#இளையராஜாவுக்கு

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2023
  • #இளையராஜாவுக்கு inspiration தந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்.
    Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.
  • Hudba

Komentáře • 37

  • @manivannans8060
    @manivannans8060 Před 7 měsíci +6

    மெல்லிசை மன்னருக்கு எதிரி இல்லை, இருக்க வேமுடியாது. இளையராஜா திறமையிருந்தும் தலைகணமும் இருந்ததுதான் தமிழக சினிமாவின் கஷ்டகாலம்.

    • @kadamaniy1997
      @kadamaniy1997 Před 7 měsíci

      அவருக்கு தலை கனம் இருக்க கூடாது என்று கூறுபவர்கள் kku என்ன தலை கனம். எதுக்கும் லாயக்கற்றவர்கள் தலை கணத்தொட இருக்கிறார்கள். ராஜா போன்ற மேதைக்கு இருப்பது அவர் போட்டிருக்கும் கவசம். 24 குணங்களும் எல்லோரிடமும் பரவி கிடக்கிறது. அவர் இசையை மட்டும் விமர்சனம் செய்வோம். மத்தது எல்லாம் அவர் தனிப்பட்ட விஷயம்.

    • @manivannans8060
      @manivannans8060 Před 7 měsíci

      @@kadamaniy1997 TMS ஐ குறைகூறுவது அவரின் தனிபட்ட விஷயமா? பாடகர்களுக்கு ஒரு இலக்கணம் வகுத்து தந்தவர் TMS.இன்னமும் அந்திமழை பொழிகிறது போன்ற பாடல்களை ரசிப்பவன்தான்.

    • @kadamaniy1997
      @kadamaniy1997 Před 7 měsíci

      @@manivannans8060 ராஜா வந்த போது அவர் படாத அவமானம் இல்லை. கண்ணதாசன், tms, msv என்று பலரும் kindaladuthtvargal, கேலி பேசினார்கள். ராஜாவின் தோற்றம், குரலை ஒரு முறை tms மேடையில் காக்கா, டப்பாங்குத்து அடிக்கிறவன் என்று கேவலமாக பேசினார்கள். ராஜா pirpaduththa வகுப்பு நால் அவர் தன் திறமை மூலமாகவே இன்று மேதை உயர்வுக்கு வந்தார். அவர் சந்தித்த அவமானங்கள் பெரும் வேதனை. அதனாலே அவர் பகவான் ரமணர் பால் ஈர்க்கப்பட்டார். அவரால் உயர்ந்தவர்கள் ஒரு 30;hero, heroine 50+ directors, . இல்லாட்டி அவங்களுக்கு address கிடையாது. 80 படங்களுக்கு 1 காசு கூட வாங்காமல் இடை அமைத்து கொடுத்து இருக்கிறார்.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před 7 měsíci +4

    ரஜினி கமல் காலத்திலும் விஸ்வ நாதன் அவர்களின் இசை சிறப்பு தான் நினைத்தாலே இனிக்கும் சிம்லா ஸ்பெஷல் பொல்லாதவன்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 7 měsíci +1

    செல்வமே என் ஜீவனே. சூப்பர்

  • @govindasamysivaprakasam4025
    @govindasamysivaprakasam4025 Před 7 měsíci +2

    தாலட்டு என்று எல்லாமே இன்றைய சமூகத்திற்கு ரொம்ப அழகு அற்புதம்

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci +3

    Very well said about change of music directors Very correct Velai illadavanga yedavadu pesuvanga

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 7 měsíci +1

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக எம் எஸ் விஸ்வநாதன் பற்றி நீங்கள் கூறும் விபரங்கள் மிகவும் உண்மை.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 7 měsíci +3

    GOD GIVEN GIFT MSV.

  • @g.panneerselvam9794
    @g.panneerselvam9794 Před 7 měsíci +1

    என்னுடைய சிறுவயதில் என் அம்மா அடிக்கடி இந்த பாடலை பாட கேட்டிருக்கிறேன். இப்பொழுது உங்கள்குரலில் கேட்கும்போது அந்த நினைவுகள் மனதில் நிழலாட, சற்று,இதயம் கனக்கிறது.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 7 měsíci +3

    ❤M.S.V❤

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Před 7 měsíci +5

    இந்த படத்தில் வந்த ஒரு வசனம் வீரப்பா அவர்கள் பேசியது வசனம் மிகவும் அருமையாக இருக்கும். "மணந்தாள் மகாதேவி இல்லையேல் ......தேவி" (அமங்கலமான சொல் தவிர்க்கப் பட்டுள்ளது.).இந்த வசனம் இந்தப் படத்தில் வந்தது தான் என்று நினைக்கிறேன்.இது போன்று அவரின் ஈடு இணையற்ற ஓர் சிரிப்பு யாராலும் மறக்க முடியாது. நீங்கள் எடுத்து விளக்கம் அளித்து இருக்கும் இந்த பாடல் ஓர் தாலாட்டுப் பாடல். அந்த காலத்தில் மகப்பேறு என்பதை அறிவுறுத்தும் விதமாக வரும் பாடல்களில் இதுவும் ஒன்று. "குழல் இனிது யாழ் இனிது.."என்ற வள்ளுவம் புகுதப் பட்டு அமைந்து இருக்கும் பாடல் வரிகள். எங்கிருந்துதான் இது போன்ற பாடல்களை நீங்கள் தேர்வு செய்கின்றீர்கள் என்று தெரிய வில்லை. அருமை.

  • @narayanraj
    @narayanraj Před 7 měsíci +4

    ஆம் ! அருமை ஐயா! ❤
    நீரோடும் வைகையிலே.....
    கைவிரல்களில் பிறந்தது நாதம்.....
    முத்து நகையே உன்னை.....
    மஞ்சள் முகம் நிறம் மாறி.....(மலர்கள் சூட்டி மஞ்சள்)
    செல்லக்கிளியே மெல்லப் பேசு....
    செல்லக்கிளிகளாம்
    பள்ளியிலே ....
    முத்து முத்து புன்னகையில்...
    காலமிது காலமிது கண்ணுறங்கு....
    மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க....
    பிள்ளைக்கு தந்தை ஒருவன்....
    அத்தை மடி மெத்தை மடி....
    ராஜாத்தி பெற்றெடுத்த ராஜகுமாரி....
    என்னராஜா என்ன வேணும்.....
    காதலிலே பற்றுவைத்தாள் அன்னையடா...
    தாலாட்டுப் பாடி தாயாக....
    கண்ணான பூமகளே....
    பச்சை மரம் ஒன்று...
    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்...
    இந்தப்பச்சைக்கிளிக்கொரு...
    தொட்டில் ஒன்று இல்லை என்று...
    .......
    என் நூற்றுக்கணக்கான Bench mark Indeces for Lullaby தொட்டில் தாலாட்டுப் பாடல்கள்...
    சொல்லிக்கொண்டே போகலாம்....
    ..

  • @maalavan5127
    @maalavan5127 Před 7 měsíci +5

    அதனால்தான் மன்னர் மெல்லிசை
    சக்கரவர்த்தி

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 7 měsíci +1

    சிங்காரமான பதிவு❤
    ஆர்.பாலசரஸ்வதிதேவி..அம்மாவின் பட்டுப்போன்ற மிருதுவான குரல்..
    அதில் கொஞ்சம் கணீர் என்று இனிமை சேர்ந்த குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி அம்மா..
    இப்படியோர் தாலாட்டுப் பாடலை எடுத்துக்கொண்டு இந்த பதிவினை மிகவும் அற்புதமாக வழங்கிவிட்டீர்கள்🙏🙏🙏மெல்லிசை மன்னர்களின் இனிய இசை இதமாக மனதைத் தாலாட்டும்..கவியரசரின் பாடல் வரிகள் சிந்தையை இதமாக வருடிக்கொடுக்கும்❤சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே என்ற பல்லவியுடன் பாடல் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் போது...
    செல்வமே எந்தன் ஜீவனே....
    என்று இன்னொரு தாலாட்டு இணையும் இடம் மிகவும் இனிமை❤
    நீங்கள் எந்த ஒரு பாடலையும் எடுத்து விளக்கும் போது இசையினையும் சேர்த்து அமைத்து வழங்குவது(ராக..தாளத்துடன்)மிகவும் அருமை..அது நமது ரசனையைக் கூடுதலாக்கும்..அந்த வகையில் உங்களது ரசனை நிறைந்த பதிவு மிகவும் அருமை..நன்றி..
    கோமதி...

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 7 měsíci +1

    படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்.. அபிமன்யு போர்க்களத்தில் இறந்து விட்டான் என (பகவதி குரல் என நினைக்கிறேன்) அப்பப்பா மயிர் கூச்செரியும்.மிக அற்புத காட்சி.

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci +2

    Sir neenga ivalo azhaga explain panreengale, inda videova MSV sir patha epdi irukkum nu imagine panni pakkaren 👍👍

    • @alaiosaiamuthabharathimusicdir
      @alaiosaiamuthabharathimusicdir  Před 7 měsíci

      ஐயா MSV அவர்கள் பார்க்கா விட்டாலும் அவரது வாரிசுகள், குறிப்பாக திருMSV பிரகாஷ் அவர்கள் பார்த்து அவ்வப்போது
      பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.அதுவே ஓரளவு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

  • @rtrajan1706
    @rtrajan1706 Před 7 měsíci

    Very apt comparison "Relay Race"

  • @krishnaswamy702
    @krishnaswamy702 Před 7 měsíci +2

    Mahadevi ,Thirapadam Vasanam Paadalgal , Kaviyarasarir. Kannadasan.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 7 měsíci +1

    தங்களுடைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க வைக்கிறீர்கள். சிறப்பான படைப்புகளை வழங்கும் தங்களுக்கு நன்றி.
    இளையராஜா அவர்கள், மற்றவர்களிடம் எப்படி இருந்தாலும், மன்னரிடம் பணிவாகவும் மரியாதையுடனும்தான் இருந்திருக்கிறார் இப்போதும் இருக்கிறார்.

    • @ganesanr736
      @ganesanr736 Před 7 měsíci

      இளையராஜா பாதத்தை தொட்டு வணங்குவது - எனக்கு தெரிந்தவரை *MSV யை மட்டும்தான்*

  • @ganesanr736
    @ganesanr736 Před 7 měsíci +3

    *இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்* பாடலில் MSV - வாத்யங்கள் எதுவும் இல்லாமல் *புதுமையாக* மிக இனிமையாக மிக மென்மையாக பாடலை கம்போஸ் செய்திருக்கிறார். பாடல் முடியும்போது குழந்தை நன்கு தூங்கிவிடும்.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 Před 7 měsíci +1

    நன்றி ஐயா நிறைய விஷயங்கள் சொல்லி உள்ளீர்கள் ஐயா மெல்லிசை மன்னரின் இன்ஸ்பிரேஷன் அவங்க அம்மா தான் தாங்கள் சொன்ன இந்த தாலாட்டு மெட்டு அவங்க அம்மா எம்எஸ்வி அவர்கள் குழந்தையாக இருக்கும்போது பாடின மெட்டு மெல்லிசை மன்னரே ஒரு காணொளியில் சொல்லி இருக்கிறார் அதேபோல பாடகி பாலசரஸ்வதி தேவி அவர்களின் குரல் அற்புதமான குரல் அவர்கள் பாடிய ஒரு பாடல் என்றும் மனதை விட்டு நீங்காத நீல வண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா இந்த பாடல் பற்றியும் தாங்கள் ஒருநாள் பேச வேண்டும் நன்றி வணக்கம்

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 Před 7 měsíci

    மிகவும் பயனுள்ள பதிவு; இளையராஜாவே தமது குருநாதர்களுள் ஒருவராகவே விஸ்வநாதனைப் பல இடங்களில் வெளிப்படையாகவே பணிவுடன் தெரிவித்துள்ளார்; இளையராஜாவின் வெற்றிக்கு,தம் இசையுலக முன்னோர்களின் முன்பு அவர் சிரம் தாழ்த்தி வணங்கும் அவருடைய இயல்பான வினயமும் பக்தியும் காரணங்களாகும். இளையராஜாவின் வெற்றியில் தாங்கள் குறிப்பிட்ட டி.ஆர்.பாப்பா உள்பட அனைத்து திரையுலக இசைமேதைகளும் மிகவும் மகிழ்ந்து," ஆஹா,ஆஹா" என்று சிரக்கம்பம் செய்து ஆசீர்வாதங்களை வழங்கியிருக்கிறார்கள்; Ellayaraja has been modestly designated as PRINCE; he is not a KING; he will be respected as one of the EMPERORS of the music world - இதைச் சொன்னவர், செவ்வியல் இசையில் ஒரேயொரு இராகத்தில் பல மணிநேரங்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் பாடக்கூடியவரான மாமேதைகளுள் ஒருவர்; இதை அவர் தன் தனிப்பட்ட பேச்சுக்களில் தம் மாணவர்களிடமும் சக வித்வான்களிடமும் பேசியதைப் பலரும் கேட்டிருக்கிறார்கள் - அதுவும்,சென்னை மார்கழி மாத இசைவிழாக்களில், அடுத்தடுத்த கச்சேரிகளின் இடையே கிடைத்த சில நிமிடங்களில் கூறியிருக்கிறார். அப்பெரியவர் யாரென்று அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. நன்றி,ஐயா! கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே?- என்று ஏ.எம்.ராஜா பாடியிருக்கும் பாடல் பற்றியும் ஒரு பதிவை வழங்குங்கள்,ஐயா!

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci +1

    All old songs will touch our hearts and mesmerize us

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 7 měsíci +2

    80களுக்கு பிறகு வந்த பாடல்களில் பழைய பாடல்களின் சாயல் இல்லாமல் உருவாக வாய்ப்பில்லை. இதற்கு மகாதேவி உட்பட பழைய பாடல்களே உதாரணம்.

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci

    Mahadevi film superb All songs are excellent Golden era Very great music directors they were ! Goddess Saraswathi blessings
    Today's song selection is fantastic
    " Manandal Mahadevi , illayel maranadevi " 😀😀

  • @sububloom6852
    @sububloom6852 Před 7 měsíci +5

    ஒரு பழைய நாட்டுப்புற பாடலை மையமாக வைத்து ஜி ராமநாதன் அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்தி நாற்பதுகளில் (40s ) உருவாக்கிய ஒரு தாலாட்டு பாடலை கே வி மகாதேவன் சில மாற்றங்களுடன் தனது படத்தில் பயன்படுத்தினார். அப்பொழுது அந்த பாடலை ஜி ராமநாதன் அவர்களே பாடினால் நன்றாக இருக்கும் என்று அவரையே பாடவைத்தார் . அந்த பாடல் தான் "எஜமான் பெற்ற செல்வமே". ❤
    இதேபோன்று விஸ்வநாதன் ராமமூர்த்தியும் மகாதேவி படத்தில் பாடிய "சிங்கார புன்னகை" பாடலும் ஜி ராமநாதனின் அதே 40 களின் பாடல் சாயலை கொண்டு VR பாணியில் அமைந்தது . 1957 க்குப்பின் குறிப்பாக பதி பக்தியின் சின்னஞ்சிறு கண் மலர் (1958) , பாகப்பிரிவினை (1959...ஏன் பிறந்தாய்....) பாசமலர் (1961) படங்களில் இருந்து தனக்கென்று தாலாட்டு பாடல்களில் ஒரு தனித்தன்மையை வளர்த்துக்கொண்டார் MSV . மற்ற பல genre களில் திறன் மதிப்பீடு குறியீடுகளை (benchmark index) ஏற்படுத்திய மெல்லிசை மன்னர்.... ஆயிரம் தாலாட்டுபாட்டு போட்டாலும் ஆயிரமும் வேறுவேறாக இருக்கும்படியும் தேனின் சுவை குன்றாமலும் தாலாட்டு பாடல்களுக்கென தாலாட்டு genre ல் பல திறன் மதிப்பீடு குறியீடுகளை (benchmark indices) களை template களாக உருவாக்கியுள்ளார். ❤
    ,

    • @mariappanraju7242
      @mariappanraju7242 Před 7 měsíci +1

      அருமையான கருத்து பதிவு சகோ..
      மிகவும் விரிவாக தங்களின் கருத்தைப் பதிவு செய்து என்னைப் போன்ற பழைய பாடல்கள் விரும்பும் மனதிற்கு பிடித்த தகவல்கள் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி சகோ🙏
      கோமதி...

    • @mariappanraju7242
      @mariappanraju7242 Před 7 měsíci +1

      இசைமேதை ஜி.ராமநாதன் அய்யாவின் இசையைக்கேட்பதும் அவர்களுடைய அற்புதமான இசையைப்பற்றிப் பேசுவதும் ஒரு வரமே🙏இந்த எஜமான் பெற்ற செல்வமே பாடலை இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கின்றோம்..இந்த பாடல் திரைப்படத்தில் ஒரு குதிரை தனது எஜமானனைப் பார்த்து இப்படி பாடுவதாக அமைந்த பாடல் என்று எங்கள் பெற்றோர் சொல்வார்கள்..அவர் அபூர்வமாக வான்மழை இன்றி வாடிடும்..என்ற அற்புதமான பாடலை ரத்னம் அம்மாவுடன் இணைந்து பாடியிருப்பார்.. இவருடன் இணைந்து பாடும் இன்னொரு பாடலும் உண்டு..
      நன்றி சகோ🙏
      கோமதி...

    • @sububloom6852
      @sububloom6852 Před 7 měsíci +1

      @@mariappanraju7242 மிக்க நன்றி... ரசித்தமைக்கு👍

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 7 měsíci

    பாடல்களை விவரிப்பதில் உங்களுக்கு இணை யாரும் இல்லை. 🎉

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 6 měsíci

    இந்த மாதிரி மெல்லிசை மன்னர் பாட்டின் நெறைய BGM எடுத்து பாடல் போட்டு உள்ளனர். ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிவகுமார் போன்றவர்களுக்கு மெல்லிசை மன்னர் சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்து உள்ளார். கற்பனை சக்திகள் குறைய மெல்லிசை மன்னர் சாதாரண மனிதன் அல்ல. அவதார புருஷன் அவர். இசை திருவள்ளுவர் மெல்லிசை மன்னர் அவரது இசை 1330 அதிகாரம் எல்லாம் கிடைக்கும்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 7 měsíci

    நண்பரே, வணக்கம்.
    என்னை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். அந்த படத்தில் என் மனதை ஈர்த்த பாடல் இது. அது பாடலின் குரல் வளமா.... அல்லது அதில் நடித்த சாவித்திரி மாற்றும் எம்.என்.ராஜம் இவர்களின் முக பொழிவின் தோற்றமா.... எனக்கு சொல்லத் தெரியவில்லை.
    அந்த அரண்மனையில் அந்த இடத்தில் நானும் ஒருவனாக இருப்பதாகவே உணர்வேன்.காரணம். ........? தெரியவில்லை.