அரசராக இருந்து ஆழ்வாராக மாறிய குலசேகரர் தெய்வீக வரலாறு

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2024
  • குலசேகரர் - ஒரு சக்தி வாய்ந்த மன்னர், ஆழ்வார், மற்றும் மகான். இந்த வீடியோவில், அவர் எப்படி ஒரு வீர மன்னரிலிருந்து பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்து, பெருமாள் திருமொழி என்ற அழகிய பாசுரங்களைப் பாடி ஆழ்வாராக மாறினார் என்பதைப் பார்ப்போம். மேலும், 'குலசேகர படி' என்ற பெயர் எப்படி வந்தது என்றும் தெரிந்துகொள்வோம்.
    #பக்தி #ஆன்மிகம் #வரலாறு #திருப்பதி #ஆலயம்
    **********************
    தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Komentáře • 8

  • @bhuvanasenthilkumar4020
    @bhuvanasenthilkumar4020 Před 3 měsíci +3

    குலசேகர வரலாற்றை பாடல் வரிகளுடன் அருமையாக அழகான முறையில் விளக்கியதற்கு நன்றி ஐயா

    • @Komugam
      @Komugam  Před 3 měsíci +1

      உங்கள் கனிவான வார்த்தைக்கு மிக்க நன்றி!

    • @vasudevan1082
      @vasudevan1082 Před 3 měsíci +1

      💐💐💐🙏🙏🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 3 měsíci +2

      அருமையான பதிவு ஐயா இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமை தோறும் நானும் பூஜை அறையில் சொல்லிக்கொண்டிருக்கிறேன் உண்மையிலேயே அருமையான ஆன்மீக பதிவு உங்கள் ஆன்மீகப் பணி மேலும் மேலும் தொடர வேண்டும் மக்கள் நலம் பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா ஓம் நமோ நாராயணாய நமஹ❤😊🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Komugam
      @Komugam  Před 3 měsíci +1

      உங்கள் அன்பான கருத்திற்கு மனமார்ந்த நன்றி. பாசுரம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. ஆன்மீக பணியைத் தொடரவும், மக்களுக்கு நன்மை செய்யவும் உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன. ஓம் நமோ நாராயணாய! 🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 3 měsíci +1

      @@Komugam ❤😊🙌

  • @meenakshi1515
    @meenakshi1515 Před 2 měsíci +1

    Komugam என்ற வார்த்தை அழகாக உள்ளது. இதன் அர்த்தத்தை சமிபத்தில் தான் தெரிந்து கொண்டேன். தாங்கள் இந்த வார்த்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ஐயா?

    • @Komugam
      @Komugam  Před 17 dny

      என் பெயரின் காரணம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு மிக்க நன்றி!
      எனது இயற்பெயர் கோ. சண்முகம். 1990-2000 காலகட்டத்தில் பூஜை இல்லாமல் இருந்த சில பழமையான சிவாலயங்களுக்குச் சென்று அங்குப் பிரதோஷ பூஜையை அறிமுகப்படுத்தினேன்.
      இதன் மூலம் கிராம மக்களை ஒன்றுபடுத்தி பிரதோஷ பூஜையைச் செய்ய வைத்தேன். பின்னர் கிராம மக்கள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். இன்றும் அந்த சிவாலயங்களில் சிறப்பாகப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
      எனது தொண்டிற்காக முன்னாள் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துத் தலைவர் முனைவர் திரு வை. ரத்தினசபாபதி அவர்களால் எனக்கு "கோமுகம்" என்ற பெயர் வழங்கப்பட்டது. அவர் விளக்கியபடி, அபிஷேகம் செய்த புனித நீர் வராமல் கிடந்த கோமுகங்களில் புனித நீர் வரச் செய்த தொண்டிற்காக எனக்கு அந்த பெயர் வழங்கப்பட்டது.
      "கோ. சண்முகம்" என்ற பெயரில் "கோ" மற்றும் "முகம்" என்ற சொற்கள் உள்ளன. இவ்விரண்டையும் இணைத்து "கோமுகம்" என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதி அழைத்தார். இதனை சமய அமைப்புகளும், அடியார்களும் ஏற்றுக் கொண்டு, அன்றிலிருந்து என்னை "கோமுகம்" என்று அழைத்து வருகின்றனர்.