நாச்சியார் திருமொழி - PART 2 - தையொரு திங்கள் Dr VENKATESH UPANYASAM

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2022
  • Hudba

Komentáře • 30

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před rokem +1

    The divine, royal, incomparable majesty of Sri Periyavaachaan Pillai's Vyakhaynam 💖💖💖💖💖💖 has been presented very well. 😇Adiyen Ramanujadasi. 🙏

  • @srivaishnavastotras7704

    so beautfiul "pey azhwars reference" --- from moondram thiruvandhadhi.... peerless upanyasam!

  • @kanagavallithillainataraja7689

    நன்றி ஸ்வாமி

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 2 lety

    🙏🙏

  • @ramarajan60
    @ramarajan60 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏Andaal thiruvadigale saranam
    Dhanyasmi swami adiyen 🙏🙏🙏🙏

  • @karthikkrish9618
    @karthikkrish9618 Před 2 lety

    🙏🙏🙏 Adeiyan Ramanuja Dasan. Dhandam Samarpanam

  • @deepaprasanna2393
    @deepaprasanna2393 Před 2 lety +1

    உய்யவுமாங்கொலோ விளக்கம் மனதை உருக்கியது🙏🙏🙏🙏

  • @ranjitham9218
    @ranjitham9218 Před 2 lety

    Namaste swami ,ungalai Petra,manaiviyum,magalum punniyavathi,bakyavathikal.vazha valamudan.

  • @muthulakshmisankaranarayan5516

    Sabash arumai arpudham

  • @umakalyan8032
    @umakalyan8032 Před 2 lety +1

    Very Nice 🙏🙏🙏🙏🙏

  • @kishorethiru6549
    @kishorethiru6549 Před rokem

    Adiyen ranganayagi ramanuja dasi swami

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před 2 lety

    Namaskaram

  • @deepaprasanna2393
    @deepaprasanna2393 Před 2 lety

    மார்கழி நோன்பு முடிந்து தைமாதம் காமன் பூஜை நடத்துவதன் கலாச்சார மிச்சம் தான் இன்று நாம் மார்கழி முடிந்து தை முதல் நாள் கரும்பு வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோமோ!!? ஆனால் தைமாதம் தான் கோலமிட்டு தெருவை அலங்கரித்த விவரம் வருகிறது.
    காலப்போக்கில் அது மார்கழி மாதத்து சிறப்பாக மாறி விட்டதோ...🙏🙏🙏🙏

  • @kannansrinivasan6728
    @kannansrinivasan6728 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @umakalyan8032
    @umakalyan8032 Před 2 lety

    Very nice explanation 🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshnarayanan6870
    @vigneshnarayanan6870 Před 2 lety

    😍

  • @kanagavallithillainataraja7689

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் 'நாச்சியார் திருமொழி ' முதல் பாசுரத்திற்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை அடியொற்றி பகுதிவாரியாய் பிரித்து அர்த்தத்தை அர்த்தித்தார் .
    ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் .அதிலிருந்து -
    ஆண்டாள் நாச்சியார் மார்கழி திங்கள் முழுவதும் கண்ணனுக்காக நோன்பு நூற்றாள் ,தை திங்கள் தரையை மெழுகி சுத்தப்படுத்தி கோலமிட்டாள் பின் மாசி மாதம் வளர்பிறை சுக்லபக்ஷமான முன் 15 நாட்களும் மன்மதனின் சௌகுமார்யத்திற்கு தகுந்தாற் போல் நுண்ணிய மணல் துகளை கொண்டு தரையில் பரப்பி அதன் மேல் மன்மதனை வரவேற்க அலங்காரம் செய்தாள் .
    முதற்பகுதி - தண் மண்டலமிட்டு என்பதற்கு 3 நிர்வாகமாய் பூர்வாச்சாரியார் அடியொற்றி அத்புதமாய் சாதித்தார் .கண்ணிற்கு குளிர்ச்சியாய் வட்ட வடிவமாய் மண்டலமாக ஆண்டாள் கோலம் இட்டாள் ,ஒரு மண்டலம் 48 நாட்கள்
    விடாமல்இப்புவி மண்டலத்தில் மன்மதனை நியமத்துடன் வழிபட்டாள். ஸர்வமும் சகலமும் நாராயணனே என்ற வட்டத்திற்குள் இருந்தவள் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வட்டவடிவமாய் காமன் சாமனுக்கு கோலமிட்டாள் .
    2ம் பகுதி - தெருவில் மன்மதனின் சௌகுமார்யத்திற்கு பங்கம் வராமல் கோலம் போட்டது யாதெனில் தெருவை அழகுபடுத்துவதையே இலக்காகக் கொண்டு அதுவே ப்ரயோஜனமாய் கருதி அணங்க தேவனானான மன்மதனை வரவேற்றாள் .
    3ம் பகுதி - உன்னயும் உம்பியையும் தொழுதேன் என்றபடி மன்மதனையும் அவன் தம்பி சாமனையும் தொழுதாள் கண்ணனை அடைவதே இலக்காக கொண்ட ஆண்டாள் தன் ஸ்வரூபத்தை துறந்து தேவதான் தந்திரங்களான காமன் சாமனை தொழுததன் மூலம் தான் ஸ்வரூபஹானியாய் - ஸ்வரூபத்திற்கு தோஷம் விளைவித்துக்கொண்டு கண்ணனை அடையானும் என்ற ப்ராப்யத்வரை மேலோங்க
    அடியார்களை முன்னிட்டு கொண்டு கண்ணனை அடைந்தது தத் சேஷத்துவதை விட ததீய சேஷத்துவம் மேலோங்க சாமனை முன்னிட்டு கொண்டு காமனை தொழுதாள் என த்ருஷ்டாந்தங்களுடன் சாதித்தார் .
    4ம் பகுதி வேங்கடவனுக்கு என்னை விதிற்றியே என ஏகாரத்துடன் இப்பாசுரத்தை ஆண்டாள் நிறைவு செய்ததின் மூலம் வேங்கடவனுக்கே என்னை அந்தரங்க கைங்கர்யம் புரிபவளாக ஆக்கு என ஆண்டாள் மன்மதனிடம் பிரார்த்தித்து தன்னை அந்த சக்கரக்கையன் - அனுகூலருக்கு ஆபரணமாய் ரக்ஷிக்கும் சக்கரம் பிரதிகூலருக்கு ஆயுதமாய் விரோதி நிரஸனம் செய்யும் அந்த சக்கரத்தை ஏந்திக்கொண்டு இருக்கும் வேங்கடவனுக்கே என்னை சேர்ப்பிப்பாய் என அஞ்சலி முத்திரையுடன் ஆண்டாள் மன்மதனை நோக்கி பிரார்தித்ததாக ஸ்வாமிகள் அறுதியிட்டார் .
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    Dr.வெங்கேடஷ் ஸ்வாமிகள் "தை ஒரு திங்கள்" என துவங்கும் நாச்சியார் திருமொழி பாசுரத்திற்கு விபுலமாய் விலாவாரியாய் அவதாரிகையுடன் கூடின பதவுரை விளக்கத்தை அத்புதமாய் சுவாமி பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தின் அடியொற்றியும் வழிமொழிந்தார் .
    ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்க்காரங்கள் .
    ஆண்டாள் நாச்சியார் மார்கழி மாதத்தில் தன்னை ஒரு கோபியராக பாவித்து ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாய் கருதி வடபத்ர ஸாயீயே கண்ணனாக நினைத்து குற்றேவல் என கைங்கர்யத்தை கண்ணனிடம் ப்ரார்திக்க அதை கண்ணன் வைகுண்டத்தில் கொடுப்பதக கூறினான் .ஜீவாத்மா - பரமாத்மா சம்பந்த உன்னதத்தை உணர்த்தும் வகையில் ஆண்டாள் இத்திருமொழியை அமைத்தாள் ஆண்டாளுக்கு கண்ணனிடத்தில் இருக்கும் ப்ரேமம் அபிநிவேசம் அளவிடமுடியாது .கண்ணனும் ஆண்டாளுக்கு ஆசைஅபிலாஷங்கள் மேன்மேலும் பொங்கி வரட்டும் என காலம் தாழ்த்தினான் .ப்ராப்யமான புருஷோத்தமனை அடைய ஒரு கொழுகொம்பை பற்றுவது போல் மன்மதனை ஆண்டாள் பற்றினாள் இது தகுமோ என்றால், முன்னோர் செய்த முறை தப்பாமல் தானும் தேவ தாந்திரங்களை ஸ்வப்ரயோஜனதிற்க்கு இல்லாது அனன்ய பிரயோஜனமாய் இது சாத்தியமாகும் என்பதை இதி காசத்திலிருந்து உதாஹரித்து சாத்தியக்கூறுகளை ஸ்வாமிகள் முன்வைத்தார் .இராமாயணத்தில் அயோத்யாவாசிகள் சீதா ராமர் நன்மைக்கு என கோயில்கள் தோறும் அர்ச்சனாதிகளை செய்ததையும் ராமர் சுந்தரகாண்டத்தில் ஸீதை தேடி அலையும்போது பிரார்த்தித்த ஸ்லோகமான " நமோஸ்து ராமாய"
    என துவங்கும் ஸ்லோகத்தையும் அதன் அர்த்தத்தையும் விசேஷித்தார் .அதில் திருவடியான ஹனுமான் ராமலக்ஷ்மண சீதாபிராட்டியை ப்ரார்தித்ததுடன் நில்லாமல் இந்திரன் சூரியனை சந்திராதிகள் போன்ற மருக் கணங்களுக்கும் தன் நமஸ்காரங்களை தெரிவித்ததன் மூலம் பரப்ரயோஜனமாய் தேவதாந்திரங்களை தொழுவது வழக்கம் என நிரூபணம் ஆயிற்று .இக்கூற்றைசுவாமி வேதாந்தா தேசிகர் பரமதபங்கம் என்ற தேசிகப்ரபந்தத்தில் இதற்க்கான சாத்தியக்கூறுகளை தேசிகர் முன்வைத்ததையும் எடுத்துரைத்தார் . இங்கே ஆண்டாள் கண்ணன் மேல் இருக்கும் பக்தி பாரவசயத்தால் அவன் மேல் இருக்கும் ப்ராப்யத்வரையால் பக்தி மிகுதியால் அணங்கன் ஆன மன்மதனை பிரார்த்தித்து தன்னை கண்ணனுடன் சேர்த்து வைக்க ஆண்டாள் வேண்டினாள் .மேலும் மன்மதன் தன்னை ப்ரார்த்திப்பவரை அவர்கள் துணையுடன் சேர்த்து வைப்பதில் இலக்காய் இருப்பான் அதற்காக உயிர்த்தியாகம் செய்யவும் துணிவான் என்பதை சிவன் பார்வதி சேர்க்கைக்கு மன்மதன் செய்த யுக்திகளை அருமையாய் ஸ்வாமிகள் நினைவு கூர்ந்த்தார் .மேலும் மன்மதன் தம்பி சாமனையும் சேர்த்து அவர்கள் வரும் பாதையை சுத்தமாக்கி மண்டலமாக வட்டவடிவில் கோலங்கள் போட்டு ஆண்டாள் அவர்களின் வரவை எதிர்நோக்கி பின் தன் பிரார்த்தனையை முன்வைத்தாள் என்றார் .இத்துடன் முதல் பாசுரத்தின் பதப்பதா அர்த்தத்தை அத்புதமாய் சாதித்தார் .
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @vinayasundari5006
    @vinayasundari5006 Před 2 lety

    🙏 kindly add english thumbnail. Some of us can onlyunderstand tamil not good in reading. Pl consider

  • @gururajmr2004
    @gururajmr2004 Před 2 lety

    🙏🙏