Sri Vaikal Nathar Temple | Vaikal | Sambanthar | SCN033

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2023
  • திருவைகல் வைகல்நாதர் ஆலயம்: செண்பக மரங்கள் நிறைந்ததால் சண்பகரண்யேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் மாடக்கோயிலான இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம்-காரைக்கால் சாலையில் பழியஞ்சிய நல்லூர் சந்திப்பு அருகிலும், கும்பகோணத்திலிருந்து கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவிலும், திருநீலக்குடி பாடல் பெற்ற தலத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்/ பெருமாள் வழிபட்டவிஸ்வநாதர் ஆலயம்/ ஊரின் மேற்கு திசையில் உள்ள வைகல் நாதர் ஆலயம் மூன்று சிவ தலங்கள் உள்ளன, வைகல் நாதர் ஆலயம் திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட ஆலயம். முற்பிறவியில் சிலந்தியாக பிறந்து திருவானைக்காவல் இறைவனால் பக்தியில் பரவசப்பட்டு மன்னனாக பிறக்க அருள் புரிந்தார். அப்படி முற்பிறவியில் சிலந்தியாக பிறந்தவர் இப் பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து சோழ நாட்டை ஆட்சி செய்கிறார். இவர் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்று. இத்தல இறைவன் செம்பகரண்யேஸ்வரர் எனும். திருவைகல்நாதர். இறைவி கொம்பியல் கோதை. மற்றும் வைகல்நாயகி. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிப் பரவிய தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் 33வது தலம்.
    வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.

Komentáře • 2

  • @sakthi9059
    @sakthi9059 Před 21 dnem

    நன்றி🎉

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS  Před 6 měsíci

    Thanks:
    Google Map location reviews
    www.dharisanam.com/temples/sri-vaikalnatheswarar-temple-at-vaikal-maadakkoil
    shaivam.org/hindu-hub/temples/place/120/vaikalmadakkoil-sanpakaraneeswarar-temple#gsc.tab=0