Palaivanacholai | Aalana Aalu Ivan Aazhamana Aalau HD Song 2

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2014
  • To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044 -28297564,044-28297175
    Palaivanacholai is a 1981 Tamil movie starring Vagai Chandrasekar and Suhasini.
    Movie : Palaivanacholai
    Cast : Vagai Chandrasekar ,Suhasini
    Music Director : Shankar (Ganesh)
    Director : Robert Rajasekaran
    Year : 1981
  • Krátké a kreslené filmy

Komentáře • 852

  • @dhayaviewschannel498
    @dhayaviewschannel498 Před 3 lety +888

    இதுபோன்ற 80's படங்கள் இந்த காலகட்டத்தில் இப்பொழுது வந்தாலும் ரசிப்போம் என்பவர்கள் யார் யார் உள்ளீர்கள்☺️❤❤❤❤

  • @Saran_420
    @Saran_420 Před 3 lety +443

    அட்வான்ஸா போட்டு வைப்போம், 2050ல இந்த பாட்ட கேக்குறவங்க லைக் பண்ணுங்க...

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Před 2 lety +109

    நன்றி. மிக சிறிய வயதில் ரேடியோவில் கேட்ட பாடல். இப்பொழுது நாற்பத்தி எட்டு வயதில் கேட்கும்போது மிக ஆனந்தமாக இருக்கின்றது. அக்காலங்களில் இந்த பாடல்களை மட்டுமே நம்மை அழைத்துச் செல்லும்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 Před 3 lety +229

    அந்த நாட்களில் திருமண வீடுகளில் ஒலித்த இப்பாடலை கேட்டு ரசித்தவர்கள்....

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 Před rokem +109

    80களில் நான் பெல்ஸ் பேண்ட்டில் வலம் வந்த காலத்து பாடல் பாடலைக் கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு ஏக்கம் மீண்டும் அந்த காலத்து வாழ்க்கைக்கு மனம் ஏங்குதே...

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s Před 3 lety +142

    இந்த பாட்டை கேக்குறவங்களால நடனம் ஆடாம இருக்க முடியாது.... இசையும் குரலும் அப்படி 😍😍

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 3 lety +84

    சந்திரசேகரே பாடுவது போல் உள்ளது குரல் அவ்வளவு பொருத்தம் அருமை அருமை

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Před 3 lety +56

    ஆஹா முழுகை‌சட்டை ,‌ காதை மறைக்கும் தலைமுடி &‌ பூட்கட்பேண்ட் அருமை... ரொம்ப பிடிக்கும்...

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 Před 3 lety +142

    மலேசியா வாசுதேவன் அவர்களின் இனிமையான குரலில் அழகான இளமை துள்ளும் பாடல்
    அக்காலம் தான் பெஸ்ட்.
    நன்றி தமிழ் மொழி

    • @jayavela8748
      @jayavela8748 Před rokem +3

      இனிமையான குரல் மலேசியா வாசுதேவன் சார்

    • @pravi9913
      @pravi9913 Před rokem +1

      M

  • @g.kennedy1529
    @g.kennedy1529 Před 3 lety +185

    1981 வருடத்திய பெல்ஸ் பேண்ட் மாடல். எனது கல்லூரி நாட்கள் மறக்க முடியாது.

  • @subramani6292
    @subramani6292 Před 3 lety +32

    அந்த காலபாடல்கள் எந்த காலங்களிலும் கேட்கலாம் நான் படிக்கும் போது பார்த்த படம்
    மலரும் நினைவுகள்

  • @mdbilal2010
    @mdbilal2010 Před 4 lety +93

    காலங்கள் பல கடந்தாலும் இன்றும் கேட்பதற்கு இனிமையான பாடல் .

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 3 lety +366

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 2 lety +4

      🥶🥶🥶🥵🥵🥵

    • @rajvel6202
      @rajvel6202 Před rokem

      ஃVELRAJ

    • @VanaGaan
      @VanaGaan Před 7 měsíci

      உங்காயா கூதி கேட்டா

  • @boomiboomi9522
    @boomiboomi9522 Před rokem +24

    இது போன்ற நல்ல தமிழ் திரைப்படங்கள் எப்போது வந்தாலும் அதை விரும்பி பார்ப்பேன் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Před 11 měsíci +12

    இந்த படம் 1982ல் வெளிவந்த படம் நான் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் முருகன் திரையரங்கில் பார்த்து ரசித்தேன் இதில் உள்ள பாடல்கள் மற்றும் கருத்து மிகவும் என்னை கவர்ந்தது

  • @bhuvanac6214
    @bhuvanac6214 Před 4 lety +49

    இந்த பாடலை தனது அருமையான குரலால் இன்னும் சிறப்பாக்கி இருப்பார் திரு.மலேசியா வாசுதேவன்.

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue Před 4 lety +226

    இப்ப இவர்கள் ஆறு பேரும் இந்த பாடல் ரீமேக் செய்தால் யார் எல்லாம் பார்க்க ஆசை இருக்கிறது எனக்கு இருக்கு உங்களுக்கு இருக்க

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Před 3 lety +8

      ஆட்கள் மாறக்கூடாது அவர்களே நடிக்க வேண்டும் அப்போது தான் நான் பார்ப்பேன்

    • @aathikarumathur2886
      @aathikarumathur2886 Před 3 lety +5

      கலையார்வம் உள்ள அனைவருக்கும் இருக்கும் எனக்கு இருக்கு

    • @muthunalla1172
      @muthunalla1172 Před 3 lety +1

      Me

    • @balakrshinan1253
      @balakrshinan1253 Před 3 lety +2

      @@aathikarumathur2886 3

    • @sathishkumarsathish7151
      @sathishkumarsathish7151 Před 3 lety +1

      கண்டிப்பாக எனக்கு இருக்கிறது

  • @jeyamurugansingaravelan7432

    மலேசியா வாசுதேவனின் இளமைக்கால குரலில்மிக அருமையானபாடல்

  • @ameseliyas9815
    @ameseliyas9815 Před rokem +16

    இப்போது இதைபோல் பாடல்கள் கேட்கும்போது பழைய நினைவுகள் நெஞ்சில் ஓர் வருடல்

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai Před 4 lety +34

    மலேசியா வாசுதேவனின் குரலில் என்ன ஒரு வசீகரம்!..

  • @venkavtesan6639
    @venkavtesan6639 Před 3 lety +717

    2020ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like பண்ணவும்

    • @neelakandansv3322
      @neelakandansv3322 Před 3 lety +6

      Compound நண்பர்கள் படம் எனது நணபர்களை மனதில் மறுபடியும் நலைநிறுத்திவிட்டது இந்த பாடல்.

    • @RajugHema
      @RajugHema Před 3 lety +5

      Yes I could not miss this song, now iam 70 years old

    • @tamilarasi5317
      @tamilarasi5317 Před 3 lety +1

      சூப்பர்

    • @muthugomathi6973
      @muthugomathi6973 Před 3 lety +5

      2021👍

    • @surshsuresh8304
      @surshsuresh8304 Před 3 lety

      Punda

  • @appusureshappu9832
    @appusureshappu9832 Před 4 lety +144

    அன்புள்ளம் கொண்ட சந்திர சேகர் அவர்களுக்கு இந்த பாட்டை சமர்ப்பிக்கிறேன்

  • @daddylifestyleg7593
    @daddylifestyleg7593 Před 4 lety +124

    அந்த நான்கு பேரின் நடனம் அருமை வாசு சாரின் குரல் கம்பீரம் மொத்தத்தில் ரசிக்க தகுந்த ஒரு பாடல்

  • @venkatesanchanrakasan2213
    @venkatesanchanrakasan2213 Před 5 lety +264

    80 களில் மட்டும் அல்ல அன்றும் இன்றும் என்றும் அருமையான பாடல்

    • @gurudev2547
      @gurudev2547 Před 4 lety +6

      காலம் எவ்வளவு வேகமாக சென்றுகொண்டு இருக்கிறது

  • @venuraaj
    @venuraaj Před 3 lety +11

    மலேஷியா வாசுதேவன் குரலில் அருமையான பாடல்

  • @sreeram9772
    @sreeram9772 Před 3 lety +406

    2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்

    • @neelamsenthil7021
      @neelamsenthil7021 Před 2 lety +7

      u r correct...

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 2 lety +8

      தெய்வீகம் இதுல எங்க இருக்கு ???

    • @santhiyabalakrishnan1583
      @santhiyabalakrishnan1583 Před 2 lety +7

      @@vkdmedia3734 பாடலில் ஆபாசவரி இல்லை அது வே ஒர் தெய்வீகபாடல் bro

    • @umamaheswarisenthilkumar6922
    • @gerogel3868
      @gerogel3868 Před 2 lety +2

      உங்கள் ஆசை நிரை வோரும் இயற்கை உண்டு

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 Před 4 lety +131

    முதல் முதலா பார்க்கும் போது அச்சமாக இருக்கும். ஆனா விடியும் போது விளக்கில் எண்ணமிச்சமாக இருக்கும் அருமையான வரிகள்.

    • @palrajnayakkar7192
      @palrajnayakkar7192 Před 4 lety +3

      க. மாடசாமி எங்கயோ போயிட்டிங்க

    • @santhoorbhai7352
      @santhoorbhai7352 Před 4 lety +2

      க.மாடசாமி.தமிழன் Madasamy 🤗

    • @albm5824
      @albm5824 Před 2 lety +2

      Super frd

  • @p.palraj3930
    @p.palraj3930 Před rokem +8

    என் தலைவன் பாடிய அற்புதமான பல ஆயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று.நீ மறுபடியும் பிறந்து வாயா.உனக்காக நான் காத்துக் .கிடக்கிறேன்.குரல் மிக அருமை.

  • @palaniselvi9844
    @palaniselvi9844 Před 3 lety +22

    மலேசியா வாசுதேவன் ஐயா குரலுக்கு நான் அடிமை

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Před 3 lety +341

    30 இஞ்ச் பெல்பாட்டம். பெரிய பெல்ட். பெரியகாலர் சட்டை. அதிகமான தலைமுடி. என் மலரும் நினைவுகள்

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 3 lety +3

      பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா?

    • @donaldxavier6995
      @donaldxavier6995 Před 3 lety +6

      அன்றைய காலகட்டத்தில் பெல்பாட்டம் முப்பது இஞ்ச்க்கு மேல் இருந்தால் தான் திறமையான டெய்லர்.

    • @ithutheriyuma..9616
      @ithutheriyuma..9616 Před 3 lety +3

      Epadi intha dress style maruchi?

    • @sayyedmohd2795
      @sayyedmohd2795 Před 3 lety +1

      Mohdsayyed

    • @prakaashj5485
      @prakaashj5485 Před 3 lety +3

      @@ithutheriyuma..9616 it changes for every 10 years.

  • @karthiraj1437
    @karthiraj1437 Před 4 lety +14

    கொஞ்ச நாளுக்கு முன்னால் மெகா டீவி ல இந்த படம் பார்த்தேன்... கிளைமாக்ஸ் ல கண் கலங்கிருச்சு.....இயல்பான எதார்த்தமான நடிப்பு ......

    • @aathikarumathur2886
      @aathikarumathur2886 Před 3 lety

      அருமையான மன உணர்வு உண்மை கலை உணர்வு உண்மைத் தன்மை உள்ளவர்களுக்ககு மட்டுமே இவ்வாறு தோன்றும் வாழ்த்துக்கள் இந்த மன நிலையிலேயே பயணியுங்கள்

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Před 3 lety +8

    மலேசியாவாசுதேவன் குரல் ரொம்ப அருமை

  • @kandhanathank8725
    @kandhanathank8725 Před 5 lety +142

    இந்த மாதிரி குரூப் சேர முடியாது. அருமையான படம்
    சுகாசினி நடிப்பு சூப்பர்....பாடல்
    அனைத்தும் சூப்பர் அருமை..👌👍

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 5 lety +3

      படம் அருமை....‌

    • @rameshbabutg8315
      @rameshbabutg8315 Před 5 lety +5

      அந்த காலத்தில் பிரபலமான BellBottom pant

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před 2 lety +4

    இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் அவ்வளவு இனிமை நன்றி நடன இயக்குநர் பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்

  • @cadetdinesh6980
    @cadetdinesh6980 Před 2 lety +35

    2015-2017களில் 11thand12th படிக்கும்போது நானும் பெல்பாட்டம்ஸ் போட்டு இருந்தேன் எனக்கு மிகவும் பிடித்த அந்த மறக்க முடியாத நினைவுகள் 🤩🤩

  • @user-vw8gg5it9h
    @user-vw8gg5it9h Před 4 lety +204

    பாட்டம் பெல்ஸ் இது 2000 வருடம் போல ரீ என்ரி தந்தது நான் கூட தச்சி போட்டுக் இருக்கேன் போட்டு இருக்கேன் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது மறக்க முடியாத நினைவுகள்

  • @user-gv1lo6yb2c
    @user-gv1lo6yb2c Před 4 lety +98

    மலேசியா வாசுதேவன். குரலில் அற்புதமான பாடல்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 3 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராஜீவ்.பயங்கரமான ரசிகை நான்

  • @RanjithKumar-mt7md
    @RanjithKumar-mt7md Před 4 lety +54

    சங்கர்கனேஷ் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்

  • @Top10Points
    @Top10Points Před 3 lety +89

    1980’s are really golden period that cannot be replaced by any decades,Life was really so natural.I can write so many things until the maximum comment limit exceeds.

    • @sumo375
      @sumo375 Před 3 lety +1

      True.

    • @sanjeevjayakumar593
      @sanjeevjayakumar593 Před 3 lety +3

      1980s le idhe maadhiri 1960s pathi yaaravdhu sollirpaanga saar!

    • @easwaransanthakumar297
      @easwaransanthakumar297 Před 3 lety +5

      Absolute nonsense. Don't live in the past. After 40 years, people will say 2020s were the best period.

    • @Crimetraveller90
      @Crimetraveller90 Před 3 lety +2

      hello 90"s kids kitta pesuriya? manda bateram

    • @krishnakhumaar2353
      @krishnakhumaar2353 Před 3 lety +4

      @@easwaransanthakumar297 no bro majority say upto 1987 life was good which carried upto to 1995 cable TV mobile laptop all ruined lives relationships

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s Před 3 lety +8

    50 வீடுகள் மட்டுமே இருக்கும் ஒரு சின்ன கிராமம்.அதுல ஒரு வீட்டுப்பெண்ணுக்கு கல்யாணம். வாசல்ல பந்தல், தோரணத்தோட மைக் செட் ல இந்த பாட்டு..... நினைச்சி பாக்கும்போது அருமையா இருக்கு...

  • @pitchaimanichinnaiyan7698

    கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய பாடலிது....
    இல்பொருள் உவமையணி
    பயின்றுவரும் பாடலிது...
    அருமை.... சூப்பர்.

  • @subramanianvalasai8976
    @subramanianvalasai8976 Před rokem +6

    அனைவரும்அக்கால இளைஞர்கள், எப்படியிருப்பினும் இளமையே அழகுதான்.

  • @Gravity-Stories
    @Gravity-Stories Před 3 lety +24

    I was an infant when this movie released. There was huge response for this movie during this periods. My uncles and all Teenage guys celebrated this movie with great sprit. Looks like like was very simple in those days

  • @nagarajanshanmugam9460
    @nagarajanshanmugam9460 Před 2 lety +7

    ரொம்ப அருமையான பாடல் அநத காலத்தில் ரொம்ப இளைஞ்சர்கள் விரும்பிய பாடல்

    • @raguls364
      @raguls364 Před 2 lety

      ரொம்ப அருமையான பாடல் அந்தக் காலத்தில் ரொம்ப இளைஞர்கள் விரும்பிய பாடல்.

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +6

    மலேசியா வாசுதேவன் குரலில் 👌👌

  • @soundarsoundar8108
    @soundarsoundar8108 Před rokem +7

    அருமையான பாடல்
    மறக்க முடியாத நினைவுகள்

  • @sssvragam
    @sssvragam Před 3 lety +2

    மலேசியா ஐயா குரலில் நான் பாடிய கட்ட வண்டி கட்ட பாடல் எனக்கு பிடித்தது

  • @user-pv4uv8cz8p
    @user-pv4uv8cz8p Před 4 lety +248

    கொரோனா ஊரடங்கு நாட்களில் நேரம் போகாம இந்த பக்கம் வந்தவுக யாரும் இருக்கிங்களா???

  • @donaldxavier6995
    @donaldxavier6995 Před 4 lety +190

    நடிகர் ராஜுவ் அவர்களின் கம்பீர தோற்றம் மற்றும் திறமைக்கேற்ற பாத்திரங்கள் அமையவில்லை...

    • @kishoren3096
      @kishoren3096 Před 4 lety +7

      Crct than.. rajeev voice nalla irukumm.

    • @sounderrajraj7670
      @sounderrajraj7670 Před 3 lety +8

      Rajeev also dubbing artist

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 Před 3 lety +3

      Vikram படத்தில் புத்திசாலி வில்லன்

    • @b.nalini9173
      @b.nalini9173 Před 3 lety +3

      My favourite actor Rajeev very nice very cute man❤️❤️❤️❤️

    • @davidabraham5114
      @davidabraham5114 Před 3 lety +5

      அவருடைய தேர்வு அப்படி. கதை கேட்டு நடிக்கனும். அவருடைய டிசைன் அப்படி.

  • @selvamselvam5486
    @selvamselvam5486 Před 4 lety +43

    கல்யாண வீடுகளில் அதிகம் ஒலிக்கும் பாடல்

  • @SankarSankar-of6og
    @SankarSankar-of6og Před 3 lety +8

    நான் விரும்பிய பாடல் மிகவும் அருமை

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Před 3 lety +8

    மலரும் நினைவுகள் பாடல்

  • @karthiraja2873
    @karthiraja2873 Před 2 lety +2

    ஜனகராஜ் சந்திரசேகர் சார் டான்ஸ் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @meganathannathan4699
    @meganathannathan4699 Před 4 lety +39

    1990 iile
    2020 ille
    2050 kids like this song

  • @PS2-6079
    @PS2-6079 Před 15 dny +2

    1981-ம் ஆண்டு ராபர்ட் - ராஜசேகரன் (இரட்டையர்கள்) இயக்கத்தில் சுஹாசினி, சந்திரசேகர், தியாகு, ஜனகராஜ், ராஜீவ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "பாலைவனச் சோலை". இந்த இரட்டையர்களில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட ராபர்ட் ஒரு சிறந்த கிட்டாரிஸ்டாகவும் வலம் வந்தார். இவர்கள் தான் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள்!
    தமிழ் திரை உலகில் காதலைப் போன்று நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் இந்தப் படமும் அடங்கும். ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலாகத் தான் இருக்கும் என்ற கருத்தினைத் தகர்த்து மாசற்ற நட்புடன் அவர்கள் இப்படியும் வாழலாம் என்று பாடம் புகட்டி நாற்பத்திமூன்றாண்டு கடந்து விட்டபோதிலும் நட்பிற்கு இலக்கணமாக இப்படத்தை மேற்கோள் காட்டலாம் அல்லவா?
    பொறுப்பில்லாத, வேலையில்லாத வாலிபர்கள் மத்தியில் பெண் ஒருத்தி கள்ளம் கபடமில்லாத நட்போடும், நம்பிக்கையோடும் பழகுவதை திரை காவியமாக காட்டி அதில் இரட்டையர்கள் வெற்றி பெற்றதை மறுக்க முடியாதல்லவா?
    ராபர்ட் என்கின்ற ராபர்ட் ஆசிர்வாதம் & ராஜசேகர் இருவரும் 1971 - 74 கல்வியாண்டில் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக ஒளிப்பதிவு படித்து விட்டு 1979-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயபாரதி இயக்கத்தில் தமிழில் வெளியான கடைசி கறுப்பு வெள்ளைத் திரைப்படமான "குடிசை"க்கு ஒளிப்பதிவு செய்தார்கள். "ஒரு தலை ராகம்" திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்த கையோடு, இருவரும் சேர்ந்து ‘பாலைவனச் சோலை’ படத்தை இயக்கி வெற்றி பெற்றனர். முக்கிய வேடத்தில் நடித்த சுஹாசினியின் கதாபாத்திரம் அப்போது எல்லோராலும் பேசப்பட்டது!
    பிறகு பிரபு நடித்த "மனசுக்குள் மத்தாப்பு", ராம்கி நடித்த 'சின்னப்பூவே மெல்லப்பேசு", "கல்யாண காலம்", "தூரம் அதிகம் இல்லை", "பறவைகள் பலவிதம்", "தூரத்து பச்சை" ஆகிய படங்களையும் இருவரும் சேர்ந்து இயக்கினார்கள்.
    "மனசுக்குள் மத்தாப்பூ" பட நாயகி சரண்யாவை ராஜசேகர் காதலித்து திருமணம் செய்ததை ராபர்ட் விரும்பாததால் அவர்களது நீண்டகால நட்பில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து இரட்டையர்கள் பிரிந்து தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தார்கள் என்பது தானே நிதர்சனம்!
    அதைவிட நண்பனை இழக்கக் காரணமான அந்தத் திருமண பந்தம் மூன்றாண்டுகளில் முறிந்து போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்!
    பாரதிராஜா இயக்கிய "நிழல்கள்" படத்தில் கதாநாயகனாக ராஜசேகர் அறிமுகமாகி பிரபலமானதால் தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. திரை உலக வாழ்வில் ஏற்றத்தை தக்க வைக்க முடியாமல் அவரை சின்னத்திரை பக்கம் ஒதுங்க செய்ததும் காலம் செய்த கோலம் அல்லவா?
    ராஜசேகரன், 64-வது வயதில் உடல் நலம் குன்றி மறைந்தது திரை துறைக்கு பேரிழப்பாகும்!
    தனி ஆவர்த்தனமாக ராபர்ட் சென்னை திரைப்படக் கல்லூரியில் சில காலம் ஒளிப்பதிவு துறை பேராசிரியராக பணியாற்றினார். பிற்பாடு சில திரைப்படங்களுக்கும், ஆபாவாணன் தயாரிப்பில் பல டி.வி தொடர்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ராபர்ட். கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரர்களின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராபர்ட் ஆசிர்வாதம் உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய 68 -வது வயதில் காலமானார். இரட்டையர்கள் இருவரையும் காலம் எடுத்துக் கொண்டபோதிலும் அவர்களது படைப்புகள் மூலம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனம்!
    நிற்க.
    சரி... பாடல்களுக்கு வருவோம்!
    மலேசியா வாசுதேவன் குரலில், "ஆளானாலும் ஆளு", SPB குரலில்,
    "எங்கள் கதை" & "பௌர்ணமி நேரம்", வாணி ஜெயராம் குரலில், "மேகமே மேகமே" என நான்கு முத்தான பாடல்களுக்கான பாடலாசிரியர் வைரமுத்துவின் கற்பனை வரிகள் சங்கர்-கணேஷின் இசை மெட்டுக்குள் கட்டுண்டு சித்து வேலை செய்ததை என்னவென்று சொல்ல?
    இனிமையான இப்பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    23-05-2024

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh Před 2 lety +3

    செம்ம பாட்டு..வேற என்ன சொல்ல

  • @chefandrew9873
    @chefandrew9873 Před 2 lety +2

    திருச்சி காட்டூரான் . இசைக்கு தகுந்தாற்போவ் ஆட்டம் . மெட்டிற்க்கு பாட்டு என்று பல படங்களில் உண்டு ஆனால் ,மெட்டிற்க்கு ஆட்டம் என்று இந்த படத்தில்தான் உண்டு . இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் இதே மாதிரி தழுவல்தானன் பின்னாளில் வந்த இயக்குனர் விக்ரமனின் புதுவசந்தம் .

  • @mahadevanmahadevan1159
    @mahadevanmahadevan1159 Před rokem +2

    இதயத்தில் இனிமையும்
    நாவில்பருகிடும்தேன்சுவை
    அருமையான பாடல்

  • @9cloud4
    @9cloud4 Před rokem +1

    அருமையான பாடல், அரபுதமான வரிகள். அக்காலத்தின் படமும் பாடலும் கேட்கும் போதெல்லாம் சொர்க்கம்.

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Před 10 měsíci +3

    அந்த 80 -களில் பள்ளியில் பரிட்சை முடிந்ததும் ஓடி சென்று மேட்னி Show பார்த்த நாட்கள் என்ன சொல்வது. அந்த சொர்க்கம் மீண்டும் வருமா என மனம் ஏங்குகிறது.

  • @Raja-zx3lp
    @Raja-zx3lp Před 4 lety +151

    நான் 1998ல் பிறந்ததேன்,எனது மாமா, பெரியப்பா போன்ற அனைவரும் இவர்கள் போல் pant,shirt அணிந்த போட்டோக்களை பார்த்திருக்கிறேன்

    • @muruganandamt4050
      @muruganandamt4050 Před 4 lety +14

      நாங்கள் இது போன்ற பேன்ட் சட்டை அணிந்து தலைமுடி வளர்த்து கல்லூரி சென்றவர்கள்
      பெல் பாட்டம் சுற்றளவு நாற்பது அங்குலம். அப்போது திருட்டுத்தனமாக புகை பிடிப்போம்
      மது அருந்தியதில்லை விரும்பியதும் இல்லை குடிகாரர்களை மிக கேவலமாக நாங்கள் பார்த்தோம் சமுதாயமும் அப்படித்தான் பார்த்தது .

    • @Raja-zx3lp
      @Raja-zx3lp Před 4 lety +8

      @@muruganandamt4050 நன்று‌ ஐயா.அந்த காலம்‌ மிகவும் பொற்காலம்.1980 களில் வந்த படங்கள் அக்காலத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என காட்டுகிறது.இக்கால இயந்திர வாழ்க்கை போல் அல்லாமல் ‌அன்று மகிழ்ச்சியாக இருந்தார்கள் உறவுகளை மதித்தார்கள், இயற்கை அதிகமாக தொழில்நுட்பம் குறைவான வாழ்க்கை.அண்ணன், தம்பி, அக்கா,தங்கை என‌ குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள்.ஆனால் இக்காலமோ அதற்கு மாற்றாக இருக்கிறது.

    • @muruganandamt4050
      @muruganandamt4050 Před 4 lety +2

      @@Raja-zx3lp ஆம் தம்பி.

    • @ksmsankar7408
      @ksmsankar7408 Před 4 lety +6

      @@Raja-zx3lp முக்கியமாக பணம் பிரதானமாக இல்லை

    • @sssun7
      @sssun7 Před 4 lety +2

      @@muruganandamt4050 ahh... those were THE days. your words brought back all those memories for me. thank you.

  • @msfaj1055
    @msfaj1055 Před 4 lety +36

    What a wonderful dance! No skimpy background dancers, lavish sets or out of the world choreography.. Simplicity and elegance.. Pure pleasure to watch

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před 5 dny

    எந்தவித ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் இல்லாமல்.... இதுபோன்று குடும்பத்துடன் உட்கார்ந்து படம் பார்க்கும் காலம் இனிமேல் வருமா....????

  • @govindersingh3591
    @govindersingh3591 Před 5 lety +15

    No matter how many times this movie is being aired on tv, i will sit and watch. Shankar Ganesh songs were simply awesome. Chandrasekar was superb. The rest, Janagaraj, Rajeev, Kailashnath n Thiagu did fantastic job

    • @authorshinoj
      @authorshinoj Před 5 lety

      Movie name?

    • @govindersingh3591
      @govindersingh3591 Před 5 lety +1

      Paalaivan cholai...directed by robert - rajasekhar

    • @govindersingh3591
      @govindersingh3591 Před 5 lety

      Tht rajasekhar is actually the guy who acted as Saravanan's grandfather in Saravanan Meenatchi

  • @raamapriya123
    @raamapriya123 Před 4 lety +41

    Actually what a beautiful simple house. ..everything green. .
    Hard to find such simple middle class houses all flats, concrete jungle. .

    • @kanna4239
      @kanna4239 Před 4 lety

      Absolutely

    • @sssun7
      @sssun7 Před 4 lety

      that green arch. it was a common feature then. where is this house? does it exist today?

    • @albm5824
      @albm5824 Před 3 lety

      Very true frd, I think the r lucky

  • @ananu.n5022
    @ananu.n5022 Před 3 lety +7

    Bell bottom காலம் மறக்கமுடியாத காலம்

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 Před 9 měsíci +3

    இந்த அற்புத நண்பர்கள் என்ன மதம், என்ன ஜாதி, இந்த பாட்டு எவ்வளவு அன்பு நிறைந்தது
    நினைத்து நாம் அன்பின் வழிப்போவோம் 🙏

  • @RajendrankalaNithin
    @RajendrankalaNithin Před 2 lety +1

    Nan gal 80 kid's perumaiyaga ketha solvom engal kanave ulagame thane thodamal kadhal. Kannal kathalikum sugame alathe

  • @7503597417
    @7503597417 Před 3 lety +2

    முதன் முதலா பாக்கும்போது அச்சமாக இருக்கும் விடிஞ்சதுக்கப்புறம் விளக்குல என்ன மிச்சமாக இருக்கும் ??அந்த கால இலவட்டுக்கள்
    புரிஞ்சிக்க கஷ்டமான டபுள் மீனிங் வரிகள் அருமை .

  • @pknpainter6056
    @pknpainter6056 Před 4 lety +13

    இது படம் மட்டும் இல்லை அருமை

  • @Tvy1964
    @Tvy1964 Před 3 lety +33

    நான் +2 படிக்கும்பொழுது 26" பெல்பாட்டம் தைத்து போட்டேன் என் நண்பன் 33" பெல்பாட்டம் தைத்தது எனக்கு பொறாமையாக இருந்தது, ம்ம் அது ஒரு காலம்

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 Před 4 lety +13

    இந்த நடிகர்கள் மாதிரி hair style..ஆஹா என்ன ஒரு காலகட்டம்..இந்த தலை முறை க்கு கிடைக்காத காலகட்டம்..கவலை மறந்த காலம்..

  • @gugan-2014
    @gugan-2014 Před 2 lety +2

    அருமையான படம்.. பாடல்கள் அனைத்தும் அருமை

  • @rameshs150
    @rameshs150 Před 5 lety +118

    ஆரம்பகாலசந்திரசேகர்.ராஜு
    ஜனகராஜ்.தியாகுநடனங்கள்
    இளமை.திருமணவீடுகளில்
    அதிகம்ஒலித்தபாடல்களில்
    இதுவும்ஒன்று

  • @goodlandreal
    @goodlandreal Před 5 lety +16

    பாடலின் வரிகள் மிக அருமை

  • @keithteddykamal7534
    @keithteddykamal7534 Před 4 lety +22

    One of my favourite old songs. Old is Gold!

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 Před 3 lety +2

    எங்க ஊருல R V R பேரில் ஒரு பஸ் இருந்தது..எங்க வீட்டு பக்கம் வர்போது கேட்டு இருக்கிறேன்.

    • @joker-111
      @joker-111 Před 2 lety

      மகேஸ்வரி செல்லக்குட்டி 😍

  • @adithya67
    @adithya67 Před měsícem +1

    Never firgot those days, because i think was en secondary, studying at pammal sankara Vidyalaya..now am living inmlima, peru south American, listening this wonderful melody songs and kuthu dance song..

  • @exploregoa5523
    @exploregoa5523 Před 3 lety +15

    Happy to see janagaraj at his young age😊😊😊

  • @sachithananthem1717
    @sachithananthem1717 Před rokem

    Super அந்தக் காலத்துக்கு அழைத்து சென்ற பாடல்

  • @saravanann717
    @saravanann717 Před 5 lety +24

    Excellent dance of Mr. Janakaraj sir.

  • @krishnamurthys4545
    @krishnamurthys4545 Před 4 lety +35

    வாகை சந்திரசேகர் .ஜனகராஜ் dance sema

    • @aathikarumathur2886
      @aathikarumathur2886 Před 3 lety

      கருமாத்தூர் சந்திரசேகர்

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 Před 4 lety +17

    What a fantastic song with legendary actors!!!! Great memories!!!!

  • @vkpkannaiah7221
    @vkpkannaiah7221 Před 7 lety +65

    சுகாசினியின் சிறிப்பு போல் நாமும் வாய்விட்டு சிரிக்கலாம்

  • @rajutvs
    @rajutvs Před 4 lety +30

    One of the most underrated movies of its time. Well portrayed on screen

    • @karunanidhis7328
      @karunanidhis7328 Před 2 lety +1

      அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 Před 4 lety +28

    அழகுஒருபொருட்டே
    இல்லைதிறமை
    இருந்தால்யாரும்
    ஜெயிக்கலாம்

    • @syedabbas1101
      @syedabbas1101 Před 2 lety

      Sir, Avanga ellam appo romba alagairundanga. Make up pae illama.

  • @dharmeshdavey4842
    @dharmeshdavey4842 Před 4 lety +30

    This songs reminds me " Oliyum Oliyum" Of 80's

  • @udhayusk1334
    @udhayusk1334 Před 3 lety +3

    அது என்னமோ தெரியல சில நல்ல பாட்டெல்லாம் நம்ம வாகை சந்திரசேகருக்கு அமைஞ்சிருக்கு.

    • @selva4879
      @selva4879 Před 3 lety +2

      Exactly

    • @user-tv9xu5pp3w
      @user-tv9xu5pp3w Před 3 lety +1

      மோகன், ராமராஜன் அவர்களுக்கும்..எ

  • @mohamedbilalabdulla4084

    மீண்டும் இதுபோன்ற ஒரு பாடல் காட்சியை காணமுடியாது.

  • @johnsalomon232
    @johnsalomon232 Před rokem +3

    உயிர் இருக்கும் வரை கேட்டு கொண்டு இருக்கலாம்......

  • @ravid6329
    @ravid6329 Před 4 měsíci

    என்ன ஒரு இயல்பான பாடல். அது ஒரு அந்த காலத்து அற்புதம்.

  • @mumthaazazam673
    @mumthaazazam673 Před 11 měsíci

    Superb maraka mudydha andha natkal❤😢

  • @thomasjohn3725
    @thomasjohn3725 Před 4 lety +23

    This was the period when men were real innocent.

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue Před 5 lety +8

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல் அனைவரும் இந்த மாதிரி சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @rameshbabutg8315
    @rameshbabutg8315 Před 5 lety +44

    80-களில் பிரபலமான பாடல்

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 3 lety +2

    இதுபோல சின்ன வயதில் பெல்ஸ் அணிந்த வர்கள் மட்டும் லைக்.. கமெண்ட் போடவும்

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 Před 3 lety +1

    இக்கலை கூட்டணி அருமை அனைவரும் வைராக்கியத்தில் இருந்து வந்தவர்கள் எண்பதுகளில் இப்பாடல் ஒலிக்காத விசேஷ வீடுகளே இல்லை இன்றும் இப்பாடலைக் கேட்கையில் மலரும் நினைவுகள் அந்த கால கட்டத்துக்கு கொண்டு செல்கிறது அனைவரும் திறமைசாலிகள் இவர்கள் இன்றும் உள்ளார்கள் இவர்களை வைத்து இப்பாடலை இன்று ரீமேக் செய்தால் புதுப்பிக்கப்படும் இக்கலை அனைவருக்கும் வாழ்த்துக்கள் என் மண்ணின் மைந்தன் சந்திரசேகருக்கும் வாழ்த்துக்கள்

  • @manirtr1510
    @manirtr1510 Před 4 měsíci

    👌மலேசியா வாசுதேவன் Sir ❤🎉

  • @simplewar
    @simplewar Před 3 lety +6

    பாட்டுக்கு ஆடறது 90ஸ் 2கே கி்ட்ஸ்டா
    நாம பாட்டுக்கு கவலயே படமா ஆடுனா 80ஸ் கிட்ஸ்டா