வள்ளலாரின் உபதேசக் குறிப்புகள் 1 - 7 (Vallalar Ubadesam Notes 1- 7)

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2018
  • உபதேசக் குறிப்புகள் :
    இவை அடிகளின் உபதேசங்களைக் கேட்ட அன்பர்கள் எழுதி வைத்த குறிப்புகள். இவற்றுட் சில 1893-ல் ச.மு.க. பதிப்பித்ததாக முற்கூறிய ஜீவகாருண்ய ஒழுக்கம் கையடக்கப் பதிப்பில் அச்சாகியுள்ளன. சில பி.இரா. திருவருட்பாப் பதிப்பிற் சேர்ந்துள்ளன. அவற்றுடன் மற்றும் சில ச.மு.க. திருவருட்பாப் பதிப்பிற் சேர்ந்துள்ளன. இப்போது வழங்குமளவு முழுமையாக வெளிவந்தது ஆ.பா பதிப்பிலேயேயாகும். சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைக் குறிப்புகள், சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைச் சிறு குறிப்புகள், சுத்த சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைத் தனிக்குறிப்புகள் என மூன்று தொகுதியாக இவற்றை ஆ.பா. அச்சிட்டிருக்கிறார். அடிகளது உபதேசங்களைக் கேட்ட அன்பர் சிலர் நீண்ட குறிப்புகளாகக் குறித்து வைத்தனர். இவை (பெருங்) குறிப்புகள். வேறு சிலர் அவற்றையே துண்டு துண்டாகச் சிறு குறிப்புகளாகக் குறித்து வைத்தனர். இவை சிறுகுறிப்புகள். ஒரு விஷயமே ஒருவரால் பெருங்குறிப்பாகவும் மற்றொருவரால் சிறு குறிப்புகளாகவும் குறித்து வைக்கப் பெற்றுள்ளது. ஒரு பெருங்குறிப்பிற் காணப் பெறும் விஷயமே பல சிறுகுறிப்புகளாகக் குறித்து வைக்கப் பெற்றுள்ளது. பல சிறு குறிப்புகளிற் காணும் விஷயங்கள் ஒரு பெருங்குறிப்பில் அடங்குகின்றன. பெருங்குறிப்பில் காணப்பெறும் ஒரு விஷயம் சிறுகுறிப்பில் அதைவிடத் தெளிவாக உள்ளது. சுருங்கச் சொல்லி விளங்கவைத்தற்கு உதாரணமாகப் பல சிறுகுறிப்புகள் திகழ்கின்றன. சிறு குறிப்புகள், அவை பெருங் குறிப்புகளில் அடங்கி விடுகின்றன என்ற காரணத்திற்காகப் புறக்கணிக்க இயலாதவாறுள்ளன. பெருங்குறிப்புகளிலும் சிறுகுறிப்புகளிலும் சேராதவற்றைத் தனிக்குறிப்புகள் என்ற தலைப்பில் ஆ.பா. அச்சிட்டிருக்கிறார். Download all Thiruarutpa Urainadai Audios MP3 Books in sanmarkkam.com/

Komentáře • 9

  • @ramanakraman3403
    @ramanakraman3403 Před měsícem

    அற்புதமான குறள்

  • @achuthanyou
    @achuthanyou Před 5 lety +3

    great service to people

  • @muruganmmurugan6755
    @muruganmmurugan6755 Před 2 lety

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @quotesofvvn3260
    @quotesofvvn3260 Před rokem

    🙏🙏🙏🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @naveenv5236
    @naveenv5236 Před 5 lety +2

    Supar

  • @arunachalamvenkatachalam3631

    A great help to sudhdha sanmaargis in their endeavours in their High way to Arutperunjothi attainment destination.

  • @kumaragurup8442
    @kumaragurup8442 Před 6 měsíci

    Arulperum jothi Arulperum jothi thaniperum karunai arulperum jothi. 🎉🎉🎉🎉🎉🎉

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 Před 4 lety +2

    ஞானசரியை 28 பாடலையும் பாடலாக இல்லாமல் வசனமாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்