நாத விந்து | திருப்புகழ் | பழநி | Sooryanarayanan

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2022
  • An Official CZcams Channel Of "Soorya Narayanan"
    Click To Subscribe / @sooryanarayanan
    Song : #நாதவிந்து #NadhaVindu
    #officialvideo
    #tiruppugazh
    Lyrics
    நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
    நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
    சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
    ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
    ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
    ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
    ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    நாத விந்து கலாதீ நமோநம ... லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய
    தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,
    வேத மந்த்ர சொரூபா நமோநம ... வேதங்கள், மந்திரங்கள்,
    இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,
    ஞான பண்டித ஸாமீ நமோநம ... பேரறிவுக்குத் தலைவனான
    தெய்வமே, போற்றி, போற்றி,
    வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம ... பல கோடிக்
    கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி,
    போற்றி
    போக அந்தரி பாலா நமோநம ... (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)
    இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி
    நாக பந்த மயூரா நமோநம ... தன் காலினால் பாம்பை அடக்கிக்
    கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,
    பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம ... எதிரிகளான
    சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி,
    போற்றி,
    கீத கிண்கிணி பாதா நமோநம ... இசை ஒலி எழுப்பும்
    சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,
    போற்றி
    தீர சம்ப்ரம வீரா நமோநம ... மிகவும் பராக்ரமசாலியான
    போர்வீரனே, போற்றி, போற்றி,
    கிரிராஜ ... மலைகளுக்கெல்லாம் அரசனே,
    தீப மங்கள ஜோதீ நமோநம ... திருவிளக்குகளின் மங்களகரமான
    ஒளியே, போற்றி, போற்றி,
    தூய அம்பல லீலா நமோநம ... பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்
    புரிபவனே, போற்றி, போற்றி,
    தேவ குஞ்சரி பாகா நமோநம ... தேவயானையை மணாட்டியாகப்
    பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,
    அருள்தாராய் ... உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.
    ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார
    நீதியும் ... தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப்
    படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,
    ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ... கருணை, குருவின்
    திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும்
    (சோழமண்டலத்தில்),
    ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை ... ஏழு உலகங்களில்
    உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்
    சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்
    நாயக ... சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
    ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,
    வயலூரா ... வயலூருக்குத் தலைவா,
    ஆதரம் பயில் ஆரூரர் தோழமை ... தன்மீது அன்புவைத்த
    திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை
    சேர்தல் கொண்டவரோடே முனாளினில் ... நாடியவராய்,
    அவருடன் முன்பொருநாள்,
    ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி ... ஆடலில் சிறந்த,
    விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
    ஆதி அந்தவுலாவாசு பாடிய ... ஆதி உலா எனப்படும் அழகிய
    (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ... சேரர் பெருமானாம்
    சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து
    வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
    ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. ... திரு
    ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு
    கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
    nAdha vindhuka lAdhee namOnama
    vEdha manthraso rUpA namOnama
    njyAna paNditha sAmee namOnama ...... vegukOdi
    nAma sambuku mArA namOnama
    bOga anthari bAlA namOnama
    nAga bandhama yUrA namOnama ...... parasUrar
    sEdha dhaNdavi nOdhA namOnama
    geetha kiNkiNi pAdhA namOnama
    dheera sambrama veerA namOnama ...... girirAja
    dheepa mangaLa jOthee namOnama
    thUya ambala leelA namOnama
    dhEva kunjari bAgA namOnama ...... aruLthArAy
    eedha lumpala kOlA lapUjaiyum
    Odha lunguNa AchA raneethiyum
    eera munguru seerpA dhasEvaiyu ...... maRavAdha
    Ezhtha lampugazh kAvE riyAlviLai
    sOzha maNdala meedhE manOhara
    rAja gembira nAdA LunAyaka ...... vayalUrA
    Adha rampayil ArU rarthOzhamai
    sErdhal koNdava rOdE munALinil
    Adal vempari meedhE RimA kayi ...... laiyil Egi
    Adhi antha ulA Asu pAdiya
    sErar kongu vaikAvUr nanAdadhil
    Avinan kudi vAzhvAna dhEvargaL ...... perumALE.
  • Hudba

Komentáře • 339

  • @varalakshg
    @varalakshg Před rokem +25

    Lovely singing... Thank you so much for this திருப்புகழ் series🙏🙏
    soorya and to your team. Wishing you the best in everything you do Soorya 💖

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 Před rokem +72

    எவ்வளவோ பெரிய மகான்கள் பாடி கேட்கும்போது உணரப்படாத தெய்வீகம் நீ பாடும்போது ஏற்படுகிறது கண்ணா.. இவ்வளவு சிறு பிராயத்தில் உணர்ந்து பாடி உணர்த்துகிறாய் கண்ணா.. வாழ்க பல்லாண்டு மகனே..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem +4

      மிக்க நன்றி 😊🙏

    • @madura9594
      @madura9594 Před rokem

      கடவுளுக்கும் நன்றி உனை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கும் சிரம் தாழ்ந்த நன்றி கண்ணா கனவில் கூட உன் குரலும் உன் முகமுமே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mageshkumar7956
      @mageshkumar7956 Před rokem

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏varthai varavillai adhanal ungal isaiku nandrigal pala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nirmalaravindranathan4617
      @nirmalaravindranathan4617 Před rokem

      Super kanna

    • @narayananm6607
      @narayananm6607 Před rokem +1

      Unmaiiii

  • @vk5972
    @vk5972 Před rokem +32

    பெற்றோர்களுக்கு தான் நன்றிகள் சொல்ல வேண்டும் இப்படி ஒரு மகான் போன்ற பிள்ளையை நமக்கு தந்ததற்காக இவர் குரலும் முகமும் நம்மை (இறைவனை காண்பது போன்று) இறைவனுக்கு அருகில் அழைத்து செல்கிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanbalu5876
    @murugesanbalu5876 Před rokem +12

    என் அப்பன் முருகப் பெருமான் அருளால் இந்தக் குழந்தையின் தேனினும் இனிய குரலில் தெவிட்டாத அமிழ்தினை அருந்தும் பாக்கியம் எங்களுக்கு கிட்டியது.நன்றி மகனே

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 Před rokem +13

    சரியான உச்சரிப்புடன் அழகு மழலைத் தமிழில் பாடும் உனக்கு பல கோடி ஆசிர்வாதங்கள்😘 செல்லம்💐

  • @deviraksha.m.v6785
    @deviraksha.m.v6785 Před rokem +8

    நீ தெய்வ குழந்தையடா தங்கமே❤️

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Před 20 dny

    அந்த ஞானபண்டிதனே வந்து பாடியது போல் இருந்த்து. நீடூழி வாழ்க

  • @Mahendrakumar-hw1sq
    @Mahendrakumar-hw1sq Před rokem +8

    அருமை! அருமை! திருஞானசம்பந்தன் போல் உள்ளது.! 🙌🙌 வாழ்த்துக்கள்

  • @inoino1976
    @inoino1976 Před rokem +11

    வாழ்த்தவா ஒரு போதும் நம்மால் முடியாது 🙏வணங்கவே என்று நம்மை ஆசீர்வாதம் செய்யும் அளவிற்கு ஞானம் அன்பு அற்புதம் நிறைந்த அவதாரம் ❤
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @sangeethaprabhu76
    @sangeethaprabhu76 Před rokem +3

    அற்புதம்.. இந்தத் திருப்புகழைக் கேட்க நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @yogaraj2307
    @yogaraj2307 Před rokem +2

    உன் அழகு தமிழால் திருப்புகழ் க்கு மேலும் அழகு தந்துள்லாய் மகனே சூர்யா உனது புகழ் ஓங்குக, வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா 🥰❤️

  • @jayalakshmikrishnamurthy7291

    முருகன் அருள் நிறைந்த தெய்வீக குழந்தை. அருமையான பாடல்

  • @momthegreatest
    @momthegreatest Před rokem +6

    தான தந்தன தானா தனாதன
    தான தந்தன தானா தனாதன
    தான தந்தன தானா தனாதன ...... தனதான
    ......... பாடல் .........
    நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸ்வாமி நமோநம ...... வெகுகோடி
    நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
    சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
    ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
    ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
    ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
    ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    நாத விந்து கலாதீ நமோநம ... லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய
    தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,
    வேத மந்த்ர சொரூபா நமோநம ... வேதங்கள், மந்திரங்கள்,
    இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,
    ஞான பண்டித ஸ்வாமி நமோநம ... பேரறிவுக்குத் தலைவனான
    தெய்வமே, போற்றி, போற்றி,
    வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம ... பல கோடிக்
    கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி,
    போற்றி
    போக அந்தரி பாலா நமோநம ... (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)
    இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி
    நாக பந்த மயூரா நமோநம ... தன் காலினால் பாம்பை அடக்கிக்
    கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,
    பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம ... எதிரிகளான
    சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி,
    போற்றி,
    கீத கிண்கிணி பாதா நமோநம ... இசை ஒலி எழுப்பும்
    சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,
    போற்றி
    தீர சம்ப்ரம வீரா நமோநம ... மிகவும் பராக்ரமசாலியான
    போர்வீரனே, போற்றி, போற்றி,
    கிரிராஜ ... மலைகளுக்கெல்லாம் அரசனே,
    தீப மங்கள ஜோதீ நமோநம ... திருவிளக்குகளின் மங்களகரமான
    ஒளியே, போற்றி, போற்றி,
    தூய அம்பல லீலா நமோநம ... பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்
    புரிபவனே, போற்றி, போற்றி,
    தேவ குஞ்சரி பாகா நமோநம ... தேவயானையை மணாட்டியாகப்
    பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,
    அருள்தாராய் ... உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.
    ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார
    நீதியும் ... தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப்
    படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,
    ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ... கருணை, குருவின்
    திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும்
    (சோழமண்டலத்தில்),
    ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை ... ஏழு உலகங்களில்
    உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்
    சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்
    நாயக ... சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
    ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,
    வயலூரா ... வயலூருக்குத் தலைவா,
    ஆதரம் பயில் ஆரூரர் தோழமை ... தன்மீது அன்புவைத்த
    திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை
    சேர்தல் கொண்டவரோடே முனாளினில் ... நாடியவராய்,
    அவருடன் முன்பொருநாள்,
    ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி ... ஆடலில் சிறந்த,
    விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
    ஆதி அந்தவுலாவாசு பாடிய ... ஆதி உலா எனப்படும் அழகிய
    (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ... சேரர் பெருமானாம்
    சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து
    வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
    ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. ... திரு
    ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு
    கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.

    • @manibalan397
      @manibalan397 Před rokem +2

      மிகவும் அருமையான விளக்கவுரை நன்றி நன்றி

    • @user-ep6je2te6f
      @user-ep6je2te6f Před měsícem

      🙏🙏🙏❤❤❤

  • @Swissthamizhachi
    @Swissthamizhachi Před rokem +1

    ஈஸ்வரா என் மகனையும் இப்படி ஆசீர்வதியும்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +4

    🙏💐திருநீலகண்டம்🐘💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🍁🥥🥀🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏🌹🐓ஓம் சரவண பாவா🌹🦚🙏🙏

  • @srieswariindustries7558
    @srieswariindustries7558 Před rokem +4

    நாத விந்து கலாதி நமோ நம
    வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
    ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி
    நாம சம்பு குமாரா நமோ நம
    போக அந்தரி பாலா நமோ நம
    நாக பந்த மயூரா நமோ நம பரசூரர்
    சேத தண்ட வினோதா நமோ நம
    கீத கிண்கிணி பாதா நமோ நம
    தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ
    தீப மங்கள ஜோதி நமோ நம
    தூய அம்பல லீலா நமோ நம
    தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
    ஈதலும் பல கோலால பூஜையும்
    ஓதலும் குண ஆசார நீதியும்
    ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
    ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
    சோழ மண்டல மீதே மனோஹர
    ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூர
    ஆதரம் பயிலாரூரர் தோழமை
    சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
    ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
    ஆதி அந்தவுலாவாசு பாடிய
    சேர்தல் கொங்குவை காவூர் நன்னாடதில்
    ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

  • @vk2153
    @vk2153 Před rokem

    Appa Shiva.All of them are God 🙏 Shiva act. My God 🙏

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Před rokem +1

    திரு முருகனின் பரிபூரண அருள் உனக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @gomathysuryanarayanan8054

    அப்படியே மனதை உருக்குகிறது.நன்றி.

  • @mr_3kids280
    @mr_3kids280 Před rokem +5

    இதுவரை என் தாய் ஸ்ரீ அம்பிகையை வணங்கிய என் கை இப்போது உன்னை வணங்குகிறது உன் பாடல் களை கண்டு நான் மெய் சிலிர்த்து போனேன் உனக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் உண்டு நீ நீடூழி வாழ்க எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க ❤️🙏❤️

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      சந்தோஷம் சார். மிக்க நன்றி 🙂🙏

  • @vijayalakshmivenkataraman3517

    Miga miga arumaya paadukirai in paatti kettu muruganai oododi Arul palikka vanthuvidvar wishes sooriyakannu

  • @abiramisubramaniyan98
    @abiramisubramaniyan98 Před rokem +2

    அருமை.... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏

  • @venkateswaranramamoorthy5495

    குருநாதாள் பரிபூரண அனுக்ரஹம் கிடைக்க மனதார ப்ராத்திக்கிறேன் 🌹

  • @bmalarvizhi8793
    @bmalarvizhi8793 Před rokem +1

    காஞ்சிப் பெரியவர் அருளாசிபெற்றகுழந்தையாக பார்க்க பார்க்க பெரியவராகவே தெரிவார் எனக்கு. வாழ்க பல்லாண்டுகள் நலமாக. இறையாற்றலுடன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      மிக்க நன்றி. எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙏

  • @kanagamuthu4056
    @kanagamuthu4056 Před rokem

    முருகப்பெருமான் அவதாரம் ஞானம் அறிவு அழகு பண்பு தமிழ்ப்பற்று அனைத்தும் உள்ளது.

  • @user-oq2bz7ht9d
    @user-oq2bz7ht9d Před rokem +2

    மகிழ்ச்சி அருமை வாழ் வானதேவர்கள்

  • @kokilasubramanian4919
    @kokilasubramanian4919 Před rokem +4

    மிகவும் அருமை தங்கம்....🙏🙏🙏🙏

  • @krishnamoorthy4021
    @krishnamoorthy4021 Před rokem

    Vazhga pallandu pallandu, valarga yirai pani. Ashirvad

  • @ravichandranr8612
    @ravichandranr8612 Před rokem

    மார்கழி மகா உற்சவம் தாங்கள் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி சகோ தரி

  • @anithavenugopal8286
    @anithavenugopal8286 Před rokem +1

    Super ponnu makane🙏🙏👍

  • @vk2153
    @vk2153 Před rokem

    Om Na ma Shivaya. Appa world is your ✋hands. Appa

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Před 9 měsíci

    கண்ணா உன் பாடலுக்கு ஈடில்லை இறைவனே ஓடி வருவான்...வாழ்த்துகள்

  • @jeyarani3222
    @jeyarani3222 Před 2 měsíci

    இனிமை
    வாழ்க.
    🎉🎉🎉
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanisubramaniam5441

    Awesome super arumai kanna best wishes Om namasivaya

  • @sobhanaramaswamy6428
    @sobhanaramaswamy6428 Před rokem

    Sooryanarayana arumai. Keep it up. Velu mayilum.

  • @kothandanvenkatesan654
    @kothandanvenkatesan654 Před 7 měsíci

    God bless you my child.god given boon in your vouce ..god always with you .

  • @vk2153
    @vk2153 Před rokem

    God 🙏 Shiva think.u do. Very very beautiful. 💯,%God Shiva,s blessing is u

  • @usharavi4152
    @usharavi4152 Před rokem

    Thank you ma,Om Mukambika Devi Thunai 🙏🙏🙏

  • @smuruganantham1373
    @smuruganantham1373 Před rokem

    மகனே வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @RajeshKumar-xi9xc
    @RajeshKumar-xi9xc Před rokem +2

    You are God's GIFTED child. God bless you with good health and Gnanam. You will go to places high in future 👌👏🙌🙌

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Před 9 měsíci

    அருமை கண்ணா உலகம் எங்கும் உன்குரல் ஒலிக்கும் வாழ்த்துகள்

  • @usharavi4152
    @usharavi4152 Před rokem +1

    unnaal mattumthan mudiyum,...Emperor of the music world....

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem +1

    அப்பனே திருப்புகழை அனுபவித்து அருமையாக பாடும் நீங்கள் முருகன் கொடுத்த வரம்.மேலும்மேலும் வளர வாழ்த்துக்கள்.இலங்கை இருந்து

  • @shriranganayagiagencies1274

    இளம் வயதில் முதிர்ச்சியடைந்த பாடகர் வணங்கி மகிழ்கிறேன் ‌‌🌷🌷

  • @raghumahadik9513
    @raghumahadik9513 Před rokem

    வாழ்க வளமுடன். உன் தந்தை தாய் வரம் பெற்றவர்கள்

  • @yuvan2270
    @yuvan2270 Před 4 měsíci

    உன் குழந்தை குரலில் கேட்க கேட்க என் கண்கள் ஆனந்தத்தில் குளமாகிறது. நீ நீடூழி வாழ்க என் தங்கமே.

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před rokem

    Superoooooooooooooooooooooooooooooooooooooooosuperooooooooooooooooooooooosuper.jor kannea aaamdavan.anugrahathudan inthapattiyin aaseervathamgal proceed. Keetitup. Go-ahead.

  • @srivarashakthivinayagartem3365

    Super singing all the best wishes from sri varashakthi vinayagar temple nellikuppam cuddalore 👌 ♥ 🙏 om muruga 🙏🕉

  • @kumarasubramani2515
    @kumarasubramani2515 Před rokem

    Giriraaja..seerpaadha sevayum...vayaluraa..
    murugaaa..😇😇😇

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 Před rokem +2

    பாடும் 🌷திறமை 🌷அனைத்தும்🌷 உன்னுள் 🌷புதைந்து🌷 கிடக்கிறது🌷 போலும்.🌷 தோண்டி 🌷எடுக்க 🌷எடுக்க🌷
    வந்து 🌷கொண்டே 🌷இருக்கிறது🌷 மகனே🌷 சூர்யா🌷 வாழ்க🌷 வளமுடன் 🌷

  • @aarivazagan2217
    @aarivazagan2217 Před rokem

    Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க Thank kutty

  • @usharavi4152
    @usharavi4152 Před rokem

    Om Mukambika Devi Thunai 🙏

  • @nagarajannagarajan3808

    பிறவிப்பயன்பெற்றார் இந்த ஞானக்குழந்தை❤❤❤❤

  • @padmavathykannan3562
    @padmavathykannan3562 Před rokem +2

    You are singing Thiru pughazh songs in an amazing way. Lord Muruga's blessings will always be with you.

  • @meenakshik.s1332
    @meenakshik.s1332 Před rokem

    வாழ்க வளமுடன். அமோகமாக ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும்

  • @jamunaprakash1184
    @jamunaprakash1184 Před rokem

    Thiru Ghana sambandar meendum pirandu vandar pol ulladu vazha valamudan

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 Před rokem +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @jamunaprakash1184
    @jamunaprakash1184 Před rokem

    Thiru Ghana sambandar meendum pirantharo vazha valamudan

  • @vijayshankar8900
    @vijayshankar8900 Před rokem +2

    I am 62 plus. No matter , I consider you as a little cute beautiful God and fall on your feet. You are making our days. I realize more success through your renderings. You are a Goddess gift for us. All the senior, "famous", established, moneyed singers should learn from you.
    S.Shankar, Ghaziabad.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem +1

      Dear Shankar ji
      Thank you so much for your love on Soorya.
      People like you, gives blessings and encouragement to Soorya and Bhagavan's blessings, he is going to the right path and makes everyone to feel the Bhakthi 😊🙏

    • @vijayshankar8900
      @vijayshankar8900 Před rokem

      @@Sooryanarayanan Namasthe. Best wishes. Soorya is extraordinarily extraordinary.

    • @sivagamin9923
      @sivagamin9923 Před rokem

      🙏🙏🙏👏

  • @GeethaVenkatakrishnan-nx9tj

    Blessed.child.God Bless

  • @nahathurairaju1131
    @nahathurairaju1131 Před rokem +1

    Thankful 🙏

  • @balag815
    @balag815 Před rokem +1

    I am a fan of ur voice, please follow ur old simple style so what we can enjoy ur voice. Now with ur talent u have created a large fan base let them enjoy ur voice. Don't let television channel affect ur u tube channel🙂. I can clearly feel the change in the past 1 week videos.I need old sooryanarayanan vocal🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem +1

      Thank you Sir.
      For giving better quality to audience, we recorded Thiruppugazh songs at studio. 🙏

    • @sivagamin9923
      @sivagamin9923 Před rokem

      @@Sooryanarayanan அற்புதம்

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Před 2 měsíci

    Swamimalai muruga saranam🙏

  • @marimuthur7509
    @marimuthur7509 Před rokem +1

    வாழ்த்துக்கள்
    அருள்தரும் நீள்நெடுங்கண்ணி உடனமர் அருள்மிகு அண்டமுழுதுடையார் உன் வெற்றிக்கு துனைநிற்பார் 🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      கண்டிப்பாக அவர்கள் அருள் அன்றி வேறொன்றும் இல்லை 😊. மிக்க நன்றி 🙏🙂

  • @kamalasubramanian9859
    @kamalasubramanian9859 Před rokem +2

    Absolutely stunning performance. Dear Sooryanarayanan. God bless you and your parents and all your Gurus and your entire team 🙏. 🙏.

  • @esakkiselvan4978
    @esakkiselvan4978 Před rokem +1

    செல்வமுத்துகுமரா
    அறுபடைவீடு திருப்புகழ் அனைத்தும் அருமை மா அவன் அருள் என்றும் இருக்கட்டும் கண்ணா 😇😍💚

  • @dr.periasamykarmegam9696

    Great
    வாழ்க வளமுடன்

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 Před 4 měsíci

    ❤சரணம்

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Před rokem

    ஆகா கடவுளின் அருள் கண்ணா

  • @RameshKumar-re4zs
    @RameshKumar-re4zs Před rokem +1

    No words to express bliss. Blessings Chi Sooryanarayanan.

  • @kavithaprabhakar2883
    @kavithaprabhakar2883 Před rokem

    மிக்க நன்றி சூர்யா தம்பி.நீடுழி வாழ்க.

  • @bharathikannamma6800
    @bharathikannamma6800 Před rokem +1

    Lots of love and big hug my little muruga🤗

  • @krtube9297
    @krtube9297 Před rokem

    ஆறுபடை திருப்புகழ் பாடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍🥰🥰😘😘😘😘na wait pannara antha video ku

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem

      ஏற்கனவே சூர்யா பாடியுள்ளார். அவனது CZcams channel சென்று பார்க்கவும். மிக்க நன்றி 🙂🙏

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 Před rokem

    Romba arbutham Surya, patti in Asheervadam.

  • @jayasreejayachandran2989

    மிகவும் அருமை!! வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் நலமுடன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @raghavanak9719
    @raghavanak9719 Před 11 měsíci

    ❤ மிக அருமையான குரல் வளம்❤
    🎉திரு முருகன் அருள் புரிவார் 🎉

  • @Pranesh_Rajasekaran
    @Pranesh_Rajasekaran Před 10 měsíci

    முருகா !

  • @krishnamoorthysubramanian2506

    மிகவும் அருமை.வாழ்க வளமுடன்

  • @muthusamyperumalgounder4008
    @muthusamyperumalgounder4008 Před 4 měsíci

    Beautiful Exlend Wonderful

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Před rokem

    பெற்றோர்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியமே இப்படி ஒரு தெய்வக் குழந்தை அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் கிடைத்துள்ளது ரொம்ப அழகான கானம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது

  • @suji8970
    @suji8970 Před 7 měsíci

    Arumai thambi, valga valamudan

  • @pandianmsm3094
    @pandianmsm3094 Před rokem

    முருகன் அருள் பெற்ற நீங்கள் தெய்வீகம் நிறைந்தவரே. உங்கள் குரலின் தெய்வீமும், இனிமையும், இசைத்தமிழும் திருப்புகழ், திருவாசகம், தேவாரம் வழியாக பட்டி தொட்டியெல்லாம் சேர்ந்து அன்பர்கள் மனம் குளிரவேண்டும் அப்பனே! முருகா!அருள்வாய் கந்தா! கடம்பா! கதிர்வேலா! வள்ளி மணாளா!!! 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணா பவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před rokem

    Always suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper alllllllll the best

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Před rokem

    அருமை அருமை

  • @c.v7349
    @c.v7349 Před rokem

    ஆஹா....அருமை.

  • @srinivasans6294
    @srinivasans6294 Před rokem

    Really God blessed child. Vazgha valamudan

  • @sathyavaniprabhakar4837
    @sathyavaniprabhakar4837 Před 2 měsíci

    Lovely singing

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 Před rokem

    அருமைடா கண்ணா👍👌🤜

  • @parvathyraman756
    @parvathyraman756 Před rokem

    No words express Guru kataksham paripoornam konthai Big salute 🙏 👏 🙌 👌 👍 Soorya.Blessed parents 💙 ❤ 👏 of child prodigy Master Sooryanarayanan🙏🙏🙏🙏🙏

  • @sathyavaniprabhakar4837
    @sathyavaniprabhakar4837 Před 2 měsíci

    God bless you

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Před rokem

    ஒரு நல்ல திருப்புகழ் பாட்டு தம்பி அருமையாக பாடி காதுக்கு விருந்து அளித்தார்கள் மிகவும் நன்றி தம்பி

  • @ponnuthuraichandrakumary7381

    Blessed child. At this age what talent to sing like this

  • @venkatesandr541
    @venkatesandr541 Před rokem

    Lord murugan will bless u

  • @madboyma3333
    @madboyma3333 Před rokem

    மிகவும் அருமை. இறைவனின் ஆசீர்வாதத்தால் இந்துமதத்தின் பெருமையை உலகமெங்கும் பரப்புவாய்.

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 Před rokem

    சபாஷ் தம்பி முருகன் திருவருள் பெற்று வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @usharavi4152
    @usharavi4152 Před rokem +1

    VOICE 👌👏🙏🙏🙏

  • @muthukkaruppankaruppan5439

    🙏 ஓம் சரவணபவ 🙏 மிக்க அருமை உனது பாடல் கேட்கும் போது எனது மனக்குழப்பம் தீர்ந்தது 🙏 ஓம் சரவணபவ 🙏

  • @samyvp3889
    @samyvp3889 Před rokem

    முற்பிறவியில் நீங்கள் ஒரு ஒரு மிகப் பெரிய வித்வான் பட்டம் பெற்ற நபர்.
    இதனால் தான் இந்த நிலைமை உருவாகி வருகிறது தம்பி.
    லட்சத்தில் ஒருவர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
    எங்களுக்கு மே நிறைந்த சிவ ப்பரம்பொருள் உதவி செய்து கொண்டு வருகின்றது.
    யான் உணர்ந்து கொண்டேன்.
    நல்லது மகிழ்ச்சி சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் பரவசம் உண்டானது

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Před rokem +1

      தங்களின் அன்பிற்கும் ஆசிக்கும் மிக்க நன்றி 🙂🙂🙏

  • @annamalai8635
    @annamalai8635 Před 10 měsíci

    ❤ om muruga sarabanabava❤

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 Před rokem

    Vazhga pallandi