வெங்காய சமோசா | Onion Samosa In Tamil | பன்னீர் சீஸ் பால்ஸ் | Paneer Cheese Balls | Snacks Recipes |

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2021
  • வெங்காய சமோசா | Onion Samosa In Tamil | பன்னீர் சீஸ் பால்ஸ் | Paneer Cheese Balls | Snacks Recipes | Tea Time snacks | Evening Snacks |
    #onionsamosa #வெங்காயசமோசா #samosa #snacks #teatimesnacks #eveningsnacks #snackrecipes #crispysamosa #venkayasamosa #onionsamosaintamil #samosaintamil
    #paneercheeseballs #paneer #cheeseballs #snacks #kidssnack #பன்னீர் #paneerrecipes #பன்னீர்சீஸ்பால்ஸ் #paneersnacks #partyfoods #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Onion Samosa: • Onion Samosa | Street ...
    Paneer Cheese Balls: • Paneer Cheese Balls | ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    வெங்காய சமோசா
    தேவையான பொருட்கள்
    மேல் மாவு செய்ய
    மைதா - 2 கப்
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    தண்ணீர்
    பூரணம் செய்ய
    வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரக தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
    தனியா தூள் - 1/4 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 சிட்டிகை
    அவல் - 1/4 கப்
    மைதா கலவை செய்ய
    மைதா - 3 தேக்கரண்டி
    தண்ணீர்
    எண்ணெய்
    செய்முறை:
    1. சமோசாவின் மேல் மாவு செய்ய ஒரு அகல பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை பிசையவும். மாவு திரண்டு வந்த பின் மேலும் 10 நிமிடங்களுக்கு பிசையவும்.
    2. பிசைந்த மாவில் எண்ணெய் தடவி 30 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
    3. 30 நிமிடம் கழித்து செய்த மாவை சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
    4. உருண்டையில் ஒன்றை எடுத்து சப்பாத்தி போல் மெல்லியதாக தேய்க்கவும்.
    5. தவாவை சூடு செய்து தேய்த்த சப்பாத்தியை 2 - 3 வினாடிகள் மட்டும் சுட்டு எடுக்கவும்.
    6. செய்த சப்பாத்திகளை இரண்டரை இன்ச் அகலத்திற்கு வெட்டவும்.
    7. ஓரங்களை வெட்டி செவ்வக வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
    8. அடுத்து பூரணம் செய்ய ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் மற்றும் அவல் சேர்த்து கிளறவும்.
    9. ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மற்றும் தண்ணீர் சேர்த்து பசை பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
    10. செய்து வைத்த மேல் மாவை கூம்பு வடிவத்தில் மடித்து அதனுள் செய்த பூரணத்தை வைத்து மைதா பசை கொண்டு மூடவும்.
    11. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி செய்து வைத்த சமோசாக்களை மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
    12. வெங்காய சமோசா தயார்.
    பன்னீர் சீஸ் பால்ஸ்
    தேவையான பொருட்கள்
    பன்னீர் - 200 கிராம்
    வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 1 விதை நீக்கி பொடியாக நறுக்கியது
    கொத்தமல்லி இலை
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
    சோள மாவு - 1 மேசைக்கரண்டி
    ப்ரோசஸ்டு சீஸ்
    பிரட் தூள்
    சோள மாவு - 3 தேக்கரண்டி
    எண்ணெய்
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் கடலை மாவு போட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
    2. செய்த பன்னீர் கலவையிலிருந்து சிறிய அளவு எடுத்து இதனுள் ஒரு சிறிய துண்டு சீஸ் வைத்து மூடி நன்கு உருண்டையாக உருட்டவும்.
    3. ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவும் தண்ணீரும் கலந்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
    4. பன்னீர் பால்ஸை சோள மாவு கலவையில் முக்கி, பிறகு பிரட் தூளில் பிரட்டி, ஃப்ரீசரில் 10 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.
    5. பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் சூடாக்கவும்.
    6. எண்ணெய் சூடானதும், ஃப்ரீஸரில் உள்ள பன்னீர் பால்ஸை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
    7. பன்னீர் சீஸ் பால்ஸ் தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 37

  • @vishalakshig1831
    @vishalakshig1831 Před 2 lety +6

    Pakavey sapdanum pola iruku. Super delicious snacks. Unga receipes ellamey super. Y hema amma romba oliya aitinga..

  • @gmaaguru2057
    @gmaaguru2057 Před 2 lety +8

    How do you manage your weight loss even after such delicious recipes...?Great cooking...

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 Před 2 lety

      Daily you go for walking in 8 shape walk. It will give super results this is my experience

  • @ayrastinykitchen8089
    @ayrastinykitchen8089 Před 2 lety

    looks yumm and a nice evening snack , thank you for sharing

  • @archanavisweswaran6166
    @archanavisweswaran6166 Před 2 lety +1

    Super mam tempting

  • @vivekaraju8483
    @vivekaraju8483 Před 2 lety +2

    Hi mam nice recipe please share your weight loss journey

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Před 2 lety

    Rendu receipes um arumai thaan ponkanka 🤤🤤

  • @tamilselvisenthil9512
    @tamilselvisenthil9512 Před 2 lety +1

    Yummy recipe mam...👌

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen Před 2 lety +1

    Delicious 😋😋

  • @panneerads2062
    @panneerads2062 Před 2 lety +1

    Tq madam.....

  • @jayakanishkakitchen6478
    @jayakanishkakitchen6478 Před 2 lety +1

    👌🤩🤩

  • @kanchanajayachandran9648
    @kanchanajayachandran9648 Před 2 lety +1

    U hv lost oodles of wt. U lukd gud b4 nd even bettr now 👌👍

  • @kogelamariappan9943
    @kogelamariappan9943 Před 2 lety

    Arumai yummy

  • @Parvathyraja
    @Parvathyraja Před 2 lety

    Super mam

  • @asmathfarhana8347
    @asmathfarhana8347 Před 2 lety +1

    Akka romba super Ra irunthuchu ennoda babykku romba puduchu irunthuchu 👌👍🙏

  • @ramyaramyashree3874
    @ramyaramyashree3874 Před 2 lety

    Super Sister

  • @gokulram5
    @gokulram5 Před 2 lety +1

    please do a video log of daily handy useful kitchen utensils....and where to buy it...

  • @iswaryarajendran4707
    @iswaryarajendran4707 Před 5 měsíci

    Mam can you please post panner samosa mam??

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 Před 2 lety +1

    Unga kadaai nallarkku mam yenga vaanguninga link anupunga

  • @gokulram5
    @gokulram5 Před 2 lety +1

    hi mam...where do you buy your kitchen utensils....would like to know where you bought the wooden mixin bowl....do reply...have been searching for it

  • @prabhusadasivam3945
    @prabhusadasivam3945 Před 2 lety +1

    How to make white souce and garlic souce

  • @jai9773
    @jai9773 Před 2 lety +1

    Mam where u bought the chudidhar material if any brand u bought

  • @bindu.b2531
    @bindu.b2531 Před 2 lety +1

    Mam..you've lost weight...look very pretty...you always looked beautiful 👌

  • @roshanjanardhanan.9367
    @roshanjanardhanan.9367 Před 2 lety +1

    Madam, Help us with Hariyali paneer gravy.

  • @aarthir8237
    @aarthir8237 Před 2 lety

    Onion cost is very high now days mam 😅😅

  • @devunair322
    @devunair322 Před 2 lety +1

    Hi mam
    U've lost so much weight
    Share your secret, please....

  • @kavyakavya2039
    @kavyakavya2039 Před 2 lety +1

    Mam u lost weight

  • @priyamani0721
    @priyamani0721 Před 2 lety

    Mam olli agitinga

  • @sul1980
    @sul1980 Před 2 lety +5

    நீங்க weight loss பன்னுனீங்களா மேடம்👍

    • @nivetha1063
      @nivetha1063 Před 2 lety

      How weight loss please he is number give me

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 Před 2 lety

      @@nivetha1063 daily you go for 8shape walking it gives result its my experience

    • @padmapriya9645
      @padmapriya9645 Před 2 lety

      @@SBRCREATIVES2005 yevalo hours first start pannalam walking poga

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 Před 2 lety

      @@padmapriya9645 first 10 minutes start in right hand side and finish in left hand side

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 Před 2 lety +1

      Should take jeeragam, vendayam, omam water. Because while walking or work out, our body contains so much of gas so should take detox water. So we avoid heart attach, gastric problem