கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல பாடல் | kannan ennum mannan song | P. Susheela .

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2022
  • #nirmala #jayalalitha #srikanth #oldsongs #tamilsongs #4koldsongs
    கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல பாடல் | kannan ennum mannan song | P. Susheela . Tamil Lyrics in Description .
    Movie : Vennira Aadai
    Music : Viswanathan-Ramamoorthy
    Song : Kannan Ennum
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகி : பி. சுசீலா
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
    சொல்லச் சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல
    பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
    சொல்லச் சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல
    பெண் : எண்ணம் என்னும் ஆசைப் படகு
    செல்லச் செல்ல
    வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
    துள்ளத் துள்ள
    எண்ணம் என்னும் ஆசைப் படகு
    செல்லச் செல்ல
    வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
    துள்ளத் துள்ள
    பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
    சொல்லச் சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல
    பெண் : தென்றல் இன்று பாடும் பாடல்
    என்ன என்ன
    தென்றல் இன்று பாடும் பாடல்
    என்ன என்ன
    சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள்
    என்ன என்ன
    சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள்
    என்ன என்ன
    கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று
    பின்னப் பின்ன
    என்னைத் துன்பம் செய்யும் எண்ணம்
    என்ன என்ன
    பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
    சொல்லச் சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல
    பெண் : ஆ… ஆ… லலலலல லாலலா…
    ஆ…..ஆ…..ஆ…..ஆ…
    பெண் : அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
    வெட்கம் வெட்கம்
    அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்
    வெட்கம் வெட்கம்
    அன்பே உன்னை நேரில் கண்டால்
    நாணம் நாணம்
    அன்பே உன்னை நேரில் கண்டால்
    நாணம் நாணம்
    பெண் : ஆசை நெஞ்சை சொல்லப் போனால்
    அச்சம் அச்சம்
    அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில்
    மிச்சம் மிச்சம்
    பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
    சொல்லச் சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல
    பெண் : எண்ணம் என்னும் ஆசைப் படகு
    செல்லச் செல்ல
    வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம்
    துள்ளத் துள்ள
    பெண் : கண்ணன் என்னும் மன்னன் பேரை
    சொல்லச் சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல
  • Zábava

Komentáře • 253

  • @gdmkel473
    @gdmkel473 Před 3 měsíci +47

    என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் மயக்கும் இனிய மாலை நேரங்களில் ஆறு முப்பது மணிக்கு பிறகு இன்னும் இருள் சூழாத நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும்.
    வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது.
    அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன்.
    இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன்.
    24.03.2024.

    • @user-rn2pi9jt3v
      @user-rn2pi9jt3v Před 2 měsíci +1

      J.....Amma super.marakave mudyathu...manju

    • @RaghuRaghu-vw4js
      @RaghuRaghu-vw4js Před 2 měsíci +2

      இனிமையான இளமை காலம்..

    • @ambassador-ou4zm
      @ambassador-ou4zm Před měsícem +1

      Golden memories

    • @senthamarair8339
      @senthamarair8339 Před měsícem +1

      உங்கள் உணர்வுகளை அருமையாக எழுதத் தெரிந்திருக்கிறது. உங்கள் வாழ்வின் நிகழ்வுகளை எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    • @amaranathancreatechannel2286
      @amaranathancreatechannel2286 Před měsícem +1

      நல்ல நினைவுகள்.

  • @subramanians4655
    @subramanians4655 Před 6 měsíci +28

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லை. அம்மாவின் இளமை கால நடிப்பு, டான்ஸ் உம் பார்க்க பார்க்க அவ்வளவு அருமை.

  • @subuhansubuhan2055
    @subuhansubuhan2055 Před 3 měsíci +20

    பழைய பாடல்களுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை

  • @sekarb5434
    @sekarb5434 Před měsícem +6

    ஒல்லியான உடல் வாகு..45 கிலோ தான் இருப்பார் ஜெயலலிதா..
    முழு நீள 6 கஜம் புடவை.. சென்சார் கத்திரி..கதை... சூப்பர் டைரக்டர் ஸ்ரீதர்.. புதுமுகம்..
    காலேஜ் டே அன்னிக்கு என் மகள் உட்பட அனைத்து பிள்ளைகளும் கிட்டத்தட்ட 20 சேஃப்டி பின் போட்டு கட்டிய பின்னும் நடந்தாலே கழண்டு விடுமோ என்று பயப்படும்படி நடப்பதே பெரிய சாதனை..அதே நிலையில் இவ்வளவு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கச்சா கலர் ஃபிலிம் வேஸ்ட் பண்ணாம ஆடறது உலக சாதனை!!!

  • @baskarandass8973
    @baskarandass8973 Před 9 měsíci +44

    அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்..அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்....வாவ் கவிஞர் வெட்கதுக்கும் நாணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியிருப்பார் சூப்பர்.🎉

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 8 měsíci +2

      இப்படியெல்லாம் கூட கற்பனை,வருமா,,,,,,?

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 Před 2 měsíci +3

      தம்பி உனது இளமையில் நீ பெண்களை சந்தித்ததுஇல்லையா அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் அச்சம் அச்சம் அன்பே (அவள் விரும்பிய வரை)உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் .ஒரு பெண்ணிடம் நாணயத்தை காணாவிட்டால் அந்த இளமை உனக்கு ஏன்.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 9 dny

    கவிஅரசரை மறந்து
    மன்னர்களை மறந்து
    குயில் அரசியை மறந்து
    அம்மாவின் நடனத்தை
    ரசித்தேன்

  • @radharanganathan2505
    @radharanganathan2505 Před 14 dny +1

    உயிர் தோழியாள் உயிர் போனதுதாம் மிச்சம் மிச்சம்😭😭😭😭😭😭😭

  • @subuhansubuhan2055
    @subuhansubuhan2055 Před 3 měsíci +18

    ஜெயலலிதாவின் ஆட்டமே தனிதான்

  • @somusundaram8436
    @somusundaram8436 Před 6 měsíci +23

    இந்த பாட்டு போல அத்தனையும் ஒன்று சேர அருமையாக அமைவது மிகவும் அரிது
    இசை கவிதை அழகான நாயகி அருமையான ஒளிபதிவு அற்புதமான இயக்குனர்

  • @sundarvel7899
    @sundarvel7899 Před 5 měsíci +29

    ஜெ.நடிகையாகவே இருந்திருந்தால் சசியை சந்தித்திருக்கமாட்டார்...
    அரசியல் கலப்பில்லாமல் சரோஜாதேவி போல இப்போதும் இருந்திருப்பார்...😪

  • @vemiv5658
    @vemiv5658 Před 6 měsíci +10

    இது எனக்கு ஒரு தேவகானம்.இசை அமோகம். குரல் தேன்.

  • @user-bh6ve4gn1j
    @user-bh6ve4gn1j Před 4 měsíci +8

    என்னை மிகவும் கவர்ந்த பாடல்ஜெயலலிதா அம்மாவின் அற்புதமான நடிப்பு❤

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f Před 7 měsíci +18

    இந்த பாடலை சகோதரி மறைந்த அன்று கேட்டேன் கண்களில் நீர் தழும்பியது

    • @asokanashok8397
      @asokanashok8397 Před 7 měsíci +3

      உருப்படியான ஒரே பதிவு
      உங்கள் பதிவு!😂

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el Před 7 měsíci +3

      உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது.

  • @user-yf5yb9wu5o
    @user-yf5yb9wu5o Před 2 měsíci

    ❤அருமை அற்புதம் சுவாரஷ்யம் மிக மிக அமைதியான காதல் வெளிப்பாடு 👌👍

  • @ganesanponnaiah1562
    @ganesanponnaiah1562 Před 10 měsíci +20

    என்றும் என் நினைவில் நின்ற பாடல் அழகான ஜெயலலிதாவின் இயல்பான நடிப்பு நடனம் இனிமையான குரலில் சுசிலா அம்மா மறக்க முடியாத பாடல்.

  • @secularindian1949
    @secularindian1949 Před 10 měsíci +18

    நடனம் பாடல் இசை எல்லாம் காலத்தால் அழிக்க முடியாது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 10 měsíci +30

    கண்ணன் என்னும் மன்னனின் பெயரை சொல்லி சொல்லி கல்லையும் முள்ளையும் மெல்ல மெல்ல பூவாக மாற்றிய கவிஞரின் வரிகள்... மெல்லிசை மன்னர்களின்..
    பான்ஜோ தாளமிட .. குழலோசை இனிக்க சுசீலா சிந்திய தேன் இனிமைகளில் இதுவும் ஒன்று... இயற்கையின் எழில் மின்னும் பின்னணியில் ஸ்ரீகாந்த் முன்னால் நடனமாடி ஆசை படகை மிதக்க விட்ட கட்டழகி ஜெயலலிதா... காதலின் வண்ணம் தந்த ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை ...

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 Před 10 měsíci +12

    ஜெயலலிதா+மியூசிக்+சுசீலாம்மா...mind blowing..❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 9 měsíci +10

    அற்புதமான பாடல் குரல் இனிமை பாடல் வரிகள் அருமை இசை அமைப்பு அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல்
    என் வயது 74.
    30.8.23

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 7 měsíci +10

    🌹அக்கம் ! பக்கம் ! யா ரும் பார்த்தால் ! வெட் கம் ! வெட்கம் ! அன்பே உன்னை நேரில் கண் டால் நாணம் ! நாணம் ! ஆசை நெஞ்சை சொல் ல போனால் ! அச்சம் ! அ ச்சம் ! அன்றும்,இன்றும் அதுதான் நெஞ்சில் மிச் சம் ! மிச்சம் ! 💐😝😍😎😘🙏

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 5 měsíci +4

    எண்ணம் என்னும் ஆசை படகு செல்ல,செல்ல,,,,,,,வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ள,துள்ள,,,,,,!ஆகா,ஆகா. வேற லெவல்,,,,!

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před 2 měsíci +2

    ஜெயலலிதாவின் நடனம் மிக அருமை இந்தப் பாடலை பார்த்துதான் ஒரு வார்த்தை பேச ஒரு நிமிஷம் பாடல் எடுத்து இருப்பார்களோ என்ன இது ஒரு குரல் அது இருக்கும் அவ்வளவுதான் ஆனால் அந்த நடனத்தில் நளினமும் நயமும் நயன்தாராவிடம் இல்லை மிகவும் அற்புதமான ஒரு நடனம் ஜெயலலிதா அவர்களின் நடனம்

  • @user-qj7tf8si9l
    @user-qj7tf8si9l Před 2 měsíci +3

    அம்மாவை மரக்கமுடியாது ஜாதகப் படி உலகில் பிறந்த இருக்கனும் .

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +73

    எத்தனை அழகானப் பாடல்! என்னைக்கவர்ந்தப் பாடல்! ஜெய லலிதாவின் 💃 அற்புதம்! சுசீமாவின் குரலும் இருவல்லவரின் இசையும் அற்புதம்! பாக்ஐப்பாக்கத் திகட்டாத கானம் ! 👸 🙏

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před 10 měsíci +2

      இது ஒரு சகாப்தம் ஆரம்ப கால ம்💃🏽💃🏽💃🏽💃🏽🌹✍️🙋‍♂️

    • @prasannabk5386
      @prasannabk5386 Před 10 měsíci +3

      One of sweet and memarable and with good music by m s v sir icon of the tamilsinima and indeansinima hats off 🎉🎉🎉🎉🎉

    • @prasannabk5386
      @prasannabk5386 Před 10 měsíci +3

      ❤❤❤❤❤❤wery good memarable songs by lejendry p susheelamma and former c m Jayalalitha mma lejendry actar icon of tamilsinima and indeansinima

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 10 měsíci +2

      Excellent song

    • @svsubramanian2010
      @svsubramanian2010 Před 10 měsíci

      ​@prasannabk5386 It's not just msv alone. It's the duo of viswanathan and Ramamurthy. .Pl give due credits .Thank you.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 10 měsíci +12

    இனிமையான பாடல்கள். ஸ்ரீகாந்த் ' ஜெ ஜெ; மூர்த்தி : .நிர்மலா இவர்களின் முதல் படம் கூட.

  • @muthirulappanmuthirulappan4607

    ஜெ அவர்களின் நளினமான உடல் மொழியில் காதலை வெளிப்படுத்தும் விதம் எந்த கலைஞராலும் செய்ய முடியாத ஒன்று,அற்புதமான பாடல்,நான் நூறு முறைக்கு மேல் பார்த்த பாடல்

  • @VA-nb7kh
    @VA-nb7kh Před 6 měsíci +5

    அந்த காலத்தில் ஸ்ரீகாந் styles நடிகர். திறமையான நடிகர்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 10 měsíci +152

    இந்த பாடலை பார்த்து விட்டு,புதிய படங்களுக்கு,சென்றால், கிருக்கு பிடித்து,,,,, கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டியதுதான்,,,,,,,,,!

  • @gdmkel473
    @gdmkel473 Před 5 měsíci +6

    In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
    Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
    I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
    Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
    11.01.2024

  • @vmohan100
    @vmohan100 Před rokem +25

    "கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல" Kannadasan lines, and Jaya's look @ 3:20, there lies Director Sridhar

  • @deepamanoj1734
    @deepamanoj1734 Před 2 měsíci +2

    நல்ல பாடலுக்கு அருமையான ரசிகர்கள்.🎉🎉🎉🎉🎉🎉❤

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Před měsícem +1

    இசை இனிமை வளமை குரல் கருத்து வரி வைரம் தேன் சொட்டு சொட்டாக தித்தித்த்ததே காலம் கடந்து கூட மனம் அள்ளும் துள்ளும் இதயம்💜❤️ நிறைவு கொள்ளும்

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Před měsícem +1

    👍💫 Super 💫☄️🕊️👍

  • @MalaisamyMahendran
    @MalaisamyMahendran Před měsícem +1

    Ohhhh what a beauty jeya amma .jeya amma ur a miracle

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před měsícem +1

    None to beat Sridhar ; Kannadasan & MSV Combo... Every song and every bit of every song are awesome... Excellently sung by The One & Only P Susheela... Just Love it , Loving it & will love it for ever... One of the Master piece of Combo , Great Combo...

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi Před rokem +30

    இசைக்கு நிகர் என்றும் இசையே
    நன்றி MSV sir

    • @ramchandransanthanam2793
      @ramchandransanthanam2793 Před 2 měsíci +1

      ராம்மூர்தியை மறந்துவிட்டீர்

    • @chandruk5032
      @chandruk5032 Před měsícem +2

      இசை *MSV* ✔️
      ராமமூர்த்தி இல்லை❌

  • @cvk1958
    @cvk1958 Před 10 měsíci +7

    இந்த சூடான பகல்வேளையில் கதாநாயகன் முழு கோட் சூட் அணிந்து வலம் வருவது சற்றே வேடிக்கையாக இருந்தாலும், பாட்டு இனிமையும், இரண்டு நடிகர்களின் இளமையும், கதாநாயகியின் நடனத்தின் நளினமும் நம்மை இந்த காட்சியை புத்துணர்ச்சியுடன் அனுபவிக்க வைக்கிறது.

    • @maranponraj2044
      @maranponraj2044 Před 9 měsíci +5

      Sir அது கொடைக்கானல்.

    • @cvk1958
      @cvk1958 Před 9 měsíci +2

      @@maranponraj2044 ஓ, அப்படியா? கோடைக்கானலில் கோட்-சூட் அணிவதில் தப்பு இல்லை. ஆனால் கதாநாயகி கூட ஸ்வெட்டர் அணிந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் சுசீலாவின் இனிய பாடலை கேட்டு மகிழ்ந்தது ஒரு சுகமான அனுபவம்தான்🙏🏻

  • @manian5062
    @manian5062 Před rokem +40

    இந்த பாடல்கள் இனிக்க சுசீலாவா பாடல் வரிலா இசையா அல்லது ஜெயலலிதா நடனமா??? ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவில் அமையபெற்றுள்ளது, இதுபோன்று பாடல்கள் வருமா?

    • @DSakthivel-ci7im
      @DSakthivel-ci7im Před 10 měsíci +1

      Noo

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 10 měsíci +1

      No

    • @aravindhkarthika2919
      @aravindhkarthika2919 Před 10 měsíci

      Legend director

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 10 měsíci +2

      Viswanathan-Ramamoorthy's "ThuLLal" isai with an Excellent Orchestration being the First Highlight, then followed by Nightingale Susheela's Sweet Singing. Then, of course, nice choreography and beautiful picturisation in complete sync with the music.

    • @sherlyveeraragavan7700
      @sherlyveeraragavan7700 Před 9 měsíci +1

      Not to mention that was her first movie. So pretty and talented.

  • @shanmugamnarayanasamy-pf8su
    @shanmugamnarayanasamy-pf8su Před 3 měsíci +3

    இப்படத்தில்வரும்எல்லாபாடலும்அருமை

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 10 měsíci +17

    An Evergreen, Glorious composition from All Time Great Viswanathan-Ramamoorthy with a lilting Rhythm to KaNNadasan's beautiful lyrics with a brilliant use of Piano, Flute, Guitar, Accordion, Strings and an enchanting percussion score with the Bangos. The Sweetest Voice of Nightingale Susheela. Nicely choreographed & picturised.

  • @ShankarRamamurthy-ju5ih
    @ShankarRamamurthy-ju5ih Před 7 měsíci +4

    கவிதைக்கு இசை ஆபரணமா!? இல்லை இசைக்கு இசைந்த கவிதையா.?!..ஒவ்வொரு வரி முடியும் போது அடுத்த வரியை நம் மனதில் நாமே ரீங்காரம் செய்து நம்மை அழைத்துச் செல்லும் பாடல்...! தமிழ் இனிமை மட்டுமல்ல...எளிமையும் கூட என்பதற்கு சான்று இப்பாடல்! காலம் கடந்தும்..இனிக்கிறது! காதலை நளினமாக, விரசமில்லாமலும் சொல்லலாம் என்பதற்கு இப்பாடல் உதாரணம்!

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b Před 4 měsíci +1

    Welcome.!
    வெண்ணி ராடை நிர்மலா
    ஸ்ரீகாநத்
    ஜெயலலிதா
    வெண்ணி ரடை மூர்த்தி
    சுந்தர்ராஜன்
    இந்த படத்தில் பாடல்கள் படம
    அருமையிலும் அருமை, கதைக்களம் வசனம் இசை மற்றும் இயக்கம்.

  • @subramaniank7183
    @subramaniank7183 Před měsícem +1

    Actor Jeyalalitha's Smart song. I like very much in my younger days.

  • @sekarb5434
    @sekarb5434 Před měsícem +2

    துள்ளத் துள்ள..ஒரே வார்த்தை.. எத்தனை மாடுலேஷன்..

  • @prabhuvukkadala
    @prabhuvukkadala Před 9 měsíci +5

    One of the Best songs of Mellisai Mannargal, Suseela, Sridhar and Kannadasan. everything in this song is mesmerizing. Nobody can ever match Jayalalitha's dance in such songs. She does so gracefully and while dancing we can feel as if she is a very light weight girl who jumps with so much ease like a deer. Her moments, steps, expressions at her first picture that too when she was in teenage is simply superb. 👋👋👋👋👌👌

  • @lakshmiganthannatarajan2468
    @lakshmiganthannatarajan2468 Před měsícem +1

    Amma nadigaiyagave erundhirukkalam.

  • @premkumar-gd8vm
    @premkumar-gd8vm Před 2 měsíci +2

    இன்று மட்டும் 20தடவை நவீன தொழில் நுட்பத்தில் ரசித்தேன்

  • @damodharanm8775
    @damodharanm8775 Před 10 měsíci +4

    Srikanth walking style...he is doing outdoor treatment.... Jayalalitha loving dance...superb song

  • @OMPRAKASH-hh5ju
    @OMPRAKASH-hh5ju Před 10 měsíci +4

    அனைத்தும் கேட்க கூடிய பாடல்கள்

  • @krishnaraoragavendran7592

    தமிழ் டா 😌

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Před 11 měsíci +6

    Young age aspirations. Beautiful Jayalalitha, Matching movement, wonderful dance, good lyrics, excellent music. Excellent singing.. 14-7-23.

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Před 9 měsíci +6

    Like the choreography .. JJ was jumping like a butterfly .. Sridhar's stamp is there in every frame .. Matchless PS madam's voice .. What a melody 👏

  • @ganapathiramanm5482
    @ganapathiramanm5482 Před 2 měsíci +1

    Nice song

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 2 měsíci +1

    JJ Amma first move 16 yeras old

  • @rathnaraju7633
    @rathnaraju7633 Před měsícem +1

    சுசிலா

  • @SampathKumar-mm5dq
    @SampathKumar-mm5dq Před 10 měsíci +8

    Hatts off to the great
    Kannadasn
    What a lyric

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Před 10 měsíci +11

    Magical orchestration. Banjo bongo drums opening is a blast rhythmic tuning. Power packed string section, Piano guitar flute accordian (that interjection after the first line of charanam and the ending for pallavi. Magnificent Mellisai Mannargal. P Susheela rendition is way ahead none can be compared - the expression of the line Anbay unnai neril kandal - ❤. Kannadasan is a gift for us hiw he pens a lyrical beaty of entertainment. Absolute enchanting fabulous song of the Duo MSV-TKR.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 8 měsíci +4

    கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று,பின்ன பின்ன,,,,,, என்னை துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன,,,,!

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 10 měsíci +4

    அழகு பதுமை செல்வி அவர்கள்.

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci +1

      பேரழகு பெட்டகம் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள்

  • @jahufar2689
    @jahufar2689 Před 3 měsíci +3

    விவி சேவை வினையால் அவர் அழிந்துவிட்டால் ஜெயலலிதா அவர் நடிகையாகவே இருந்திருந்தால் நிச்சயமாக அவர் உயிரோடு இருந்திருக்க சாத்தியம் நிறைய ஆனால் இந்த அரசியல் படுகுழி அவரை மயானத்திற்கு எடுத்துச் சென்று விட்டது அருமையான ஒரு அற்புதமான ஒரு பெண்ணை நாம் இழந்து விட்டோம்

  • @parathasarathytsp6785
    @parathasarathytsp6785 Před 2 měsíci +1

    Appa J s first movie.
    Cannot believe.
    She is Fantastic actress

  • @user-my9si3bi5h
    @user-my9si3bi5h Před 9 měsíci +5

    ஜெயலலிதாவின்.நடிப்பும்சுசிலா.பாட்டும்

  • @n.t.shanmugan5673
    @n.t.shanmugan5673 Před 9 měsíci +3

    JJ ....what a talent...a transformation from a cute teenager to a Chief Minister in a short span..

  • @balaguru764
    @balaguru764 Před 10 měsíci +9

    Excellent work by all
    No words to praise
    Old is gold

  • @vijayakumari1404
    @vijayakumari1404 Před 10 měsíci +3

    🎉🎉🎉❤manathy .Thotta. Padal..nise .iq

  • @user-ly2ce8lu4c
    @user-ly2ce8lu4c Před 2 měsíci +1

    Very much I like this song

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem +7

    Non stop Composing, Great M S V.....Sir,,, ty,. sweet voice SuSiLA MAM ty...

  • @salmoncan1831
    @salmoncan1831 Před 3 měsíci +1

    Her saree and blouse super.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 7 měsíci +3

    DRUMS SPEAK WITH THE SINGER. SO GREAT.

  • @udayasuriyans7294
    @udayasuriyans7294 Před 8 měsíci +2

    அழகான பாடல்🎤

  • @thuyasiva8037
    @thuyasiva8037 Před rokem +8

    ஜெயலலிதா சூப்பர்.

  • @kumarvilachoor2048
    @kumarvilachoor2048 Před 11 měsíci +14

    The Bakthi of Kannadasan on Lord Krishna is unique and lyrics flow out like a perennial river,the cinema song sequence is incidental for Kannadasan and hence the immortality of the song ,lyrics,music

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 3 měsíci +1

    ஸ்ரிகாந்த் மற்றும் JJ க்கு முதல் படம்

  • @asokanasokan4373
    @asokanasokan4373 Před 10 měsíci +3

    Rememberable sweet song.... I think my past days....Jayalalitha act is very likely to see.....

  • @user-vx6vi3jc8t
    @user-vx6vi3jc8t Před 5 měsíci

    ஒரு அற்புதமான இசை நயமான பாடல்

  • @sharmz8266
    @sharmz8266 Před 4 měsíci +2

    கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல…கல்லும் முள்ளும் பூவாய் மாறும்…மெல்ல .. மெல்ல…எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல…..வெள்ளம் பெருகும் …பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள…கண்ணன் என்னும் …
    தென்றல் இன்று பாடும் பாடல்…என்ன என்ன..சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள்…என்ன என்ன..கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று..பின்னப் பின்ன..என்னைத் துன்பம் செய்யும் எண்ணம்…என்ன என்ன …கண்ணன் என்னும் …..ஆ ஆ …லலலலல லாலலா…ஆஆஆஆ..
    அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்….வெட்கம் வெட்கம்…அன்பே உன்னை நேரில் கண்டால்…நாணம் நாணம்….ஆசை நெஞ்சை சொல்லப் போனால்…அச்சம் அச்சம்…..அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம் ..கண்ணன் என்னும் மன்னன்..ஆஆஆ …லலலலல லாலலா…ஆஆஆஆ

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 2 měsíci +1

    India irumbu mansee

  • @senthilnath337
    @senthilnath337 Před 9 měsíci +3

    புரட்சித்தலைவி வாழ்க

  • @balachandran9074
    @balachandran9074 Před 10 měsíci +6

    Amma always a legend da!!

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Před rokem +4

    கேட்க கேட்க பார்க்க பார்க்க பரவசம்

  • @manmathan1194
    @manmathan1194 Před 7 měsíci +3

    கலைமகள் காவிய நாயகி ஜெயலலிதா அவர்களின் முதல் தமிழ் படம் வெண்ணிற ஆடை ..16 வயது பருவ குமரியாக கதையின் நாயகியாக சிறப்புமிக்க நடிப்பை காட்டிய படம்.

  • @jackyjacky5695
    @jackyjacky5695 Před 4 měsíci

    P.sushila voice Excellent

  • @paramasivandaniel9664
    @paramasivandaniel9664 Před rokem +5

    என்றும் இனிமை

  • @drbalachandrandrbalachandr7984
    @drbalachandrandrbalachandr7984 Před 10 měsíci +4

    Excellent. Till date a wonderful song in all aspects. Music, lyrics dance and picturization.

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 10 měsíci +2

    What a melodic music score! It has withstood passage of time... The melody in songs has dried out these days, perhaps..

  • @vellagovender841
    @vellagovender841 Před 6 měsíci +1

    Just looov this old song South africa

  • @mnisha7865
    @mnisha7865 Před 10 měsíci +2

    Superb beautiful nice song 22.8.2023

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q Před 4 měsíci +1

    Sathiyama jj paadal unnakku pedikkum jj 15 years old

  • @nellikuppammunicipality8258
    @nellikuppammunicipality8258 Před 5 měsíci +1

    sweet, so sweet , melody tends to infinity

  • @nirmalnagesh7348
    @nirmalnagesh7348 Před 11 měsíci +4

    God is great..msv is great also

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 Před 4 měsíci

    மனித,இனம்,என்பது,இன்பம்,துன்பம்,ஆசை,காதல்,விருப்பு,வெறுப்பு,பாசம்,நேசம்,எல்லாம்,உள்ளத்தில்,ஊரியதுதான்,வாழ்க்கை,இது,தெரியாமல்,சிலர்,காதல்,செய்வோரை,வெரக்கிரார்கள்,மதி,கெட்டவர்கள்

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm Před 5 měsíci

    MSV na Avaru thaan legend pa enna song amma ve padra mathri irukku P.Suseela Amma Voice

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 Před 6 měsíci

    Very nostalgic song for me. 50 years back when I was 5 or 6 years, I heard this song on gramophone at my grandma's home in Erode.

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 9 měsíci +2

    Again a beautiful song by p suceela most suited to tamilnadu cm Jayalalithaa as if Jayalalithaa herself is singing this song so suited to our beloved jayalalithaa.the entire credit goes to kannadasan for having wrote such a beautiful song.

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 Před 8 měsíci

      Yes.true.kaviyarasar.kannadasan. aazhga😊😊😊😊😊😊

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 Před 8 měsíci

      Tharpothu.intha.mathiri.padalum.illai.aadalum.illai..cinema.paarkum.yenname.illai.super.kalaiyaradi.jj.

    • @kamalanathanjayaveeran1758
      @kamalanathanjayaveeran1758 Před 5 měsíci

      Kadhal illamal oru maruthuvaraga kadandhupogum Sreekanthin nadai azhagu...Jayalalitha in thullum moga nadanam azhagu...P.Susheelamma kural azhagu...MSV isai azhagu...ellavatraiyum onrinaitha Director Sreedharin touch azhagu

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 Před 6 měsíci

    என்றும் என் நினைவில் நின்ற பாடல்

  • @selvamm2904
    @selvamm2904 Před 11 měsíci +4

    Heart touching song ❤❤

  • @pushpavalli947
    @pushpavalli947 Před rokem +4

    Amma azhagu ungalukku Naa அடிமை

  • @ravika4929
    @ravika4929 Před 9 měsíci +1

    Stylish and dignified Srikanth

  • @leo_maarimuruganpillai_man4321

    Kannan ennum mannan paerai
    Solla solla
    Kallum mullum poovaai maarum
    Mella mella
    Ennam ennum aasai padagu
    Sella sella
    Vellam perugum penmai ullam
    Thulla thulla
    Thendral indru paadum paadal
    Enna enna
    Chinna kiligal sollum kadhaigal
    Enna enna
    Kannum nenjum ondrukkondru
    Pinna pinna
    Ennai thunbam seiyum ennam
    Enna enna
    Female : Akkam pakkam yaarum paarthaal
    Vetkam vetkam
    Anbae unnai naeril kandaal
    Naanam naanam
    Aasai nenjai solla ponaal
    Acham acham
    Andrum indrum adhu thaan nenjil
    Micham micham
    A female heart fall in love with someone, the way it get expressed shows the beauty of beautiful female heart and the compassion of love. Love to see Jayalalithaa amma dance and movements are like beautiful butterfly she caries that energy, grace, beauty throughout song. her steps like complete accurate and well dignified as always one of the beautiful women of 70s era. handsome and dashing personality srikanth sir took that character into next level a man who's concern about someone life but at the same time he unable to express the right thing as he don't want see her going back to her past were she was psychologically unbalance, nothing but respect and heart full of love to 70s era for giving a wonderful ever lasting creation.

  • @govindarajurangasamy1540
    @govindarajurangasamy1540 Před 9 měsíci +2

    No words to praise her dance