Thiruchendur Temple |பாதயாத்திரை என்றால் என்ன | Hindu temple pathayathirai

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2020
  • பாதயாத்திரை என்றால் என்ன | திருச்செந்தூர் பாதயாத்திரை | Hindu temple pathayathirai
    பாதயாத்திரை
    பாதயாத்திரை என்பது விரதமுறையைக் கடைப்பிடித்து காலில் செருப்பு அணியாமல் நடந்தே தங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் முறையாகும்.
    யாத்திரை என்ற சொல்லுக்கு திருத்தலப் பயணம் என்றும், பாத யாத்திரை என்பது நடந்தே திருத்தலப் பயணம் மேற்கொள்ளுதல் என்றும் ஆன்மீகத்தில் விளக்கம் தரப்படுகிறது.
    பழனி, திருச்செந்தூர், சபரிமலை உள்ளிட்ட திருத்தலங்களுக்கு மக்கள் பாத யாத்திரை செல்கின்றனர். குளிர், வெயில், பனி என எல்லா காலநிலையிலும் விரதமுறையைப் பின்பற்றி கரடுமுரடான பாதையில் வெறும் காலில் நடந்து மன உறுயோடு இறைவனை வேண்டி பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்கின்றனர்.
    இந்நிகழ்வில் பெரும்பாலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என கூட்டம் கூட்டமாக மக்கள் நடந்து செல்கின்றனர்.
    பாதயாத்திரையின் போது தெய்வங்களுக்கு ஏற்ப வேண்டுதல்களை நிறைவேற்ற இருமுடி, காவடி உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு நடந்து சென்று வழிபாடு செய்கின்றனர்.
    தெய்வங்கள் குறித்த பாடல்களைப் பாடியும் ஆடியும் கோசமிட்டும் உற்சாக மனதோடு இறை நினைப்பில் பயணம் செய்கின்றனர்.

Komentáře • 3