Thenkurangaduthurai Sri Abathsahayeswarar Temple | Appar & Sambanthar | SCN031

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2024
  • ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
    அண்ணனால் தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க சுக்ரீவர் இவ்விடத்துக்கு சிவபெருமானை வேண்டினான். தன்னை சரணடைந்த சுக்ரீவனை, அன்னப் பறவையாக உருமாற்றி வாலி யிடம் இருந்து காப்பாற்றி அருள்புரிந்தார்
    ஆடுதுறை ஈசன்.
    இதனால் அவர் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார் என்று தல புராணம் சொல்கிறது.
    அனுமன் ஒரு சமயம் திருக்கயிலை மலையில் கல்லும் கரைந்து போகும் அளவுக்கு இசைபாடிக்கொண்டிருந்தார் .அவரின் இசையில் மயங்கிய நாரத முனிவர் கிழே உட்கார்ந்து மெய் மறந்து கேட்கலானார் ,பிறகு அவர் அங்கிருந்து புறப்படும் போது தன்னுடைய வீணையை எடுக்கமுடியாமல் பனியால் மூடிவிட்டது . கோபமுற்ற நாரத முனிகள் அனுமனை பார்த்து நீ கற்ற இந்த இசையை மறந்துபோவாயாக என்று சாபம் இட்டார் .மனம் வருந்திய அனுமன் தன்னுடைய அரசன் சுக்ரீவன் வணங்கிய இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி இழந்த தன் இசையை மீட்டார் .
    வாலி ,சுக்ரீவர் ,அனுமன் பூஜித்த தலம் என்பதால் இவ்விடத்துக்கு திருதென்குரங்காடுதுறை என்ற பெயர் ஏற்பட்டது .
    சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபட்டால் தந்தை மகன் உறவில் உள்ள பிரச்னைகள் தீரும் என்றும், தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
    இவ்வாலய முருகப்பெருமான் சிறப்புக்குரியவர்;
    சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும்,
    முருகப்பெரு மானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராக சந்திப்பது
    வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத காட்சியாகும்.
    ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த தந்தை - மகன் இவ்வாலயம்
    வந்து முருகப்பெருமானை வேண்டி பரிகார பூஜை செய்துக் கொண்டால்,
    வினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5 ,6 ,7 தேதிகளில் சூரியனது ஒளி கதிர்கள் சன்னதியின் வெளியே உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்து கடந்து ஸ்வாமியின் மீது படுகிறது .
    பைரவரும் ,அகத்தியரும் வழிபட்ட கோயிலாகும் ,
    தெற்கு பிரகாரத்தில் அகத்தியர், நடராஜர் திருவுருவ புடைசிற்பங்களும் இங்கே
    காணலாம்.நடராஜர் தன் ஆனந்த நடனத்தை இவ்விடத்தில் அகத்தியர்
    வேண்டுதலுக்கு இறைவன் இணங்கி ஆடிக்காட்டியுளார்.

Komentáře • 2

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 6 měsíci

    ❤🎉🙏🌺🌺சிவ சிவ🌺🙏🎉🎉🎉🎉❤

  • @MuthuSaravananS
    @MuthuSaravananS  Před 6 měsíci

    Thanks:
    Google location reviews
    www.indiatempletour.com/sri-abathsahayeswarar-temple-thenkurangaduthurai/
    www.maalaimalar.com/devotional/temples/2018/12/14100221/1217957/aduthurai-Abathsahayeswarar-Temple.vpf