TAMIL OLD--Petredutha ullam endrum (vMv)--KANNA NALAMA 1972

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2018
  • Vembar Manivannan facebook Page ...
    இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
    FOLLOW US ON FACEBOOK ...
    profile.php?...
    தாய் பாசம் தங்கியிருக்கும்
    தங்கப் பாடல் இது...
    பாடலின் உணர்ச்சி பிரவாகத்தை-
    தாய்மையின் மேன்மையை-
    சகோதர, சகோதரிகளான
    ரசிக நண்பர்கள் முழுதாக அனுபவிப்பதற்காகவும்--
    பாடல் சொல்ல வந்த கருத்து
    சிதையாமல் இருப்பதற்காகவும்--
    படத்தின் இறுதிக்காட்சியில் ஒலிக்கும்
    பாடலின் தொடர்ச்சியையும் இணைத்து ஒரே பாடலாக
    இங்கே பதிவு செய்திருக்கிறேன்... vMv
    ஒரு பாடல்
    படத்தின் முக்கிய
    கதா பாத்திரமாக
    உலவ முடியுமானால்...
    அதை வார்த்தெடுக்க
    இந்தக் கலை மேதைகள்...
    எவ்வளவு உழைப்பை
    இந்தப்பாடலுக்கு தந்து
    உயிரூட்டி இருப்பார்கள்...
    வலி நிறைந்த
    கண்ணதாசன் வரிகளில்...
    உள்ளம் உருக்கும்
    எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்...
    உணர்வுப்பூர்வமான
    கே. பாலசந்தரின்
    காட்சி அமைப்பில்...
    கண்ணீர் துளிர்க்கும்
    டி.எம்.எஸ். - பி. சுசீலா குரல்களில்...
    "பெற்றெடுத்த உள்ளம் என்றும்
    தெய்வம் தெய்வம்"...
    முழுமையான வடிவில்...
    "பெற்றெடுத்த உள்ளம் என்றும்"...
    கண்ணா நலமா (1972)
    பாடல் : கவிஞர் கண்ணதாசன்
    இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்கள் : டி.எம்.எஸ். & பி. சுசீலா
    'கண்ணா நலமா' (1972) திரைப்படத்தின்
    நடிக நடிகையர் :
    ஜெமினி கணேசன், ஜெயந்தி, மேஜர் சுந்தர ராஜன்,
    எஸ்.வி. சகஸ்ரநாமம், குமாரி பத்மினி, மனோரமா,
    எம்.ஆர்.ஆர். வாசு, மாஸ்டர் ராமு, மாஸ்டர் பிரபாகர்
    மற்றும் பலர்...
    இயக்கம் : கே. பாலசந்தர்
    --பழமை காப்போம்
    e mail : vembarmanivannan37@gmail.com
  • Hudba

Komentáře • 380

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +24

    இந்தப் பாடலைப் பாத்துட்டுக் கண்ணீர் விடாதவுங்க மனூஷங்களே இல்லை! எம்எஸ்வீ ஐயா ! நீங்க ஒரு தெய்வமேதான் ! இந்த சினி உலகு எத்தனை ப் கீழ்த்தரமானது ! இத்தனை உணர்ச்சிகரமான இசையை 🎵 🎸 த் தந்த ராகத்தை தன் சொந்த ராகத்த க் கொடுத்த இந்த மாமனிதரின் இடத்திலே ஒரு கழிசடையை ஒக்காத்து வச்சு ச்சை!! இதிலேப் பாட்டிலேயே எல்லாத்தையும் தந்திட்டார் இசைதேவன் 🎸 🎵! டைரக்டரோட வேலையைத் தன்மேல் போட்டுண்டு எல்லாத்தையும் பாட்டிலேயே முடிப்பது இவரும் வீ.குமாரும் ! இந்த மேன்மை உண்மை எல்லாம் எந்த மடையனுக்கும் தெரியலை ! பாடலை இவர்களைவிட இவர்கள்போல் தராத தறுதலையை எப்பிடி இந்தக்கழிசடசினி உலகு சனிஉலகு்ஏத்துக்க முடிஞ்சுது ?!
    நடிகர்கள் இத்தனை பேருமேநல்லா நடிக்கிறாங்க! ஜெயந்தீமா பேசாமலே தன் தாய்ப்பாசத்தைக் காட்டுவது அபாரம்! ஜெமினி கண்ணியமான கணவனாக மிளிர்வது அழகு! பத்மினி நல்லா நடிப்பாங்க ! மேஜர் ஜென்டில் ,! இது டிஎம்எஸ் க்கு அவர் பாடும் தொனிக்கு மேலும் ஒரு மகுடத்தைத் தந்த்து உண்மை!! குரலிலேயே பாவங்களைக் காட்டி நம்மை நெகிழ வச்சிட்டார் டிஎம்எஸ் ! அந்தக் கோரஸ் அற்புதம்!! இத்தகைய இசை ஜாம்பவான்கள் இருந்த இடத்தில் !!??! இதைப் போல ஒன்றை முள்ளன் குடுத்திருக்கானா?! அப்புறம் என்ன------க்கு அவன்லாம் மியூசீசியன் லிஸ்டுல வர்றான்?! அற்புதமான இப்பாடலைக் கேட்டக் காதுகள் என் காதுகள் 👂 எப்புடி முள்ளன்ஓடதக் கேக்கூம்?!?! நல்லதை இனிமையை மட்டுமே விரும்பிடும் கண்ணியமானவள் நான் ! இந்தப் பாடலைக் கேக்குறவங்களே நான் சொல்றது உண்மைதானே ?!?!

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +4

      வணக்கம் மேடம்.
      70 களில் அனைவரது மனதிலும்
      அரியாசனம் போட்டு அமர்ந்திருந்த
      அற்புதமான பாடல்களில் முக்கியமான ஒன்று.
      மெல்லிசை மன்னரின் இசையும்,
      இசையரசரின் தெய்வீகக் குரலும்
      இன்றளவும் தாங்கள் சொன்னதைப் போல நமது கண்களை குளமாக்கவே செய்கிறது, நன்றி மேடம்...!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 3 lety +6

      இந்தக் கணனி யுகத்தில் முதன்முதலில் தமிழ்திரைப்படப் பாடல்கள் தொடர்பாக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை விதைத்தவர்கள் 1980க்கு முன்னர் வெளிவந்த பாடல்களை கேட்காமல் வளர்ந்தவர்களே. அவர்களில் பலருக்கு இளையராஜா "இசைத்தேவன்", ஏ.ஆர்.ரஹ்மான் "இசைப்புயல்" இவ்வளவு தான் தெரியும். இவர்களுக்கு இசைமேதை ஜி.ஆர்.ராமநாதனையோ, ஆர்.சுதர்சனத்தையோ, திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவனையோ, டி.ஆர்.பாப்பாவையோம் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவையோ, மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.வி., டி.கே.ஆர் மற்றும் வி,குமார் போன்ற இன்னும் பல இசையமைப்பாளர்களையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை; தெரிந்து கொள்ள விரும்புவதுமில்லை. முதலில் எழுதியதையே திரும்பத் திரும்ப விடாப்பிடியாக எழுதி வருகிறார்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +2

      @@Sivakumaran61 ! ஆமாம் ! கரெக்ட்டாச் சொல்றீங்க! அத்தகைய இசை ஜாம்பவான்களோடு இந்த 1976க் காரனை சேக்க முடியுமா?! எப்பிடி முடியும் ?! He is not a musician ! 🎵 🎸 இசையின் நுட்பத்தை நுண்ணறிவுடன் அதன் ஆழத்திலே அமிழ்ந்து நமக்கு அமிழ்து கொடுத்த இசை ஜாம்பவான்கள் நிறைந்திருக்க அத்தகைய அமிழ்தமே நேக்கூப் போறும் ! இதான் என் கருத்து !! நன்றீ !!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +4

      என்னால் இந்த முள்ளனை ஒரு மனுஷஜென்ம்ம்னே ஏத்துக்க முடியாதப்ப மியூசீசீயனாவது ஒண்ணாவது ! நல்லவங்கப் பெரியவங்க மொகத்திலே ஒரு களை சுடர் விடும் ! அது பாருங்க நம்ம டிஎம்எஸ் எம் எஸ் முகங்களல்ல காணப்படுறத !! எதுக்குமே லாயக்கில்லாதவன எந்த தைரியத்திலே மியூசீசீயன்னூ சொல்றாங்கோ ?!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 3 lety +1

      @@helenpoornima5126 உங்கள் ஆதங்கம் புரிகிறது. 1976ல் அன்னக்கிளி வந்தது அதில் பாடல்கள் கிராமிய பின்னணி இசை வித்தியாசமாக இருந்தது, ரசிக்க வைத்தது, அதிலும் மச்சானை பாத்தீங்களா, முத்துச்சம்பா பாடல்களுக்கு இசை கொஞ்சம் இரைச்சலாகவே இருந்தது. தொடர்ந்து ஒரு நான்கு வருடங்கள் சில நல்ல பாடல்களும் சில சுமாரான பாடல்களும் கொடுத்தார். 1980க்கு பிறகு இரைச்சல் இசை அதிகரித்தது (சகல கலாவல்லவன் போன்றவை), புதுமை என்ற போர்வையில் அதிகம் மேற்கத்தைய கலப்பு இரைச்சல் இசை, ஜானகி வேறு தனது இனிய குரலை மாற்றி முனகல் குரலில் பாடல்கள் இசையின் தரத்தை மாற்றினார், இளையராஜா, கங்கை அமரன் எல்லோருமே பாடத்தொடங்கினார்கள். 1980களுக்கு பின் வந்த பெரும்பாலான பாடல்களை நான் விரும்பி கேட்பதில்லை.

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k Před 3 lety +104

    தாய்மையை போற்றும் வகையில் பாடிய பாடல்களில்
    தலை சிறந்த பாடல் இது..
    இந்த பாடலை உருவாக்கியவர்கள்
    தெய்வபிறவிகள்.
    சின்ன வயதில்
    சிலோன் ரேடியோவில்
    ஒலிக்க கேட்டதுண்டு..
    இப்போது ஒலியும் ஒளியுமாக காணும்போது..கேட்கும்போது..
    மனதில் ஏதோ ஒரு உணர்வு...
    இது சினிமா பாடல் மட்டுமல்ல,
    அதையும் தாண்டி புனிதமானது....
    இதை இங்கே பதிவேற்றிய நல் உள்ளத்திற்கு நன்றி.

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +13

      அனைத்தும் உண்மையே.
      இதையெல்லாம் உருவாக்கித்தந்த
      நம் பிதாமகன்களுக்குத்தான்,
      நன்றி கூறவேண்டும் !!!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 3 lety +2

      அருமையான கருத்து.

    • @vadiveramasamy793
      @vadiveramasamy793 Před 2 lety

      Malik ke liye Pada Padal

    • @ManiMani-wt8ox
      @ManiMani-wt8ox Před 7 měsíci

      ​@@Sivakumaran61I'm f6f5f5f5f6f5fjhfigcfd

    • @vijayakumarduraisamy7937
      @vijayakumarduraisamy7937 Před měsícem

      Super song

  • @kgkumaran
    @kgkumaran Před 5 lety +121

    பாடலைக் கேட்டு எத்தனையோ வருடம் ஆச்சு. இன்று கேக்கும்பொழுது கண்கலங்கி விட்டது.

  • @vasudevan1560
    @vasudevan1560 Před 2 lety +75

    70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 Před rokem +12

    எப்படி இருந்த சினிமா இன்று வன்முறைகள் நிறைந்த காட்சி படங்களாக மாறிவிட்டன.

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 3 lety +28

    இந்தப் பாடலில் சாலமோன் மன்னனுடைய அறிவு வளர்ச்சியை காணக்கூடியதாக இருக்கின்றது இப்படி ஒரு அறிவு யாருக்கு வரும் படிப்பறிவு இல்லாத அந்த காலத்தில் எப்படியோ யோசித்திருக்கிறார் சாலமோன் மன்னன் அவர் வாழ்க இயந்திரங்களும் கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் உண்மையான தாயை கண்டுபிடித்து ஒப்படைத்தார் பிள்ளையை கவிஞர் கண்ணதாசனும் கூட வேதாகமத்தில் இருந்து நிறைய சொற்களை எடுத்து பாடல்களை எழுதியிருக்கின்றார் நன்றி

  • @selvamanip2178
    @selvamanip2178 Před rokem +40

    இப் பாடலை கேட்டவர்கள் கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியாது 👍👍👍

    • @GUKNAIR
      @GUKNAIR Před rokem

      100% உண்மை.

  • @ravikumarsk9726
    @ravikumarsk9726 Před 3 lety +105

    கண்களில் கண்ணீர் சுரக்க செய்யும் பாடல்களை வரும் தலைமுறைகள் கேட்கும் வாய்ப்பே இல்லை பதிவு செய்த வருக்கு கோடி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @jenifershealajenifer383
      @jenifershealajenifer383 Před 2 lety +2

      Enga ammaku piditha paadal

    • @radhasundaresan8473
      @radhasundaresan8473 Před rokem +2

      பூர்வ ஜென்ம உறவுகளையும் கண்டறியும் சக்தி..பெண்களுக்கு உண்டு..!!

    • @bathut3935
      @bathut3935 Před rokem

      Fc

  • @selvampalanisamy
    @selvampalanisamy Před 3 lety +67

    பள்ளிக்கு செல்லும் வயதில் அர்த்தம் அப்போது புரியாவிட்டாலும், மிகவும் விரும்பி கேட்ட பாடல். இன்றும் சுவைக்கிறது.

    • @suganthib7742
      @suganthib7742 Před 2 lety +2

      Yes

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před 10 měsíci

      இன்று இப்ப தான் பாடலோட அர்த்தம் புரிகிறது

  • @KalaiNilavan-zk8vj
    @KalaiNilavan-zk8vj Před 2 měsíci +2

    என் தாய்க்கு சமர்ப்பணம் இந்த பாடல்
    கண்ணதாசன் எத்தனை அழகான ஆழமான அன்பை அத்தனை பிள்ளைகள் மனங்களிலும் பதிய வைத்தார்... பாருங்கள்..
    கண்ணீர் பெருகி ஓடுகிறது ‌...
    யாருக்கு நன்றி சொல்வது...
    கொடுத்து வைத்தேன் இப்பாடல் கேட்க

  • @r.renganrao3992
    @r.renganrao3992 Před 5 lety +35

    அன்று இலங்கை வானொலியில் கேட்டது very nice song

  • @ganagurusamynarayanan9678
    @ganagurusamynarayanan9678 Před 2 lety +48

    சினிமாவை பொழுதுபோக்கிற்காக பார்த்த நான் கண்ணீர் விட்டு பார்த்த ஒரே படம் கண்ணா நலமா.பாலச்சந்தர் ஒரு மாமேதை.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 2 lety +14

    மனதை கொள்ளை கொள்ளும்
    பழைய பாடல்
    பாட்டுக்குள் கதையே அடக்கம்👌

  • @jayram6365
    @jayram6365 Před 3 lety +39

    என்றும் உயிருள்ள பாடல் 👌

  • @thanasekaransekar7171
    @thanasekaransekar7171 Před 3 lety +27

    இலங்கை வானொலியில்
    நான் சிறு வயதில் கேட்ட பாடல் 👍👍👍👍👍👍

  • @panneerselvamnatesapillai2036

    70களின் தொடக்கத்தில் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். இப்போது கேட்கும் போது தாயின் நினைவு வந்து போகிறது.

  • @kumaresanms3627
    @kumaresanms3627 Před 3 lety +11

    அருமையான டி எம் சௌந்தரராஜன் குரலில் மிகவும் அருமை பாடலில் ஆழ்ந்த கருத்து உள்ளது கேட்கும் போது தன்னை அறியாமல் கண்களில் நீர் கலங்கிவிடும் அனுபவித்து எழுதியுள்ளார் கண்ணதாசன்அனுபவித்து பாடியிருக்கிறார் சவுந்தரராஜன் இப்படிப்பட்ட பாடல்கள் பாடுவதில் மிகச் சிறந்தவர் இனி இவர் போல் வரப்போவதில்லை என்றென்றும் பாடல் வரிகள் மனதில் நிற்கட்டும் இரண்டு முறை பாடல் கேட்டேன் என் கண்களில் கலங்கியது வேறு வார்த்தை இல்லை

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety

      உண்மையில் உண்மை.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před 3 lety +10

    மிக நன்றி வேம்பார் அவர்களே

  • @maharajanm9953
    @maharajanm9953 Před 2 lety +6

    இந்த படத்தில் ஐயா அவர்கள் குரல் அருமை கண்ணீர் வந்து விடும்
    வள்ளியூர் ம மகாராஜன் .

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety

      நன்றி நண்பரே. Tms புகழ் வாழ்க.

    • @Thangapandian-gt3cd
      @Thangapandian-gt3cd Před 10 měsíci

      ​@@rajaganesh269n ii😮 hu hu hu
      Ko moo bu b moo moo moo CT moo Dr see

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +11

    அற்புதமான வார்த்தைகளை
    கொண்டு தொடுக்கப்பட்ட
    மலர்மாலையான இப்பாடலை,
    "கவியரசர்" "மெல்லிசை மன்னரின்",
    மனதை நெருடச்செய்கிற
    இசையின் மூலம்,
    "இசையரசரின்" சிலிர்க்கவைக்கும்
    குரலில், "மன்னர் சாலமனுக்கு"
    மரியாதையை மூவரும்
    பூமழையாய் பொழிந்திருக்கிறார்கள் அபூர்வம் !!!
    70 களில் பள்ளிப்பருவத்தில் எட்டாத
    உயரத்தில் இருக்கும்
    வானொலிபெட்டி, அதை-
    எட்டிப்பிடித்து ஆக்கிரமித்திருந்த
    அருமையான இப்பாடல், இன்றளவும் அனைவரது மனதிலும்
    மன்னர் சாலமன் !!!
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
    படம் : கண்ணா நலமா.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +3

      மலர் மாலைகளை மூவருக்கும் போட்ட உம்மைப் பாராட்டுகிறேன் கவிஞரே!! உங்களின் இனியரசனை என்னும் பயணம் தொடர வாழ்த்துறேன் !!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 3 lety +2

      அருமை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      @@Sivakumaran61
      மிக்க நன்றி சார்...!

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +69

    இந்த பாடலைக் கேட்பதற்கு நான்௭ன்ன புண்ணியம் செய்தேனோ ௭ன் தாய்க்கு இப்பாடலை சமர்ப்பிக்க கடவுளை வேண்டுகிறேன் ௮ம்மா ௮ம்மா ௮ம்மா ௭ன்னுயிா் தாயே ௨ன் நினைவில் ௭ன்றும் நான்

    • @manipk55
      @manipk55 Před 2 lety +2

      💧💧💧💧

    • @sagunthaladevisagunthalade7054
      @sagunthaladevisagunthalade7054 Před 10 měsíci +1

      பதிவுக்கு நன்றி

    • @thangavel7167
      @thangavel7167 Před 4 měsíci +1

      அம்மா உன் வாசலிலே பூ கொடுத்தேன் நீ சூடி கொள்ள நல்ல பாடாடெடுத்தேன் அம்மா உன் பெருமை‌ சொல்ல வேண்டும்

  • @p.n.raamaduraip.n.raamadur7324

    இதுபோல் கருத்துள்ள பாடல்
    கேட்பதற்கு இனிமை

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k Před rokem +27

    அன்னையின் பெருமையை உணர்த்தும் கருத்தாழம் மிக்க அருமையான பாடல் ! மனிதனாய் பிறந்த அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல் ! வாழ்க கண்ணதாசன் புகழ் !!!

  • @arivuselvam647
    @arivuselvam647 Před 2 lety +33

    "பத்மஸ்ரீ " டி. எம். சௌந்தரராஜன் ஐயாவின் தனித்துவமான குரலிசை.

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 5 lety +52

    ஆண்:- பெற்றெடுத்த உள்ளம் என்றும், தெய்வம் தெய்வம்.., பெற்றெடுத்த உள்ளம் என்றும், தெய்வம், தெய்வம், அது பேசுகின்ற, வார்த்தை என்றும், மௌனம், மௌனம், ரத்தத்துடன் சேர்ந்தந்தப், பாசம், பாசம், அது நாள் கடந்தும், பிள்ளையுடன், பேசும், பேசும், அது நாள் கடந்தும், பிள்ளையுடன், பேசும், பேசும், (அன்றொரு நாள் மன்னன் சாலமன் சபையில், ஒரு விசித்திரமான, வழக்கு வந்தது, "ஒரு பிள்ளை, இரண்டு தாய்மார்கள்”, "இரண்டு பேரும், அது, தன்னுடைய பிள்ளை, என்கிறார்கள்?, பிள்ளைக்கோ, தன் தாய், யாரென்று சொல்லத் தெரியவில்லை!, மன்னன் சாலமன் யோசித்தான்?, ஒரு தாயார், பல பிள்ளை பெறுவதுண்டு, இரு தாய்க்கு, ஒரு பிள்ளை, வருவதுண்டா?, அசல் யாரோ?, நகல் யாரோ?, அசல் யாரோ?, நகல் யாரோ?, அறியேனென்று, அதிசயித்த, மன்னன் சொன்னான், "முடிவில் ஒன்று, முடிவில் ஒன்று”, "இரண்டு பேருமே, இது, தன் பிள்ளை, என்பதால், யாரிடம் ஒப்படைப்பதென்று, தெரியவில்லை?, ஆகவே.., காவலா, இந்தப் பிள்ளையை, ஆளுக்குப், பாதியாகக் கொடு, என்றான், "காவலன் சென்றான், இடை வாளை எடுத்தான், அந்த மகனை, இழுத்தான், "வாளை ஓங்கினான், வாளை ஓங்கினான், பெண்:- "மன்னா.., ஆ.ஆ.ஆ.., மன்னா.., ஆ..ஆ..ஆ.., அம்மா, என்றொரு குரலில், ஒரு பெண், கண்ணீர் வடிக்கின்றாள், இன்னொரு, பெண்ணோ, வாளைக் கண்டும், புன்னகை புரிகின்றாள்?, புன்னகை புரிகின்றாள்!, பாதி கொடுங்கள், என்றே அவளோ மன்னனை கேட்கின்றாள், "மன்னா.., வேண்டாம்.., என்றே, இவளோ, மன்னனைத் தடுக்கின்றாள், இந்தா, என்றவன், அந்தப்பெண்ணிடம் மகனைத் தருகின்றான், ஆண்:- "இவள் தான், உண்மைத்தாயென மன்னன், "சாலமன் முடிக்கின்றான், சாலமன் முடிக்கின்றான்..,) பெற்றெடுத்த உள்ளம், என்றும், தெய்வம், தெய்வம், அது, பேசுகின்ற, வார்த்தை என்றும், மௌனம், மௌனம், சக்தி வடிவானவளே, அன்னை, அன்னை, அவள் தானறிவாள், தான் வளர்த்த, கண்ணை, கண்ணை, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பக்தியிலும் அன்னை தான், முதலில் தெய்வம், இந்த பார்முளுதும், அவள் வளத்த, செல்வம்.., செல்வம்.., பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பதியம் வைத்த மரம், புதிய தோட்டம் தனில், நின்று வாழ்வதுண்டு, புதியதாக வரும், உறவுயாவதும், சொந்தமாவதில்லை, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- முதிரம் கொண்டுவரும், இதயம், போல ஒரு, உண்மை அன்பு, இல்லை, உருவம், உள்ளதென, தமிழ் ஊறுவது, அன்னையென்ற சொல்லை, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- கூவும் மஞ்சளுடன், பொங்கும் தேவியவள், புவனேஸ்வரீ, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பூஜை செய்துவரும், மாதர் காவல் தரும், ராஜேஸ்வரீ, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பாசம் பொங்கிவரும், தேவி சக்தியவள், யெகதீஸ்வரீ, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பாதை கண்ணில் உயர், நீதி சொல்லவரும், பரமேஸ்வரீ, பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- புவநேஸ்வரீ.., பெண்குழு:- சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., சக்தி ஓம்.., ஆண்:- பெற்றெடுத்த உள்ளம் என்றும், தெய்வம், தெய்வம், அது பேசுகின்ற, வார்த்தை என்றும், மௌனம், மௌனம், - PETREDUDHA ULLAM ENTRUM - MOVIE:- KANNA NALAMA (கண்ணா நலமா)

  • @MUTHUPANDI-og5pv
    @MUTHUPANDI-og5pv Před 3 lety +73

    கண்கள் குளமாவதைத் தவிர்க்க இயலவில்லை.கண்ணீர் கசிகிறது...

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 2 lety +8

    கதையை பாடலுக்குள் அடக்கிய
    விதம் .அருமை. இன்றைக்கு........?

  • @anbuyoga7560
    @anbuyoga7560 Před 2 lety +6

    அன்பான வேம்பார் அவர்களுக்கு இந்த பாடல் கேட்டு எத்தனையோ ஆண்டுகள் கழித்து பார்த்து கேட்கிறேன் நன்றி.⚜️🚂🙏..

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Před 5 dny +1

    இந்த பாடலை கேட்கும் போது
    கடவுளை சந்தித்து விட்டு திரும்பி
    வந்தை போல் இருக்கிறது
    அடடடடடடடடடடடடடடடடடா
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @rajaganesh269
    @rajaganesh269 Před 2 lety +9

    இப்பாடலுக்கு இணையாக யாராலும் இன்று வரை பாட முடியவில்லை. Tms always great. 👌👌👌

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 3 lety +10

    இந்த பாடலை கேட்க குபோதுமனசுகலங்குது

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před 2 lety +5

    நான் சிறுவயதில் இலங்கை வானொலி யில் அடிக்கடி கேட்டபாடல். இப்போது கேட்க்கும் போது .............................

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Před 2 lety +15

    உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை!
    உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை!
    👏👏👏👏👏👏

    • @user-pb5yc2gq7u
      @user-pb5yc2gq7u Před 5 měsíci

      காளத்தாலம் அழியாத வைர வரிகள்...🎉

  • @barkavimohan2458
    @barkavimohan2458 Před 2 lety +6

    அருமையான 😘😘 பாடல் ❤ ❤ நன்றி🙏🙏

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +13

    பாலசந்தர் இயக்கிய கண்ணாநலமா பட பாடல் பிரபலமான.சாலமன் தீர்ப்பை கொண்டே கண்ணதாசன் எழுதினார் ..டி.எம்.எஸ்.சுசீலா குரல்களும் எம்.எஸ்.வி இசையும் அருமை ஜெயந்தி நடிப்புக்காக சிறப்பு பெற்ற படம் .என்றோ கேட்ட பாடலை இன்று கேட்கிறேன் உள்ளத்தை உருக்கும் இப்பாடலை பற்றி அழகான பதிவுகள். நெஞ்சம் நிறைந்த நன்றிகள் மணி

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 3 lety +19

    நல்லதொரு கருத்து பாடல்... சிந்தைக்கும்... யோசிக்க சிந்தனைக்கும் !

  • @sekart.m3560
    @sekart.m3560 Před 3 lety +33

    கவிதையும் இசையும் கலந்த மகா சங்கமம், கதைக்கேத்தப்பாடல் இதுபோன்ற காவியம் இனி வருமா.👍👍💥💯💫

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Před 2 lety +6

    காலத்தில் கண்ணதாசன்
    இன்றும்நம்உடன்
    வாழ்ந்து வருகிறார்
    இதுபோல பாடல்களை
    எழுத இன்றைய கவிஞர்
    யார் உண்டு
    நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது 🙏💕🙏💕

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru Před 2 lety +13

    இப்பவரும்பாடல் ஆத்திரம்வருகின்றது அப்ப உள்ளபாடல் மனத உடைகின்றது

  • @ravikumarsk9726
    @ravikumarsk9726 Před 3 lety +13

    வேம்பார் மணிவண்ணன் சார் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 lety +20

    காவியநயமிக்கப் பாடல்.
    1959 ல் நான் 5 வது படிக்கும்போது என் மாமா வீட்டில் இருந்த மரியாதை ராமன் பெரிய எழுத்துப புத்தகத்தில் நீதிக் கதைகள் படித்தபோது இது தொடர்பாக கதை படித்தேன்
    இரண்டு பெண்கள் ஒரு குழந்தையைத் தனதென்று உரிமை கொண்டாடுவர்.
    மன்னனிடம் முறையீடு செய்யப்பட்டது.
    குழந்தையை அறுத்து ஆளுக்குப்
    பாதியாகக் கொடுக்கும்படி கட்டளையிடுவார்
    அசல்தாய் பதறுவாள்.
    இன்னொருவள் அமைதியாய் இருப்பாள்.
    மன்னர் சரியான தீர்ப்பளிப்பார்.
    இக்கதையின் அடிப்படையில்
    கவியரசர் கண்ணதாசன் அற்புதமான பாடல் யாத்துக்கொடுத்தார்.
    M. S. V அரு மையாக இசை வழங்கியிரு்தார்.
    TmS குரல் காலத்தால் அழியாதது.
    K. Balachandar was great in giving such a good film.
    இநதப்பாட்டின் கடைசியில் ஜெமினி கணேசன் குட்டி பத்மினியின் கழுத்தை நெரித்துக் கொல்லமுயலும்போது வானொலியில் நிகழ்ச்சி நிறைவடைந்தது என்று அறிவிப்பாளர் அறிவித்ததும் தேசிய கீதம் ஒலிபரப்பாகும் .
    படம் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது நன்றாக நினைவில் இருக்கிறது.
    அற்புதமான பாடல் வழங்கிய vMv அவர்களுக்கு நன்றிகள் பலப்பல .

  • @okpthambiraja5809
    @okpthambiraja5809 Před 2 lety +8

    எத்தனை முறைகேட்டாலும் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் என் கண்ணில் கன்னீர் மழை வந்துவிடும்

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Před 3 lety +22

    தாய்மையை பற்றிய இனிய பாடல்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +3

    பாடல் வரி கேட்ட பின்பு தான் இன்றைய என் நிலை புரிகிறது.இரண்டு தாய் உள்ளங்களும் தேவையில்லை என்று ஓதுக்கி வைதாது விட்டார்கள்.பாடலுக்கு நன்றி.

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +17

    பாடல் மட்டும் அல்ல தாயின் பாசப் போராட்டம் நெஞ்சத்தை கலங்க வைக்கின்றது

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 Před 4 lety +25

    என் கண்களில் இருந்து நீர் வழிவது நிற்கவே இல்லை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety

      ஆமாம்! உணர்ச்சிகரமானப் பாடல் ! நெகிழ்ந்துப் போயிடுவோம் !!

    • @revathi.c6582
      @revathi.c6582 Před 2 lety

      My. Mother expired may month 2021 due to covid

  • @mangalamsiva1149
    @mangalamsiva1149 Před 2 lety +7

    தாயின் அன்பை வெளிக்காட்டி இதயத்தைக் கசிய வைக்கும் ஒரு பாடல். சிறு வயது முதலே பலமுறை கேட்டு ஒவ்வொரு முறையும் கண் கலங்க வைக்கும் அற்புதமான பாடல்.

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 Před 2 lety +9

    10 ஆண்டுகளாக இந்த பாடலை தேடினேன்.

  • @purinjasari7764
    @purinjasari7764 Před 2 lety +39

    இன்று இந்த பாடலை கேட்டாலும் கண் கலங்குகிறது.. கண்ணதாசனுக்கு நிகர் யாரும் இல்லை

  • @rajendrank3334
    @rajendrank3334 Před 4 lety +14

    தாய்பாசத்தை.கண்னீருடன்.கேட்ப்போம்.

  • @lalithan466
    @lalithan466 Před 2 lety +10

    அம்மாவின் பாசம் விளக்கும் அருமையான பாடல்

  • @srk8360
    @srk8360 Před 2 lety +4

    Beyond words.. 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
    Thank you 💞💐💐🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 5 lety +33

    நீதி சொன்ன சாலமன் .. அதை கதையாக சொன்ன கவிஞர் .. அதை உணர்வு காட்சியாக்கிய பாலச்சந்தர்..
    "" முடிவில் இந்த ஒலிபரப்பு முடிந்தது .. மீண்டும் நாளை ஆரம்பம் ஆகும் ... வணக்கம் ... ஜெய்ஹிந்த் .." ....
    அதுதான் பாலச்சந்தர் ...!!
    இயக்குனரின் ரசனையை ரசிப்போம் ..

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +6

      அருமை அருமை !!!
      தில்லைசபாபதி சார்.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před 3 lety +8

      @@nausathali8806
      தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி..
      இன்னும் நூற்றுக்கணக்கான என் பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கிறது..
      புதிய பாடல்களுக்கும் என் பதிவுகள் உள்ளது..
      நன்றி.‌. வணக்கம்...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +8

      @@nausathali8806 ! ஆமாம் ! நீங்க இவரின் பதிவுகளைப் பாருங்க ளேன் !அசந்திருவீங்க! அத்தனை அழகாக எழுதியிருப்பார்! இவர் பெரிய மனிதர் ! எல்லாத்தையும் கரெக்டாக நுணுக்கமாக எழுதுவார் ! கலாரசனை மிகுந்தவர் ! நீங்க இவர் பதிவுகளில் போய்ப் பதில் கொடுங்கள் !இவர் அழைப்புக் கொடுப்பதே பெரியவிஷயம் !!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 3 lety +4

      இந்தப் பாடலுக்காகவே திரைப்படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. உங்களின் அரிய கருத்துக்கு நன்றி

  • @anandaramanm5503
    @anandaramanm5503 Před 5 lety +14

    Very nice song by TMS & PS in KB's Kanna Nalama. I am having the original VCD. SV Subbiah, Major Sundae Rajan, Jayanthi Kumari Bhanumarhi and above all Gemini Ganesan have performed excellently. Elaborately given King Slaloman's verdict in the court of justice. Released in 1972 when I joined BHEL TIRUCHY. THANKS VmV fotvyour unquenchable thrust for golden movies of tester years.

  • @THENI374
    @THENI374 Před 2 lety +3

    ஒரு தாய் என்பவள் தான்
    உலகில் சிறந்த சக்தி ..
    அந்த தாயின் பெருமையை
    இந்த பாடலில் மிகவும் அழகாக காட்டிய காட்சி அருமை.

  • @saganesan8721
    @saganesan8721 Před 5 lety +18

    பெற்றெடுத்த உள்ளம் -- என்றும் தெய்வம் தெய்வம்---அது பேசுகின்ற வார்த்தை--- என்றும் மௌனம் மௌனம்! உதிரம் கொண்டு வரும் இதயம் போல ---- ஒரு உண்மை அன்பு இல்லை... உருகும் உள்ளம் எனத் தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை..... கண்ணதாசன் கவி மழையில்.... ஓர் இனிய கருத்தாழம் கொண்ட பாடல்
    ஒவ்வொரு முறையும் கேட்கும் போது புதிய கோணத்தில் கருத்து வெளிப்படும்... வேம்பார் மணிவண்ணன் அவர்கள் மீது ஒவ்வொரு முறையும் நன்றியும் பாராட்டும் என் உள் மனதில் இருந்து பொங்கி வருகிறது என்பதை மகிழ்வுடன் கணிவோடு பரிவோடு பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி வேம்பார் மணிவண்ணன் அவர்களே...

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Před 3 lety +21

    இலங்கை வானொலியில் முன்பு வாரம் ஒரு முறையாவது ஒலி பரப்பாகி விடும். வாழ்த்துகள்.

    • @thillaipalam4170
      @thillaipalam4170 Před 2 lety

      இலங்கை இந்திய உறவு விடுதலைப் புலிகளால் சிதைந்து விட்டது.

  • @neethirajanneethiselvan5859

    தெய்வீகக் குரலோன் டி.எம்.எஸ் அய்யா அவர்களின் குரலில் எத்தனை கனிவு எத்தனை கம்பீரம்! இறைவா அவர் வாழ்ந்த காலத்தில் வாழ வைத்தது அவர் குரலைக் கேட்க வைத்தது நீ எங்களுக்குக் காட்டிய கருணை

  • @nps8235
    @nps8235 Před 2 lety +13

    தெய்வப் பாடகர் டி எம் எஸ் அவர்களின் புகழ் என்றும் வாழும்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před rokem +1

    தமிழ் மொழியில், அது கதை, கட்டுரை , புராணம், இதிகாசம், இலக்கியம் உரைநடை,புனித வேத புத்தகம் etc. etc.., போன்ற எதில் இருந்தும்,மேற்கோள் காட்டி கவிதை அல்லது பாடல் இயற்றும் போது, தெள்ளந்த் தெளிய நீர் பளிங்குப் பறைகளில் இருந்து வழுக்கி பயணிப்பது போல் ஓர் அற்புதமான சுகம் உயரிய நடை இந்த பிரபஞ்ஜத்தில் ஏதோ ஓர் உயர்ந்த நிலையில் சஞ்சரிப்பது போல் அனுபவ உணர்வு இவை யாவும் கவியரசரின்🙏 எழுதின் வலிமையில் மட்டுமே சாத்தியம்.

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 2 lety +5

    மேதைகள் இணைந்தளித்த மேன்மையான படைப்பு!

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 8 měsíci

    என் பள்ளி நாட்களில் கேட்டது....
    ஒலிபெருக்கியில் ஒலிக்கும் வீட்டு நிகழ்ச்சிகளில்...!

  • @user-im6ym7kq8q
    @user-im6ym7kq8q Před 3 lety +23

    அந்த காலத்துல ரேடியா வில் கேட்டும் அழுதும் இருந்தோம் இன்று காட்சியாக பார்க்க கண்கள் குலமானது

  • @kumarscales9997
    @kumarscales9997 Před 2 lety +15

    இந்தப் பாடலை கேட்டு கண்ணீர் விடாதவர்கள் யார் இருக்கிறார்கள்

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety +2

    Before 55 years , I am hearing song my childhood days . Now I am hearing this video song .I can't control myself.

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 4 lety +10

    beautiful song by tm saundrajan and p susila meanful song

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před rokem +1

    ஐயா TMS இன் அற்புதபாடல்

  • @alagusekar1909
    @alagusekar1909 Před 4 lety +8

    My favorite song. T.m.s. voice super.

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před 3 lety +14

    உங்கள் பணி என்றும் தொடர வேண்டும் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @c.ponrajponraj7528
    @c.ponrajponraj7528 Před 2 lety +3

    இலங்கை வானொலியில் கேட்ட மறக்க முடியாத பாடல்

  • @sabapathimahalingam9272
    @sabapathimahalingam9272 Před 2 lety +7

    1960 TO 1979 IS GOLDEN ERA TO OUR TAMIL CINEMA, LEGENDS MSV, KANADASAN AND TMS, NEVER FORGET. ONLY TMS CAN DO THIS TYPE OF SONG, HOW BEAUTIFULLY EXPRESSED A MOTHER'S FELLING IN HIS VOICE. AFTER SUNK THIS SONG TMS MIGHT LOST HIS ENERGY . HIGH PITCH SONG

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety

      உண்மை. முழுவதும் உண்மை.

  • @monishas6261
    @monishas6261 Před 2 lety +6

    கண்ணீர் தான் வருது😭😭😭😢😢

  • @sridran1997
    @sridran1997 Před 3 lety +3

    I have no mother. Whenever i hear this song, can't stop crying

  • @maheshmk1023
    @maheshmk1023 Před 2 lety +2

    Indha madhiri padal inimal yaralum yeludhamudiyadhu avlo azhagu thaimai potrum padal tms kural inimai padal super good very very super by saraswathi amma

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 Před 3 lety +11

    இந்தபாடலைகேட்டு வருடக்கணக்காகஆயிடுச்சி இந்தபாடலைகேட்டபோது அழுகைதான் வந்தது பழையபாடல் பழையபாடல்தான்

  • @jenifershealajenifer383

    நான் ஒரு 90ஸ் kid.. என் அம்மா விருப்பம் பட்டு இப்போது இந்த பாடலை கேட்கிறேன் 👌👌👌👌👌👌 coments எல்லாமே படித்தேன் இப்பாடலுக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்....

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf Před 2 lety +2

    ெபற் றெடுத்த தெய்வத்தை என்று காண போகின்றேம்

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 2 lety +2

    Beautiful song by tm saundrajan

  • @natchander
    @natchander Před 5 lety +11

    MOTHERS ARE THOROUGHLY WORSHIPPED NEXT TO GOD'S.
    AND THIS SENTIMENT HAVE BEEN USED IN ALL TAMIL FILMS.
    AND TAMIL NADU AUDIENCE HAVE NEVER FAILED TO ADMIRE AND APPRECIATE THESE FILMS .
    NATARAJAN CHANDER

  • @abishek8921
    @abishek8921 Před 6 měsíci

    இந்த மாதிரி பாடல்கள் கேட்க நாம் திரும்ப பிறக்க வேண்டும்

  • @ilangokrishnan9918
    @ilangokrishnan9918 Před 3 měsíci

    கண்ணீர் சிந்தாமல் பாடலைக் கேட்டு முடிப்பது கடினம்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +12

    Nice, emotional song.Ammavin paasathirku eedu,inai yedhu?KANNADASAN+MSV+TMS+PSUSEELA COMBINATION UNBEATABLE!!🙏 VMV SIR.

  • @paramanandhamg7730
    @paramanandhamg7730 Před 4 lety +5

    Dear Vembar Manivanna, Thanks for posting this song - Trust vembar near SAYALKUDI if Yes you have seen lots of old movies SAYALKUDI THEATER BY Elanjembore Lion G.PARAMANANTHAM

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 Před rokem +1

    TMS IS A true gifts for Music

  • @asokansriyes9836
    @asokansriyes9836 Před 2 lety +3

    VERY GOOD & NICE SONG

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před 10 měsíci

    சாலமோன் இறைவனிடம் கேட்ட ஞானம் இந்த பாடலில் அழகாக விளக்கியிருக்கிறார் கவிஞர் அருமையான பாடல் வரிகள்

  • @thangavel7167
    @thangavel7167 Před rokem +1

    இரவு வணக்கம் இந்த பாடல்
    பெற்ற தாயின் ரத்த பாசம் பரிவு ஆகியன பாடல் வழியாக
    ஆசிரியர் சொல்கிறார்
    நன்றி

  • @natchander
    @natchander Před 5 lety +7

    A BALACHANDER MOVIE
    BALACHANDER WOULD STRAIN HIS NERVES TO MAKE HIS GOOD FILM
    M S V MUSIC
    PEOPLE WOULD QUE UP TO SEE BALACHANDERS MOVIES.. A GREAT DIRECTOR
    THANKS FOR THIS SONG V M V JI
    NATARAJAN CHANDER

    • @jeevanand5948
      @jeevanand5948 Před 3 lety

      @@prodbymikecity2013 Music M.S.Visvanathan.

  • @gurunathan9125
    @gurunathan9125 Před 3 lety +6

    use to hear almost daily in radio during 70s

  • @mumthaja4718
    @mumthaja4718 Před 5 lety +6

    Nice story nice song

  • @rajendirankm9918
    @rajendirankm9918 Před 2 lety +7

    இந்த பாடலை TMSதனித்து பாடிய பாடல் உண்டு இதில் குரலும் இசையும் தெளிவாக இருக்கும் அடுத்து லள‌ ரற னணந உச்சரிப்பு மிக தெளிவாக இருக்கும் இது ஆடியோ மட்டும் வீடியோ வராது

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 2 lety +2

    Very nice song.when I hear the song my eyes with full of tears

  • @babunandagopalnandagopal6551

    Remind Tha song.great. thank you Mani vannan

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 Před 3 lety +6

    Kannadasan great

  • @SusiSusi-hi3zf
    @SusiSusi-hi3zf Před 5 lety +5

    Very nice sentimental song. Describing about mothers. Very rare to hear these types of songs nowadays. Thanks brother manivanan. God bless you and family. Susila klang Malaysia

  • @balasubramanian9390
    @balasubramanian9390 Před 2 lety +2

    அருமை அருமை

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq Před 3 lety +3

    My favorite song this is old is gold

  • @ganesanchokkalingam3285
    @ganesanchokkalingam3285 Před 2 lety +1

    எண்ணசொல்லிபாராட்டுவது இப்பாடலை பதிவேற்றம் செய்த திரு வேம்பார்மணிவண்ணன் அவர்கலை நன்றி ஐய்யா நன்றி

  • @nagarathinamkreddy3072
    @nagarathinamkreddy3072 Před rokem +1

    Very meaningful song from the old Tamil movie

  • @neethirajanneethiselvan5859

    தாய்மையின் தெய்வீகத்தன்மையை விளக்கும் அருமையான பாடல்.என்ன குரல்? என்ன அழகான உச்சரிப்பு, இசையமைப்பு இறைவனுக்கு நன்றி

    • @mariyappanpugalmurugan8870
      @mariyappanpugalmurugan8870 Před rokem

      அருமையான அம்மா அன்பு பாடல் சூப்பர் சூப்பர் இனி இப்படி ஒரு பாடல் வரவே வரது