"KANGALIRANDUM"("கண்களிரண்டும்")~THIRUVASAKAM ~SUNG BY SRI Pa.SARGURUNATHAN.

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2023
  • ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்.
    049 . திருப்படையாட்சி.
    (தில்லையில் அருளியது.)
    [ திருப்படையாட்சி : இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மை.]
    சிறப்பு : "சீவோபாதி ஒழிதல்".
    பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
    திருச்சிற்றம்பலம்.
    கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
    காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
    மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
    மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
    பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே
    பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே
    விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
    மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே. 1.
    ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பறு மாகாதே
    உன்னடி யார்அடி யார்அடி யோமென உய்ந்தன வாகாதே
    கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
    காரண மாகும் அனாதி குணங்கள் கருத்துறு மாகாதே
    நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
    நாமுமெ லாம்அடி யாருட னேசெல நண்ணுது மாகாதே
    என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
    ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 2.
    பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
    பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
    அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
    ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
    செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
    சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே
    இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர் ஏகுவ தாகாதே
    என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே. 3.
    என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
    எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
    நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
    நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
    மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
    மாமறை யும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
    இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
    என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. 4.
    மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
    வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
    கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
    காதல்செ யும்அடி யார்மனம் இன்று களித்திடு மாகாதே
    பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே
    பேரறி யாத அநேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
    எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
    என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. 5.
    பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
    பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
    மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே
    வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
    தன்னடி யார்அடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
    தானடி யோம்உட னேஉய வந்து தலைப்படு மாகாதே
    இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
    என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 6.
    சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
    துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே
    பல்லியல் பாய பரப்பற வந்த பராபர மாகாதே
    பண்டறி யாதப ராநுப வங்கள் பரந்தெழு மாகாதே
    வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
    விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
    எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
    இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே. 7.
    சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
    சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
    அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
    ஆசைஎ லாம்அடி யாரடி யோம்எனும் அத்தனை யாகாதே
    செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
    சீரடி யார்கள் சிவாநு பவங்கள் தெரிந்திடு மாகாதே
    எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
    ஈறறி யாமறை யோன்எனை ஆள எழுந்தரு ளப்பெறிலே. 8.
    திருச்சிற்றம்பலம்.

Komentáře • 97

  • @licharimf
    @licharimf Před 6 měsíci +9

    திருச்சிற்றம்பலம் அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் பெருமானுக்கு நித்தமும் நியமமும் தவறாது பண்ணிசை யால் குளிர்விக்கும் பெருந்தவத்தோரே பெருந்தகையோரே எங்கள் குருநாதர் உயர்திரு மயிலை சற்குரு ஓதுவார் மூர்த்திகள் ஐயா மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙏🙏🙏🌷🌷🌹🌹🌹💐💐💐

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před 6 měsíci

      👌👍🙏

    • @SathyaSaravanan401
      @SathyaSaravanan401 Před 4 měsíci +1

    • @ramasubramaniangurumurthy3273
      @ramasubramaniangurumurthy3273 Před 3 měsíci +1

      திருச்சிற்றம்பலம். அருள்மிகு கற்பகாம்பாள் கபாலீச்சரர் அருளால் திருமுறை ‌பண்ணிசை‌ ஓதும் திருவாளர் ஓதுவார் மூர்த்தி அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். ‌சிறக்க நின் திருப்பணி. ‌ஓம் நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 Před 3 měsíci +5

    🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺☘️☘️☘️☘️☘️ திருச்சிற்றம்பலம்🙏 ஐயா அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🌺ஐயா தாங்கள் இவ்வளவு அருமையான குரல்வளம் பெற்றிருப்பது தாங்கள் செய்த பாக்கியம் உங்கள் குரலில் பாடல்கள் கேட்கும் போது உலகையே மறக்கும் அளவிற்கு உள்ளது🙏 முழுக்க சிந்தையில் எம்பெருமான் சிவன் மட்டுமே தோன்றுகிறார் அவ்வளவு அருமையாக உள்ளது🙏🌺 மென்மேலும் தாங்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் கருணையினால் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க தங்கள் திருவடி பணிந்து வேண்டுகிறேன்🙏 சிவாயநம🙏🌺

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 12 dny +1

    ஆஹா!
    ஆஹா! என்ன ஓர் இனிமையான குரல் வளம்! தாங்கள் மனம் உருகிப் பாடியதோடு எங்கள் மனதையும் உருக செய்ததை என்னென்று சொல்வேன்! திருவடிகளுக்கு வணக்கம்!

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před 12 dny

      @@user-wp8st4wv9u
      திரு.சற்குருநாதன் அவர்கள் குரலினிமையின் தனிச்சிறப்பே அதுதான்.
      நன்றி, வணக்கம். 🙏🙏

  • @vilvanathanmanickam553
    @vilvanathanmanickam553 Před 9 měsíci +6

    நானும் தங்களைப் போல குரல் வளம் அடைய அருள் தருவாய் போற்றி. ஓம் நமசிவாய

    • @maniansivamani1810
      @maniansivamani1810 Před 9 měsíci

      தினமும் அதிகாலை 4மணிக்கு எழுந்து ஒருடம்பலர்சுடுநீர் அருந்திவிட்டு பதிகம் பாடுங்கள் ,குரல்மாறிவரும்பாடுவதற்கு தகுந்த படி.திருச்சிற்றம்பலம்.

  • @veluppilaisivamoorthy2337

    ஐய்யா உங்களின் குரல் மிகவும் அருமை உங்களுக்கு நிகர் நீங்கள் தான்

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před 26 dny

      👌உண்மை...,
      மயிலை திரு.சற்குருநாதன் அவர்களின் குரலினிமையே தனிச் சிறப்புதான். ஈடில்லா குரலிசை.
      நன்றி.

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Před měsícem +1

    Mesmerizing 🎉❤voice kha அரசே!!வாழ்க!!வளர்க!!இவ்வையகம் உள்ள மட்டும் ஈசனின் ஆர்அமுதே!!❤🎉

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 12 dny +1

    பதிகங்களை பலர் பாடும் பொழுது இடைச் செருகலாக சிவ நாமங்களை சொல்வார்கள்! ஆனால் தாங்களோ பதிகத்தை மட்டும் இனிமையாக அற்புதமாக பாடி அகம்மகிழச் செய்தீர்கள். நன்றி அதற்கு மட்டுமா! பொன்னார் மேனியன், அழல் வண்ணன். செய்யன், பவள வண்ணர் என்றெல்லாம் போற்றப்படும் எம்பெருமானை பலரும் நீல வண்ணத்தில் பதிவிட்டு தவறு செய்வது போல் இல்லாமல் செம்மேனி எம்மனாகக் காட்டியிருப்பது பேரானந்தம் அளிக்கிறது! தங்களை எவ்வாறு பாராட்டுவது என்று தெரியாமல் திகைக்கிறேன்! மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
    "சிவநெறி திருத்தொண்டர்"(90)

  • @swaminathanv5733
    @swaminathanv5733 Před 3 měsíci +2

    பாடும் பணியே பணியாய் அருள்வாய். நல்ல குரலிசை இனிமை இனிமை. ஆண்டவன் அருள் பரி பூரணமாய் கிட்டும். வாழ்க பல்லாண்டு

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Před měsícem +1

    🎉❤Good Afternoon valthukal God’s blessings Then Thuliekal Arputham Arumaiejana Alakaka na Siva sakthi song kedkum pothu ieraievan neriel ierupathu pola ierukerathu valthukal palandu valka valarka valamudan valthukal Ieraievan Theruvarul kiediethu
    Valka valarka valamudan valthukal nanriekal vanakam

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před 5 měsíci +3

    சிவனைக் காண பேச அனுபவிக்க கேட்க வேண்டிய பதிவு.இனிமை.இனிமை.அற்புதம்

  • @sakthivelnatarajan3236
    @sakthivelnatarajan3236 Před 11 měsíci +3

    சற்குருநாதர் ஓதுவார் அவர்களின் குரல்
    தேனில் பதிகத்தை கலந்து நம் மேல் தெளிப்பது போல் உணர்கிறேன் ❤️❤️🎉🌺🌺🌺🌹
    சிவசிவ 🌹🙏🙏🙏

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před 11 měsíci

      மகிழ்ச்சி, நன்றி. 🙏🙏🙏

    • @maniansivamani1810
      @maniansivamani1810 Před 9 měsíci +1

      ஆண்பெண்கலந்தகுரல் .நான் 7வருடத்திற்குமுன் வள்ளலார்படத்தில் இவரின்பாடல்வரும் அதுபெண்குரல்என்றேகனித்தேன்.பிறகுகோவைபேரூரில்மடத்தில்நேரில்தரிசனம்கிடைத்தது.ஓஇவர்குரலோஎன்று.எங்களுக்குவகுப்புஆரம்பிக்கவந்தார்.

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před 9 měsíci

      @@maniansivamani1810
      👌👍🙏🙏🙏

  • @user-qr5ej1mb3q
    @user-qr5ej1mb3q Před 2 měsíci +1

    Every day l hear your songs is very nice. God bless you 🙏

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya Před měsícem +1

    🎉 OM Namasivaya.

  • @rajeshwarir.9074
    @rajeshwarir.9074 Před 7 měsíci +3

    What a blessing! God is felt so close listening to
    it.

  • @user-fo4hd5nm3t
    @user-fo4hd5nm3t Před 8 měsíci +3

    11am மனம் நிம்மதியாக உள்ளது உங்களுடைய பாட்டைக் கேட்ட தும் ஓம் நமசிவாய

  • @annapooranik1967
    @annapooranik1967 Před rokem +4

    அருமை ஐயா அருமை நன்றி ஸார் நன்றி

  • @muthusamysolaivadivel6805

    சிவாய நம் மிகமிக நன்று

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Před 4 měsíci +1

    🎉❤Good afternoon valthukal god’s blessings satgunanathan Ieja Then iesaie ieraievan neriel vanthu Theruvarul Arulum Asiejum Arulum kiediethu valka valarka valamudan palandu valka valarka valamudan valthukal kedpatharku ieraievan Thunaie ieruparaka kaparuvaraka Sweet voice Excellent beautiful Great valthukal nanriekal vanakam Thenamum kedka vendum ieraievan Thunaie ieruparaka kaparuvaraka Thank you so much for your Theruvasakam Theruvadiekal saranam om Namasivaja om saranam sivasakthe om saranam nanriekal vanakam 🎉❤

  • @mahasathishmahasathish4566

    🙏🙏🙏om sivaya nama

  • @vijayandoraiswamy4980
    @vijayandoraiswamy4980 Před rokem +5

    Melting song God bless you

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 10 měsíci +2

    ஓம் நமசிவாய.
    அருமை அருமை.
    நல்ல குரல் வளம்.
    வாழ்த்துக்கள்.

  • @sarojamurugan1964
    @sarojamurugan1964 Před rokem +2

    Thiruchitrambalam Thiruchitrambalam Omnamashivaya
    Miha arumai ayya

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e Před 2 měsíci +1

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @vilvanathanmanickam553
    @vilvanathanmanickam553 Před 9 měsíci +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 Před rokem +3

    Om namah shivaya 🙏🙏🙏

  • @user-qm3qg9dz6d
    @user-qm3qg9dz6d Před 8 měsíci +2

    Kallal vilunthu aasirvatham peravendum🙏🙏

  • @sakthivelnatarajan3236
    @sakthivelnatarajan3236 Před 11 měsíci +2

    சிவசிவ 🌹🌹🌹🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Před rokem +3

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 Před 7 měsíci +2

    Om namasivaya sivaya namaka

  • @rajs4567
    @rajs4567 Před rokem +2

    ஓம் செம் பொண்ணம்பலம் திருவம்பலம்

  • @BrakuviBrow
    @BrakuviBrow Před 4 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 Před rokem +2

    🎶🎶🎶🎶🎶🎶🎶very sweet melodies voice 😍😊🙏🙏🙏🙏🙏🙏🙏thank you

  • @devasenapathykp6497
    @devasenapathykp6497 Před 8 měsíci +2

    🙏🙏

  • @rajuraju4585
    @rajuraju4585 Před 10 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.p2647
    @s.p2647 Před 7 měsíci +2

    ARPUTHAM

  • @sgomathisundari4207
    @sgomathisundari4207 Před 10 měsíci +2

    🙏🙏🙏

  • @ramiahramamoorthy4233
    @ramiahramamoorthy4233 Před 7 měsíci +1

    Excellent

  • @parihishpillai7361
    @parihishpillai7361 Před 5 měsíci +1

    ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @sooryakannan9089
    @sooryakannan9089 Před 4 měsíci +1

    ஆஹா! எத்தனை ஆனந்தம் தரும் திருவாசகம் இது . பொருளை உன்னித்து கவனிக்கும்போது பேரானந்தம் வருகின்றது .திரு சற்குதண நாத ஓதுவார் ஐயாவுக்கு வந்தனங்கள் . நன்றிகள் பல . 🙏🙏

  • @kawaii__5656
    @kawaii__5656 Před 3 měsíci +1

    அய்யாவின் குரல் வளம் எம் பெருமானின் கருணை வெள்ளம்
    எம் பெருமானின் செல்ல பிள்ளையோ
    உண்மை என்ன தெரியுமா பொறாமையாக உள்ளது
    அய்யாவிற்கு எம்பெருமானே கண்படாமல் பார்த்துக்கொள்வார்
    நமசிவாய

  • @user-jn4dq8te5d
    @user-jn4dq8te5d Před 5 měsíci +1

    ஓம் நமசிவாயசிவயநம்ஓம் திருச்சிற்றம்பலம் ஈசா போற்றி

  • @nagarajanvaidyanathan2681
    @nagarajanvaidyanathan2681 Před 8 měsíci

    the singer is brahmasri Pudhuvai Sambandam gurukkal.

  • @gowrivaidyanathan6522
    @gowrivaidyanathan6522 Před rokem +2

    ஓம் நமசிவாய.🙏

  • @ramallingam7275
    @ramallingam7275 Před 9 měsíci +2

    🙏