சனாதனம் Rangaraj Pandey Dushyant Sridhar உதயநிதி ஸ்டாலின்

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2023
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.
    எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
    - மு. வரதராசன்
    எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
    - சாலமன் பாப்பையா
    பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்
    - மு. கருணாநிதி
    சமீபத்தில் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க போரதா சொன்னதாகவும் அதற்க்கு பதில் வினையை பிரதமர் மோடி ஐயா முதற்க்கொண்டு பலர் ஆற்றியதாகவும், வட புலத்தில் அரசியல் பிரச்சாரத்திற்க்கும் அதை பயண்படுத்த போவதாகவும் தெரிகிறது. அது ஒரு புறம் இருக்க, உதயநிதி சனாதனம் என்ற சொல்லை என்ன பொருளில் சொன்னார் என்பதே பெரும் சர்ச்சையாக உள்ளது. திமுகவினர் சனாதனம் வேறு இந்து மதம் வேறு என்ற நிலையிலும், திக வினர் இரண்டும் ஒன்று என்ற நிலைபாட்டிலும் இருப்பதாக தெரிகிறது.
    உதயநிதி புரிந்து சொன்னாரா? அப்படி புரிந்து சொன்னால், சனாதனத்தை ஒழிக்க என்ன திட்டம் வைத்துள்ளார்? திக வினர் நிலைபாட்டின் படி சனாதனம் என்றால் இந்து மதம் என்றால், இந்து மதத்தை ஒழித்து விட்டு புதிய மதம் நிறுவும் எண்ணம் கொண்டுள்ளாரா அல்லது தம்மை கிருத்துவர் என சொன்னதால் கிருத்துவம் பரவ செய்ய போகிறாரா? அல்லது தற்கால அரசியல் வாதிகள் பலரின் வெட்டி வீராப்பு பேச்சை நிகர்ப்ப, பேச போற இடத்திற்க்கு தகுந்தது போல சும்மாங்காட்டியும் ஏதாவது ஒன்றை அவர்கள் சிறு மகிழ்சி எய்த சொல்லிவிட்டு ஓய்ந்து விடலாம் என சொன்னாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம். இது இப்படி இருக்க, இதற்க்கு எதிர்வினை ஆற்றும் சிலர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான், என்ற குறளை மேற்கோள் காட்டி பேசுகின்றனர்.
    அது சற்றேறக்குறைய நம்ம நண்பர்கள் அறம்பாடி சித்தர் பாடலை அவர் அவர் மன ஓட்டத்தில் புரிந்து கொள்வது போன்றே உள்ளது. கூடவே அறம்பாடியார் பாடல்களில் இடைச் சொருகள்களாக, வெளியிடுபவர்களின் கருத்துகள் பிரதான இடம் பிடித்து இருக்கலாம் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துவது போலவே,
    நான் மறைகளிலும் அதன் பொருளிலும் இடை சொருகள்களும், கூடவே அதன் பொருள் தவறாக வியாக்கியாயணம் செய்ய படலாம், செய்ய பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது, காரணம் பூர்வ ஆசிரியர்கள் என்ன பொருளில் எழுதினார்களோ அதே பொருளில் உரை ஆசிரியர்கள் பொருள் சொல்கிறார்களா என்பது கேள்விக்குறியது. அவ்வாறான உரையாசிரியர்களால் பெரியார் போன்றவர்களே வர்ணாசிரமத்தை திருக்குறள் ஒத்து கொண்டதாக பேச செய்து விடுகிறது போல, அதை ஆன்மீக உபன்யாசகர் ஒருவர் இவ்வாறு மேற்கோள் காட்டுகிறார்.
    இது இப்படி இருக்க, வர்ணாசிரம கருத்துகள் என்ன பொருளில்சொல்லப்பட்டன, நடை முறையில் அதன் எல்லைகளுடன், இலக்கணம் மீறாமல் இருந்தனவா, அது இன்றும் தேவையா? அவை சரியானதுதானா? என்பதெல்லாம் கேள்விக்குறியது
    அது ஒரு பக்கம் இருக்க, உண்மையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். என்ற குறளில்,
    திருவள்ளுவர் என்ன பொருளில் "செய் தொழில்" என்பதை சொல்லி இருப்பார் என்பதை நாலடியார் பாடலின் வழி சிந்திக்கலாம்,
    நாலடியார் பாடல்: 347
    மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்; எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும்
    பொருள்: தோலின் மேல் குற்றமற்ற தூய பசும் பொன்னில் மணியைப் பதியவைத்து செய்ததாயினும் செருப்பு காலில் அணியத்தான் உதவும்.
    அதுபோலக்
    கீழ்மைக் குணமுள்ளவன் பெற்றிருக்கும் செல்வத்தை அதன் செயல்பாட்டால்தான் மதிப்பிட வேண்டும்.
    ஆக செய்தொழில் என்பது செயல்பாடு அதாவது நடத்தை அல்லது பண்பு எனும் பொருளில் இங்கு பயண் படுத்தப் பட்டிருப்பது தெளிவாகிறது. "செய்தொழில்" என்ற சொல்லை இப்படி ஒரு பொருளில்தான் திருவள்ளுவரும் அக் குறளில் பயண் படுத்தி உள்ளார் என்பது நமது கருத்து,
    அதன் படி பரிமேலழகர் தவிர்த்த ஏனைய கலைஞர் உள்ளிட்ட உரை ஆசிரியர்கள் திருகுறளுக்கு பொருளை திருவள்ளுவர் எண்ண ஓட்டத்தில் எடுக்காமல் தம் தம் எண்ண ஓட்டத்தில் எடுத்து வியாக்கியானம் செய்து இருந்ததால்.
    பெரியார் போன்றவர்களுக்கு திருக்குறள் மீதும் ஐயம் எழுந்ததில் ஆச்சரியம் இல்லை. இது விஷயத்தில், குறிப்பாக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற குறளில் "செய் தொழில்" என்ற சொல்லுக்கு பொருளாக, நாம் மேற்கோள் காட்டியது போல எடுத்து இருந்தால், பெரியார் விமர்சனம் செய்யத் தேவை இருந்து இருக்காது. தவறாக பொருள் கொண்டு பெரியார் விமர்சனம் செய்து இருந்தாலும், அவர் எண்ண ஓட்டம் மிக சிறப்பாக அமைந்து உள்ளது, அவரது எண்ண ஓட்டமும், திருவள்ளுவர் எண்ண ஓட்டமும், நமது எண்ன ஓட்டமும், இதில் ஒன்று படவே செய்கிறது. தவறான பொருள் கொண்டதால் பெரியார் முரண்பட்டு நிற்கிறார் என்பதே நமது புரிதல்.

Komentáře • 1

  • @millennialminds7151
    @millennialminds7151 Před 9 měsíci

    ஐயா அறிவும் தெளிவும் வராதவரை சமூகத்தில் தொழில் முறை மற்றும் class discriminations இருக்கவே செய்யும்.. equality is a myth, an everlasting myth