எலுமிச்சை செடி பராமரிப்பது இவ்வளவு எளிமையானதா? எளிமையாக கவாத்து எடுக்கும் முறை || lemon tree

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2021
  • எலுமிச்சை செடி பராமரிப்பது இவ்வளவு எளிமையானதா? எளிமையாக கவாத்து எடுக்கும் முறை || lemon tree maintenance
    #lemon
    #lemontree
    #lemontrremaintanance
    #ealumichai
    நீர் ஊற்றுதல்:
    இதை பற்றி முன்னமே பேசியிருந்தேன் இருந்தும் இதை வலியுறுத்துவது அவசியம் என கண்டது. எலுமிச்சை மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா பழ மரங்களுக்குமே இது தான் நீர் ஊற்றும் முறை. மண்ணை நன்றாக வற்ற விட்டு நீர் விடுங்கள். இது மிகவும் அவசியம் இது பூஞ்சை தொற்றுகளில் இருந்து கூட மரத்தை பாதுகாக்கும்.
    சூழல்:
    இவை குளிர் தாங்காதவை. எனவே நல்ல சூரிய ஒளி படக்கூடிய இடத்தில் வைப்பது அவசியம்.
    முடாக்கிடுதல்:
    நீர் நிர்வாகத்தை பற்றி பேசும்போது முடாக்கை பற்றியும் பேசாமலிருக்க முடியாது இல்லையா? எலுமிச்சைக்கு நீர் தேவை இருந்து கொண்டே இருக்கும். எனவே மரத்தை சுற்றி காய்ந்த இலை தழைகள், வைக்கோல் என எல்லாவற்றையும் வைத்து மண்ணை மூடி முடாக்கிடுங்கள்.
    இது நீர் ஆவியாவதை தவிர்ப்பதோடு, களைகள் முளைப்பதையும் தடுக்கிறது. இதே முடாக்கு மட்கி மரத்திற்கு உரமாகவும் மாறி நமக்கு வேலையையும், செலவையும் மிச்சம் செய்கிறது. எனவே முடாக்கிட மறக்காதீர்கள்
    உரமிடுதல்:
    நிறைய பேர் செய்யும் தவறு இதில் தாங்க. மரம் ஒன்றை நட்டு விட்டால் நமது வேலை முடிந்துவிட்டது, மரத்தின் வேலை தான் இனி என நினைப்பது சரி இல்லை. இயற்கையில் எந்த பொருளும் ஒன்றுமில்லாமையிலிருந்து வருவதில்லை என நமக்கு தெரியும். இதனை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. எனவே மரத்துக்கும், செடிக்கும் உணவு தேவை, வெறும் தண்ணீரில் மட்டுமே வளர்ந்து விடாது எதுவும். சரியான நேரத்தில் தேவையான அளவு உரமிடுங்கள். என்ன உரமிடலாம்? என கேட்கிறீர்களா?
    நைட்ரஜன்:
    இது தாங்க சிட்ரஸ் வகை மரங்களுக்கு மிகவும் தேவையானது. மரத்தின் வளர்ச்சி, இலைகளின் வளர்ச்சி, பூக்கள், காய்கள் என அனைத்திலுமே நைட்ரஜனின் பங்கு மிகவும் அதிகம். எனவே நைட்ரஜன் நிறைய இருக்கும் இயற்கை உரங்களை இடுங்கள்.
    இவை நாம் வீட்டில் தயாரிக்கும் கம்போஸ்ட்களிலும், மண் புழு உரங்களிலும், கால்நடை சாணங்களிலும், இலை தழைகளிலும் நிறைய கிடைக்கும்.
    பாஸ்பரஸ்:
    இது அடுத்த முக்கியமான ஊட்டசத்து. இது சரியான அளவில் இருந்தால் தான் மரத்தால் சரியாக சக்தியை சேமித்து பயன்படுத்த முடியும்.
    இதை தவிர பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம், , சாம்பல் சத்து, இரும்பு, சிங்க் என இவை அனைத்துமே எலுமிச்சைக்கு தேவைப்படுகிறது.
    எப்போது இடுவது?
    மாதம் ஒரு முறை உரமிடுவது செடியை நன்கு ஆரோக்கியமாக வைக்கும். இதனால் செடி நன்றாக வளர்வதோடு, பூச்சி தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்கும். அப்படி அடிக்கடி இட முடியவில்லை என்றால் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது உரமிடுதல் நல்லது.
    என்னென்ன இடலாம்?
    கால்நடை சாணங்கள், மட்கிய உரங்கள், மண் புழு உரம், வேப்பம்/கடலை பிண்ணாக்கு, கோழி கழிவு இவற்றை எல்லாம் இடலாம். இதை தவிர பஞ்ச காவியமும் இடலாம்
    ஸ்பெஷல் கரைசல்:
    இதை எல்லாம் தவிர எலுமிச்சைக்கு என தனிப்பட்ட கரைசல் ஒன்று இருக்கிறது. அது தான் புளித்த மோர்.
    நன்றாய் புளித்த மோரினை செடியின் மேலும், செடியை சுற்றிலும் தெளிக்கலாம்.எலுமிச்சைக்கு காரதன்மை அதிகம் இருக்கும் மண் தேவைப்படுகிறது. புளித்த மோரினை தெளிப்பது இதற்கு உதவுகிறது.
    பூச்சி மற்றும் நோய் தாக்குதல்:
    பூச்சிகளுக்கு வேப்பெண்ணெய்+காதி சோப்பு+ தண்ணீர் கலவையும், பூண்டு, மிளகாய் கரைசலும் நல்ல பலன் தரும்இவற்றின் இலைகளை மண்ணில் படாதவாறு வைத்துக்கொள்வது முக்கியம். அப்படி படும் போது பூஞ்சை தொற்று ஏற்படும்நிறைய பேருக்கு இலைகள் சுருளுவது மிக பெரிய கவலையாக இருக்கலாம். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில: பூஞ்சை தொற்று, இலை துளைப்பான் பூச்சி, சரியாக நீர் ஊற்றாமலிருப்பது.இலைத்துளைப்பானின் புழு இதில் சேதத்தை செய்வதால் அந்த இலைகளை வெட்டி எரித்து விடுதல் நல்லது.இலைகள் மஞ்சளாவது: இதற்கு சத்து குறைப்பாடு தான் பெரிய காரணமாக இருக்கும். இரும்பு, மக்னீசியம், நைட்ரஜன் என இவை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    பூ பூக்க:
    காய்க்கும் காலம் நெருங்க நெருங்க பூக்கள் தோன்ற வேண்டும் அப்படி தோன்றவில்லை என்றால் தேமோர் கரைசல் தெளிப்பது மிகவும் உதவும்.
    மேலே உள்ள பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன் தொடர்ந்து மைய புலிகளுக்கு ஆதரவு தாருங்கள்
    பதிவு பிடித்திருந்தால் லைக் ஷேர் மற்றும் கமெண்ட் செய்ய மறக்காதீர்கள் நன்றி வணக்கம்..

Komentáře • 24

  • @sabuintegratedfarm
    @sabuintegratedfarm Před rokem +2

    சகோ வாழ்க வளமுடன் அருமையான பதிவு தங்கள் அலைபேசி என்னை பஹிறவும் நன்றி

  • @hariprasath597
    @hariprasath597 Před rokem +1

    Thankyou very much bro

  • @vravra
    @vravra Před 2 lety +1

    தகவல்களுக்கு நன்றி

  • @roja6135
    @roja6135 Před rokem +2

    Bro மக்கிய மாட்டு சாண உரத்தை போட்டால் கோழிகள் அந்த இடத்தையே கிளறி நாசப்படுத்துகின்றன.

  • @kaveris9047
    @kaveris9047 Před rokem +1

    4வருட மரம். நன்றாக வளர்ந்துள்ளன. ஆனால் இன்னும் பூ,காய் ஆரம்பிக்க வில்லை. என்ன செய்யறது?

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Před rokem +2

    வணக்கம் எலுமிச்சை மரத்தின் வயது எவ்வளவு ஆண்டு இருக்கும்

  • @kasthurikasthuri9771
    @kasthurikasthuri9771 Před 2 lety +1

    Anna lemon chedi otto chedi than lemon fruit vidomma anna

    • @maiyappulli
      @maiyappulli  Před 2 lety

      Illa Kasthuri ella vagaiyana leman chediume 🍋 kodukkum. Sila chedigal 🍋 kodukka konjam late agalam

  • @parthiban51643
    @parthiban51643 Před 2 lety +1

    தேங்காய் புண்ணாக்கு தரளாமா

  • @backeyam5269
    @backeyam5269 Před rokem +2

    No

  • @revathyhari4460
    @revathyhari4460 Před 2 lety

    எலுமிச்சை இலைகள் காய்ந்து விழுகிறது. புதிய துளிர் வரவில்லை. வேர் பகுதியில் எறும்பு நிறைய உள்ளன. இறந்து விடுமோ என நினைக்கிறேன். காப்பாற்ற வழி சொல்லவும்.

    • @maiyappulli
      @maiyappulli  Před 2 lety

      வேர்களுக்கு கீழ் எரும்பு துளை காணப்பட்டால் குறுனை மருந்தை சிறிதளவு பயன்படுத்தவும். செடியின் அடிப்பகுதியில் நன்றாக கிளரிவிட்டு தேவையான தண்ணீர் விடவும்.

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Před rokem

    எந்தெந்த மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்

    • @maiyappulli
      @maiyappulli  Před rokem

      பூ பூக்கும் பருவத்திற்க்கு முன்

  • @muthulakshmigopalakrishnan5146
    @muthulakshmigopalakrishnan5146 Před 9 měsíci +1

    எத்தனை மாதத்திற்கு ஒரு முறை உரமிட வேண்டும்?

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 Před rokem +1

    இந்த மாதிரி கத்திரி எங்கே கிடைக்கும் சார் ?

    • @maiyappulli
      @maiyappulli  Před rokem

      அக்ரிகல்சர் பொருள் விற்பனை செய்யும் கடை மற்றும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களிலும் கிடைக்கும்.
      dl.flipkart.com/dl/erin-garden-roll-cut-hand-pruner-scissor-flower-cutter-flemingo-cutte-tool-kit/p/itm1bc4895cd820c?pid=GTSGYMY4ZSVGVGH7&cmpid=product.share.pp&_refId=PP.3168e7a1-6082-4a4c-a9a7-1c671b272242.GTSGYMY4ZSVGVGH7&_appId=CL