புத்தாண்டு திருப்பலி புதிய பாடல்கள் | 7 பாடல்கள் | New Year Mass Songs | 7 Songs |

Sdílet
Vložit
  • čas přidán 24. 12. 2022
  • புத்தாண்டு திருப்பலி புதிய பாடல்கள் | 7 பாடல்கள் | New Year Mass Songs | 7 Songs |
    Lyrics & Music
    Fr.Selvanayagam ( 4&5 )
    Fr.Edwin ( 7 )
    Raja Isai Bharathi ( 1,2,3 & 6 )
    Music : Raja Isai Bharathi

Komentáře • 4

  • @uthayanmm
    @uthayanmm Před 5 měsíci

    எந்தன் உள்ளம் தே..வனை ஏற்றி போற்றி பா..டுதே - 4
    மாண்புடனே எனக்கவர் செய்த நன்மைகளை நினைந்து-2
    நிதமும் பாடுவேன் பாடுவேன் உன்னதமாய் நெஞ்சம் நெகிழ்ந்திட
    எந்தன் உள்ளம் -2
    1. வல்லமை நிறைந்த வானவர் அவரே பெரியன செய்தார் மகிழ்கின்றேன்
    அதனால் என்னை வையகமும் என்றும் வாழ்த்திப்போற்றிடுமே
    அவர் திருப்பாதம் பணிகின்ற தலைமுறைகெல்லாமே
    இன்றும் தயவை அருள்பவரும் தூயவர் ஆண்டவரே
    நிதமும் பாடுவேன் பாடுவேன் நெஞ்சம் நெகிழ்ந்திடவே
    நிதமும் பாடுவேன் பாடுவேன் உன்னதமாய் நெஞ்சம் நெகிழ்ந்திட
    எந்தன் உள்ளம் -2
    2. அவர்தமதாற்றல் கரமதை நீட்டி செருகடைந்தோரை சிதறடித்தார்
    வலியோரை உயர் இருகையின்றகற்றி எளியோரை மிக உயர்த்திவிட்டார்
    பசித்தோரை பல நலன்களினால் நிரம்பிட செய்கின்றார்
    செல்வம் மிகிந்தோர் அனைவரையும் வெறுங்கையர் எனவிடுத்தார்
    நிதமும் பாடுவேன் பாடுவேன் நெஞ்சம் நெகிழ்ந்திடவே
    நிதமும் பாடுவேன் பாடுவேன் உன்னதமாய் நெஞ்சம் நெகிழ்ந்திட
    எந்தன் உள்ளம்
    காணிக்கை கொண்டு வந்தேன் இறைவா கனிவுடன் ஏற்றருள்வாய்
    என்னிடம் உள்ளதெல்லாம் இறைவா உமக்கென தருகின்றேன்
    இதை ஏற்பாய் இறைவா... திருப்பலிதனில் ஏற்பாய்...
    என்னை முழுவதும் உவந்தளித்தேன்
    கணிக்கை ...
    1. மலர்கள் கொண்டுவந்தேன் மலர்போல் மணம்வீச (m) -2
    கனிகள் கொண்டுவந்தேன் கனிபோல் சுவை கொடுக்க
    என்னை கொண்டுவந்தேன்.. என்னை கொண்டுவந்தேன்
    ஏற்றருள்வாய் இறைவா..
    கணிக்கை ...
    2. ஒளியினை கொண்டுவந்தேன் சுடராய் ஒளி வீச (m) - 2
    கரங்கள் விரித்து வந்தேன் என்னையே உமக்களிக்க
    அனைத்தையும் தருகின்றேன் அனைத்தையும் தருகின்றேன்
    ஏற்றருள்வாய் இறைவா..
    வா வா என்னுயிரே நீ வா... (music)
    வா வா என்னுயிரே நீ வா
    வா வா என்மனமே நீ வா..
    நீ என்னை நேசிக்கும் நாதா நீ தேடிடும் என் இதயம் நீ வா - 2
    வா வா என்னுயிரே நீ வா, வா வா என்மனமே நீ வா..
    1. என் தாயும் நீயே என் தந்தையும் நீயே (m) - 2
    என் உயிரும் நீயே என் உருவம் நீயே
    யேசுவே... யேசுவே.... -2
    வா வா என்னுயிரே நீ வா, வா வா என்மனமே நீ வா..
    2. என் வாழ்வும் நீயே என் வழியும் நீயே (m) - 2
    என் அன்பும் நீயே என் அடைப்பும் நீயே
    யேசுவே... யேசுவே.... -2
    வா வா என்னுயிரே நீ வா, வா வா என்மனமே நீ வா.
    3. என் சக்தியும் நீயே என் உண்மையும் நீயே (m) - 2
    என் மீட்பும் நீயே என் ஒளியும் நீயே
    யேசுவே... யேசுவே.... -2
    வா வா என்னுயிரே நீ வா, வா வா என்மனமே நீ வா.
    புதிய ஆண்டிலேயே புதிய நாளிலே இறைவனை நாம் புகழ்வோம்
    புதுமை செய்தவர் புனிதம் தந்தவர் எந்நாளும் போற்றிடுவோம் - 2
    இனி கவலை நீங்கி நாம் வாழ்த்திடுவோம் நம் கண்ணீர் எல்லாம் துடைப்போம்
    நம் தேவன் இயேசுவின் துணையுடனே புது நம்பிக்கை நாம் பெறுவோம்
    இனிய நாளில் புது எண்ணங்களை நாம் எழுப்பிடுவோம்
    இந்த இனிய நாளில் புது எண்ணங்களை நாம் எழுப்பிடுவோம்
    (We Wish you Happy New year - 3 Happy New year) - 2
    புதிய ஆண்டிலேயே
    1. புதுமை என்பது ஏதுமில்லை நம் மனதில் தோன்றிடும் நம்பிக்கையே (music) -2
    வழமை என்பது உயர்வு இல்லை நாம் இருப்பதில் காணும் நிறைவினிலே
    முகமுகமாய் நம் அயலாரை சந்தித்து வாழ்ந்திடுவோம்
    பழைய நினைவுகள் காயங்களை மன்னித்து மறந்திடுவோம்
    நம் பாலன் இயேசு விரும்பும் பாதையில் புதிய ஆண்டிலே தடம்பதிப்போம் -2
    புதிய ஆண்டிலேயே தடம்பதிப்போம்
    (We Wish you Happy New year - 3 Happy New year) - 2
    புதிய ஆண்டிலேயே
    2. உலகில் வாழ்த்திடும் யாவருமே நம் உறவுகள் என்றே நினைத்திடுவோம்(music)-2
    உலவும் எழிலான இயற்கையிலே நம் இறைவனையே தினம் கண்டிடுவோம்
    வறுமையில் வாடும் உள்ளங்களை அன்பாலே மீட்டெடுப்போம்
    பகிர்ந்து வாழ்வதே மகிழ்வென்று எல்லோரும் கொண்டாடுவோம்
    நம் பாலன் இயேசு விரும்பும் பாதையில் புதிய ஆண்டிலே தடம்பதிப்போம் -2
    புதிய ஆண்டிலேயே தடம்பதிப்போம்
    (We Wish you Happy New year - 3 Happy New year) - 2

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 Před 5 měsíci

    12.25 kanikai

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Před rokem

    Happy and Merry Christmas ✝️🎅✨🌹✝️Happy New 🌺Year 2023🌹✝️✨🙏🏼

  • @richardanthony.648
    @richardanthony.648 Před rokem +2

    Super anna 👌