வேதாகம கேள்வி பதில்கள் | சுவிசேஷம் என்றால் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2020
  • பதில் : பொதுவாக இன்றைக்கு மக்கள் அதிகமாய் கேட்கப்படுகின்ற வார்த்தை சுவிசேஷம். ஆனால் சுவிசேஷம் என்றால் என்ன என்பதை அவர்கள் அறியாமல் இருப்பது மிக ஒரு வருத்தமான காரியம். பவுல் ரோமர் 1:16 வசனத்தில் ‘கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.’ தேவனுடைய பெலனாய் இருக்கிற இந்த சுவிசேஷம் மாத்திரமே மனிதனை இரட்சிக்க முடியும். அதோடு மனிதனும் சுவிசேஷத்தை விசுவாசிக்கும்படியாக உத்திரவாதியாக இருக்கிறான். புதிய ஏற்பாட்டில் மாத்திரம் சுவிசேஷம் என்ற வார்த்தை நூறு முறை சொல்லப்பட்டிருக்கிறது. முழு வேதமும் சுவிசேஷத்தை மைய்யமாக கொண்டதாக இருக்கிறது. மனிதன் ஆதாமில் விழுந்துபோனதின் நிமித்தமாக அவன் மூலமாக பெற்றுக்கொண்ட பாவ சுபாவ தன்மையின் நிமித்தமாக தேவனுடைய பரிபூரண நியாப்பிரமாணத்திற்கு அவன் கீழ்படியக் கூடாதவனாக அவன் மாறி போனான். அவனுகுள்ளாக மரணம் ஆட்கொண்டது. அவன் தன்னுடைய வாழ்க்கையில் பாவத்தின் அடிமையாக மாறிப் போனான். இவ்விதமான ஒரு அடிமைக்கு சுவிசேஷம் என்பது ஒரு நற்செய்தியாய் இருக்கிறது.
    கலாத்தியர் 3:21-23 ‘அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. அப்படியிராதபடியால், இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.’ தேவன் இவ்விதமாக ஒரு மகத்துவமான மீட்பின் வழியை மனிதனுக்கு கிறிஸ்துவின் மூலமாக கொடுத்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் பலியைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பலியானது இயேசு கிறிஸ்துவை முன் அடையாளமாக காட்டுகிறதாய் இருக்கிறது. எசேக்கியேல் 46:13 ‘தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும்.’
    புதிய ஏற்பாட்டிலும் 1 பேதுரு 1:19 ‘குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.’ கிறிஸ்து ஒருவரே ஒரு மனிதனுக்காக பலிசெலுத்தும்படியாக இந்த உலகதில் முழுமையான மனிதனாக வந்து தன்னை குற்றநிவாரண பலியாக கொடுத்ததை குறித்து இந்த சுவிசேஷம் சொல்லுகிறது. அதின் மூலமாக மனிதன் பாவத்தின் அடிமையிலிருந்து மீட்கப்படுவதை குறித்தும் தேவனுக்கு முன்பாக அவன் நீதிமானாக்கப்படுவதை குறித்தும் சொல்லுகிறது. ரோமர் 5:1 ‘இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.’ கிறிஸ்துவானவர் செய்து முடித்த இந்த மகத்துவமான பலியை நம்முடைய வாழ்க்கையில் நாம் விசுவாசத்தின் மூலமாக நமக்கு உரியதாக ஆகிக்கொள்ளுகிறோம். இந்த விசுவாசத்தை தேவன் கொடுத்து நம்மை நீதிமானாக்கி அவருடைய பிள்ளைகளாக அவருடைய சுதந்திரமான மக்களாக நம்மை மாற்றுகிறார்.
    யோவான் 3:16-18 ‘தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.’ இந்த நற்செய்தி கிறிஸ்துவை குறித்தும் கிறிஸ்துவின் மூலமாக நமக்கு கொடுக்கப்படிருகின்ற இந்த மகத்துவமான காரியங்களை குறித்தும் நமக்கு போதிக்கின்றது.
    Our Mobile App:
    bit.do/dailydevotion

Komentáře • 2

  • @stalina5071
    @stalina5071 Před 2 lety

    Nammudaya paavangalai eppadi arikkai seiya vendum ennge arikkai seiya vendum

    • @ashoklawrence7488
      @ashoklawrence7488 Před 10 měsíci

      பாவங்களை மன்னிக்க அதிகாரம் உடைய இயேசப்பாவிடம் மட்டுமே நாம் பாவ அறிக்கை செய்ய வேண்டும்.
      பாஸ்டர்/குருக்கள் போன்ற மனிதர்களிடம் நாம் பாவ அறிக்கை செய்யக்கூடாது.