல்

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před 3 lety +7

    Excellent Kannadasan lyrics,
    P.S and T.M.S.

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Před měsícem

    🤩😍👌👌👌👍

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +8

    அம்மா தமிழ் மொழி எவ்வளவு இனிமையானது 👌👌👌🌹

  • @dawbaybee9575
    @dawbaybee9575 Před rokem +1

    பாடல் சூப்பர் பாடல் அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.!

  • @abiramiabirami483
    @abiramiabirami483 Před 2 měsíci

    20.4 2024 la entha song ketguren❤

  • @nishasyed2771
    @nishasyed2771 Před 5 lety +5

    மிகவும் பிடித்த மிக அருமையான பாடல்

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar

  • @lionvuardguard3237
    @lionvuardguard3237 Před 3 lety +3

    All songs r beautiful i enjoyed myself tq

  • @sankaranarayanan5270
    @sankaranarayanan5270 Před 4 lety +3

    அருமையான பாடல்

  • @sampathkumarnamasivayam5846

    என்றென்றும் இனிமை.

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 Před 2 lety +1

    என்னுடைய கடந்த காலநினைவுகளைநினைக்கவைத்துவிட்டது

  • @nagarajahshiremagalore226

    Beautiful song , pleasant to listen.thanks

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +2

    Thank u for uploading this beautiful song.

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 Před 4 měsíci +1

    1000 டைமண்டு முத்து வந்தாலும் எழுத முடியாது

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 Před 3 měsíci

    இதழ் கொண்டு மொழிபேசும் ஒலிபேச்சு இருக்கும்போது இலைஇல்லாமல் பூத்தமலர் இலைமறை கவர்ந்தற்ரோ

  • @muthu1447
    @muthu1447 Před 2 lety +2

    கண்ணதாசன் 🙏🙏🙏

  • @arunachalammayandi3297
    @arunachalammayandi3297 Před 2 lety +1

    மிக அருமை

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 Před rokem +1

    Old is gold

  • @AndreaRF70
    @AndreaRF70 Před 11 lety +7

    Nice song with good meaning

  • @GayathriJaiAnanthan
    @GayathriJaiAnanthan Před 5 lety +4

    Excellent song love the song very much

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 Před rokem +1

    Supper song

  • @ravintharanravin5986
    @ravintharanravin5986 Před 2 lety +5

    to whom so ever it may concern attention here I am pointing out to you this particular song is so great torching in my little heart with your great and mercy permission is granted from your faithfully mr thiru ravintharans/o visumparan my nick name is mr thiru ravindren Menon from singapore

  • @rathas2654
    @rathas2654 Před 2 lety +3

    தன். வாழ்க்கையே. காதலித்தால்

    • @sridevistudio2487
      @sridevistudio2487 Před rokem

      கண்ணதாசன் நகர் கண்ணதாசனே

  • @user-tf4xl7wv5k
    @user-tf4xl7wv5k Před 11 měsíci

    Rajavel steels arumilum arumiyana beautiful song

  • @gisakstone5917
    @gisakstone5917 Před rokem

    அருமைங்க. அருமைங்க பாடல்கள்

  • @mselvarajmselvaraj5559
    @mselvarajmselvaraj5559 Před 2 lety +1

    சிறுவயது கமல்.

  • @sasikalasasisekar9507
    @sasikalasasisekar9507 Před 2 lety +2

    I like this song very much

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +8

    The debate song which is joyful persuades me to hear the admirable one any longer.

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před rokem

    அருமை

  • @marimuthusamyexcelleent2562

    Question and Answer Song Excellent.

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 Před 4 měsíci

    இந்த காலத்தில் இப்படி வராது

  • @SelviKamaraj-sh3dy
    @SelviKamaraj-sh3dy Před 3 měsíci

    Nice song

  • @rajendrank3334
    @rajendrank3334 Před 4 lety +4

    இலையில்லாமல்பூத்தமலர்.என்னமலரம்மா.அது.இள்மைபொங்கவீற்றிருக்கும்கன்னிமலரையா.

  • @mallikaparasuraman9535

    அருமையான பாடல் சரியான போட்டி

  • @geethanarayanan5259
    @geethanarayanan5259 Před rokem

    Super songs

  • @rathnavel65
    @rathnavel65 Před 4 měsíci

    நடிகை ஜோதிலட்சுமியின் முதல் படம்..."வானம்பாடி"
    கவிஞர் கண்ணதாசன், ஒரு பக்கம் பாடல்களை எழுதி குவித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு படம் தயாரிக்கும் ஆசையும் அதிகமாக இருந்தது. தனது கண்ணதாசன் புரொடக்சன்ஸ் மூலம் "மாலையிட்ட மங்கை", "சிவகங்கை சீமை", "கவலை இல்லாத மனிதன்" உள்பட ஆறு படங்களைத் தயாரித்திருக்கிறார். அதில் ஒன்று "வானம்பாடி"
    "சேஷ் போரிச்சோய்" என்ற வங்கமொழி படத்தின் ரீமேக் இது. கண்ணதாசனின் நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் ஜி.ஆர்.நாதன் இயக்கிய இந்தப் படத்தின் வசனத்தை வலம்புரி சோமநாதன் எழுதினார். கே.வி. மகாதேவன் இசை அமைத்திருந்தார்.
    படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.மனோகர், ஷீலா, புஷ்பலதா எஸ்.வி. சகஸ்ரநாமம், வி.எஸ். ராகவன், டி.ஆர்.ராஜகுமாரி, ஜாவர் சீதாராமன், ஓ.ஏ.கே.தேவர் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் கமல்ஹாசன் சிறுவனாக நடித்திருந்தார்.
    ஜமீனிடம் இருந்து தப்பிக்கும் இளம்பெண் மீனா, ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய நினைக்கிறார். ஆனால் வயதான தணிகாசலம் என்பவரால் காப்பாற்றப்பட்டு அவர் வீட்டில் வசிக்கிறார். ஒரு கட்டத்தில் தணிகாசலத்தின் மருமகன் கவிஞர் சேகருக்கும், மீனாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. திடீரென்று அங்கு வரும் கோபால் என்பவர், மீனா தனது மனைவி என்கிறார்.பிறகு என்ன நடக்கிறது?என்று கதை போகும்.
    இதில், தேவிகா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஒரு
    காலத்தில், வைஜயந்திமாலா, சாவித்திரி, அஞ்சலிதேவி, ஜமுனா ஆகியோருடன் ஹீரோவாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரன் இதில் புஷ்பலதா ஜோடியாக நடித்து காமெடி ஏரியாவையும் பார்த்துக்கொண்டார்.
    கண்ணதாசன் சொந்தப் படம் என்பதால் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக அமைந்தன. சுசீலா குரலில் வெளியான 'கங்கைக் கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்' பாடலில் ரசிகர்கள் மெய் மறந்தார்கள்.
    'தூக்கணாங்குருவி கூடு', 'ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக', 'ஏட்டில் எழுதி வைத்தேன்', 'ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள்', 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்', 'யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
    "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" பாடலில் நடனத்தில் மிரட்டி இருப்பார். ஜோதிலட்சுமி. இப்போது பார்த்தாலும் சிலிர்க்கும் உணர்வை தருகிறது,இந்த பாடல்.
    9.3.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான் ஜோதிலட்சுமிக்கு முதல் படம்.
    -நன்றி "இந்துதமிழ்"
    9.3.2024

  • @ShanthiJayakumar9697
    @ShanthiJayakumar9697 Před 5 lety +2

    lovely song great humor too

  • @immanuelshmuel
    @immanuelshmuel Před 2 lety

    Yah Allah baruch haba beshem adonai

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 5 lety +2

    Excellent super song

  • @devasenapathik305
    @devasenapathik305 Před 2 lety

    வாழ்க தமிழ்

  • @charusenthil329
    @charusenthil329 Před 7 lety +3

    பென்களின் காதல் தாலே.

  • @divakaranmeenakumari6542
    @divakaranmeenakumari6542 Před 3 lety +1

    Super song wordings super

  • @riyasiya3767
    @riyasiya3767 Před 9 měsíci

    😊😊😊

  • @arshadsaleem88
    @arshadsaleem88 Před 10 lety +2

    Arpudamana varigal

  • @kmurugankmurugan7155
    @kmurugankmurugan7155 Před 2 lety

    Supr. Kshanmgam

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 Před 5 lety +2

    S. S. R. என்னப்பா ஏதோ உளருறாங்க

  • @dhamotharanm6025
    @dhamotharanm6025 Před 2 lety

    Kannadasan navil arumaiyana tamiz

  • @dhamotharanm6025
    @dhamotharanm6025 Před 2 lety +1

    Best ouestion and answer in.this song

  • @zubedaaman6477
    @zubedaaman6477 Před 2 lety +1

    Nice

  • @doraisamykrishnan1984
    @doraisamykrishnan1984 Před 6 lety +7

    This song is very nice and good voice forever

  • @pandureddy9753
    @pandureddy9753 Před 2 lety

    Very good song amazing e

  • @vijay-xx4bn
    @vijay-xx4bn Před 3 měsíci

    Watching in 2024

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 6 lety +1

    Wonterful song

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Před 2 lety

    Amzng lines no words

  • @syedabuthahir8901
    @syedabuthahir8901 Před 9 lety +1

    Good song

  • @jayakumar.m9874
    @jayakumar.m9874 Před 8 lety +4

    This song I like very much

  • @mohangovintharaj639
    @mohangovintharaj639 Před 10 lety +2

    My love song

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 Před rokem +1

    Upload the full movie

  • @ramasamy2531
    @ramasamy2531 Před rokem

    கருத்து மிக்க பாடல்

  • @rajanudhayakumar1613
    @rajanudhayakumar1613 Před 8 lety +6

    Mr.Kandasamy the music composer is K.V.Mahadevan
    not MSV

    • @Thambimama
      @Thambimama Před 5 lety +1

      Yes Sir... Music by Mama KVM , not MSV.

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety

    👌

  • @abuthahir699
    @abuthahir699 Před 3 lety +1

    பழைய என்று இனியாவது

  • @ramuk3736
    @ramuk3736 Před 2 lety

    Supersng