பீஜாம்ருதம் விதை நேர்த்தி_Beejamrutham Seed Treatment

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2019
  • பீஜாமிர்தம் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்
    பீஜம் என்ற சொல்லிற்கு விதை என்று அர்த்தம். பீஜாமிர்தம் என்பது விதைநேர்த்தி செய்வதற்கு பயன்படும் கரைசலாகும்.
    தேவையான பொருட்கள்
    நாட்டுப்பசுஞ் சாணம் - 5 கிலோ
    நாட்டுப்பசுங் கோமியம் - 5 லிட்டர்
    தோட்ட மண் - ஒரு கைப்பிடி அளவு
    கிளிஞ்சல் சுண்ணாம்பு அல்லது கல் சுண்ணாம்பு - 50 கிராம்
    தண்ணீர் - 20 லிட்டர்
    தேவையான உபகரணங்கள்
    50 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் - 1
    கலக்கி விட மூங்கில் குச்சி - 1 (5 அடி நீளம்)
    மூடிவைக்க துணி அல்லது கோணிப்பை
    செய்முறை
    50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மில் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கடிகார திசையில் (வலது சுற்று) நன்றாகக் கலக்கியபின் கோணிப்பை அல்லது பருத்தி துணியால் மூடி வைக்கவும். 12 மணி நேரம் கழித்து பீஜாமிர்தம் பயன்படுத்துவதற்குத் தயாராகிவிடும்.
    பயன்படுத்தும் முறை
    விதை நேர்த்தி செய்யவேண்டிய விதைகளை பீஜாமிர்தத்தில் நன்கு நனையச்செய்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க பயன்படுத்த வேண்டும். மெல்லிய தோல் உடைய பயறு வகைகள் போன்ற விதைகளை நிழலில் ஒரு தார்ப்பாய் மேல் பரப்பி, விதைகளின் மேல் பிஜாமிர்த கரைசலை தெளித்து மெதுவாக கிளறிவிடவும், விதைகளை கைகளால் தேய்த்தால் தோல் உரிந்துவிட வாய்ப்புள்ளது, எனவே கைகளால் தேய்க்கக் கூடாது, அவ்விதைகளை நிழலில் உலர்த்தி விதைக்கவும்.
    நிலக்கடலையின் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால் அதை நேரடியாக பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்யக்கூடாது. நிலக்கடலையின் எடையில் 10% அளவுக்கு கனஜீவாமிர்தத்தை கலந்து கை விரல்களால் மென்மையாக கிளறிவிட்டு பின்பு பயன்படுத்தவும். உதாரணமாக 10 கிலோ விதைக்கு 1 கிலோ கனஜீவாமிர்தம் போதுமானது. நாற்றுகளாக நடவு செய்யும் போது வேர்களை பீஜாமிர்தத்தில் நன்றாக நனைத்து நடவு செய்ய வேண்டும்.
    கவனிக்க வேண்டியவை
    கலக்கி வைத்து 12 மணி நேரம் கழித்து பீஜாமிர்தம் தயாராகும், எனவே 12 மணி நேரத்திற்குப் பிறகுதான் பீஜாமிர்தத்தைப் பயன்படுத்த வேண்டும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வீரியம் குறையாமல் இருக்கும். டிரம்மின் வாய்ப் பகுதியை துணியால் கட்டி வைக்க வேண்டும். சூரிய ஒளி மற்றும் மழை நீர் படாதவாறு நிழலில் வைக்க வேண்டும். நாற்றுகளின் வேர்களை பீஜாமிர்தத்தில் நனைக்கும்போது நாற்றுக்களில் உள்ள தண்ணீர் பீஜாமிர்தத்தில் கலந்து பீஜாமிர்தம் நீர்த்துவிடும், இந்த நீர்த்த பீஜாமிர்தத்திற்கு பதிலாக அவ்வப்போது புதிய பீஜாமிர்தத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.
    பயன்கள்
    விதைகளை பீஜாமிர்தம் மூலம் விதைநேர்த்தி செய்வதினால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படும்.
    பயன்படுத்தும் காலம்
    பீஜாமிர்தம் தயாரான பிறகு 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

Komentáře • 12

  • @yogeshvenkat7470
    @yogeshvenkat7470 Před 3 lety +2

    அருமையான பதிவு 👍👌

  • @yogeshvenkat7470
    @yogeshvenkat7470 Před 3 lety +2

    நன்றி

  • @prathapkandasamy4371
    @prathapkandasamy4371 Před 3 lety +3

    ஐயா.... என்னிடம் நாட்டு மாடு இல்லை... கலப்பின மாடுகள் மட்டுமே உள்ளது...அவற்றை பயன்படுத்தலாமா

  • @rameenamuni1761
    @rameenamuni1761 Před 2 lety

    Really great 👏👏👏👏👏

  • @suja2442
    @suja2442 Před 4 lety +1

    Thanks Anna, do you have any books what ever your training or your speach

  • @DeivanayagamLakshmi
    @DeivanayagamLakshmi Před 3 lety

    இந்த அளவு எத்தனை acre விதை நேர்த்தி பயன்படுத்தலாம்

  • @drsudhar356
    @drsudhar356 Před rokem

    Sir coriander seeds how to do dor

  • @kaviram1212
    @kaviram1212 Před 3 lety

    பீஜாமிர்தத்துல விதைகளை எவ்வளவு நேரம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.....மக்காச்சோள விதைகளை பீஜாமிர்தத்தில் ஊற வைக்கலாமா

  • @apsarahamobail1530
    @apsarahamobail1530 Před 2 lety

    கோமியம் இல்லை என்றால் பரவல்லையா

  • @loguiyarkaivivasayam2464

    அண்ணா இதுல சூடோமோனாஸ் கலக்கலாமா