அறம்பாடி சித்தர் பாடல் 195

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2024
  • அறம்பாடி சித்தர் பாடல் 195 . 🌸வீட்டுள் சரணடைந்து விருந்துண்ணும் பூனைகளை விரைந்து வேட்டையாடி விரும்பி இரையெடுக்கும் வீணரினங்களைத்தான் காட்டுள் கண்டெடுத்து கற்கி கழுத்திற்குள் கத்தி பாய்ச்சிடவே கயமை கழிசடையாள் குற்றம்புரிபவருள் குறும்பர் குறவரென குழுவரினங்களையே கொற்றவனூர் முழுக்க கூட்டி ஒன்று சேர்த்து ஆட்டம் போட்டதற்கு அரசின் சிறைக்குள்ளே அழுத ஆண்டுகளோ நான்காய் நலம் கொன்று நாறிப் புகழிழந்து நலிந்த நாட்களின் பின் நாசிக் காற்றுள்ளே நமனும் நெருங்கியதோர் நடுங்கும் நோய் கண்டும் நன்னெறி நாடாது நாயின் நிலையுற்றும் நடத்தையை மாற்றாது
    துடிப்பது முறையாமோ ? ஆடவர் கழுத்தகற்றும் அநீதியில் மேன்மையுற்றும் அண்ணலில் தலையகற்ற ஆணவம் கொள்வதுதான் அறத்திற்கிழுக்காகி அம்மையப்பனருள் அணுவும் பெறாது அவளை அலைக்கழிக்கும் . மதத்தின் மதகுகளுள் மந்தரை விழ்ந்ததாலே மறுமை கொள்ளாது மறலி கோட்டைக்குள் மாளா துடிதுடிக்கும் மாறாதவள் விதியே . கொழுத்தவுடல் கொண்டு கொள்ளா உள்ளத்தால் இயக்கி திட்டமிட்டு எம்மான் உயிரெடுக்க ஒளிந்து ஓலமிட்டே ஓராயிரம் துயர் தரினும் அரக்கியின் கதை முடிய அடுத்துள்ள ஆண்டுகளுள் அபலையாய் அழிவதென்ற விதியை வரைந்தவனோ அழல்விழி ஆண்டவனே . உள்ளத்துள் முட்களையும் உடல்மேல் முல்லையையும்
    ஒய்யாரமாய் நட்டு ஊரை ஏய்த்தவளின் உண்மை முகமறிந்து கொன்றை வேந்தனுமே கோர சீற்றத்தால் கொற்றம் தகர்த்ததுதான் கொண்ட ஊழ்வினையே ! தயையை இழந்ததொரு தறுதலை தன்மையினை தரமாய் சொல்வதென்றால் தாக்கும் புயல் காற்றால் தகர்ந்து நிற்கையிலே தவித்து பொரி உண்டாள் தலைக்குள் சோறுண்டோ .

Komentáře • 5

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Před 28 dny

    ஓம் நமசிவாய. குருவின் திருவடி வாழ்க.

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před měsícem +5

    ❤ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
    அறம் பாடி சித்தர் பாடல் 195.
    🌸 அன்னையர் நிலத்தினை அழிப்பவன் முகத்தினை அகிலமே அறிந்திட ஆவன செய்யவே அம்மையின் அப்பனை அழைத்ததில் வீணில்லை. அங்கமோர் பரதமாய் அடக்கியே ஆண்டிடும் அரவதன் விடமென அவனுமே தொடர்வதும் பிறை நுதல் பெண்டிரின் பிணம் விழ அழவிட்டு பேய்மகன் பின்னமும் பீடுடை நடையுடன் தொடருவானென்பதை தூற்றிட வேண்டுமோ ! ஆற்றலை விரையமாய் ஆருக்கும் பயனின்றி அமைப்பவன் கதையை யான் கேட்டிட வேண்டுவேன் கிள்ளையே நீயுமே ஆற்றினை சூடிய அகில்மண தேவனே அனைத்தையும் அளந்திட்டான் அருந்தமிழ் முல்லையே. பீதிதான் பின்னரும் பெருந்துயரோங்கிட பிழைகளை புரிவதில் பேரலை போன்றவன் தலைகளை தகர்ப்பதில் தன்னிகரின்றியே தரமுடை தனித்துவ தென்னக நலங்கெட தீவினை புரிவதும் திருசடை நாதனின் திருமொழி வாக்கென வருமொழி ஆக்குவேன். பெண்டிர்கள் பலருமே பிஞ்சுகளூடவே தின்றிட உணவின்றி தீச்செயல் புரிவரே. வஞ்சகன் வாழ்வது வல்லூறுக்கிணையென வரதையுள் வாழ்பவன் ஆறுதலளித்திடாதழுவதும் நெருடல்தான் நிலைகுலைந்தழிவுதான் நேரிட வாய்ப்பதால் நீதியே மாண்டிடும் நேரமே வருமென நெஞ்சுக்கு வலு தர நிமலனை வேடினேன். அடிமையாய் மாந்தர்கள் அழுதிட வேண்டுமோ ! அனலையே விழியென அமைத்ததோர் அம்மையின் அப்பனே புனலையே சூடிய பூதல நாதனே உரைத்ததை கவிதையாய் புனைந்து யான் ஓதிடும் உறுகடன் உலகிற்கு ஆற்றுவேன். இன்னமும் சொல்லுவேன் எரிதழல் ஏறுகள் எல்லையை எரிக்குமே இல்லற குடிகளோ ஏழ்மையை சுமக்குமே. இல்லென அழுது தான் இரு விழிவழியுமே எண்ணரும் கோடியாய் இன்னுயிர் இழப்பதன் எல்லையை அறியிலேன். சொல்லரும் சூழ்ச்சியால் சுடர் நிலமுழுமையும் சோதனை படருமே. நற்றமிழ் முகத்தையே நரிகளும் சிதைக்குமே. முத்தமிழ் மாந்தருள் கெட்டவர் பலருமே கேடிலியான எம்கொற்றவன் கொள்கைக்கு குறைசொல்ல எழுவரே. நன்னனின் நிலத்திலே நஞ்சகம் கொண்டவள் பின்னமும் அரியணை பின்புலம் ஆகிடும் எண்ணமே எரிந்திட இழிமகள் கொண்டதோர் இயல்திறன் பெயருமே. பேரிறையாளனின் பெரும் துயர் போகவே ஓரிறையானவன் உதவுவான் என்றுமே. பிரம்படிபட்டஎம் பிறைமுடி நாதனே திறம்பட சொன்னதை திருமொழியாக்குவேன். அறமொடு அயர்ந்திடும் அப்பனின் பிள்ளையோ அடுத்துடை ஆண்டிலே உதிப்பது உறுதியாய் உமையவள் உதடுகள் உதிர்த்திடும் தரவுகள் ஊழ்வினை மாறிடா இமயவன் புதல்வனோ இரண்டொரு ஆண்டிலே வரவுதான் தவறிடா வார்த்தைகள் வீணிலா வரத்தையே தந்திட்டாள் வையகம் வாழவே !

  • @rajeshwaran6072
    @rajeshwaran6072 Před měsícem +1

    Super

  • @sivasticker6546
    @sivasticker6546 Před měsícem +1

    ❤🙄🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா