இலங்கை வானொலி தென்றலில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா அவர்ளின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி!

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • இலங்கை வானொலி அறிவிப்பாளர்
    மதுரக் குரலோன் திரு.கே. எஸ் ராஜா !
    ***************************************
    தமிழ் கூறும் நல்லுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை வகிப்பவர்தான் ,அன்றும் இன்றும் என்றும் நேயர்கள் நெஞ்சங்களில் வாழும் திரு அமரர் கே எஸ் ராஜா அவர்கள் .
    அன்னை வானொலியின் அறிவிப்பாளர்களில் திரு கே. எஸ். ராஜா அவர்கள் தனக்கென ஒரு தனிப் பாணியை அமைத்து, தனது குரலின் இனிமையால் நேயர்களைக் கவர்ந்தவர். .தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எவ்வாறு ஒரு தனக்கென்று ஒரு "ஸ்டைலில்" திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்தாரோ, அதேபோன்று ஒரு தனிப்பட்ட தனது குரலின் "ஸ்டைல் " மூலமாக அறிவிப்பாளர் கே எஸ் ராஜா அவர்களும் நேயர்களைக் கவர்ந்தார் .
    அன்னார் உலகைவிட்டு மறைந்தும் இருபத்தி ஏழு ஆண்டுகள் கடந்த பின்பும், அவர் உயிருடன் வாழ்வதைப் போலவே எண்ணி, அவரது அபிமான நேயர்கள் இன்னும் அவரை மனதிற்குள் வைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தாம் உலகை விட்டு மறைந்தாலும் மனங்களில் மறவாமல் இருக்கும் பெரும் பாக்கியத்தை இந்த உலகில் ஒரு சிலரால் மட்டுமே பெற முடியும். அந்த வகையில் அறிவிப்பாளர் அமரர் திரு கே.எஸ்.ராஜா அவர்களும் ஒருவரென்றால் அது மிகையல்ல.
    இன்று அன்னாரின் நினைவு தினம். அதனை முன்னிட்டு நமது அன்னை வானொலி தென்றலில், மதிய விருந்து நிகழ்ச்சியை அன்னாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியாகவே நடத்தி முடித்தார்கள். பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ,அறிவிப்பாளர் கே எஸ் ராஜா அவர்களைப்பற்றிய தங்கள் கருத்துக்களையும்,உள்ளக் கிடக்கைகளையும் வெளியிட்டார்கள்; கூறினார்கள். உண்மையிலேயே இந்த நிகழ்ச்சி இன்று மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
    அந்த வரிசையிலே அன்னை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான, உலக அறிவிப்பாளர் என்ற பெயர்பெற்ற ,எமது அன்பு அபிமான அறிவிப்பாளர் ஜனாப் பீ.எச் .அப்துல் ஹமீத் அவர்கள், அறிவிப்பாளர் அமரர் திரு கே. எஸ். ராஜா அவர்களைப் பற்றி ,மிகவும் சிறப்பாகத் தனது மனக் கிடக்கைகளை, இந்நிகழ்ச்சியிலே தெரிவித்தார்கள். .அன்னாருக்கு நேயர்களாகிய எங்கள் மனம் நிறைந்த நன்றிகளும் நல் வாழ்த்துக்களும் அன்போடு சமர்ப்பணம்!
    அவர்கள் வழங்கிய செவ்வியை இப்போது இங்கே அனைவருக்காகவும் தருவதில் மிக்க மகிழ்ச்சியுறுகின்றேன்.நிகழ்ச்சியை திறம்பட நடத்திய எங்கள் இளைய அறிவிப்பாளர் திரு. ராஜகோபால் உதயகுமார் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகளும் நல்வாழ்த்துக்களும்.அத்தோடு தென்றலுக்கும் இலங்கை வானொலிக்கும் எங்கள் நன்றிகளும் நல்வாழ்த்துகளும் அன்போடு சமர்ப்பணம் !
    எங்கள் அன்பின் அபிமான அறிவிப்பாளர் அமரர் திரு கே எஸ் ராஜா அவர்களின் நினைவு தினத்தில், அன்னாரின் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!
    அன்னாரது பொன்னான ஆத்மா சாந்தி அடைவதாக!!
    என்றும் அன்பு அபிமான நேயர்
    """""'''"""""'"""""""""""""""""""""""""""""""""""""""""
    எம்.ஐ.உஸனார் ஸலீம்
    நிந்தவூர் -இலங்கை (கி.மா)
    0777161224 - 0754551230.
    """"""""""""""""""""""""""""""""""""""""""""""""
    03 /08 / 2021 ( வெள்ளி)
    """"""""""""""""""""""""""""""""""""""""""

Komentáře • 109

  • @kamaraj9892
    @kamaraj9892 Před rokem +12

    எனது இளம்வயதில் இலங்கைவானொலியில் கேட்டு கேட்டு லயித்துபோன குரல் கே எஸ் ராஜாவின் குரல் இலங்கை யுத்தம் காரணமாக இடையில் அவரது குரல் கேட்கமுடியாமல் போனது பிறகு அவர் மறைந்த செய்தி பிற்காலத்தில் தெரிந்து என்னைபோன்ற ஏராளமான நேயர்கள் வருத்தமடைந்தார்கள் என்பது உண்மை இன்று அப்த்துல்ஹமீது அவர்களின் குரல் நமக்கு திருப்தி கொடுத்தாலும் அடி‌க்கடி கேட்க வாய்ப்புகிடைக்கவில்லை ஆனா‌ல் அன்றையசூழலில் இலங்கை வானொலி எங்களை த‌ன்னுடைய குரலால் கட்டிபோட்டிருந்தது என்றால் மிகையாகுது .

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Před 2 lety +62

    கண்ணீர்தான் வருகிறது.தாய் தமிழ் முழு வடிவுடன் இலங்கையில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது.உயிருள்ளவரை உங்கள் இருவரையும் மறக்க மாட்டேன் நெஞ்சம் விம்முகிறது.K.S.ராஜா பி.எச் அப்துல் ஹமீத் இருவரும் உலக வானொலியின் அடையாளங்கள் உலகம் உள்ள வரை உங்கள் புகழ் நிலைக்கும்.

    • @tamilparallel6264
      @tamilparallel6264 Před rokem +2

      First un name ah tamil la vai

    • @ponsuvitha3319
      @ponsuvitha3319 Před rokem +2

    • @sundarams890
      @sundarams890 Před rokem

      😅😅vb v😅 😅44@4

    • @nagappamurugaiyan1065
      @nagappamurugaiyan1065 Před rokem

      உண்மையான விமர்சனம். கண்ணீர் வருகிறது என்ற பதிவு நான் இந்த நிகழ்ச்சியைக் கேட்ட உடனேயே அழுது விட்டு தான் விமானங்களைப்பார்த்தேன்.❤❤❤❤❤

    • @tharmalingamkumarathas4098
      @tharmalingamkumarathas4098 Před rokem

      Unmaithan Aalntha anuthapangal

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +17

    K. S. ராஜா அவர்கள் மறைந்த செய்தி, நம்ப முடியவில்லை. கட கட என்று அவர் அறிவிக்கும் விதம்!மறக்க முடியாது என்றும். வாழ்க அவர் புகழ்!.. 🙏🏽🙏🏽💐

  • @kumaresann3311
    @kumaresann3311 Před 2 lety +21

    K S ராஜா மறக்கமுடியாத குறல் என்றும்

  • @yiii1670
    @yiii1670 Před rokem +18

    கே எஸ். ராஜா அறிவிப்பாளர் அவர்களின் குரல் வளம் என்னை மிகவும் கவர்ந்தது.இலங்கை வானொலி நிகழ்ச்சியை கேட்பது போல் கடந்த கால நினைவுகள் மனதில் தோன்றுகிறது.

  • @srk8360
    @srk8360 Před 2 lety +19

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை2.. நிகழ்ச்சி அறிவிப்பாளர்களை மறக்கவே முடியாது....
    திரைவிருந்து..குரல்..
    அந்த இனிய காலங்கள் மனதில் நினைவாக..
    நன்றி

  • @rajamohan8106
    @rajamohan8106 Před 2 lety +12

    K s Raja அன்றும் இன்றும் என்றும் நம் மனதில் வாழ்கிறார்.. அற்புதமான அறிவிப்பாளர்..

  • @danamdanam3241
    @danamdanam3241 Před rokem +6

    சின்ன வயதில் இலங்கை வானொலி கேட்டு தான் வளர்ந்தோம்
    இன்று ஏக்கமாக இருக்கிறது,
    மீண்டும் அந்த காலம் வருமா???

    • @bernadettemel2053
      @bernadettemel2053 Před rokem

      Unmai than nannum athai kettu valarthaval eni antha kalam varuma endru megavum enggugiren

  • @Kulam2708
    @Kulam2708 Před rokem +14

    மறக்கமுடியாத அனுபவம்.
    கண்ணீர் தான் வருகிறது

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Před rokem +8

    கே எஸ் ராஜா
    சனிக்கிழமை மதியம் திரை விருந்து நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்
    இவரின் விரைவான பேச்சு இன்னும் என் நினைவில்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +7

    கே.எஸ்.ராஜா அவர்களைப் பற்றி திரு. அய்யா B.H. அப்துல் ஹமீத் அவர்களின் பேட்டி கண்கலங்க வைக்கிறது.

  • @karthikeyanr7882
    @karthikeyanr7882 Před rokem +2

    வானொலி என்றாலே இலங்கை வானொலி தான் இந்த வானொலி சிறப்படைந்தது இவர்களைப் போன்று அறிவிப்பாளர்களால்தான் இலங்கை வானொலி இன்று இணையத்தில் தனது சேவையை தொடர்கிறது இருந்தாலும் வானொலி பெட்டியில் கேட்ட இன்பம் இதில் இல்லை என்றும் இலங்கை வானொலியின் புகழும் அதில் பணியாற்றிய அன்பு அறிவிப்பாளர்களின் புகழும் தமிழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் நிலைத்திருக்கும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை

  • @sankarapillaisivapalan.4481

    மிகவும் அருமையான பதிவு. நன்றி.

  • @m.balasubramanianmuniasamy3796

    Thiru K. S.Raja, a peculiar man in Srilanga Broadcasting in my teen age period 1978-79. We were eagerly watching his tamil voice pronounciation with our friends. His sweet memory recalled by Thiru P. H. Abdul Hameed is giving oldendays memories. That days never forget by every individials those who were watching Srilanga broadcosting. Thanks Abdul sir.

  • @muthukumarsuppaiya3174
    @muthukumarsuppaiya3174 Před 2 lety +11

    என்றும் அன்புடன் உங்கள் இலங்கை வானொலி பிறியன்

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +13

    அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில், நீங்கள் நடத்திய, 'உதையாவின் பாட்டுக்குப் பாட்டு 'நிகழ்ச்சியை, வாரவாரம் கேட்டு ரசித்திருக்கின்றோம்!மறக்க முடியாத பொர்க்காலம். நன்றி.. 🙏🏽💞

  • @j.m.zafarullazafarulla1455

    K.S.அவர்களைப்பற்றி என் தாய் சொல்லி கேள்வி பட்டேன் உண்மையாகவே அருமையான மனிதன் அவர் என ஒரு முன்னோடி பற்றி பின்னாளில் பிரபலமான ஒரு மனிதன் ஹமீது அண்ணன் இன்பதமிழில் ராஜா பற்றி பேசும் போது உண்மையான மகிழ்ச்சி அடைகிறேன்

  • @bhaskishiva3074
    @bhaskishiva3074 Před 2 lety +11

    மறக்க முடியாத நினைவுகள்.....நன்றி

  • @mailamangai9080
    @mailamangai9080 Před rokem +2

    நான் ஒரு இலங்கை தமிழன். 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டு 1984 ஆண்டு இந்தியா வந்தோம். நான் இலங்கை வானொலி தீவிர விசிறி. K.S.Raja. B H. Abdul Hameed இருவரும் என் அபிமான அறிபாளர்கள். நான் கொழும்பு sethawathai பிறந்தவன். வாழ்க தமிழ். S. Muruganantham Kodaikanal Gundupatty ceylon colony b South India Tamizh Nadu.

  • @malaniramya7927
    @malaniramya7927 Před 2 lety +11

    மிகவும் நன்றி 🙏🏾 நாம் தமிழர் மலேஷியா

  • @muthurathinam9428
    @muthurathinam9428 Před rokem +6

    என்றும் காதலாகி காதில் நுழைந்த கீதங்கள்!
    நன்றாய் நவின்று இசையோடு அசைந்த தென்றல்..!
    கன்றும் பசுவாய் இசையும் திரையும் புகழ்ந்தார்!
    போற்றி புகழும் புவியும் கதறி அழுத இவர் மறைந்த நேரம்!
    ஏற்றிய சுடராய் இன்றும் உலகில் சுடரொளி விட்டு வீசும்!
    திரு.கே.எஸ்.ராஜா நினைவேந்தல் என்றும் மனதில் தோன்றும்!
    திரு.ஜனாப்.பி.எச்.அப்துல் ஹமிட் ராககுரலும் என்றும் குயிலாய் ஒலிக்கும்!..
    ..வாழ்க..வளர்க!இலங்கை தமிழ் வானொளி!
    ..புகழ்க!போற்றுக!இலங்கை தமிழ் போராளி!

  • @elangoramasamy8160
    @elangoramasamy8160 Před rokem +6

    மலரும் நினைவுகள் மிக்க நன்றி❤🎉💐🌸🌺🙏

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 Před rokem +4

    1978 to 1980 I can't forgot his voice. Every sunday that time 4.30 pm 5.00pm Amazing voice

  • @balasmusings
    @balasmusings Před rokem +7

    Going back to childhood days... great memories.

  • @maniramasamy1409
    @maniramasamy1409 Před 2 lety +8

    Ever green. Mr.raja ks never forget

  • @lalithayogaratnam5685
    @lalithayogaratnam5685 Před rokem +2

    வானொலியில் மட்டுமே
    கேட்கின்ற தருணங்கள்
    தான் கூடியவர்களுக்கு
    கிடைக்கும் ஆனால் எனக்கோ அரங்க நிகழ்வில் ஒன்றில் முதலில் B.H.அப்துல்காமீட்டைப்
    பார்த்ததேன் நிகழ்சித்
    தொகுப்பாளராகக்
    கண்டேன் அப்போது
    உரையாட முடியவில்லை
    பின்னர் ஒருமுறை நேருக்கு நேர் மிகவும்
    அருகில் நின்றார் இருவரும் பார்த்து
    புன்னகை மூலம்
    பகிர்ந்து கொண்டோம்
    ஏனோ உரையாட நினைக்கவில்லை பின்னர் மனம் வருந்தியுள்ளேன்
    சந்தர்ப்பத்தை தவற
    விட்டுவிட்டேன்
    வாழ்க தமிழ்.

  • @thiruchchelvimanivannan3698

    உங்கள் தன்னடக்கத்திற்கு நன்றி ஆனால் உங்கள் குரலில் சொல்லும் .உங்கள் பெயரை சொல்வதே அப்படியே காதில் இப்பவும் இருக்கிறது மறக்கமுடியாது நினைவுள்ள காலம்வரை♥♥♥

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 Před 2 lety

      உங்கள் அன்பு அறிவிப்பாளர் B.H.அப்துல்ஹமீத்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +2

    அருமையான பேட்டிக்கு நன்றி.

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 Před 2 měsíci

    Enaku ilangai vanoli raembae raembae pudikum pali paruva kalagaelil paerima mahal latha kaetu kondu iruparhal nanum kaetkuren athi irunthu enku valoli meethu irpu yaerpathathu ipaum thaendral fm mbl lil kaekuraen😊❤

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 Před rokem +1

    கே எஸ் ராஜா அவர்களின் தமிழ் அறிவிப்பில் அதிக speed இருக்கும்.

  • @ptstamil5245
    @ptstamil5245 Před 22 dny

    வானொலி அது எமது வாழ்வில் ஒளி

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 4 měsíci

    இலங்கை வானொலி என்றாலே ** கே .ஏஸ்.ராஜா** பி ஹெச். அப்துல்ஹமிது சார் எங்கள் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் மறக்க மாட்டேன் என் அபிமான அறிவிப்பாளர்கள் இவர்களின் குரலுக்காகவே வானொலி பெட்டி அருகில் தவம் கிடந்த நாட்கள் பொன்னான நாட்கள் 😢😢😢😢❤❤❤❤❤🌹💐🌹💐

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +1

    கேஎஸ் ராஜா வின் குரலை மறக்கமுடியுமா !?குட்டிலே நான் கேட்டக்குரல்அல்லவா?! 👶 அவர்எப்பயும் நம்முடனயே இருக்கார் ! நன்றீங்க ! 👸❤❤❤❤❤❤

  • @yiii1670
    @yiii1670 Před rokem

    கேஎஸ். ராஜா அவர் களின் இனிய இளமை குரல் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிற து. இந்த நிகழ்வுகளை விடுதலை புலிகள் நிர்மூலமாக்கி இலங்கை இந்திய உறவை பாவிகள் கெடுத்து விட்டனர்.

  • @murugesanmurugesan6603

    இலங்கை ஒளிபரப்பு கூட்டுஸ்தா பனத்தின் அனைத்து அறிவிப்பாளர்களின் இனிய குரல்வளம் அறிவிப்பு Style எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து அறிப்பாளர்களின் அறிவிப்பு பாணி குரல் இனிமை இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் புகழ்பெற்றது. வர்த்தக ஒலிபரப்பில் இனிமையான பாடல்கள் தொகுப்புடன் அறிவிப்பாளர்களின் இனிய அறிவிப்புடன் பாடல்கள் கேட்டு ரசிப்பது தனி சுகம்.அந்த நாட்களை நினைத்து நினைத்து மகிழ்கிறோம்.

  • @sivassiva7815
    @sivassiva7815 Před rokem +2

    இது நமது அப்துல் ஹமீது அண்ணாச்சி குரலா !அண்ணாச்சி நல்லா இருக்கிறீர்களா! உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

  • @vigneswayguneswaranathan2624

    உங்கள் இருவரல் தான் எம் இளமைக்காலம் இனிமையாக கழிந்தது k.s.raja இறந்தது மிக மிக வேதனையான நிகழ்வு இனி என்ன செய்வது

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před rokem

    ஒவ்வொரு மனிதனுக்கும் கடந்து போன இளமைக் காலத்தை திரும்ப நினைத்துப் பார்ப்பதில் தான் எத்தனை சுகம் எத்தனை சுகம் 45 ஆண்டுகள் எமது மனம் பின்னோக்கி செல்கின்றது சிறகடித்துப் பரந்த சிட்டுக்குருவிகள் போன்ற இதயம்.....
    கவலை இல்லாத இனிய இளமைப்பருவம் .....அதற்கு மேலும் இனிமை கூட்டும் விதமாக இலங்கை வானொலயும் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களும் தரும் காலத்தினால் மறக்க முடியாத இனிய வானொலி நிகழ்ச்சிகள்...... ........
    கே எஸ் ராஜா அவர்களின் நினைவலைகளில் மனம் ஆழங்கால் படுகின்றது ......
    அக்காலம் ஒரு இனிய காலம் ஆகும்..... பசுமை மாறாத நினைவுகளின் பொற்காலமாகும்....... இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர் கே எஸ் ராஜா அவர்களும் எம்மைப் போன்ற அந்தக் காலத்து இளைஞர்களின் இதயங்களில் தெய்வமாக பசுமை மாறாத நினைவலைகளாக இன்றளவும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.........❤❤❤❤

    • @bernadettemel2053
      @bernadettemel2053 Před rokem

      En manathil irrukkum pasumayana ninaivugalai neengal sollreergal nandri

  • @rathinamg9746
    @rathinamg9746 Před rokem

    என்னுடைய சிறுவயது கேட்டு ரசித்த கே எஸ் ராஜா

  • @kaviyarasankavi7663
    @kaviyarasankavi7663 Před rokem +3

    தமிழ் அறிவிப்பவர் என்றால் இவர்கள் மட்டுமே 03.12.2022

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus Před 18 dny

    Super

  • @basheerbatcha9629
    @basheerbatcha9629 Před rokem +10

    இலங்கை வானொலியில் மறக்கமுடியாத அறிவிப்பாளர் கே எஸ் ராஜாவின் வீடியோ தொகுப்பு இருந்தால் வெளியிடவும் பொல்லாதவன் அந்தமான் காதலி அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களின் அறிவிப்புகளை அவர் செய்த விதம் மறக்க முடியாது

    • @mansurik1922
      @mansurik1922 Před rokem

      கே.எஸ் .சிவகுமாரன் தமிழ் சேவையிலிருந்து ஆங்கில சேவைக்கு மாறி பின்னர் இலங்கை வானொலியின் இசைத்தட்டுகள் சேகரிப்பு காப்பகத்தின் தலைவராக உயர்ந்து பிறகு ஓய்வு பெற்று விட்டார் !! பல நூல்களையும் எழுதியுள்ளார் !!

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před 4 měsíci +2

    இலங்கையில் 1970to1978 வரையிலும் KS Raja குரலை மறக்க முடியுமா BHஅப்துல் அமீது அய்யா உங்களையும் சேர்த்து தான் ஃ

  • @sreenivasb.n5511
    @sreenivasb.n5511 Před 3 měsíci +1

    KS Raja I Love you

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před rokem +1

    அருமையான நிகழ்ச்சி

  • @srinivasanramasrinivasanra1937

    ❤ KS.RAJA & BH.ABDUL HAMEED ஆகிய இருவரும் தமிழை வளர்த்த மனிதர்கள்! தினத்தந்தி! கிருபானந்த வாரியார்! கி.ஆ.பெ மீசை.மா.பொ.சி மற்றும் தமிழ் சான்றோர்களுக்கு எனது சிறம் தாழ்த்த வணக்கங்கள்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Před 2 měsíci

      உண்மையிலும் உண்மை 💯 சதவீதம் 👌👍👌👍👌👍

  • @RajaRaja-un6od
    @RajaRaja-un6od Před 2 měsíci

    Om

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +5

    கே எஸ் ராஜா ராஜா தான் 👑👑👑👑

  • @msbalaji1574
    @msbalaji1574 Před rokem +1

    மிகவும் அருமை❤❤❤❤❤

  • @gracedominic9764
    @gracedominic9764 Před rokem +2

    Can't forget kS Rajas voice

  • @gengaraj68
    @gengaraj68 Před rokem +1

    K s Raja your return the world

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 Před 3 měsíci

    அந்த இனிய காலம் இனி திரும்ப வராது என்று நினைக்கும் போது மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

  • @SambandamMTv-ck4oy
    @SambandamMTv-ck4oy Před rokem

    Golden days... Green thoughts... Congratulations... CZcams 👫👫👫

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 Před 2 lety +7

    அய்யா அப்துல் சமது அவர் களின் குரலில் தற்போது சற்று தொய்வு தென்படுகிறது..சிங்கத்திற்கு வயதாகி விட்டது போலும்..take care sir..

  • @bjcookingart5273
    @bjcookingart5273 Před rokem +2

    லீவீ யின் சினிமா பாடல் 90 காலம்

  • @user-ut9pw2hn9z
    @user-ut9pw2hn9z Před 6 měsíci

    நான் சென்னையில் இருக்கிறென் இலங்கை ஒலிபரப்பை கேக்கமுடியவில்லை ஆவனைசெய்யமுடியும

  • @VoiceOfTamils_Bava
    @VoiceOfTamils_Bava Před rokem +1

    சொல்வலன் சோர்விலன்
    அஞ்சான் அவனை.....
    எடுத்துக்காட்டு:
    கே.எஸ்.ராஜா அவர்கள்.

  • @krishnarajrasiaha717
    @krishnarajrasiaha717 Před rokem

    Super never ever

  • @sheriffdeenkamarunisa2017

    வாழ்த்ததுக்கள்

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 Před rokem +1

    கண்ணீர் அஞ்சலி 😢

  • @dharanivmyfavouritesongsin8040

    Thanks sir

  • @kasiviswanathanvairavan6869

    Great people

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem +2

    அருமை !உண்மை

  • @krishsana8587
    @krishsana8587 Před rokem

    super 👌

  • @sudarsanansrinivasan3674

    Thiru Abdul Hameed avargale. Naangal Madurayil irunthapozhthu enathu sagothariyum naanum Asia sevayil Tuesday maalai 6.30-7 pm near viruppam nigalchiyil kalanthu kondom ovoru paadalukkum Thiru K S Raja avargal pesiya vidham engalai mayakkathil azhthiyathu. Melum antha nigazhchikku pin ulagathil irunthu vandha kadithangal. Postman asanthae poivittar endral parungalaen. Innum naanum en sagothatiyum sandhikkum pozhu antha naatkalai ninaithu sandoshattil moozhgividuvom. 😂😂😅

  • @safrafowzi6579
    @safrafowzi6579 Před rokem

    Avarai powler oru anouncer intimale varamaataar

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před 4 měsíci

    என்உயிர்ராஜவுக்குநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +2

    அய்யா BH அப்துல் ஹமீது அவர்களின் குரல் சோர்வாக உள்ளது. கம்பீரமாக பேசுங்கள் அய்யா!.. நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před 4 měsíci

    கேஎஸ்ராஜமனம்கவர்ந்தவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrasekaransellathurai7536

    🙏🙏🙏🙏🙏

  • @jagak837
    @jagak837 Před 4 měsíci

    😮😮😮😮😮😮😮😮😮jn😢n😮😮n😮😮😮😮ñ😮😢😮nn😮😢😮😮😮ñ😮😮😮😮😢😮

  • @alagarsamy636
    @alagarsamy636 Před rokem

    Nam tamil moli valarvatharkku evarkalin panku mukkiyamanathu

  • @anthonyjustin4583
    @anthonyjustin4583 Před rokem

    K.S RAJA no replacement for him

  • @user-ut9pw2hn9z
    @user-ut9pw2hn9z Před 6 měsíci

    அத்துல் கலாம் மீண்டும் வரவேண்டும்

  • @user-tf2gm1xd7c
    @user-tf2gm1xd7c Před rokem

    Marakkamudiyatha ma manithargal ksraja pH Abdul hmeed

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 Před rokem +1

    தேன் கலந்து முக்கனிகள்சுவைத்தால் சுவை எப்படியோ அது போல ராஜாவின் குரல்

  • @ags8342
    @ags8342 Před 2 lety +1

    we

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před 8 měsíci

    Rj. Balaji மாதிரி போல

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Před rokem

    Hi

  • @vengadaganapathy1925
    @vengadaganapathy1925 Před rokem

    Marakkamudiyatha kural ks raja

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před rokem

    D🫶🏻J Raja

  • @rajendramr9094
    @rajendramr9094 Před rokem

    Eranduperume pokkishankal.raja maraivu ennum manathai pizhikirathu.

  • @danamdanam3241
    @danamdanam3241 Před rokem

    இன்னும் தூய தமிழில்😢 பேசுகிறார். கிரேட்

    • @mansurik1922
      @mansurik1922 Před rokem

      தமிழகத்தமிழன் இன்று பேசுவது தமிழே இல்லை !!அத்தனையும் 90% ஆபாசம் + பிற மொழி கலப்பு !! தமிழ் என்றால் அது இலங்கைத்தமிழ் தவிர வேறு இனிமை எங்குமே இல்லை !!

  • @sairamaswamy1583
    @sairamaswamy1583 Před rokem

    Ksr ksr than

  • @goodies5ful
    @goodies5ful Před rokem

    B.H.Abdul Hameed, kalvitthagaimal illai endra kaaranatthinaal SLBCyil irunthu veliyeytrappattaar enbathuthaan unnmai. Annaaliley kalvi thahaimai avvalavaaga kavanatthil kollappadavillai pinnaaliley palgalaikalaha pattathaarigal SLBCyil inanthukondathaal juniorsgaluku keelaaga veylai paarkkaveyndiya nilai Abdul Hameedukku aerppattathu, arasiyal thalayeettaal thanakku uyaria idam kidaikkavillai endru Abdul Hameed sonnathu Pachchapoi.

  • @RajaRaja-un6od
    @RajaRaja-un6od Před 2 měsíci

    Om

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před 2 lety

    Super