ஆவராணி/அபரணதாரி அனந்தநாராயண பெருமாள் கோயில் | உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிந்து காட்சி தரும் பெருமாள்

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2023
  • ஆபரணதாரி அனந்த நாராயண பெருமாள்
    மூலவர்: அனந்த நாராயண பெருமாள்
    தாயார்: அலங்காரவல்லி தாயார்
    ஊர்: ஆபரணதாரி
    புராண பெயர்: ஆவராணி
    மாவட்டம்: நாகப்பட்டினம்
    திருமங்கை மன்னன் எனும் திருமங்கையாழ்வார் திருவரங்கனிடம் அளவிலா பக்தி கொண்டவர். அரங்கனுக்கு திருப்பணி செய்வதைத் தவிர இவ்வுலகில் வேறென்ன வேலை எனக்கு என்று திடச்சித்தம்அழியா புகழ்தரும் ஆவராணி ஆபரணதாரி கொண்டிருந்தார். சொல்லாண்ணா இந்தத் தாபம் அவரைத் தூங்கவிடாது செய்தது. எல்லாமும் அவன்தானெனில் இங்கிருப்பது அனைத்தும் அவனுக்குரியது-தானே.
    ஏன் அவனிடமே சேர்க்கக்கூடாது என்று யோசித்தார். அதனால், திருப்பணிக்குப் பொன் வேண்டு மெனில் அதையும் எடுத்துக் கொள்வோம். ஆனால், தடுப்பார்களே; கொடுக்கத் தயங்குவார்களே. அப்போது, ‘பெருமாளுக்குரியதை நீ வைத்துள்ளாய்’ என்போம். புரியாது விழிப்பார் எனில் அவர் அறியாது அதைக் கவர்ந்து கொள்வோம் என்று தீர்மானித்தார். நாகப்பட்டினம் செல்ல திட்டமிட்டார்.
    நாகை புத்தவிஹாரத்திலுள்ள பொற்சிலை அவரை மிகவும் கவர்ந்தது. அதைக் கவர்ந்தாலே போதுமே, எத்தனை கோபுரங்கள் எழுப்பலாம் என்று எண்ணினார். நடுநிசியில் நாகை அடைந்தார். புத்தவிஹாரத்திலுள்ள பொற்சிலையைக் கவர்ந்தார். இரவு முழுதும் பதுங்கிப் பதுங்கி பயணம் மேற்கொண்டார். ஓரிடத்தில் பொற்சிலையை மறைத்து வைத்தார். (‘பொருள் வைத்தசேரி’ என்று இவ்விடம் வழங்கப்பட்டு ‘பொரவச்சேரி’ என்று தற்போது அழைக்கிறார்கள்.)
    தொடர் ஓட்டத்தால் களைத்தார். எங்கேனும் அமர்ந்து கண்ணயரலாம் என நினைத்தார். கருணைக் கடலான பரந்தாமன் அந்தப் பெரும் பக்தனுக்கு தன்னை காட்ட தருணம் பார்த்துக் காத்திருந்தார். பலா மரத்தினடியில் சரிந்து அமர்ந்தார், திருமங்கை மன்னன். சட்டென்று அவர் கண்ட காட்சி அவரின் இதய இயக்கத்தையே நிறுத்துவதுபோல் இருந்தது.
    பாம்பணையின் மீது பரந்தாமன் பள்ளி கொண்டி ருந்தார். பெருமாளின் மீது சர்வ ஆபரணங்களும் பொன்னொளியாக வீசி அவன் மீது புரண்டு தவழ்ந்து கொண்டிருந்தன. ஆதிசேடன் எனும் பெருநாகம் ஏழு தலைகளோடு படமெடுத்து மெல்லியதாக ஆடிக் கொண்டிருந்தன. ஸ்ரீதேவிப்பிராட்டியார் எம்பெருமானுக்கு பாத சேவகம் புரிந்து கொண்டிருந்தார். வியாசரும், பிருகு மகரிஷியும் பணிவாக அமர்ந்திருக்க அவ்விடமே வைகுண்டமாக ஜொலித்தது.
    ‘ஆஹா... இது பெருமாள் உறையும் திருக்கோயிலல்லவா... எத்தனை அழகான கோயில்’ என்று பரவசமானார். சந்நதியை நோக்கி ஓடினார். இன்னும் நெருங்கி வெகு அருகே வைத்த கண் வாங்காது திருமேனியழகை பருகினார். சட்டென்று காட்சி மறைய, கண் விழித்தார். ‘உனக்குத் திருப்பணி செய்யவே நான் போகிறேன்’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு புறப்பட்டார்.
    வானத்தில் மின்னல் வெட்டியது, விடியல் வேளையில் இதென்ன பேரொளி என்று ஊரார் வெளியே வந்து பார்த்தனர். அந்தக் கோயிலுக்குள் மணிச் சத்தம் கேட்டது. போய்ப் பார்க்க, பேரொளி ஒன்று அரங்கனுக்குள் மெல்ல ஒடுங்கிற்று. எம்பெருமானின் ஆபரணங்கள் பொன்னொளியால் பளபளத்தன. அன்றிலிருந்து அவ்வூர் ‘ஆபரணதாரி’ என்றழைக்கப்பட்டது. பிறகு ‘ஆவராணி’ என்று திரிந்து இப்போது அதுதான் வழக்கு மொழியிலுள்ளது.
    அர்த்த மண்டபத்தில் வரப்பிரசாதியான ஆஞ்சநேயர் அருளாட்சி புரிகிறார். சாதாரணமாக எல்லா பெருமாள் கோயிலிலும் அமாவாசையன்று முதல் திருமஞ்சனம் பெருமாளுக்குத்தான் செய்வார்கள். ஆனால், இங்கு பெரிய திருவடி என்று சொல்லக்கூடிய கருடாழ்வாருக்கும், சிறிய திருவடியான ஸ்ரீபத்மாஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் செய்துவிட்டு, மூன்றாவதாகத்தான் அனந்த நாராயணப் பெருமாளுக்கு செய்விக்கிறார்கள்.
    இதை ‘பஞ்சவர்த்தினி திருமஞ்சனம்’ என்கிறார்கள். அதாவது, மாதப் பிறப்பு, அமாவாசை, ஏகாதசி, திருவோணம், சனிக்கிழமை போன்ற தினங்களில் திருமஞ்சனம் ஆகும். மேலும், பத்மாஞ்சநேயரை மிக விசேஷமாக இங்கு ஆராதிக்கின்றனர். ஆதி நாட்களிலிருந்து இந்த பத்மாஞ்சநேயருக்கு ‘கட்டமுது கட்டுதல்’ என்கிற விசேஷ பிரார்த்தனையை செய்விக்கிறார்கள்.
    கட்டமுது என்பது தயிர் சாதத்தை புதிய வஸ்திரத்தில் முடிந்து இடுப்பில் முடிந்து விடுவார்கள். வியாழன், சனி, அமாவாசை தினங்களில் காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் பெயர், நட்சத்திரம், பிரார்த்தனைக்கான விளக்கத்தை மனுவாக எழுதி அந்தக் கட்டமுதுடன் சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள்.
    அன்று மாலை கால பூஜையின் போது, அந்த சாதத்தை நிவேதனப் பிரசாதமாக கொடுத்து உண்ணச் சொல்கிறார்கள். அந்த கட்டமுது தயிர்சாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
    பிரார்த்தனை செய்து கொண்டோரால் மாலை வரை இருக்க இயலவில்லையெனில் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுத்துவிடுவார்கள். கோயிலை வலமாகச் சுற்றிக்கொண்டு வரும்போது தென்பிராகாரத்தில் தனி சந்நதியில் அலங்கார வல்லித் தாயார் எனும் திருநாமம் பூண்டருளுகிறாள். ஆபரணதாரிக்கு நிகரான அலங்காரவல்லி இவள்.
    அழகையும், செல்வத்தையும் வாரி வழங்குவதில் நிகரில்லாதவள். கைகூப்பி அவளைப் பணிந்து பிராகாரத்தை வலம் வரும்போது தல விருட்சமான பலா மரம் காணப்படுகிறது. சிறிய கோயிலாயினும் கீர்த்திமிக்க கோயில்.
    நேர்த்தியான கோபுரங்கள். கோயிலை வலம் வந்து பலிபீடத்திற்கு முன்பு நமஸ்கரித்து நிமிர, நீண்ட பெருமாள் நமக்குள்ளும் பள்ளி கொண்டு விடுகிறான்.
    பிராத்தனை
    சர்ப தோஷம் நீங்க திருமண தடை நீங்க குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய தலம்
    அமைவிடம்
    ஆவராணி எனும் இத்தலம் நாகப்பட்டினம் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிக்கலில் இருந்து ஆட்டோ வசதி மினி பேருந்து வசதி உள்ளது.
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    9443422011
    தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    7994347966
    கோயில் Google map link
    maps.app.goo.gl/5D8k8nyQzRojV...
    if you want to support us via UPI id
    9655896987@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

Komentáře • 26

  • @santhisalemrangasamy5083

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🌺

  • @vijaybalaji27
    @vijaybalaji27 Před 12 dny

    ஓம் நமோ நாராயணாய

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před rokem +3

    அற்புத தலம்.பெருமாள் தரிசிக்க அருள் புரிய வேண்டும். From, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,...நன்றி..நமோ நாராயணாய நம...

  • @ambujavallidesikachari8861

    I was fortunate to have darsan of this temple! Perumal is really looking very large, beatiful smiling and many people who come here say whatever wishes they make are all fulfilled for sure!

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před rokem +1

    Very super beautiful temple. Iam going to every puratasi Saturday

  • @jaivvs
    @jaivvs Před 2 měsíci

    இரண்டு முறை தரிசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது...
    நாராயணா நாராயணா.....

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 2 měsíci

    Super good temple. Year to puratasi Saturday my groups going to temple

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 Před rokem +2

    வாழ்க வளமுடன் நவநீதன் சார் 🙏

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 Před rokem

    மிக்க நன்றிகள் அண்ணா.

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 Před rokem +1

    Super sir

  • @arunswaminathan6011
    @arunswaminathan6011 Před rokem

    Abarantari Ayya ungala pathu tarisanam seytha piragu yenaku yerumugam.
    Arun swaminathan ,Nagapattinam .

  • @balamanian6299
    @balamanian6299 Před 6 měsíci

    ஆவதாரணி பெருமாள் ஆலய தரிசனம், பெருமாள் கோயில் தல வரலாறு, விழிக்கே அருளுண்டு தாயார் வல்லிக்கு, வழிபடவேண்டும் என்னும் அன்பு நெஞ்சுண்டு எமக்கு. அவன் அருள் என்று வருமோ ♥️? கிடக்கிறேன். காத்துகிடக்கிறேன். 🙏🏼🦚🦚🦋👏

  • @sanjeyan694
    @sanjeyan694 Před rokem

    Thanks.

  • @meerachenganur1878
    @meerachenganur1878 Před rokem +1

    Thanks

  • @seshadrig4722
    @seshadrig4722 Před rokem +1

    Thanks. You are doing a great work with dedication.

  • @bhuvanaanand5772
    @bhuvanaanand5772 Před rokem +1

    நாராயண! நாராயண

    • @bhuvanaanand5772
      @bhuvanaanand5772 Před rokem +1

      அழகான அற்புதமான பெருமாள் கோயில்! எங்களை வர்ணனை மூலமாக கோயிலுக்கே அழைத்து சென்று விட்டீர்கள்! நன்றி 👌🙏🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 9 měsíci

    Om namo narayana

  • @user-pu8fl3op5h
    @user-pu8fl3op5h Před 28 dny

    Temple time

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 Před rokem

    🙏🙏🙏

  • @kumaravelsubramani8249
    @kumaravelsubramani8249 Před 9 měsíci

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி

    • @vijimani578
      @vijimani578 Před 9 měsíci

      ஓம் நமோ நாராயணா
      உன்னை தரிசிக்கும்
      பாக்கியம் தாப்பா

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @balamanian6299
    @balamanian6299 Před 6 měsíci +1

    Thanks!