🚩மராட்டியர் தர்பார் ஹால் தஞ்சை அரண்மனை l Maratha Darbar Hall Thanjavur Palace 👑

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • 👑 தஞ்சாவூர் மாநகரானது சோழர்களது காலம் கொண்டே தலைநகராக விளங்கிய சிறப்பு கொண்டது, கிட்டத்தட்ட 7வது நூற்றாண்டு கொண்டே தஞ்சையின் வரலாற்ற ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகிறது.
    🫅தஞ்சையினை சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள் என முப்பெரும் அரச பரம்பரையினர் ஆண்டுள்ளனர்.
    🤯 இம்மூன்று பேரரசின் இடையே பண்பாடும், கலாச்சாரமும், பழக்கவழக்கங்கள், இறைவழிபாடு, மொழி என பல வேறுபாடுகளை தஞ்சையில் வாழ்ந்த மக்களை மட்டும் இல்லாமல் இங்குள்ள திருக்கோயில்கள், கட்டடங்கள், கலைகள் என அனைத்திலும் அதனது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
    ⚜️ தஞ்சையின் மையத்தில் அமைந்துள்ள அரண்மனை நாயக்கர்களது காலத்தில் கட்டப்பட்டது. பின் கி.பி.1676 ஆட்சிக்கு வந்த மராட்டியர்கள் பல மாறுதல்களை செய்துள்ளனர்.
    ⚔️ அதில் ஒன்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கம் மராட்டிய மன்னர்களின் தர்பார் மண்டபம். இரண்டாம் சகசி (ஷாஜி) 1684 ஆண்டு கட்டியதாக அறியப்படுகிறது.
    🤩 இங்கு பல வண்ணமயமான ஓவியங்களும், சுதை சிற்பங்களும், கற்வேலைபாடுகள் உடைய ஓவியம் என பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் உள்ளது. எனவே இத்தர்பார் மண்டபத்தினை கலை பொக்கிஷம் என கூறினாலும் அது சரியே.
    🙏 இந்த பதிவு குறித்த தங்களின் மேலான கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது.
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    #tag #tags
    #yathrigan #tamil #thanjavur #history #yathriganyt #thanjavurpalace #palace #darbar #darbarhall #palacedarbar #maratha #marathi #thanjavurmaratha #serfoji #shaji #sivaji #thulaja #venkoji #pradhapsingh #king #raja #rajamandapam #heritage #heritagemuseum #heritagebuilding #heritagepreservation #thamilnadu #archaeology #shivaji #palacemuseum #palacetour #thanjavurpalacevlog #thanjavurpalacetour #thanjuavurkar #thanjavurkor #bhonsle

Komentáře • 2