பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story | Raja Raja Cholan | Deep Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2022
  • கண்களை மூடி கேளுங்கள்! சோழ தேசத்திற்கு செல்வீர்கள்!
    Join this channel to get access to perks:
    / @deeptalkstamil
    ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்?
    • ஆதித்த கரிகாலன் உண்மைய...
    முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
    • தன்னுடைய முதல் போரில் ...
    யார் இந்த கரிகால் சோழன்?
    • யார் இந்த கரிகால் சோழன...
    இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
    • உலகமே வியந்துப் பார்த்...
    குலதெய்வங்கள் | தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு
    • குலதெய்வங்கள் | தமிழ் ...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    யார் இந்த நந்தினி?
    • யார் இந்த நந்தினி? பொன...
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 1,6K

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  Před rokem +557

    5:38:51 நிமிடத்தில் வந்தியதேவனிடம் நந்தினி சொல்லும் வசனத்தை தவறாக சொல்லிவிட்டேன். மன்னிக்கவேண்டும் நண்பர்களே!
    அங்கு "கண்டிப்பாக என்னுடைய கையால் கரிகாலனை கொல்ல மாட்டேன்" என்று வரவேண்டும். தவறை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு மிக்க நன்றி. 🙏

  • @karthiklipl6949
    @karthiklipl6949 Před rokem +29

    வணக்கம் நண்பனே,நான் இந்த புத்தகத்தை நீண்ட காலத்திற்கு முன்பு படித்தேன். இப்போது நான் உங்கள் ஆடியோவைக் கேட்டேன்...உண்மையில் அருமையான கதை நடை.. இந்த ஆடியோவை நீங்கள் கையாண்ட விதம் அருமை, ஏனென்றால் நீங்கள் முக்கிய கூறுகள் மற்றும் வரிசையை தவறவிடவில்லை.நீங்கள் அருமை.... தயவு செய்து இந்த அருமையான பணியை தொடருங்கள் .. உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வாழ்த்துகிறேன்.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @shenbakrishnan7592
    @shenbakrishnan7592 Před rokem +26

    பொன்னியின் செல்வன் கதை கூறிய விதம் அருமையிலும் அருமை. குரல் வளம் மட்டுமல்ல தங்களுக்கு அறிவு வளமும் கூடுதல் அதனால் தான் வார்த்தைகளினால் அளவுகள் கூட்டவோ குறைக்கவோ இல்லை வே பட்சத்தில் நேரத்தையும் கணப்பொழுது கூட அதாவது கடத்தாமல் மிக அருமையாக கூறினீர்கள் இதன் மூலமாக இதைக் கேட்பது கூட ஒரு யோகமாக போகிறது கண்களை மூடி நாம் மட்டுமே எந்த தொந்தரவும் இல்லாமல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நம் நிலையிலே அந்த காலத்திற்கு சென்று வருவது மிக மிக அருமையாகவும் மனதிற்கு மிகுந்த ஒரு அமைதியை தருவதாகவும் இருந்தது எனவே தாங்கள் என்ன கூற வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள் எனது விருப்பமாக நமது தமிழ் மண்ணில் உதித்த மணிமேகலை குண்டலகேசி வளையாபதி சிலப்பதிகாரம் போன்றவைகளும் இவ்வாறு உங்கள் குரல் வளத்தில் இருந்தால் மிக மிக அருமையாக இருக்கும் என்று எண்ணுகிறேன் இப்படி வரும் பட்சத்தில் எல்லோரும் நாட்களில் தமிழர்களின் வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் ஒரு வேளை இந்த வரலாற்று கதைகளின் மீது ஆர்வம் வருவதை நோக்கும் போது நாமும் அந்த காலங்களில் வாழ்ந்த ஆத்மாக்களாக இருப்போமோ என்று கூட என்ன வைக்கிறது முழுமையாக தெரியாது இருப்பினும் இந்த அந்த ஆன்மாக்கள் தான் மாறி மாறி பிறப்பெடுத்து வருவதாக ஆன்மாக்களின் புத்தகங்கள் கூறுகின்றன அதன்படி பார்க்கும்போதும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களாகவும் ஆண்மக்களாகவும் நாம் இருந்திருக்கலாம் இதில் எவ்வளவு உண்மை? எவ்வளவு பொய் என்று தெரியாது ஆனால் இதில் ரசமாகப் பிழிந்து எடுத்த ஒரு 10% எடுத்துக் கொண்டால் மிக நேர்த்தியாக மிக உன்னதமாக ஆட்சி புரிந்திருக்கிறார்கள் மன்னர்கள் என்பது தெரிய வருகிறது வாழ்க உங்கள் தமிழ் தொண்டு வளர்க உங்களுடைய தனிப்பட்ட வாழ்வு

  • @sunenthad6683
    @sunenthad6683 Před rokem +14

    எனக்கு 21 வயது ஆகிறது ஆனால் எனக்கு இப்பொழுது தான் சோழ தேசத்தின் வரலாரை கேட்கனும் என்று நினைத்தேன் கேட்டது மெய் சிலிர்ந்து விட்டது🥰🥰🥰🥰

  • @estherjeba6296
    @estherjeba6296 Před rokem +63

    12 வருடங்களுக்கு முன்னர் நான் முதலில் படித்த தமிழ் புத்தகம் பொன்னியின் செல்வன். அற்புதமான புத்தகம். அந்த அற்புத படைப்பை அப்படியே கண்முன் காட்சிப்படுத்தி விட்டீர்கள். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய அற்புதமான நூற்படைப்பு. மிகவும் அரியதொரு முயற்சி நண்பரே.. வாழ்த்துகள்✨ தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க்கச் செய்கிறது

  • @UngalAnban
    @UngalAnban Před rokem +1949

    இதற்காக எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள்! வாழ்த்துக்கள் நண்பா! ♥

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Před rokem +51

    ஆகப்பெரிய முயற்சி!
    குரல் பதிவில் இக்கதையை கேட்ட போது ஒவ்வொரு காட்சியும் மனத்திரையில் தெளிவாக பிரதிபலிக்கிறது.
    பாண்டியர்களின் கதையையும் கேட்க ஆவலாக உள்ளேன்.
    நன்றி!

  • @rasurasu9099
    @rasurasu9099 Před rokem +20

    தெரிந்தவர்களிடம் இருந்து கற்றவை தெரியாதவர்களிடம் கொண்டு செல்வதற்கு ஒரு மனம் வேண்டும் அந்த மனதை மனதார வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் சகோ

  • @nasarabhishortschannel3887
    @nasarabhishortschannel3887 Před rokem +149

    மனப்பூர்வமா சொல்றேன் இந்த கதையா கேட்க மூன்று நாட்கள் ஆனது 😭😭😭 உங்கள நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஏனென்றால் இந்தக் கதையை சொல்வதற்கு நீங்கள் எவ்வளவு கடின உழைப்பு செழித்து இருக்க வேண்டும் என்று நினைத்து. 😢நான் படிக்க இயலாத இந்த கதையை கேட்டு மகிழ்கிறேன் இதற்கு காரணம் நீ 🥰🥰🥰. I love this voice ❤️❤️❤️. நீங்கள் கதையை படித்து முடித்த பிறகும் ஐயோ முடிந்துவிட்டது என்ற நினைப்பில் சந்தோஷம் ஒருபுறம் துக்கம் மறுபுறம்.

    • @lmohan8919
      @lmohan8919 Před rokem +2

      நானும் அப்படி தான் நினைத்தேன் ...நண்பா

    • @suriyam7658
      @suriyam7658 Před rokem +1

      Enku 6days Achu..

    • @rabiyabegem1053
      @rabiyabegem1053 Před rokem +1

      Thipan maruthu nayagam vantum

  • @VijayKumar-cp5gu
    @VijayKumar-cp5gu Před rokem +54

    மெய் சிலிர்க்கிறது. கதை மட்டுமல்ல உங்களின் குரலும்தான் 😍

  • @gowsigankg6877
    @gowsigankg6877 Před rokem +12

    நண்பா நீங்கள் யார் என்று தெரியாது ஆனால் உங்களின் கர்ச்சீக்கும் குரலால் நாம் சோழ தேச வரலாட்டறை கேட்டும் பொழுது என் உடல் மெய் சிலுர்த்து விட்டது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻👍🏻👍🏻

  • @AKBUILDERS
    @AKBUILDERS Před rokem +2

    அன்பு நண்பரே பொன்னியின் செல்வன் கதையை மூன்று முறை படித்து விட்டேன், மற்றும் யூடியூப் சேனலில் பலரது குரல்களின் வழியாக கதைகளை கேட்டு விட்டேன், ஆனால் உங்கள் குரல் வழியாக கேட்கும்போது சில இடங்களில் கண்ணீரும் சில இடங்களில் சிலிர்ப்பும் வந்தது மிக்க நன்றி உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்

  • @ganeshthedon6367
    @ganeshthedon6367 Před rokem +2429

    யாரெல்லாம் பொன்னியின் செல்வம் படம் பார்த்துவிட்டு இந்த கதை கேட்க ஆசைப்பட்டீர்கள். அதில் நானும் ஒருவர்..

  • @sivaprabhakar3743
    @sivaprabhakar3743 Před rokem +281

    உங்களின் குரலில் பொன்னியின் செல்வன் புதினத்தை கேட்க விரும்பியவர்களில் நானூம் ஒருவன் உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும் அந்த குரல் அந்த சத்தம் எப்பொழுதும் தமிழுக்காக தமிழர்களுக்காக ஒலிக்க வேண்டும் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @s.g.sgaming2820
    @s.g.sgaming2820 Před rokem +137

    பொன்னியின் செல்வனின் கதையை முழுமையாக நம் தமிழர்களுக்கு தெளிவாக புரியும்படி கூறினீர்கள் உங்களுக்கு என்னுடைய வீர வணக்கம்

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 Před rokem

      தமிழரின் உண்மை வரலாற்றை படியுங்கள் காவியத்தையும் கற்பனையும் நம்பி உண்மை தமிழரின் வரலாற்றை தவறாக புரிந்து கொள்ளாதீர்.

  • @nimalbosco2506
    @nimalbosco2506 Před rokem +14

    பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த உணர்வை தந்தமைக்கு நன்றி ❤️ வாழ்த்துக்கள் 🎉🎊

  • @vidhyapalanisamy
    @vidhyapalanisamy Před rokem +208

    எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன்.. அவ்வளவு அழகான காவியத்தை அனைவரும் அறிய வேண்டும் என்று மிகுந்த சிரதை எடுத்து அதை படமாகவும் குரல் வடிவிலும் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்... ஆனால் எல்லோருக்கும் சொல்கிறேன் பொன்னியின் செல்வன் நாவல் வாசிப்பதை போன்று ஒரு இனிமையான அனுபவம் வேறு எதுவும் இல்லை... தயவு செய்து அனைவரும் அந்த புத்தகத்தை தேடி பிடித்து வாசியுங்கள்.. வாழ்க்கையில் ஒரு அற்புதமான அனுபவம் பொன்னியின் செல்வனோடு நாம் செலவிடும் நேரம்...

    • @nagarajanravi84
      @nagarajanravi84 Před rokem +1

      Nh😂

    • @user-uq3dc7fh5t
      @user-uq3dc7fh5t Před rokem +2

      I am also Read two times .

    • @vijivenkatesh7786
      @vijivenkatesh7786 Před rokem +1

      உண்மை.கல்கியின் கதையை வர்ணிப்பதை,பார்ப்பதைவிட படிப்பதுதான் ultimate இன்பம்.நம் கற்பனை உலகிற்கு எல்லை ஏது. நான் நான்காம் முறை படிக்கிறேன்.அதுவும் கல்கியில் 98ல் வாரா வாரம் வந்து கொண்டிருந்ததை எடுத்துவைத்து bind பண்ணியது.முக்கியமாக பத்மாவாசன் ஓவியங்கள்(வினுவிற்க்கு அடுத்து) சொற்களுக்கு அப்பாற்பட்டது.அது ஒரு கோலாகல அனுபவம்.Benhur,10 commandments,bahubali போன்ற directors ப்ரம்மாண்டத்தை /graphics ஐக் காட்டமுடியுமே தவிர அதன் அடிநாதமான உணர்வுகளை கொண்டுவரமுடியாது.

    • @kalaiyarasirajasekaran7321
      @kalaiyarasirajasekaran7321 Před rokem +3

      Yes,reading is Different from watching சினிமா
      கல்கி கல்கிதான்!
      ஆனாலும் மணிரத்னத்தின்
      கடினமான பணி மிகவும் பாராட்டத்தக்கது👌💐💐👏👏

    • @estherjeba6296
      @estherjeba6296 Před rokem

      ஆம். நிச்சயமாக

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +103

    இதுவரை அனைத்து பாகங்களையும் தனித்தனியாக பார்த்துவிட்டேன் 😁😁😁. இனி ஒரே தடவையில் அனைத்து பாகங்களையும் காணப் போகிறேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது 😇❤️❤️👍. உங்கள் குரல்வளம் தான் இதில் சிறப்பு 😍❤️👍.

  • @sathishthiya9356
    @sathishthiya9356 Před rokem +14

    நான் காலேஜ் படிக்கும் போது 5 பகுதிகளும் படித்தேன் பொன்னியின் செல்வன் ஆனால் கடல்புறா 2 part தான் படித்தேன், இன்று மறுபடியும் பொன்னியின் செல்வனை கண்முன்னே கொண்டுவந்தமைக்கு நன்றி 🙏🙏

  • @nithinrocks1976
    @nithinrocks1976 Před rokem +24

    உங்கள் குரலில் ponniyin செல்வன் கேக்க மிகவும் அருமையாக இருந்ததது.. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒன்று ... நம் மண்ணின் கதை... வீரம் மிகுந்த வரலாறு....

  • @suryadoss-22
    @suryadoss-22 Před rokem +2

    இவ்வளவு அழகான குரலில் பொன்னியின் செல்வன் நாவலைக் கேட்கும் மெய் சிலிர்க்கிறது......
    வாழ்த்துக்கள் நண்பா......❤️😍💐💐💐💐

  • @vipereditz17
    @vipereditz17 Před rokem +27

    உங்களுடைய இந்த முயற்சிக்கு மிகுந்த பாராட்டுகள்.....💥💥💥💥

  • @anglersforttackleshop3712

    முதலில் மிக்க நன்றி உங்கள் குழுவிற்கு,
    வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய தொடரை, உங்கள் குரலில் மூலமாக மிக எளிய முறையில் தமிழ் ஆர்வலர்களுக்கு தந்தமைக்கு
    உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்பர்களே 🙏🙏 வாழ்க தமிழ் 🙏🙏
    🙏🙏வெல்க தமிழ்🙏🙏

  • @krishpirakan188
    @krishpirakan188 Před rokem +1

    அண்ணா நான் ps1 பார்க்கவில்லை ஆனால் ps2 படம் பார்த்தேன்...அந்த படத்தின் தாக்கம்...முழு கதையும் கேட்கவேண்டும் என்று பார்த்த போது உங்களின் காணொளி எனக்கு சிறப்பாக அமைந்தது..உங்களின் குரல் கண்னை மூடாமல் கேட்டால் கூட கதையை உருவகப்படுத்த முடிகின்றது.....வாழ்துகள் இந்த காணொளி உங்களுக்கு பார்வையாளர் கண்க்கில் இன்னும் அதிகமாக இருக்க❤💐💐💐💐

  • @villagecooking4349
    @villagecooking4349 Před rokem +3

    அருமை நண்பரே இப்படி நான் தொடர்ந்து 6மணி நேரம் கைபேசி என் கையில் வைத்தது இல்லை

  • @chitravenkatesan5576
    @chitravenkatesan5576 Před rokem +7

    உங்களுக்கு எப்படி நன்றி செல்வது என்று தெரிய வில்லை சாகோதர நீங்கள் என்றும் வாழ்க வளமுடன் சாகாதரா

  • @tamilculture3242
    @tamilculture3242 Před rokem +13

    உமது குரலுக்கு யாம் அடிமை நண்பா இப்பயணம் மேலும் தொடர எம் மனம் கனிந்த வாழ்த்துக்கள்💐 இன்னும் பல வரலாற்று ப‌தீவுகளுக்கு காத்திருக்கின்றேன் தமிழன் பெருமை தெரிந்துக்கொள்ள.❤

  • @youtu547
    @youtu547 Před rokem +3

    இவ்வளவு முயற்சி செய்து இந்த பதிவை படைத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன்💐💐💐

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan Před rokem +109

    ஆடி திங்கள் 18 என்பது காவேரி கரையில் வாழ்கிற மக்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா. இன்றும் நாங்கள் கொண்டாடி வருகிறோம்.

    • @huntershikhari2729
      @huntershikhari2729 Před rokem

      என்ன திருவிழா? 🤔

    • @deepamohan5417
      @deepamohan5417 Před rokem

      @@huntershikhari2729 aadi perukku, pathinettam thirunaal epadi ellam kodaduvom neerukaga vila edukum naal

    • @Prasanthjj1828
      @Prasanthjj1828 Před rokem +1

      Aadi 18

    • @shripiya
      @shripiya Před rokem

      Padinettam perukku.. a special festival celebrated by people living near riverbeds

    • @vetrivelan4111
      @vetrivelan4111 Před rokem

      உழவர் திருநாள் காவேரி கரையில் தே கு வே திருநாள்

  • @KK-hm2yg
    @KK-hm2yg Před rokem +60

    மாபெரும் படைப்பை வழங்கிய கல்கிக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @manickams2146
    @manickams2146 Před rokem +1

    என் சிறு வயதில் நான் கல்கி புத்தகத்தில பொன்னியின் செல்வன் சரித்திர தொடர் படித்து இருக்கிறேன் தற்பொழுது என் வயது 57_58 ( 29.10.2022 ) இந்த நாவல் இப்படி கேட்கும் அளவிற்கு பதிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி!

  • @Manikandan-rc1ul
    @Manikandan-rc1ul Před rokem +4

    6.42.57. முழு கதை கேட்டேன் மிக சிறப்பு ஒவ்வொரு நிமிஷம் அதிர வைக்கிற உங்களுடைய குரல் அருமை அண்ணா

  • @udhai3335
    @udhai3335 Před rokem +134

    நண்பரே நான் இந்த கல்கியின் பொன்னியன் செல்வனுக்கு அடிமை...... எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத காவியம்.... என் மனதில் நின்ற காவியம்...இதனை இவ்வளவு அழகாக.... சொல்லி என்னை கற்பனையில் மூழ்க வைத்த உங்களுக்கு எனது nandri

    • @sakthii472
      @sakthii472 Před rokem +3

      நீங்கள் கூறியதை கேட்கும்போது இந்த நாவலை கேட்க அசைய இருக்கு 🔥❤️

    • @mathisingarajah626
      @mathisingarajah626 Před rokem

      நன்றி

    • @isgamersis895
      @isgamersis895 Před rokem

      ​@@mathisingarajah626 aq1

  • @shakebogan1463
    @shakebogan1463 Před rokem +20

    சிறப்பான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள்..!! உங்கள் உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைத்தே தீரும்...!!!🔥🔥🙏

  • @rajilakshmi4086
    @rajilakshmi4086 Před rokem +1

    நல்ல குரல் வளம் கேட்கும் போதே கண் முன் காட்சி தெரிந்தது சூப்பர் சூப்பர் ப்ரதர்

  • @vkmmediavision9519
    @vkmmediavision9519 Před rokem +9

    கடல் புறா நாவலை உங்கள் குரலில் தாருங்கள்........ வாழ்த்துக்கள்.........

  • @jothichandrika841
    @jothichandrika841 Před rokem +7

    மிகவும் அருமை. சிறந்த பேச்சு நடை. வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @thalatharani6609
    @thalatharani6609 Před rokem +34

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க தஞ்சை பெருவுடையார் கோயில் வளர்க இராஜராஜ சோழர் தேவர் புகழ் 🙏

  • @saijames819
    @saijames819 Před rokem +4

    அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த பதிவின் மூலம் பொன்னியன் செல்வன் முழு கதையும் காதார கேட்டுக் கொண்டேன் உங்கள் இந்த பதிவுக்கான முயற்சியையும் சிரமத்தையும் பாராட்டக்கூடியது

  • @saipallavi599
    @saipallavi599 Před rokem +3

    அறிந்தேன் உன்னால் பொன்னியின் செல்வனை பெற்றேன் உன்னால் பெறும் மகிழ்ச்சியினை 😍😍

  • @sindhun1363
    @sindhun1363 Před rokem +9

    Already two times book la padichutan..most loving this story me. But two days spent pani unga voice la en imagination ketan. Toooo happy thank you so much nxt I want SIVAGAMI Sabadham egarly waiting

  • @sujithasuresh3272
    @sujithasuresh3272 Před rokem +5

    மிகவும் அருமை உங்கள் குரல்.
    மேலும் நீங்க சொல்லும் போது கதையின் சுவரசியம் மிகவும் அதிகமாகின்றது. மேலும் மேலும் கதை கேட்க ஆர்வம் அதிகமானது. பொன்னியின் செல்வன் மிகவும் பழமைவாயிந்த கதை அதை மிக அழகாக புதுபித்து கூறுவதுபோல் இருந்தது உங்கள் அருமையான மொழி எம் தமிழ் மொழி....

  • @pchelvi1975
    @pchelvi1975 Před 2 měsíci

    சொல்ல வார்த்தை இல்லை...., மொழி செம்மையும், தோய்வற்ற குரலும் தங்கள் தமிழ் மீது கொண்ட பற்றின் ஆழம் புரிகின்றது, வாழ்த்துகள் கோடி.....❤❤❤❤❤

  • @kalaivanan9728
    @kalaivanan9728 Před rokem +1

    மிக்க அருமை நண்பா இதனை உருவாக்க மிக கடினமாக உழைத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது

  • @sampathmani9287
    @sampathmani9287 Před rokem +7

    உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது, இருந்தாலும் கோடான கோடி நன்றிகள்

  • @sinethsineth5138
    @sinethsineth5138 Před rokem +189

    சோழர் வரலாரை கேட்க்கும் போது உடம்பு சிலிர்த்து போகின்றது ❤️❤️

    • @meenu3400
      @meenu3400 Před rokem

      Ethu imagine story than varalaru ella

    • @CCA_GAMING
      @CCA_GAMING Před rokem

      @@meenu3400 yaru pa sonna un imagine thn edhu real o fake o unaku enna nee time mission la poie pakala la appo un imagine na neeya keep it no comments ok 🤨

    • @nathiyasubash8007
      @nathiyasubash8007 Před rokem

      @@CCA_GAMING ne time mission pathiya ithu oru karpanai kadhai

    • @happy.tummy08
      @happy.tummy08 Před rokem

      ​@@CCA_GAMING ivlo muttala irukingha kalvettula Ella unmaighalaiyum eluthivechittu poyirukangha cholarghal summa yaarum kalki matiri istatirku karpanai kathai eluthala!!! Neengha unmaiyana tamilana itunthal vekka padanum!!!!

  • @balaramanpattabhiraman2375

    மிகவும் அருமை பொன்னியின் செல்வன் நாவலை உங்கள் நாவால் பேசி நளினம் மிகு எழுச்சிமிகு ஏற்ற தாழ்வு போல் அழகாக பேசி அனைவரும் மனதிலும் நின்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க

  • @kovaiheros1014
    @kovaiheros1014 Před rokem +1

    உங்கள் குரல் அருமையாக இருக்கின்றது எனக்கு உங்கள் குரலை மகாபாரதம் ராமாயணம் கேட்கணும் என்று ஆசையாக இருக்கிறது தயவு செய்து அதையும் உங்கள்பதிவு போட வேண்டும்

  • @ramadevekrishnasaamy2190

    தங்களின் சிறப்பு தொகுப்பபிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻

  • @geetha7916
    @geetha7916 Před rokem +22

    நிச்சயமாக சோழ நாட்டிற்கு சென்று விடுவோம் தோழா இப்பொழுது பார்க்கும் தஞ்சையை விட சோழ நாடாய் பார்க்க விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன் சோழ நாட்டிற்கு செல்வோம் என்னருமை. தீபாவந்தியதேவனே.உங்கள் பாணியில் சொல்லப்போனால்........ .........................தமிழுக்கும் என் அருமை தீபாவந்திய தேவனுக்கும் வணக்கம்🙏🙏🙏

  • @vallinadesan1005
    @vallinadesan1005 Před rokem +6

    அண்ணா மிகவும் அருமை... புத்தகத்தில் கதையாக படித்திருந்தாலும்... படத்தை பார்த்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்காது... நன்றி 🙏🙏

  • @karthickphotography.
    @karthickphotography. Před rokem +4

    Intha kathai thaan Naan padithathu Aanaal PS1 movie la neraya miss aairuchu , Book la padichutu intha voice over la kekkumbothu innum nalla irukku Thanks for this Voice Deep talks Tamil....

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 Před rokem +9

    அருமை..... அருமை.... அருமை.... ஒரு நிமிடம் கூட விடாமல் கேட்டேன். உங்களுடைய முயற்சிக்கும், உழைப்புக்கும் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள்....

  • @sampath8630
    @sampath8630 Před rokem +8

    மதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றும் அது உங்கள் குரலில் அருமையிலும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @rubiniram9385
    @rubiniram9385 Před rokem +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை...ராஜ ராஜ சோழன் என்று கூறும் போது உடல் சிலிர்த்து விட்டது...சோழ தேசத்தில் பயணித்தது போல் இருந்தது.....🔥🔥🔥🔥🔥..

  • @sathishkumarb5207
    @sathishkumarb5207 Před rokem +6

    கேட்க தொடங்கியது முதல் தொடர்ச்சியாக கேட்டு முடித்தேன். இடையில் நிறுத்த தோன்றவே இல்லை. நீங்கள் மறைத்து வைத்து அவிழ்த்த ஒவ்வொரு சுவாரஸ்யங்களும் கண்முன்னே தோன்றி மறைந்தது.... மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா

  • @ragaventhiran
    @ragaventhiran Před rokem +7

    Your voice is so super 🥰🥰உங்கள் பயணம் தொடரட்டும் 🙏🙏

  • @priyajp8870
    @priyajp8870 Před rokem +1

    அண்ணா... எனக்கு ரொம்ப சந்தஷமாக இருந்தது... நீங்கள் சொல்லிய விதம் அருமையாக இருந்தது... கதையே முழுமையாக கேட்க மூன்று நாள் ஆனது.. ரசித்து ரசித்து கெட்டுகொண்டிருந்தேன்... வியபாக உள்ளது... நானும் ஒரு தமிழச்சி யென்று சொல்வதில் பெருமையடைகிறேன்..

  • @thiyagug2568
    @thiyagug2568 Před rokem

    உங்களிடம் இருந்து இக்கதையை கேட்ட பிறகு பாடம் பார்த்தேன் மிகவும் சிறப்பாக இருந்தது கதையும் புரிந்தது நன்றி சகோதரோ🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarb5207
    @sathishkumarb5207 Před rokem +5

    நண்பா நீங்கள் கூறிய கதை கண் நிஜமான முன்னே சோழர் குலத்தை காட்டியது. மிகவும் அருமையான பணி. மிகுந்த நன்றி...

  • @kalidosskali8015
    @kalidosskali8015 Před rokem +53

    நன்றி என்று ஒரு வார்த்தையில் உங்களுடைய அர்ப்பணிப்பை அடக்கிவிட முடியாது, இப்படி வீரத்தோடு வாழ்ந்த பரம்பரையில் வந்த இளம் தலைமுறையினர் தற்போது மதுவிற்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமை ஆவதை நினைத்தால் வேதனையாக உள்ளது

    • @romalia9017
      @romalia9017 Před rokem +2

      ஆமாம் வருத்தமாக உள்ளது🙏

  • @bernaclement2799
    @bernaclement2799 Před rokem +1

    சுருக்கித்தந்தாயா? இல்லையில்லை, கதையை முழுமையாக அழகாக சொல்லிவிட்டாய், அருமை, அருமை, உன் தமிழ்ப்பற்று, தமிழ்ப்புலமை வாழ்க, வளர்க, உன்னைப்போல் சிலர் இருக்கும்வரை தமிழ்வாழும்

  • @meena-hu3js
    @meena-hu3js Před rokem +2

    அழகான குரலில் அழகான தமிழ்... அருமையாக தமிழ் காவியத்தை உரைத்தீர்கள் 🔥 நன்றி நண்பா 🙏👍😍😍

  • @mahatv4987
    @mahatv4987 Před rokem +3

    I am listening this story while traveling from Bangalore to Pondy. Really amazing voice and I feel as convert to chola world. Thank bro and we'll excellent work.

  • @CJ-cr9nk
    @CJ-cr9nk Před rokem +5

    மிகவும் அருமையான விளக்கம்.👌🏼👌🏼👌🏼 மிகவும் தெளிவான உச்சரிப்பு மற்றும் அழகான குரல். 👌🏼👌🏼👌🏼
    நான் மிகவும் விரும்பி அடிக்கடி கேட்டதால் 5:38:54 யில் நந்தினி ஆதித்ய கரிகாலனை கொள்ளமாட்டேன் என்பதற்கு பதில் வீர பாண்டியனை என்று சொல்லி உள்ளீர்கள். நான் இதை பிழையாக சொல்லவில்லை. தவறாக நினைக்கவேண்டாம். உங்களின் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த
    வாழ்த்துக்கள்... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @stephensonraj2074
    @stephensonraj2074 Před rokem +1

    5:38:50 oru mistake pannirikkinga but your work excellent…..
    உங்களின் மூலமாக நான் சோழ தேசம் சென்று வந்தேன் மிகவும் மகிழ்ச்சி

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před rokem +2

    படம் பார்த்ததை விட அதிக சுவராசியம் நிறைந்திருக்கிறது..அருமை...

  • @sheshreya2313
    @sheshreya2313 Před rokem +3

    சகோதரரே... அருமை யான குரல் வளம்... கொண்டு உள்ளீர்கள்.... தெளிவான ... தைரியமான... உச்சரிப்பு... நன்றி

  • @ponnuchamyk9442
    @ponnuchamyk9442 Před rokem +7

    வாழ்க வானவர்குல வல்லத்து வந்தியத்தேவன். என்னை மாபெரும் சோகத்தில் ஆழ்த்தியது என் வீரன் ஆதித்த கரிகாலன் மற்றும் அறியாத பெண் மணிமேகலையின் இறப்பும் தான்

  • @gysbaskar7984
    @gysbaskar7984 Před rokem +1

    மிகவும் சிறப்பு அண்ணா. யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் இரத்தின சுருக்கமாக பொன்னியின் செல்வனை நகர்த்தி சென்றமை எல்லோரது மனதையும் அத்துடன் உங்களின் உச்சரிப்பு எங்கள் செவிகளையும் வேறோர் உலகிற்கே இழுத்து சென்று விட்டது.உங்கள் சேவை மென்மேலும் வளர்க.வாழ்த்துகள்.

  • @ramanisrinith615
    @ramanisrinith615 Před rokem +1

    தங்கள் குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு அறுமை. வாழ்த்துகள் அன்பரே. எவ்வளவு மெனக்கெட்டு இந்த பதிவை எடுத்திருக்கிறீர்கள். நன்றி

  • @revathyp3379
    @revathyp3379 Před rokem +10

    Amazed by your fast and accurate narration..hats off to your hard work..I first hesitated to watch as it was 6 hrs hut after I started hearing I couldn't stop..narrated as exactly in the ponniyin selvan book ...so many people have told this story but yours is perfect...other people had said totally different..❤

  • @hemish2014
    @hemish2014 Před rokem +21

    ஒரு dislike கூட இல்ல, இத பாக்கும் போதே தெரியுது, தமிழரின் வரலாறு சாதாரணமானது அல்ல 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @vennilaindhra9684
    @vennilaindhra9684 Před rokem

    Thankyou so much for this story... whole day I heard your voice only such a amazing voice and story .

  • @psivakarthik5436
    @psivakarthik5436 Před rokem +1

    தங்களின் குரலில் பொன்னியின் செல்வன் புனித நூல் கதை கேட்பது மிக சிறப்பாக உள்ளது நண்பா நன்றி

  • @deepiharshan8333
    @deepiharshan8333 Před rokem +3

    intha 15 days ah intha stry ya ktrukan ...unmaya chola desathukey poitan...ungaloda voice rompa arumai anna🔥yetho manasukula vera maari feel vanthuduchu...atha epdi veli paduthuruthunu theriyala🔥
    hats off anna...🔥
    evlovo youtube channel paathurukan bt intha channel enaku kudutha feel vera entha channel m kudukala 😍realy time machine irntha chola desatha nerla pakkanum nu asaya thoondivittiteega anna 😭😭😭

  • @ramachandransi3667
    @ramachandransi3667 Před rokem +5

    நான் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன் எனக்கு வயது 57.நான் பல புத்தகங்களை படித்து உள்ளேன் சில நாவல்களையும் படித்துள்ளேன் ஆனால் பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் இதுவரை படிக்கவில்லை. youtube இல் வந்த இந்த ஆடியோ முழுவதும் மூன்று நாட்களாக கேட்டேன். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாவல்கள் வாசிக்கும் பழக்கம் உள்ள எனக்கு அதே போன்ற உணர்வை ஏற்படுத்தியது.மேலும் நாளை வரப்போகிற மணிரத்தினம் அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் பார்க்கவும் இந்த ஆடியோ உறுதுணையாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி தெளிவான குரலில் அழகான வர்ணனை
    நன்றி |நன்றி !நன்றி!

  • @priyapanti2714
    @priyapanti2714 Před rokem

    உங்கள் உழைப்பிற்கு என்னுடைய நன்றிகள் நண்பரே கதையை படித்து உள்ளேன் உங்களது குரலில் கதையை கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது நாண்பா பார்த்திபன் கனவு நாவல் வேண்டும் நண்பரே ❤❤❤❤❤❤

  • @subhachinnu5283
    @subhachinnu5283 Před rokem +1

    மிகவும் அழகாக தெளிவாக இக்கதையை கூறியுள்ள தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @ramyav399
    @ramyav399 Před rokem +8

    கேட்க கேட்க ஆர்வத்தை தூண்டும் அற்புத படைப்பு....

  • @Wonderlightstudios
    @Wonderlightstudios Před rokem +3

    வேல்பாரி கதையும் முழுமையாக கொடுங்கள்🙏🏻🙏🏻plssss

  • @yuvaraj4427
    @yuvaraj4427 Před rokem +1

    நண்பா வேல்பாரி வரலாறு, உங்கள் குரலில் கேட்க்க காத்திருக்கிறோம்.

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z Před rokem +1

    மிகவும் சிறப்பாக நேர்த்தியாக கதையை சொல்லியுள்ளீர்கள் நல்வாழ்த்துக்கள் உடன்பிறப்பே வாழ்கவளமுடன்.

  • @divakarm5996
    @divakarm5996 Před rokem +14

    அருமையான குரல் கொடுத்து பொண்ணின் செல்வனை புதுப்பித்து இருக்கின்றீர்கள் ❤️ அருமை நண்பா 🔥

  • @deepiharshan8333
    @deepiharshan8333 Před rokem +5

    movie today realese aga poguthu...na intha nerathu full stry ktu mudichutan..vera lvl feel ..and climax 🔥🔥🔥unmayil vadhiya dhevan and Arulmozhi varman great....nalaiku evg screen la paaka poran 😍excited ah irku realy 🙈

  • @kumaresankumaresan43
    @kumaresankumaresan43 Před rokem +1

    இன்றைய சூழலை பொறுத்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு படிக்க நேரம் இல்லாதபொழுது இதுபோன்ற ஒலி பேழையாக தாங்கள் பதிவேற்றிய தங்களை நவீன சின்னக் கல்கி என என்னத் தோன்றுகிறது. தங்கள் முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் .இதுபோன்று சாண்டில்யன் அவர்கள் புனிதங்களையும் பதிவேற்றினால் தமிழ் இனம் உள்ளவரை உங்களை மறக்காது. நன்றி.

  • @dvasanthi60
    @dvasanthi60 Před rokem +1

    பொன்னியின் செல்வன் புதினத்தில் கதை எவ்வளவு சிறப்போ அவ்வளவு சிறப்பாக தங்கள் வர்ணனை உள்ளது

  • @kavi8289
    @kavi8289 Před rokem +46

    எங்கள் வரலாற்றை அறிய சோழ வம்சத்தில் ஒருவன் சோழனின் சொர்க்க பூமி தஞ்சையிலிருந்து.....

  • @bhuvaneswarir7353
    @bhuvaneswarir7353 Před rokem +21

    Thanks for bringing this story with such clarity and presented to us with full emotions. Appreciate your efforts.

  • @kavinkavin3078
    @kavinkavin3078 Před rokem +3

    இந்த வரலாற்றை விட நீங்கள் 6.42.57 மணி நேரம் கூறியதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது நண்பா
    நன்றி!!!

  • @seenivasanv7585
    @seenivasanv7585 Před rokem

    மிகவும் சிறப்பு.பொன்னியின் செல்வன் நாவலைஉங்கள் குரலில் கேட்டுக்கொண்டிருப்பது பெரும்மகிழ்ச்சி.உங்களுக்கு என்னுடையநன்றியும்,வாழ்த்துக்களும்.💐💐💐💐💐💐💐தம்பி.

  • @u.balasubramaniamumaioruba6629

    படம் பார்ததைவிட கதை கேட்டது சுகமான அனுபவமாக இருந்தது.
    சிவகாமியின் சபதத்தையும் இது போன்று சொன்னால் பலரும் விரும்புவர்.

  • @shobaannetony8
    @shobaannetony8 Před rokem +5

    Thank u so very much...I was listening to this with so much awe n trust me for the solid 6hrs 43mins..thank u bro..god bless u n ur zeal in future narration

  • @praveenprabhu2553
    @praveenprabhu2553 Před rokem +1

    Bro ungalala nencha romba proud ahh irukku bro பொன்னியின் செல்வனில் வருகின்ற 5 பாகங்களையும் அருமையாக சொல்லி விட்டிர்கள் யாம் சோழ தேசம் நோக்கி பயணிதுவிட்டோம்

  • @xerusriaz6402
    @xerusriaz6402 Před rokem +4

    Bro vera level....but ending la suruki sollirukan nu sollringa....apo details neraya iruka bro.....but I love this story....
    My mind full goes on, Karthi, vikram, Jayamravi , trisha , aishu, and so on.....vera level explanation bro

  • @sidhu.c748
    @sidhu.c748 Před rokem +128

    எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் வீரம் சொரிந்து நிற்கும் இந்த பொன்னியின் செல்வனின் வரலாறு....40 உண்மை 60 கற்பனையானாலும் அருமை.....

    • @r.gomathir.gomathi7508
      @r.gomathir.gomathi7508 Před rokem +1

      V f

    • @alwinsingarayer5852
      @alwinsingarayer5852 Před rokem +2

      கல்கியின் கற்பனையில்கூட ஒரு தமிழ் அரசனோ , வீரனோ வாழ் எடுத்துச் சண்டை போடவில்லை . எல்லாம் காதல் , வஞ்சனை , போட்டி , பொறாமை பழிவாங்குதல். தன் எண்ணத்தை மிக நன்றா௧க் கதைவிட்டிருக்கிறார் கல்கி.

    • @sidhu.c748
      @sidhu.c748 Před rokem +6

      @@alwinsingarayer5852 'நண்பா'இந்தக் கதையும் காவியமும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் சோழர்களின் வரலாறு அல்ல வரலாறு வேறு கதை காவியங்கள் வேறு சோழரின் வரலாற்றை ஏன் தமிழ் மன்னர்களின் வரலாற்றை ஒரு புத்தகத்திலோ காவியத்திலோ ஏன் திரைக்கதைகளிலோ கூற முடியாது ஏனென்றால் அது வரலாறு. வரலாறு வேறு கதை காவியங்கள் திரைப்படங்கள் வேறு இது தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் நன்றி 'நண்பா' .🙏🙏

    • @nallapaiyan219
      @nallapaiyan219 Před rokem

      Epppothi natyvc et mal eub avv jnd eh van th m a ksm a k v

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 Před rokem

      ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் 60% கற்பனை என்றீர்கள் அதினுள் தமிழர்களுக்கு எதிரான வில்லங்கம் இருக்கிறதா என்று பார்க்கவும்

  • @palanivelrajan1965
    @palanivelrajan1965 Před rokem +1

    6மணி நேரம் 43 நிமிடம் இந்த கதையை பொறுமையாக சொள்ளியதற்கு மிக்க நன்றி கதை முழுவதும் கேட்டேன் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @mogum2988
    @mogum2988 Před rokem +8

    ஆறு மணி நேரம் கதை கேட்க முடியாமல் கமெண்ட் பார்க்க வந்த வர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ☝️😇😜

  • @shanthisjkarusuvaisamaiyal9994

    பொன்னியின் செல்வன் நாவலை நான் பல வருடங்களுக்கு முன்பு வசித்து இருக்கிறேன் ஆனாலும் இப்பொழுது உங்கள் குரல் மூலம் கேட்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது சகோதரி நன்றி

  • @elizabethsharoni754
    @elizabethsharoni754 Před rokem +24

    It was my long wish to read Ponniyin Selvan.. But u made it happen with your beautiful pronunciation of Tamizh.. Hats off to ur great work and ur voice reflects ur Patriotism to Tamizh.. Thank you for making it happen 🙏🙏