வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது பாடல் | Varthayil adangathu song | G.Ramanathan .

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #tamilsongs #lovesongs #romantic #sad #sivaji #padmini #oldsongs
    வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது பாடல் | Varthayil adangathu song | G.Ramanathan .
    Movie : Chitor Rani Padmini
    Music : G. Ramanathan
    Starring : Sivaji Ganesan, Vyjayanthimala
    Song : Varthayil adangathu varnikka mudiyathu

Komentáře • 274

  • @babus4523
    @babus4523 Před 2 měsíci +21

    என்ன அய்யா இது இசை கற்று அறிந்த மேதை போன்று நடிகர் திலகதின் அபிநயம் வாய் அசைவுகள் என்ன சொல்வது அவர் நடித்த படம் பார்த்து மகிந்த காலம் பொற்காலம் வாழ்க அவர் புகழ்

  • @user-fk8qn1mo5i
    @user-fk8qn1mo5i Před 3 měsíci +26

    முதன்முறையாக கேட்கிறேன் இந்த அற்புதமான பாடலை

  • @CVRajan-Writer
    @CVRajan-Writer Před 3 měsíci +26

    எத்தனையோ பழைய பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால், இந்த ஒரு பாட்டை ஒரு தடவை கூடக் கேட்ட நினைவே இல்லை! சீர்காழியின் பாட்டும், வைஜயந்திமாலாவின் ஆட்டமும் பிரமிக்க வைத்தன. ஜி ராமனாதனின் சங்கீதப் புலமை எத்தனை ஆழம்!

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Před 3 měsíci +16

    உட்கார்ந்த இடத்தில் இவ்வளவு முக பாவனை சிவாஜி அவர்களை தவிர யாரல் காட்டமுடியும்?❤❤

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 Před 4 měsíci +18

    அடேயப்பா! மூச்சு விடாமல் எப்படி பாடியுள்ளார் சீர்காழி! தெய்வ வரம் பெற்றவர்களால்தான் இப்படிப் பாட முடியும். இப்படி நடிக்க முடியும்.

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 Před 3 měsíci +16

    நன்றி. இது போன்ற இயல், இசை, நாட்டியம் நடிக‌ர் திலகத்தின் நடிப்பு நிகரற்றது. இப்பாடலில் பங்கு கொண்ட அனைவரு‌ம் எ‌த்தனை காலங்களை கடந்தாலும் நம்மோடு ஜீவித் துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் புகழ் ஓங்குக. நன்றி.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Před měsícem

      ஆமாம். திறமைசாலிகளின் சங்கம் இப்பாடல்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 7 měsíci +114

    இசை மேதை G.ராமநாதனைத்தவிர வேறு ஒருவராலும் சுரங்கள் நிறைந்த இது போன்ற பாடலை அமைத்திருக்க முடியாது. சீர்காழி ஒரு இசை வித்தகர். அசர வைத்து விட்டார். நடிகர் திலகம் சங்கீதத்தை கரைத்து குடித்தவர் போல வாயசைப்பையும் உடலசைவையும் காட்டி நடித்துள்ளதைக் கண்ட பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை. வைஜயந்தி தன் நடனத் திறமையை முழுவதையும் காட்டிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு நடனம் ஆடியுள்ளார். அக்காலத்தில் சுப்புடு என்பவர் இது போன்ற சங்கீத சங்கதிகளுக்கும் நாட்டிய அபிநய சிறப்புகளையும் வர்ணிக்கவும் விமர்சிக்கவும் வல்லவராக திகழ்ந்தார். அவர் இந்த பாடலுக்கும் காட்சிக்கும் விமர்சனம் அளித்தாரா என்று தெரியவில்லை. ஆக மொத்தம் இந்த பாடலும் காட்சியும் கலைச் செழிப்பு மிகுந்த கலைப் பொக்கிஷம்.

    • @vaseer453
      @vaseer453 Před 7 měsíci +9

      நல்ல ரசனையுடன் கூடிய விமர்சனம்.நன்றி.
      ராஜமனோகரன்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 7 měsíci +2

      @@vaseer453 நன்றி சார்

    • @ravinadasen1156
      @ravinadasen1156 Před 7 měsíci +3

      NICE

    • @KumarKumar-cs3sf
      @KumarKumar-cs3sf Před 6 měsíci +5

      Very nice song.Sivaji acting is best.

    • @vaseer453
      @vaseer453 Před 6 měsíci +5

      ஆஹா.அக்கால சுப்புடு பல்லில்லாமல் இருந்தார். அழகான பல் வரிசையுடன் இப்போது கனடாவில் வசிக்கும் சுப்புடுவான நீங்களும் ஒரு தேர்ந்த விமர்சகராகிவிட்டது குறித்து மெத்த மகழ்ச்சி. 👌👌
      ராஜ மனோகரன்

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 Před 2 měsíci +13

    இது வரை இந்த காவியத்தை நான் கேட்டது இல்லை. ரொம்ப நன்றி.

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 Před 4 měsíci +26

    மிக்க நன்றி, நான் 50 ஆண்டுகள் பார்த்து ரசிக்கும் வாய்ப்பை தவறிவிட்டேன். தங்களின் இந்த பாடல்களுக்கு பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்🎉,

  • @ramanankrishnaswamy2132
    @ramanankrishnaswamy2132 Před 4 měsíci +24

    இதுவரை இவ்வளவு சிறந்த நாட்டியப்பாடலை கேட்காமல்இருந்து விட்டேனே!

  • @prabakarans1972
    @prabakarans1972 Před 7 měsíci +33

    சீர்காழியின்கணீர்குரல் இசையோ தேன்.சிவாஜி வைஜெயந்திமாலா நாட்டியம் நடிப்பு அடடா இதுஅல்லவோ கலை!

  • @GanesanDEARVMVSWEETSLIKEHONEY
    @GanesanDEARVMVSWEETSLIKEHONEY Před 5 měsíci +35

    உலக நடிகர்களுக்கு ஒரு சவால் இந்த ஒரு பாட்டுக்கு சிவாஜி போல் எவனாவது நடிக்கமுடியுமா?

  • @madhurabhashinisundaram5078
    @madhurabhashinisundaram5078 Před 5 měsíci +22

    வைஜெயந்தி மாலா நாட்டியம் மிஞ்சியது சிவாஜி கணேசன் முகபாவனை.
    சுபாஷ் சரியான பொருத்தம்.
    கண்களுக்கு இனிய விருந்து .

    • @jamaludain6709
      @jamaludain6709 Před dnem

      அது தான் நடிகர் திலகம்...

  • @madhwasthathvavatha281
    @madhwasthathvavatha281 Před 3 měsíci +12

    ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான பாடல். இதை பதிவிட்டவர்க்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள். சீர்காழி அவர் களுக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 7 měsíci +44

    சீர்காழி கோவிந்தராஜன்…தெய்வீகமான …மனதிற்கு மகிழ்வூட்டும் மதுரமான குரல்வளம். …இந்த குரலை கேட்டுக்கொண்டிருந்தாலே போதும்.
    ஜி ராமநாதன் …இசைமேதையின் இனிமையான இந்த இன்னிசைக்கு ஈடு இணையில்லை. ..இசைக்கென்றே பிறந்தவர். ..
    கு.ம.பாலசுப்ரமணியம்…தமிழ் தவழும் தேன் சொட்டும் வரிகள். அற்புதமான வர்ணணை வார்த்தைகள். நம்மை ஈர்த்த வரிகள் வைஜயந்திமாலாவை வசியப்படுத்தி நடிகர்திலகத்தின் பால் இணைத்து விட்டதில் வியப்பென்ன…
    சிவாஜி கணேசன் …த த்ரூபமான முகபாவங்கள். ..பரவசப்படுத்துகின்றன. …வார்த்தைகளுக்கு கனகச்சிதமாக பொருந்தும் வாயசைவிற்கு சபாஷ் …சபாஷ்
    பொருத்தமான பட்டம் ..நடிகர்களுக்கே திலகம். ..
    வைஜயந்திமாலா..பரதநாட்டியம் போன்ற நாட்டியக்கலையில் வல்லவர். ..நளினமான உடல் அசைவுகள்…நாட்டிய முத்திரைகள். …பார்க்கும் அனைவரையும் கவரந்து இழுக்கும் வல்லமை…இந்த நாட்டியத்தை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். …கண்ணும் கண்ணும் கலந்து …பாடலுக்கான இவரது நடனத்தை …மறக்க முடியுமா….
    முதல்முறை கேட்கும் …பிரபலமாகாத பாடல். ..கேட்க கேட்க பிரபலமாகி விடும்…
    “ கலைமகள் நீ ஆடும் ஆடலுக்கே தாளம் போட்டுக்கொண்டிருந்தாலே போதும். …”. கவின்மிகு வரிகள். …
    பாடலின் பிற்பகுதியில் ச ரி க ம ப த நி ச….ச நி த ப ம க ரி ச ….அற்புதமான ஸ்வரமாலை….பாடலை மிளிரச்செய்யும் கர்நாடக இசை..ஆனந்தம்.
    விமர்சனம் செய்ய வார்த்தையில் அடங்காத …வர்ணிக்கமுடியாத பாடல். ….
    இனிமையான பதிவிற்கு நன்றி் .நன்றி …🙏

    • @sankaranarayananramabadran1413
      @sankaranarayananramabadran1413 Před 3 měsíci +2

      G.R has squeezed Sirkali to the maximum extent.. The Director of the film instigated Sivaji and Vaijayanthi to exhibit talents amazingly !

  • @indirasrinivasan4858
    @indirasrinivasan4858 Před 6 měsíci +23

    பார்த்துக் கொண்டு கேட்டுக்கொண்டிருந்தான் போதும்😊

  • @user-nh8ej1fl5s
    @user-nh8ej1fl5s Před 5 dny

    அற்புதமான குரலில் ஐயா சீர்காழியின் கனிர் குரலில் மிக அற்புதமான சுரங்களில் பாடப்பட்ட இந்த பாடல் ரொம்ப ரொம்ப அருமை

  • @arumugampk
    @arumugampk Před 7 měsíci +22

    I saw this movie in 1975 May in Ponnu Cinema Bodinayakkanur. மீண்டும் மீண்டும் பாடி பார்த்த வரிகள் " பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்" ஏனென்றால் அப்படிப் பட்ட வயசு. ஓரிரு முறை இலங்கை வானொலியில் ' திரை தந்த இசை' நிகழ்ச்சியில் கேட்டிருக்கிறேன். காலப் போக்கில் புதைந்து போனது. கர்நாடக சங்கீதத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் ஜி. இராமநாதனும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் தேனும் பாலும் கலந்தது போல் ஆயிற்று - இது காதுகளுக்கு இன்பம். கண்களுக்கு இன்பம் - நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பும் சந்தங்களை உச்சரிக்கும் விதமும் ஆடலரசி வைஜெயந்திமாலா அவர்களின் நடனமும் முக பாவங்களும் கண்களும் காதுகளும் இப்பாடல் காட்சியைப் பார்த்து ரசிக்கும் பொழுது மனதிற்கு இன்பம்.
    Hard work, punctuality and dedication of Nadigar Thilagam is the result to give an output like this. Sirgazhi has challenged and Nadigar Thilagam has brought out the best and Vaijayanthi once again proves she is not second rank in her dance movements and facial expression very much synching with the song. Really difficult song and the whole team has to be congratulated for the excellent output

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 7 měsíci +2

      Thank you for your very rich comments Arumugam Sir.

    • @lotus4867
      @lotus4867 Před 6 měsíci +3

      மறுக்கமுடியாத உண்மை , மறக்கமுடியாத பாடல் (வரிகள்+இசை+குரல்வளம்)/ நடனம்/ நடிப்பு .
      மறைக்கப்பட்டிருந்ததே இத்தனை நாட்கள்.திரைப்படத்தின் பெயர் வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
      மிகச்சிறந்த காட்சியினை பகிர்ந்ததற்கு நன்றிகள் உமக்கு .

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 6 měsíci +4

      @@lotus4867 படம்: சித்தூர் ராணி பத்மினி, அன்பரே.

    • @user-vp2yc4zn4r
      @user-vp2yc4zn4r Před 6 měsíci +2

      Very very critical analisis of the song and dance.one more to mention is lipsink of sivaji in all kaalapramanams and the மிருதங்கம் and veenaaplayer sitting behind Sivaji. Film Chithur Raani Padmini. 1960..65

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 Před 3 měsíci

      அருமை சார், வணக்கம் . நானும் போடி தான் மகிழ்ச்சி😊

  • @selvamurugan4312
    @selvamurugan4312 Před 5 měsíci +12

    அருமையான இனிய ஆதி கால பாடல்
    சிறந்த படைப்பு
    சிறந்த நடிப்பு
    சிறந்த ஆடல்
    சிறந்த பாடகர்
    மொத்தத்தில் உச்சத்தில் உச்சம்.

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Před 6 měsíci +30

    I am 73. Nadigar thilakam Sivaji's craziest Fan. I am hearing this song first times. Thanks 🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 6 měsíci +1

      Astounding Acting by Sivaji GaNesan - especially for that Lengthy, Racy Swaraa rendition phase in the Final segment. He was not a professionally trained Carnatic music singer. Still, he came out with flying colours. None could come even at a distance to Sivaji's calibre, especially in the Song Sequences. Brilliant dancing by Vaijayanthi Mala and Brilliant Singing by Seerkazhi.

    • @alranga53
      @alranga53 Před 5 měsíci +2

      Same here . I am 70 and hearing this song for the first time....!!!! What a great voice....!!!

    • @begingardener275
      @begingardener275 Před 3 měsíci

      I'm older & crazier - hearing for the first time too.

    • @venkatachalamraju4486
      @venkatachalamraju4486 Před 2 měsíci

      Me too 72 ​@@alranga53

    • @muthuswamyvaidyalingam5036
      @muthuswamyvaidyalingam5036 Před 2 měsíci

      சரளமாக ஸ்வரங்கள் ஏற்ற இறக்கத்தோடு கால ப்ரமானத்தோடு நடிகர் திலகத்தின் வாயசைப்பு! ஓ! எப்படி வர்ணிக்க ! ஆஹா அற்புதம்! சீர்காழியின் இனிமையான கம்பீரக்குரல் மிகப்ரமாதம்!

  • @ashokanp7536
    @ashokanp7536 Před 6 měsíci +24

    தங்கத்தமிழனின் தன்னிகரற்ற காலத்தால் அழியாத பொக்கிஷம் ஆகா என்ன அருமை இவர்கள் முன்னே நாம் எல்லாம் ஒரு பார்வையாளர்கள் மட்டுமே இவர்கள் புகழ் பூமியில் நிலைத்திருக்க வேண்டும் நன்றி

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Před 6 měsíci +22

    எங்கே மறைத்து வைத்துள்ளது. புதையலை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Před měsícem

      பொருத்தமான வார்த்தைகள்

  • @user-nh8ej1fl5s
    @user-nh8ej1fl5s Před 5 dny

    அற்புதமான பாடல் சீர்காழியின் கேகே

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 7 měsíci +27

    இந்த பாடலை முதன் முதல் பார்க்கிறேன் சிவாஜி நடிப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை T.M.S பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன்

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 6 měsíci +1

      BRILLIANT

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 Před 4 měsíci +1

      Yes.
      சீர்காழி கோவிந்தராஜன் sir குரல்
      தனி த்துவம் வாய்ந்ததே
      ஆனாலும்
      சிவாஜி sir கு TMS குரல் தான்100% பொருந்தும் என்பதுஅனைவரும் அறிந்த உண்மை.

  • @rangachariraghavan1660
    @rangachariraghavan1660 Před 8 měsíci +31

    மாமேதை ஜி.ராமநாதனின் இசை என்னை எங்கேயோ கொண்டுசென்று விட்டது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் உள்ளத்தைத் தொட்டது.நடிகர் திலகம் மற்றும் வைஜயந்திமாலா அவர்களைப் பற்றி என்ன சொல்வது?கர்நாடக இசை என்றும் உள்ளத்தை வெல்வது.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před 7 měsíci

      பாடலை கேட்கும் போது தோன்றிய உங்கள் எண்ண வரைவாக உள்ளது உங்கள் பதிவு... அருமை....

  • @viswanathann3830
    @viswanathann3830 Před 6 dny

    தில்லானா மோகனாம்பாள் படத்தின் முன்னோட்டம். அருமை. எந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் பாடவில்லை.

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Před 3 měsíci +8

    இசை மேதை ஜி. ராமநாதன்,
    இசை மேதை சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் இணைந்து இசை மழையில் நனைய வைத்து விட்டார்கள்!!
    உண்மையிலே, மழையில் நனைந்த உணர்வு வந்தது!!
    அபூர்வமான பாடல்!!
    இசை ஞானம் உள்ளவர்கள் அனைவரும் நிச்சயமாக கேட்க வேண்டும்!!
    பாடகர் டாக்டர். திரு.. ராராயணன் அவர்கள் இந்த பாடலை கேட்கும் படி தெரிய படுத்தவும்!!

    • @ramakittukittu6823
      @ramakittukittu6823 Před 2 měsíci

      இன்னொரு Sivaji மற்றும் வைஜெயந்தி காண முடியுமா இந்த காலத்தில்?? சீர்காழி குரல் வளம் ரீங்காரம் செய்கிறது. இதுவரை இந்த பாடலை மிஸ் pannadhukku வருந்துகிறேன்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 6 měsíci +21

    அழகான தமிழ் ச் சொல்லில் இனிதாக அமைந்த இசை நயம்
    அருமையான காட்சி.
    அத்தனையும் அசத்தல்.
    நாட்டிய தாரகை வைஜயந்தி மாலாவின் எழில் நடனமும்
    இசைமணி சீர்காழியின் குரலிலும்
    நடிகர் திலகத்தின் அழகான பாவமும்
    ஊன்றும் மறக்க முடியாத அழகு.
    நன்றி.

  • @ramachandrarao4442
    @ramachandrarao4442 Před 2 měsíci +3

    இந்த நாட்டிய இசை பாடலின் படத்தின் பெயரைக் கூறவும் இத்தகைய பாடலை வழங்க யாராவது இருப்பார்களா
    சத்தியமாக இல்லை அருமை❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Před 3 měsíci +5

    சிவாஜி சார்❤❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 7 měsíci +11

    ஆமாம்.. சீர்காழி கோவிந்தராஜன் குரலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வார்த்தையில் அடங்காத.. வர்ணிக்க முடியாத நாட்டிய ராணி.. நடன தேவதை நம் தமிழ் மண் இந்திய திரையுலகத்திற்கு தந்த அழகு ராணி
    வைஜயந்தி மாலாவை கொண்டாடிய பாடல் ... நான்கு வகையான பெண்ணழகில் இடம் பிடித்த பெண்ணழகு நடனமாட ஜதி யோடு இசை ராகம் தந்த ராமநாதன்... கச்சேரி மேடையில் அமராமல் ஒலிப்பதிவு கூடத்தில் கர்நாடக ராக கச்சேரி பாடிய சிம்மகுரலோன் சீர்காழி கோவிந்தராஜன்..

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 7 měsíci +1

      தங்கள் பதிவு சத்தானது. நன்றி சபாபதி சார்.

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 Před 6 měsíci +9

    இந்த பாடலில் உள்ளதை போலவே இருமலர்கள் திரைப்படத்தில் வரும் மாதவி பொன்மயிலால் தோகைவிரித்தாள் பாடலை அமைத்தார்கள் போலும்
    கருஒன்று கற்பனையாளர் எண்ணில் அடங்காத பார்வை

    • @user-vp2yc4zn4r
      @user-vp2yc4zn4r Před 6 měsíci

      வைஜெயந்தி ஆடி.யது அசல்.

  • @user-nd3ft5bh1p
    @user-nd3ft5bh1p Před 14 dny

    சித்தூர் ராணி பத்மினி _அருமை 👌

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 Před 2 měsíci +4

    முதல் முறையாக இந்த பாடல் கேட்கிறேன்

  • @alranga53
    @alranga53 Před 5 měsíci +7

    கர்நாடக இசை தெரியாமலேயே ஸ்வரங்களுக்கு அக்ஷர சுத்தமாக வாய் அசைக்கும் நடிகர் எங்கள் திலகம் மட்டுமே.....வேறு எந்த நடிகருக்காவது close up shot il இது போல நடிக்க தைரியம் உண்டா ....!!!!

    • @subramanianr3996
      @subramanianr3996 Před 4 měsíci +2

      யாரும் கிடையாது. திலகம் திலகந்தான். மாற்று கருத்து ஏது ?

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Před měsícem

      இணையற்ற நடிப்பு! பல்கலைக்கழகம். பிறவிக் கலைஞன்!

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Před 3 měsíci +6

    இலங்கை‌ வானொலி என்று ஒரு நிறுவனம் மட்டும் சேயல் படாமல் இருந்திருந்தால் நாம் பல திரைபட பாடல்களை அறிந்திருகாகவே மாட்டோம்

  • @ganapathyswaminathan2963

    The first super classic music director of Tamil movies Shri .G. Ramanathan. His one of the gems, this classic song. Great.

  • @sivalingam2176
    @sivalingam2176 Před 5 měsíci +10

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🎉
    "பார்த்துக் கொண்டிருந்தால்
    போதும்! 🎉🎉🎉🎉🎉
    👌 சூப்பர் அருமையான பாடல்🎉🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
    " நன்றி🙏💕🎉🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před 6 měsíci +5

    வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது இந்தப் பாடல் வைஜயந்திமாலா அவர்களின் துல்லியமான நடன அசைவுகளும் அழகும் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு இசையமைப்பு இதில் எதைச் சொல்ல பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் பாராட்டக்கள் எனது ராயல் சல்யூட்டுகள் இது எந்தப் படம் இதர விபரங்களைச் சொல்லக தவறான பாடல்களே தஞ்சமென்று அலையும் கூட்டங்களை நலவழிப்படுத்துங்கள் சூப்பர நன்றி

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 Před 3 měsíci +2

    அடடா என்ன ஒரு நயமான நடனம் என்ன ஒரு அழகான பாடல் .கண்ணுக்கும் காதுக்கும் விருந்து ever green padal ,ever green actors excellant singer அனுபவித்து கேட்க்க வேறு என்ன வேண்டும்

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Před 7 měsíci +13

    அருமை. அருமை.
    சீர்காழியாரின் குரலில்
    ஸ்வரப்பிரஸ்தாரங்கள்
    பிர்காக்கள், வியக்கவைக்கிறது
    இனிய பாடல் . சிறப்பான காட்சியமைப்பு !👍⚖️

  • @sitaramanseshaiya7998
    @sitaramanseshaiya7998 Před 6 měsíci +7

    அற்புதமான புதையல்...ஆனந்தமாக இருந்தது...

  • @poornimakt1771
    @poornimakt1771 Před 2 měsíci +3

    வார்த்தையில் வர்ணிக்க முடியாத ஒரு பிரபலமாகாத காவியம்!

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 4 měsíci +5

    அருமையான பாடல்

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 Před 4 měsíci +4

    அனைத்தும் வெகு சிறப்பு யாரை புகழ்வது யாரை விடுவது அனைத்தும் சிறப்பு எவ்வளவு பாராட்டினாலும்தகும் நன்றி நன்றி

  • @kumaraselvangowtham4747
    @kumaraselvangowtham4747 Před 3 měsíci +4

    காலத்தால்அழியாதகானம்

  • @parvathi312
    @parvathi312 Před 3 měsíci +3

    My God. No words to appreciate. Very divine singing,acting and dancing above all what a composition .no words to express

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 9 dny

    சீர்காழி கோவிந்தராஜன் +நடிகர் திலகம் ...G. ராமநாதன் நிகழ்த்திய அற்புதம் 👌👌❤❤.வைஜயந்தி மாலாவின் அற்புதமான அழகும், நடனமும் பார்த்து கொண்டே இருக்கலாம் 💖💖.

  • @mathanmohanmangalakumar6437
    @mathanmohanmangalakumar6437 Před měsícem +1

    இசைத்தட்டில் பாரத்துக்கொண்டிருந்தாலே போதும் என்றுதான் இந்த பாடல் ஆரம்பமாகும்.

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z Před 4 měsíci +5

    Greatest actor in the world 😊❤

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 Před 3 měsíci +5

    சீர்காழி கோவிந்தராஜன் பற்றி ஏன் மறந்தீர்கள்.எவ்வளவு அருமையாக பாடியுள்ளார்.

  • @kalpanasankaralingam3290
    @kalpanasankaralingam3290 Před 4 měsíci +9

    வருணிக்க வார்த்தை ஏது.முதன் முதல பார்க்கிறேன். படம்பெயர் என்ன

    • @ramanits1939
      @ramanits1939 Před 4 měsíci

      சித்தூர் ராணி பத்மினி

  • @janakiramanlaligam.sundara3094
    @janakiramanlaligam.sundara3094 Před 7 měsíci +11

    இசைமணியின் பாடலும், திருமதி.வைஜயந்திமாலாவின் சிறந்த நடனமும் காணக் காண மகிழ்ச்சி.இதற்கு உதவியாக உங்களுக்கு பாராட்டுக்கள். மேலும் இது போன்ற இசைமணியின் பாடல்களை வேண்டுகிறேன்..

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Před 7 měsíci +5

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா ஈஸ்வரன் அருள் பெற்றவர். இந்த பாடல் யாராலும் பாட முடியாது. சூப்பர் ஜெய் ஹிந்த்

  • @geetharavi4155
    @geetharavi4155 Před 3 měsíci +3

    Sivaji sir could have lived even now. Its our bad luck, we have lost him.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 7 měsíci +6

    Ennavoru அற்புதமான பாடல், நடனம்!!காண கண் கோடி வேண்டும்

  • @visalakshir6933
    @visalakshir6933 Před 6 měsíci +5

    ஒப்புவமை சொல்ல இயலாது பாடல் அபூர்வமான படைப்பு

    • @user-vp2yc4zn4r
      @user-vp2yc4zn4r Před 6 měsíci

      இவை போன்ற பாடல்களை தொகுத்து கொடுங்கள். புண்யமாய் போகும்.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 2 měsíci +1

    A numerous appreciation about the great SHIVAJI GANESHAN the day he started his career in cinema but still the fans are not tired to appreciate the great SHIVAJI GANESHAN , everlasting appreciation for The great SHIVAJI GANESHAN.

  • @sakthisakthi-mp6lk
    @sakthisakthi-mp6lk Před 8 měsíci +9

    சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ilangkadhir
    @ilangkadhir Před 5 měsíci +1

    ❤இந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் விடுபட்டு இருக்கின்றன என்பதை குறிப்பிடுவதில் மிகுந்த வருத்தம் அடைகின்றேன். பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்று துவங்கும். விடுபட்ட வரிகளுடன் முழுப் பாடலும் கிடைத்தால் கட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்... நிறைவேறுமா என் ஆசை.... பொறுத்திருக்கிறேன்.....

  • @radhikaraghavan3790
    @radhikaraghavan3790 Před 4 měsíci +3

    அற்புதம்

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Před měsícem

    அருமை..அருமை.முதன்முறையாக இந்தப் பாடலைக் கேட்கிறேன். பார்க்கிறேன். சிறந்த நடிப்பு

  • @geetharavi4155
    @geetharavi4155 Před 3 měsíci +1

    Am first listening this song and seeing the bharathanatyam of Vaijayanthi mala. Spell bound. As usual Sivaji has lived in the song. No words.

  • @RamanujamParthasarathy56
    @RamanujamParthasarathy56 Před 4 měsíci +3

    அற்புதம்!

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Před 8 měsíci +6

    From 2:48 till end very high speed swara prayogam. Sirgazhi ultimate. Sivaji manages to catch swarams to lipsink it. Vyjayantimala elegant cute dance. Muthras excellent. Leg sway is swift, yet soft punches. G Ramanathan always strong coffee of carnatic tunes. How many takes only one can imagine. Wholly rests on sirgazhi Govindarajan for that fast paced lengthy swaras.

  • @kalamalinipadmanabhan5342
    @kalamalinipadmanabhan5342 Před 3 měsíci +1

    Legends brought out the visual treat to our eyes and ears .class apart,

  • @nalinnib2276
    @nalinnib2276 Před 3 měsíci +1

    Vaijayanthya Vida sivaji sir in romba azhaghu.

  • @palanimurugesan4845
    @palanimurugesan4845 Před 6 měsíci +6

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாய் அமைப்பும் வைஜயந்தி மாலாவின் நடனமும் மிக மிக அற்புதமான காட்சிகள் ஆனால் இது என்ன திரைப்படம் என்றுதான் தெரியவில்லை

    • @ilangkadhir
      @ilangkadhir Před 5 měsíci +2

      சித்தூர் ராணி பத்மினி

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 3 měsíci +2

    அருமை

  • @natarajanramakrishnan
    @natarajanramakrishnan Před 2 měsíci +2

    Super song chittor Rani Padmini

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 Před 5 měsíci +3

    G Ramanathan, Sivajii Ganesan and Vaijayanthimala - Divine personalities.

  • @hariharansr9074
    @hariharansr9074 Před 7 měsíci +2

    வணக்கம்
    இந்த படம் வரும்போது
    விபரம்தெரிந்தபிறகு‌
    தான்‌ இசைமேதை‌
    ஜி ராமனாதனாரின்‌
    கர்நாடக நாடீடியப்‌
    பாடலில் அசத்திவிட்
    டார் ரசித்தோம்
    இசை மணி சங்கீத‌
    வித்வான் சீர்காழி
    கோவிந்தராஜனார்‌
    அனாயாசமாகப்பாடியக் குரலோசையும்‌
    மனம்விட்டு கலவில்லை
    பாராட்டுக்கள் நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @user-bn7mf4pb8u
    @user-bn7mf4pb8u Před 3 měsíci +1

    இப்போதைய பாடகர்கள் மூச்சுவிடாமல் பாடுவதை பிரமாதம் ஆஹா ஓஹோ என்கிறார்கள் அன்றைய நாளில் சீர்காளி ஐயா அவர்கள் மூச்சு விடாமல் எப்படி தம் கட்டி பாடுயிருக்கின்றார் பாடல் கேட்கும் போதே புல்லரிக்குது வாழ்த்துகள்

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Před 5 měsíci +2

    Seerkazhi sang with astounding swara sancharam.
    Sivaji and Vaijayanti did excellent job.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 7 měsíci +5

    Fantastic action to this song by Nadigar Thilaham SIVAJI... Unique STAR..

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 Před 3 měsíci +2

    Wow sivaji ganesan's acting and vaijaithimala's nattiyam. 14.5.2024

  • @selviselvi4185
    @selviselvi4185 Před 2 měsíci +2

    Very good

  • @Hridhu.1629
    @Hridhu.1629 Před 2 měsíci +1

    Seerkazhi avarhalin kural sivaji avarhalin vayasaippu vaijayanthiyin nadanam arumai ipodhan first time nanum ketkiren arumai arpudham attahasam🎉🎉🎉🎉🎉🎉

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 6 měsíci +7

    இப்படி பாட
    இசையமைக்க
    நாட்டிய மாட
    சுரங்கள் துல்லியமாக வாயசைக்க
    யாராவது உண்டா
    கூறுங்கள் அவர்களுக்கு நான் அடிமை
    என் வயது 78
    வ சீனிவாசன்
    புதுவை

  • @A.V.K.Sabitha
    @A.V.K.Sabitha Před 2 měsíci +1

    Great song. Padmini dance is so graceful. Sivaji acting is very nice.

  • @subbiahsivasubramaniyam6310
    @subbiahsivasubramaniyam6310 Před 8 měsíci +11

    இந்தப் பாடலை இப்பொழுது தான் பார்க்கவும் கேட்கவும் செய்கிறேன். பிரமாதம் என்று சொல்ல இயலவில்லை 😢

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 8 měsíci +1

      சிவாஜிப்பாடல்கள் எல்லாமே சுமார்ரகம்தான்!👸❤❤❤😂❤😂❤😂💃

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 Před 8 měsíci

      @@helenpoornima5126பூர்ணிமா ,அப்படியே பொதுவாகச் சொல்ல முடியாது. ஜி.ராமநாதன் இசை அமைத்தும் சரியாக அமையவில்லை என்பது என் எண்ணம். சிவாஜி படங்களில் நிறையப் படங்களில் அற்புதமான பாடல்கள் கணக்கில் அடங்காமல் இன்றும் பலரது நினைவில் உள்ளன . " கேட்டவர் எல்லாம் பாடலாம். என் பாட்டுக்கு தாளம் போடலாம்" 🎉🎉🎉💐💐💐👍👍🎊🎊🎊🌺🌺

    • @ramachandranv9937
      @ramachandranv9937 Před 7 měsíci

      ஏன்?

    • @vaseer453
      @vaseer453 Před 7 měsíci

      ஜி.ஆர் அவர்கள் உடல் நலமில்லாமல் இருந்தபோது அவர்கள் உதவியாளர்கள் உருவாக்கிய பாடல் இது என்று நினைக்கிறேன் . அதனால்தான் அவருடைய முத்திரை இல்லாமல் இருக்கிறது . பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படப் பாடல்களை நான் அறிவேன் . ராமநாதன் அவர்களுடைய உதவியாளர் D.B.ராமச்சந்திரன் உருவாக்கிய பாடலாக இது இருக்கலாம் என்று கருதுகிறேன் .
      ராஜ மனோகரன் .

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 Před 7 měsíci

      @@vaseer453 என்ன காரணம் என்று சொல்ல இயலாத நிலையில் நீங்கள் சொன்னபடி தான் இருக்க வேண்டும். நன்றி ராஜமனோகரன் 🎉👍💐

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 6 měsíci +2

    Sivaji sir, vyjanthi mala jodi very nice. song arumai.

  • @selvaraja8285
    @selvaraja8285 Před 8 měsíci +4

    சிறப்பு

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 Před 8 měsíci +4

    பாடலைக் கேட்டதில்லை! அருமை!

  • @sekarambi5651
    @sekarambi5651 Před 5 měsíci +3

    Really great actor and actress

  • @Gopal-ee7pj
    @Gopal-ee7pj Před 3 měsíci +1

    சீர்காழி சீர்காழிதான் ஈடு இணையே இல்லை.

  • @giriraj1516
    @giriraj1516 Před 6 měsíci +3

    Nadigar thilagam, the greatest actor on d earth

  • @user-nb6bx4cc6z
    @user-nb6bx4cc6z Před 8 měsíci +5

    வைஜயந்தி நடனம் அருமை

  • @narayananps774
    @narayananps774 Před 7 měsíci +3

    Breathless song of yester years, excellent combination ! Seeing only now.

  • @malathysrk3523
    @malathysrk3523 Před měsícem

    அருமை அருமை தெய்வீகம்

  • @RajRamsay28
    @RajRamsay28 Před 3 měsíci +1

    PARATTA. SORKKALEA. " ILLAI ! DEIVEEGA. GANAM..! SUPERB. SIVAJI. NADIPPU ! NENJAI. KAVARUM. MOHANA. NADANAM. ! SUPERB. !

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 Před 3 měsíci +1

    The Sivaji Ganesan. The Sirkali Govindarajan.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 7 měsíci +3

    Emperor in music songs Thiru G Ramanathan is outstanding in this film too. Kudos to G Ramanathan master

  • @begingardener275
    @begingardener275 Před 3 měsíci +1

    WOW!!!

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 Před 5 měsíci +2

    Fine composing beautiful dance. Fantastic expression wonderful lyrics vow vow

  • @user-xv4mh1mk6c
    @user-xv4mh1mk6c Před 7 měsíci +2

    Picture: Chittoor Rani Padmini, Lyrics Writer: Kavignar Kurichchi Marimuthu Balasubramaniam, Music Composer: Sangeetha Methai Gopala Iyer Ramanathan, Singer: Sirkali Shivachidambaram Govindarajan, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Vaijayanthimala Bali. - Very Very Good Combination.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 Před 6 měsíci +3

    Nadigar thilagam is the best

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 7 měsíci +3

    Excellent Excellent Excellent

  • @manigandanm3362
    @manigandanm3362 Před 7 měsíci +5

    கண்களில் கண்ணீர் பெருகியது.அப்பப்பா நாம்யாரை இழந்துள்ளோம்
    அடுத்த தலைமுறை பார்க்கட்டும்.

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 7 měsíci +4

    SIVAJI the great