கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம்| Morning Prayer in Tamil . ‘உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்'

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2024
  • #TamilBibleWisdomஅர்ப்பண
    ஜெபம் : • Kattugal udaiya Jebam ...
    அதிகாலை ஜெபம்
    தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்!
    தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்!
    இயேசுநாதருடைய திருநாமத்தினாலே எழுந்திருக்கிறேன் படுக்கையிலே நின்று எழுந்தது போல பாவத்தை விட்டு எழுந்து மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னை தற்காத்தருளும் சுவாமி.
    இயேசுவின் திரு இருதயமே நாங்கள் கட்டிக் கொள்ளும் துரோகங்களுக்கு பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மை தானே பலியாக ஒப்புக் கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும் அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும் கிரியைகளையும் படும் துன்ப வருத்தங்களையும் தூய கன்னி மரியாளின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும், இந்த நாளுக்கும், சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொள்கிறேன் சுவாமி ஆமென்!
    காவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்
    எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும். ஆமென்.
    பரிசுத்த ஆவி ஜெபம்
    பரிசுத்த ஆவியே எழுந்தருள்வீர் இறை மக்கள் உள்ளங்களை உம் ஒளியால் நிரப்புவீர் அவற்றில் அன்புத்தீயை மூட்டியருள்வீர். உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகை புதுப்பித்தருளும். இறைவா உம் மக்களின் உள்ளங்களை பரிசுத்த ஆவியானவரின் ஒளியால் தெளிவுபடுத்தினீரே அப்பரிசுத்த ஆவியானவரால் நாங்கள் சரியானவற்றை உணரவும் அவருடைய ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை வேண்டுகிறோம் ஆமென்!
    இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
    இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம் . நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து ,இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும் . தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவரது குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம் .உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும் . இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் .பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும் ,அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும் .ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் ,அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக .
    இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே , இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் .அவர்களை ஆசீர்வதியும் ,அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும் .சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் ,மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம் .
    திவ்விய இயேசுவே ! முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் . - ஆமென் .
    திருப்பாடல்கள் 91
    திருப்பாடல்கள் 121
    Join this channel to get access to perks:
    / @tamilbiblewisdom2022
    Whatsapp Link- chat.whatsapp.com/IbVJKPG4YDY...
    CZcams Link - / tamilbiblewisdom2022
    Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel.
    #இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom
    INSTAGRAM - / tamilbiblewisdom2022
    FACEBOOK - profile.php?...
    SPOTIFY open.spotify.com/show/55Pq7fr...
    SUBSCRIBE TO THIS CHANNEL TO LISTEN TO TAMIL CATHOLIC DAILY BIBLE READINGS.
    அன்றாட இறைவார்த்தையை கேட்க இந்த channel-லை subscribe செய்து கொள்ளவும்.
    today bible reading in tamil
    இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம், இயேசுவின் திருஇருதய செபம், குடும்ப ஜெபம்,Yesuvin thiru iruthayathirku kudumpathai oppukkodukum jebam,Yesuvin thiru iruthaya sebam,
    இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம், இயேசுவின் திருஇருதய செபம், குடும்ப ஜெபம்,Yesuvin thiru iruthayathirku kudumpathai oppukkodukum jebam,Yesuvin thiru iruthaya sebam,Thiru Iruthaya Jebangal

Komentáře • 10

  • @devakialogan5322
    @devakialogan5322 Před 28 dny

    ஆமென் 🙏🏼ஆமென் நன்றி இயேசு அப்பா உமக்கே புகழ் துதி மகிமை தகப்பனே ஆமென் 🙏🏼ஆமென் 🙏🏼அல்லேலூயா 🙏🏼

  • @user-hp4lo5kr9k
    @user-hp4lo5kr9k Před 2 dny

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @amanilatour6518
    @amanilatour6518 Před 27 dny +1

    ஆண்டவரே இந்த காலை வேளையில் நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏 என் சின்ன மகனுக்கு எதிர் பார்த்து கொண்டு இருக்கிற ஓரு நல்ல பெண் அமைய வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டிகெள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏 என் சின்ன மகலுக்கு எதிர் பார்த்து கொண்டு இருக்கிற வேலையில் நல்ல பதில் தந்தார்காக உங்களுக்கு கொடான கெட்டி நன்றி குருகிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏 என் பெரிய மகன் கவிதாவுக்கு திருமணம் காரியத்தை நன்றாக நடத்தி வைக்கும் உங்கள் ஆசிர்வாதம் இந்த பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏 என் பெரிய மகள் மருமகன் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் கடவுளே இந்த பிள்ளைகளுக்கு நிங்கள் தான் துணையாக இருந்து நல்ல பதில் தரவேண்டும் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @virginiapv2717
    @virginiapv2717 Před 28 dny

    ஆமென் ஸ்தோத்திரம்

  • @saraswathyesakltheuar5385

    Amen thank you God ❤❤❤❤

  • @susaikani1460
    @susaikani1460 Před 28 dny

    Amen🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-je4kw
    @SathishKumar-je4kw Před 25 dny

    Antavare ennala kapparum❤❤❤

  • @glorypaulraj497
    @glorypaulraj497 Před 28 dny

    ❤ praise the lord beautiful prayer may God bless you sister

  • @Krishan-dz9hd
    @Krishan-dz9hd Před 28 dny

    Amen❤😂amen

  • @user-zy9km8zc8j
    @user-zy9km8zc8j Před 28 dny +1

    Amen Amen Amen 🙏