குமர குருபர முருக சரவண - முறையீடு - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 214

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • தனன தனதன தனன தனதன
    தனன தனதன - தனதான
    குமர குருபர முருக சரவண
    குக சண்முக கரி - பிறகான
    குழக சிவசுத சிவய நமவென
    குரவன் அருள் குரு - மணியே யென்று
    அமுத இமையவர் திமிர்தம் இடு
    கடலதென அநுதினம் - உனையோதும்
    அமலை அடியவர் கொடிய வினைகொடும்
    அபய மிடுகுரல் - அறியாயோ
    திமிர எழுகட லுலக முறிபட
    திசைகள் பொடிபட - வருசூரர்
    சிகர முடியுடல் புவியில் விழ உயிர்
    திறைகொடு அமர்பொரும் - அயில்வீரா
    நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல்
    நதிகொள் சடையினர் - குருநாதா
    நளின குருமலை மருவி யமர்தரு
    நவிலு மறைபுகழ் - பெருமாளே,

Komentáře • 3

  • @dhaninprince4333
    @dhaninprince4333 Před 18 dny +1

    OM MURUGAN THUNAI 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @hemalathavenkatachalapathy9909

    முருகா சரணம். வெற்றிவேலா சரணம் குமரா சரணம் ❤🙏🏻❤️

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Před měsícem

    En appanae muruga thunai 🦚