புரட்சியின்றி பொற்பரதம் - வீண் கனவு, அறம்பாடி சித்தர் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • பொங்குமோர் புரட்சியின்றி பொற்பரதம் படைப்பேனென்று பங்கயத்தை ஆளவந்து வெங்கயமை முற்றியதோர் வீண் கனவு கண்டவரை பன்றிகள் தான் அஞ்சியழும் பைந்தமிழர் இனத்துள்ளே பாலூட்டும் வீரத்தை பருகி வந்த பகலவனார் சீறியெழ பாதகியோ வீறிடாது பணிந்தபடி பாதம் தொட்டு பைம்பொன் பொருள்காக்க பணிந்து நின்று குனிந்தபடி பாவங்களை குவித்தபடி பக்கதுணை நின்றவண்ணம் பார்த்திபனை எதிர்த்திடுவாள். இனமீன்ற இழியோளின் எண்ணரும் தூண்டுதலால் மனங்கொன்ற மாநிலத்தார் மாடு தின்றும் மடமை கொண்டும் குணக்குன்றில் நின்ற எம்மான் குரல்வளையை அறுக்க வந்தே கொள்ளுகின்ற தோல்வி கண்டு கனல் விழியன் கடுஞ்சினத்தை காட்டியதால் கதை கொழிக்கும் கலைநடனக் காவியத்தார் மலைநிலமே மழைநிலமாய் மாளாது இடர்களையே மாறிமாறி சுமக்கும்வண்ணம் மாரி வாரிப் பொழிந்திடவே மாதேவன் ஆணையிட்டான். மலர்மனம் கொண்டவனின் மக்கட்பண்பறிய மன்னுயிர்கள் கண் திறவா மற்றபிற மண்ணுயிர்கள் மன்னவனின் மதிப்பறிய மலை ஆழம் கண்டவனின் மார் ஆழமறிந்தவளோ மாலவனின் மங்கையன்றி மண்ணுலகில் யாருளரோ ? தலைமீது திங்களையே தாங்கியதோர் தழல்மெய்யன் தலைவியவள் தாளாது துயருற்றால் தாங்கிடுமோ தரணியுமே ! மன்னனுக்கெதிராகி மாரகம் விதைக்க வந்த மானமிலா மங்கை மக்கள் மறுபடியும் முயன்றதனால் மறலியின் ஊழ்வினையோ மறுக்காது அறுக்குமென மாதொருபாகனுமே மறைக்காதுரைத்ததையே யாதொரு இன்னலுக்கும் எள்ளளவும் அஞ்சாது ஈசனுக்கே அஞ்சிடும் யான் எதிர்பார்ப்பு ஏதுமின்றி இம்மையிலே இன்மையொடு என் நாவால் இயம்புகிறேன். கொல்லா நெறியினையே கொள்ளும் கொற்றவனை எல்லாவுயிர்களுமே எழுந்து நின்று வணங்கிடவே நில்லா அருள் மழையை நீலகண்டன் பொழிந்திடவே நீதி வெல்லும் காலம் கொண்டு நிலமெல்லாம் நிறைந்திடுமே !
    🌸 ஈறு நெருங்கிடும் இருண்ட காலத்தை ஈசனடியவர் எச்சரித்துமே ஈனரினங்களும் இரக்கமின்றியே இறுமாப்பொடு எண்ணமிழுக்கென இயங்குமே ! ஊறு விளைவித்தே உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஓடும் நஞ்சினால் உள்ளம் வஞ்சகம் உடைய செயலினால் உண்டி நிறைத்திடும் ஊத்தை சடலத்தால் உறைய நிறைந்ததிவ்வையகம். ஆறு பொழுதினை அணிந்த அரசுக்கு அரசனவனுமே ஆணவந்தனை ஆணிவேரென அறைந்த குழுவுடன் அவனி முழுமையும் அணி திரட்டியும் ஆலகாலனே அதிர்ந்து போயிட அத்து மீறியே ஆட்டம் போட்டபின் செத்து மடிந்திடும் செம்மாந்தரை தின்ற தீவனம் திருந்த மனமின்றி திரும்பத் திரும்பவே தீதின் உச்சத்தை தேர்வு செய்திட தீமை கூடவே தோள்கள் தினவுடன் தொடரும் யுத்தமே. ஊழில் உழன்றதோர் உறைந்த பனியிலே உலவும் உளியத்தை உடைய தேசமும் உறுமி எழுந்திடும் காலம் வந்ததும் கண்டம் இரண்டணி கொண்டு போரிட கருகும் நிலமுமே. கருவம் கொண்டவர் களத்தை கண்டபின் கலைய மனமிலாதெரியும் அகிலமே ! முடிந்த ஓலமோ முற்றும் அடங்கிட கனிந்த அமைதியால் அகிலம் நலம் பெற அன்பின் திலகமாய் அறனின் வடிவமாய் பண்பின் கழகமாய் பணிவின் சிகரமாய் கொன்றைவேந்தனின் குணக்கொழுந்தென கொழிக்கும் கோனுமே உதிக்கும் போழ்திலே உமையின் உள்ளத்தில் உவகைக்கெல்லையே ஒருபொழுதுமே இல்லையே. ஆண்மை அணிந்தவன் அன்னை பரதத்தை ஆளவந்ததை அறிந்த பலருமே கேண்மை ஏங்கிட கீர்த்தி ஓங்கிட மேன்மை தாங்கிய மீட்பனவனிசை மெருகு ஏற்றவே காக்கும் ஈசனின் கருணையே பெருங்கருணையே !
    ... 🌸 மங்கலம் பொங்கிடும் மன்னவன் மலர்ந்ததோர் மறுமுனை ஆண்டுதான் திங்களை ஈன்பின் திருவுடல் மாய்ந்ததும் தீமையை ஈன்றிடும் வெஞ்சின ஆண்டொன்று விரியும் அவ்வரிசையுள் வீரியம் கொண்டதாய் அறுபதின் அடுக்கிலே அமைந்த எண்ணறிந்ததில் அருந்தமிழ் எண்ணொடு அணைக்குமே திக்குகள். பெருவள நிலமெலாம் பேரிடர் உண்ணவே பெற்றவள் போலவே பிழையிலா அன்புடை கொற்றவன் குணமிதோ கொல்லா நோன்புடை கொள்கையாளனை குற்றுயிராக்கிட கூடவே இருந்துதான் குழியினை பறிக்குமே. எல்லாம் அறியவே இல்லறம் துறந்தவன் எண்ணித் தெளிந்திட முயன்றால் இயலுமே. தெள்ளத் தெளிவென தெரிந்திட வேண்டுமோ ? தீவிழி கொண்ட எம்திரிபுரையாளனின் திருவருள் தீண்டிட்டால் திறம்பட வாக்குகள் தெறித்திடும் வாயிலே. வரும் அவ்வாண்டிலே வாதையால் வரம்பெறும் வாழ்க்கையை வருத்திடும் வேதையால் வேரிடும் விதைகளால் விளைவதோ வேதனை வீறிடும் விதியது வென்றதும் விழிவழிந்தோடிட சோதனை சூழ்ந்திட சொல்லிட வலுவிலா சாதனை கண்டதோர் சரித்திரம் சாற்றிட சாம்பசிவனது சம்மதம் கோருவேன். அறுவடை அனைத்தையும் அமைத்தவர் வேரெவர் ? அகிலத்தை அழுக்கினால் நிறைத்தவர் பலருமே அன்பொடு நீதியை ஆழமாய் புதைத்ததே அறம் விழ காரணமாகவே அறிந்ததை ஐயன் சிவனது அருட்பெரும் தயவொடு அண்ணல் நலத்திற்கே அர்ப்பணமாக்குவேன். சொற்களின் சூத்திரன் சுந்தரனாதலால் சொற்சுவை ஊட்டியே சுடர்விடும் பாக்களால் அழகுறு தமிழொடு அவன் பதம் வருடுவேன். அண்டிடும் ஆண்டினில் அல்லல்கள் எழுவது அனல்மழை ஒப்பவே அதனுள் சிக்கிடார் அம்மையப்பனின் அருளைப் பெற்றவரல்லாதனைவரும் அழுது புரண்டபின் விந்தை உலகமே விரிந்து வெளிவரும் விடியல் நலம் தரும். வெற்றிவேந்தனாய் வியக்க வலம் வரும் வீரத்திருமகன் ஆரத்தழுவிடும் அடிமையாமிவன் ஆவி அதுவரை அகன்று போயிடாதவனை நாடுமே ஆவலோடு எம்மகத்துள் வாழ்ந்திடும் சிவனைத்தேடியே சிந்தை மகிழுமே !

Komentáře • 4

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 15 dny +4

    ❤ வாழ்த்துகள் 🙏🙏🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 197.
    🌸 அம்மையப்பன் அணுகிடும்
    அறந்தாங்கி வாழ்ந்திடும் அனைவருக்கும் அனுதினம் வீடு பேறு கிட்டிடும் விடுதலை நிச்சயம். அன்பளிக்க ஆருமிலா அனாதை அபலையரும் அன்னை அத்தன் இல்லெனினும் ஆருமற்ற எளியோரும் நன்மையுறும் நாதியின்றி நாளெல்லாம் நலிந்தோரும் நல்லுள்ளம் கொண்டவராய் நாதனிடம் முறையிட்டு நமனுலகே நடுங்கும்வண்ணம் நெஞ்செரிந்து சாபமிட்டால் நெடுநிலத்து வேந்தெனினும் நீணிலத்தை ஆண்டிடினும் கொடும் பாவம் கோடியுற கொற்றமுடன் குடை சாய கொண்ட நிலம் பறிபோக குற்றுயிராய் படை சாகும். தொற்றுயிர்கள் துன்பம் தர முற்றுபெற்ற புண்ணியமே மூலதனம் இழக்குமென முக்கண்ணன் எச்சரிப்பான் வெட்டனவே நட்டம் வர வென்ற வளம் யாவையுமே விரைவாக வீழ்ந்திடுமே நீதிமானுக்கெதிராக நெஞ்சார அறம் கொன்றால் ஆதி சிவன் அடிக்கும் அடி அலகிலாது வலிக்குமென சேதி சொல்லி வாக்குரைப்பேன் சிற்றினமே செவி சாய்ப்பாய். சித்தனாய் யானிருந்து சீதளத்து நீரருந்தி பித்தனின் பெயருரைத்து பிறவி கடனேற்று நித்தமும் நிலம் வணங்கி நேரிட விரும்புவதோ வித்தென விரியும் அந்த வேந்தனின் வருகைக்கே !
    .

  • @apostiveman1853
    @apostiveman1853 Před 15 dny

    🙏🤍✨

  • @arampadiyarin-immortal-ruler

    சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய
    chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD