63 )கண்ணதாசனுக்கும் எழுத்தாளர் சுஜாதாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை-VIDEO - 63

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு கதையில் சொல்லப்பட்ட ஒரு கதாபாத்திரம் கண்ணதாசனை குறிப்பது என்று அவர் நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் கவிஞர் அதை பெரிதுபடுத்தவில்லை.

Komentáře • 130

  • @bharathip3294
    @bharathip3294 Před rokem +2

    கண்ணதாசன் மாபெரும் கலைகளின் ஒரே வாரிசு..
    அவரின் எழுத்துக்கள் அவரின் சொல்லாற்றல் அவரின் தமிழ் என்றும் தமிழ் உள்ளவரை வாழும்

  • @solai1963
    @solai1963 Před 4 lety +34

    எதையும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பேசக்கூடியவர் எங்கள் கவியரசர்,
    ஆனால் நேரடியாக சொல்லாத ஒரு பதிவிற்கு விளக்கம் தருவது தேவையற்றது என கவியரசர் நினைத்து தான் சுஜாதாவின் பதிவிற்கு பதிலளிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது,
    அத்துடன் விமர்சனங்களை என்றுமே கவியரசர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே.. நன்றி.

  • @Sundaracholai
    @Sundaracholai Před 2 lety

    மிக அருமை. 2 தகவல்கள். சிவப்பு என்பது நிறமல்ல குமுதத்தில் ஆரம்பித்து 4 வாரத்தில் community பிரச்சினையால் நின்று பின் ரத்தம் ஒரே நிறம் என வந்தது. கனவுத் தொழிற்சாலை விகடனில் வந்தது. நிற்க..சுஜாதா பல விஷயங்களை ஒரு outsider பார்வையே பார்ப்பார். அவர் விமர்சனங்களும் அந்த அடிப்படையிலேயே நுனிப்புல் தன்மையில் இருக்கும். அவரைப் பொறுத்தவரை தமிழ்சினிமாவில் இரண்டே மேதைகள்தான் . ஒன்று கமல். மற்றவர் பாலச்சந்தர்.! போகட்டும்..இதுகுறித்து சுஜாதாவுடன் நன்கு பழகிய பஞ்சு அருணாசலம் ஏதேனும் கூறியுள்ளாரா.? இருந்தால் சுவைபட சொல்லுங்கள்..நன்றி

  • @SK-ph5ep
    @SK-ph5ep Před 4 lety +5

    கண்ணதாசன் அவர்களின் நிதானமும். பக்குவமும் இந்த நிகழ்வின் மூலம் நன்கு புலப்படுகிறது!👍

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 4 lety +15

    கவியரசு கண்ணதாசன் - அவரது பெயரை கூறும்போது மட்டுமல்ல, அவரை பற்றி "நினைத்தாலே இனிக்கும்" The Great Legend, கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க பல்லாண்டு 🙏

  • @ravisundaram3431
    @ravisundaram3431 Před 4 lety +14

    வேறோர் இடத்தில் கண்ணதாசனை நினைவு கூர்க்கையில் இதே கம்போஸிங் பற்றி சொல்லிவிட்டு, "இவ்வளவு எளிது என்கிறாரே நாமும் முயற்சிக்கலாம் என்று பார்த்தேன். சுத்தமாக முடியவில்லை. கண்ணதாசன் அளவு தமிழ் அறிவும் இலக்கிய அறிவும் இருந்தால் எளிது. நமக்கெல்லாம் எளிதல்ல" என்று முடிக்கிறார்.

    • @velchamy6212
      @velchamy6212 Před 4 lety +5

      சுஜாதா தனக்கு வரவில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் மாமனிதர். கணையாழி மாதாந்திரக் கூட்டத்தில் கவிதை/ கட்டுரை எழுதுவது பற்றி நிறையவே (தன்னடக்கத்துடன்) பேசியதை நேரில் கேட்டிருக்கிறேன்.
      கண்ணதாசன் போல உதவியாளர் வைத்தும் எழுதத்தெரியாத சிலர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் சுஜாதா சார் எழுதியிருக்கக்கூடும்.

    • @vijayalakshmisubramaniam9190
      @vijayalakshmisubramaniam9190 Před 4 lety +1

      Very correct opinion.

  • @68tnj
    @68tnj Před 4 lety +2

    Very interesting story. Never known this before. Sujatha was popular in mid 80 onwards, that’s what I know from my memory. But Kavingar left us in early 80’s. I had never known this incident before. Thanks for bringing old memories back to life

  • @scsangaran
    @scsangaran Před 4 lety +3

    ஒருவரின் திறமை என்ன என்று அவருக்கே நன்கு தெரிந்திருந்தபோது அவரை பற்றி குறை கூறுவது ஒன்றும் அத்திறமையை குன்றிட செய்யப் போவதில்லை என்பது தான் உலகிற்கே தெரிந்ததாயிற்றே.
    இமயத்திற்கு பூலாங்கற்களின் பிதற்றலா புன் செய்யும்.
    இருந்த போதிலும் கவிஞரைப் பற்றிய உங்களின் பகிர்வுகளில் இருந்து அவர் ஒரு உண்மை பிரவாகமாவே வாழ்ந்து வந்த மாமனிதர் என்பது புரிகிறது.
    அருமையான பதிர்வு நன்றி.

  • @sathishbalasubramanian3793

    ஐயா உங்கள் சொல் நடை மற்றும் தெளிவான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தவை, உங்களிடம் ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு தென்படுகிறது நீங்கள் நிறைய திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வேண்டும் இது என் வேண்டுகோள்

  • @thameemify
    @thameemify Před 4 lety +1

    சுஜாதா நூல்களில் விமர்சனம் என்பது எதார்த்தமான ஒன்று, கவியரசர் அதனை எடுத்துக்கொண்ட விதம் மிக அற்புதம்

  • @VV-tf8wq
    @VV-tf8wq Před 4 lety +14

    நிறை குடங்கள் தழும்பாது. கவிஞர் என்றுமே மனிதனின் உயர்வு பற்றியே பாடினார் .அவர் என்றுமே தன்னை ஒரு அறிவாளி என்று சொல்லிக்கொண்டதாக நான் படித்ததில்லை.

  • @sukumaranrobinson1463
    @sukumaranrobinson1463 Před 2 lety

    Dear Mr. Annadurai , ur dad , the legendary poet hasn't left much asset . Had the great left assets that might have gone by this time ! But he has left love on u the offsprings and that affection has given u strength and that helps u to live respectable life !

  • @k9lover819
    @k9lover819 Před 4 lety +3

    தெய்வீக சிரிப்பய்யா உங்கள் சிரிப்பு,
    தனியாக இருக்கும் நான் இன்று விநாயக சதுர்த்தியும் அதுவுமாக உங்கள் சிரித்த முகத்தை பார்ப்பது இதமாக இருக்கிறது கவிஞரின் குடும்பத்தினர் அனைவருக்கும் மதம் மாறறிய பெண்ணைத்தவிர மற்றும் உங்கள் இணயதளத்திற்கு ஆதரவு தரும் அனைவருக்கும் விநாய சதுர்த்தி வாழ்த்துக்கள்
    சனாதன தர்மம் மட்டுமே சம்மதம் என்று சொல்லுவோம்

  • @ambikasenthil5063
    @ambikasenthil5063 Před 4 lety +11

    அது யதார்த்தமாக இருக்கலாமே! Situation அதுவாக இருக்கலாம், அல்லவா.
    அருமைராசன் ஏழை.
    அருமைராசன் கிருத்துவர்.
    அருமைராசன் கற்பனை கதாபாத்திரம்!!!
    கண்ணதாசன், நிஜம்!
    நன்றி:

    • @maheshwarijeyaprakash97
      @maheshwarijeyaprakash97 Před 4 lety

      அருமை ராஜன்....என்பது ரங்கராஜன் புனை பெயர் வாலி . அதுவாக இருக்கலாம்

  • @aakhashbs6295
    @aakhashbs6295 Před 4 lety +9

    நினைத்தாலே இனிக்கும் கம்போசிங்ல கவிஞர சந்திச்சது பத்தி அவ்வளவு உயர்வா எழுதினவர் சுஜாதா...அதனால நிச்சயமா தாக்கும்படி எழுதிருக்க மாட்டார்!!!

  • @Infotainmentvault2023_info
    @Infotainmentvault2023_info Před 9 měsíci

    ஐயா, அருமையான பதிவு. சுஜாதா எழுதிய கனவுத் தொழிற்சாலை ஆனந்த விகடன் இதழில் வந்தது.. நீங்கள் வாசித்துக் காட்டிய கட்டுரையில் உள்ளபடி, கவியரசரின் பல பாடல்களை சுஜாதா பாராட்டி அவருடைய கணயாழியின் கடைசி பக்கங்கள் கட்டுரையில் எழுதியுள்ளார். நீங்கள் குறிப்பிட்டது போல அந்தக் கதையில் வர்ணனை மிகவும் தாற்காலிகமாக வந்திருக்கலாம் என்பதே என் கருத்து.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Před 4 lety +9

    சுஜாதா அவர்கள் கண்ணதாசனைக் குறித்துத்தான் அவ்வாறு எழுதினார் என்பதே சந்தேகம். அப்படியே பொருள் கொண்டாலும் கவிஞர் பெரிதுபடுத்தாதது இயல்பானதே.
    இருவருமே தமிழ் எழுத்தில் வல்லவர்கள். பிரமிக்க வைத்த ஞானம் இருவரரிடமும் இருந்தது.

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 4 lety +7

    எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் திரையிசைப் பாடலாசிரியர்கள் பொதுவாகவே அப்படித்தான் தங்களுடைய உதவியாளர்களைப் பாட்டெழுத வைப்பார்கள் என நினைத்து அதனை ஒரு சகஜமான, இயல்பான ஒரு நிகழ்வாகக் கருதி அந்தக் கனவுத் தொழிற்சாலையில் ஏதோ ஒரு பாடலாசிரியரைப் பற்றி எழுதி இருக்க வேண்டும் . இல்லையெனில் நம் கவிஞரைப் பற்றி அவ்வாறு இழிவாக எழுதும் சாத்தியக் கூறே இல்லை எனலாம் .

  • @nagarajant2155
    @nagarajant2155 Před 4 lety +1

    அண்ணா துரை கண்ணதாசன் அருமையாக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறார் இதனால் நாம் மாபெரும் கவிஞரைப்பற்றி தெரிந்து கொள்கிரோம்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    இரு வல்லவர்கள்.

  • @chellamuthuchellamuthu9235

    உங்கள் குரல் கவியரசரின் குரலாகவே என் செவிகளுள் பாய்கிறது!

  • @ko6946
    @ko6946 Před 4 lety +2

    அன்று படித்த போது வலித்தது!
    அந்தத் தொடர் கதையை வாசகர் அந்நாளைய நடப்பில் ஒத்து பார்ப்பதுண்டு.
    யார் மனதிலும் நிலைக்காத காரணம் கதையில் பாடலாசிரியர் வரிகளுக்கு திணறியது!!!
    கவிஞரிடம் அது நடக்காது என்பது அனைவரும் அறிந்ததே!!
    ஏனென்றால்,
    அன்றைய கவிஞர் தினம் ஒரு நூல் என்ற அளவிற்கு அறுசுவை படைத்துக் கொண்டிருந்தார்.
    புரட்சித் தலைவர் சூட்டிய அரசவைக் கவிஞர் அரியாசனத்தில் எங்கள் மனதில் இருந்தார்.
    இதை கவிஞர் எடுத்துக் கொண்டவிதம் அறிந்து மகிழ்கிறோம்.

  • @athnanarsath2831
    @athnanarsath2831 Před 4 lety +1

    உங்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் விரும்பி பார்ப்பேன்

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv2290 Před 2 lety

    What a great personality Kavignar had been. In my opinion, he lived like a true Brahmagnani, one who never strives for the recognition of lesser mortals but for that of God. It will be a cliche and an understatement to say that Kavignar is great. He is truly great in every sense of the word. There's no one who can equal his talent and achievements. It's a great privilege to be born a Tamil

  • @madhurakavysrinivasan1912

    நன்றி. ஐயா கனவுத் தொழிற்சாலை ஆனந்த விகடனில் வெளியான தொடர்கதை

  • @christythambi3867
    @christythambi3867 Před 4 lety

    நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தை பார்த்த காலத்திலிருந்து அதற்கான வசனம் அல்லது உரையாடல்களை யார் எழுதினார்கள் என்று நான் தேடிக்கொண்டே இருந்தேன். கதை சுஜாதா என்று தெரியும் ஆனால் அந்த திரைப்படத்தின் உரையாடல்கள் இளமையாகவும், குறும்பு கலந்தும், சுருக்கமாகவும் இருந்தது! அப்படி பார்த்த போது சுஜாதா வாக இருக்கும் என்று நினைத்தேன். சுஜாதாவுக்கு ஒரு மின்னஞ்சல் கூட எழுதி கேட்டிருந்தேன். ஆனால் பதில் வரவில்லை. இன்று உங்கள் நிகழ்ச்சி மூலம் அந்த பதில் கிடைத்தது. நன்றி! நன்றி!
    "எங்கேயும் எப்போதும்" பாடல் எங்கேயும் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! இருக்கும்!!

  • @angavairani538
    @angavairani538 Před 4 lety +1

    என்றும் நிறைகுடம் ததும்பாது.வினாயகர் சதூாத்தி நல்வாழ்த்துக்கள்

  • @jbphotography5850
    @jbphotography5850 Před 4 lety

    அருமையான பதவு வாழ்க கவிஞர் புகழ்

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 Před 28 dny

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kasturisundar8594
    @kasturisundar8594 Před 4 lety

    பதிவுக்கு நன்றி. சிந்தித்த பின்னரே சிலரின் மகத்துவம் புரிகிறது

  • @avijayan2
    @avijayan2 Před 4 lety +1

    அருமை. ஒரே ஒரு வேணடுகோள். சந்தேகமான விஷயங்களை தெரிந்து கொண்டு பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.

  • @vlrr3565
    @vlrr3565 Před 4 lety +4

    என்னெனவோ பேசிவிடவும் எழுதிவிடவும் தோன்றுகிறது.
    கவிஞர் அவர்களே மௌனம் காத்தார் எனும் போது........
    இருந்தாலும் ஒரு வார்த்தையாவது
    சொல்லத் தோன்றுகிறது .
    பொறாமை.😤😤😤

  • @smileanbu13
    @smileanbu13 Před 4 lety

    What a beautiful description.

  • @srinivasanthiruvakatamsamy688

    Good explanation 👏 👍 👌 😀

  • @smani4357
    @smani4357 Před 4 lety +3

    அன்ரே!!!நிறைகுடங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாது...கற்பனையான் கழங்கமற்றவன்(இலத்தைப்பழம்) போல்....."கட்டுமரத்தில் நிறைகுடம் நிற்காது"துரையவர்களே!!!

  • @subbarayanrathinasabaapathi279

    நீங்கள் சொல்வது உண்மை தான்.இரத்தம் ஒரே நிறம் கதையில் நாடார்கள் பற்றி அந்தக்கால கிராம வழக்கில் இருந்த வார்த்தையை பயன் படுத்தி இருந்தார்.அது நாடார்களை புண்படுத்தியதால் அந்த தொடர் நிறுத்தப்பட்டது.சுஜாதா எழுதியது அனைத்துமே குமுதம் பத்திரிகையில் தான்.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před 2 lety

    அய்யா வணக்கம்.நீங்க தெய்வத்திரு கண்ணதாசன் அவா்களுக்கு மகனாக பிறந்ததற்க்கு கொடுத்து வைத்திருக்கனும்.அவரை"பற்றி ஒரு சில தற்போதய கவிஞா்கள் அவரை இலக்கணம் தெரியாதவா் என பேசி உள்ளதாக ஒரு வீடியோவில் தாங்கள் தெரிவித்து இருந்தீா்கள்,நான் சொல்கிறேன் கண்ணதாசன் ஒரு இயற்கையான அற்புத புலமை பெற்ற கவிஞா்,ஆற்றல் மிக்க"புலவா்,அவா் தமிழகத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம்,அவருடைய அறிவுதிறனை அளவிட முடியாது,அவா் அறிவுகலஞ்சியம்,ஒரு அமுத சுரபி,அவா் தன்னை வருத்தி எதிா்கால சந்ததியருக்கு அறிவூட்டிய அன்பான கடவுள்.கடந்த காலம்,நிகழ்காலம்,எதிா்காலம்பற்றி அறிந்த ஒரு மகாண் இலக்கணமே அவருடைய பாடலில் புது பொலிவு பெரும். முக்காலத்தை உணா்ந்த முனிவா்.அவரை பாராட்ட வாா்த்தைகளே இல்லை.என்னை பொருத்தவரை திருவள்ளுவருக்கு அடுத்த இடத்தை பெற தகுதி உள்ள ஒரு அரசவை கவிஞா்.அதை உணா்ந்த தெய்வத்திரு எம்.ஜி.ராமச்சந்திரன்(முன்நாள் முதல்வா்)தமிழ்நாடு,அவாகள் தெய்வத்திரு கண்ணதாசன் அவா்களை தமிழக சட்டமன்றத்தில் அமர வைத்து இவா் ஒரு அரசவை புலவா் என அறிவித்தாா்,இதற்க்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.இந்த நிகழவை யாராலும் மக்கள் மனதிலிருந்து நீக்க முடியாது.தமிழக அரசு குறிப்பிலிருந்தும் மறைக்க இயலாது.இதிலிருந்து இதைபடிக்கும் அணைவரும் கண்ணதாசன் அவா்களை போற்ற தவரவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அணைவருக்கும் அன்பான நன்றிகலந்த வணக்கம்.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Před 4 lety +4

    புரிந்து கொள்ள முடியாத மனித மனதையும் புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் ஆற்றல் படைத்தவர் கவிஞர் அவர்கள்

  • @natarajansundaresan2963
    @natarajansundaresan2963 Před 4 lety +1

    திரு கணேசன் ராமகிருஷ்ணனின் கருத்துக்கள் தான் எனது கருத்தும். கண்ணதாசன் மற்றும் சுஜாதா இருவரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 Před 3 lety

    நன்றி சார்

  • @arulball7129
    @arulball7129 Před 4 lety

    Very very great story. He was a great gentleman. Your reading is very good . What a wonderfully father you have . Thank you so much continue your lovely open heart program 🙏🙏🙏👏👏👏👏

  • @tsivanathan
    @tsivanathan Před 4 lety

    Thanks sir!

  • @sathishsingaperumalkoil9841

    இந்த காட்சியை தான் முகவரி படத்தில் பாடலாசிரியர் பதிலாக இசை அமைப்பாளர் பாத்திரம் இடம் பெற்றிருக்கும்.

  • @vthiyaguv2437
    @vthiyaguv2437 Před 4 lety +3

    இங்கே என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சுஜாதாவின் கதை நாயகன் அருமை ராஜன் பாடல் எழுத விரும்புகிறார். கதைப்படி ஒரு மேதாவியான பாடலாசிரியருக்குத் தோன்றாத வரிகள் தம் கதா நாயகனுக்குத் தோன்றுவதாகப் பதித்தால் தானே அந்தக் கதா பாத்திரத்துக்கு ஒரு அழுத்தம் பிறக்கும். அந்த வகையில் சுஜாதாவுக்குக் கண்ணதாசன் அவர்களை அங்கேப் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றியிருக்கலாம் அல்லவா?? அந்த விதத்தில் சுஜாதா அவர்கள் அந்த இடத்தில் கவிஞரைப் புகழ்ந்திருக்கிறார் என்பதே என் கருத்து. ஆழமாகக் கவிஞரைப் பற்றி முத்துக் குளிக்கும் அண்ணன் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கட்கு என் வாழ்த்துக்கள்.

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Před 2 lety

    ஐயா நான் கண்ணதாசன் ஐயாவின் அடிமை.
    கீழ்கண்ட பாடல் பற்றிக் கூறவும்.
    Silaikal
    பல்லவி
    ++++++-
    ஆண்டவரே, ஆண்டவரே
    உம்மையே மனதில் வணங்குகிறேன்
    பொன்னில் வெள்ளியில்
    கல்லால் ஆன சிற்பங்களும்
    கண்கள் உருட்டி நாவைத் துருத்தும் உருவங்களும்
    கற்பனையால் வந்த வடிவங்களே
    கலைகள் காட்டுமா கடவுளையே
    சரணங்கள்:
    1. பளபளவென நாக்குள்ளவை
    சில வார்த்தைகளேனும் பேசாதவை
    கால்கள் கைகள் இருக்கின்றன
    தோளில் சுமந்தே செல்கின்றனர்
    கைவசம் ஆயுதம் பற்பல இருந்தும்
    கள்வர்கள் பயத்தால்‌ நடுக்கத்திலிருக்குது.
    2. வளவளவென வேண்டுதலேன்
    தீப ஒளியால் தானே முகம் மலரும்
    அர்ச்சகர் சொல்லும் மந்திரம் எதற்கு
    காதில் நீண்ட துளையிருக்கு
    தவறிவிழுந்தால் அது எழுவதில்லை
    தரையோடு தரையாக
    பொடியாகிப்போகுது.
    3. பக்தர்கள் விளக்கால் கரி வருது
    துகள் சிலைகளில் அன்றாடம் படிகிறது
    உடைகளில் படியும் அழுக்காலே
    பட்டாடை கூடக் கந்தலாகுது
    தலையில் மார்பில் வௌவாலின் எச்சங்கள்
    கெட்ட வாடை போக்கத் தூபங்களிடுவர்
    4. சிற்சிறு தெய்வ வழிபாடேன்
    வல்ல நற் தெய்வம் ஒன்றிருக்க
    அப்பாவி ஆட்டைப் பலியிட்டீரே
    தப்பான போதை வெறியாகி
    இரத்தம் தோய்ந்த மாமிசம் உண்டீர்
    இலட்சம் பேர்கள் நோய் கொண்டீர்கள்

  • @srajaraja8717
    @srajaraja8717 Před 4 lety

    ஐயா வாழ்க வளமுடன்

  • @ENMANNMAKKALDESAM
    @ENMANNMAKKALDESAM Před 4 lety

    Super sir🙏🙏

  • @shanthikumara8214
    @shanthikumara8214 Před 4 lety

    Very nice

  • @pvasanthi7623
    @pvasanthi7623 Před 4 lety +1

    Great Kannadasan talent.👏👏

  • @sathishbalasubramanian3793

    சுஜாதாவின் நோக்கம் சுவாரசிய மான கதையை எழுதுவதில் இருந்திருக்கும் அதனால் ஒரு நல்ல நிகழ்வின் மூலமாக நேர்மறையான சூழலை தன் கதைக்கு உருவாக்கி இருப்பார். கண்ணதாசனை தாக்கும் விதமாக அவர் அதை செய்திருக்க மாட்டார். கவிஞர் அதை உணர்ந்திருப்பார்

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 4 lety

    அருமை

  • @mahadevanbalasubramanian6588

    Arumai

  • @sivamani7914
    @sivamani7914 Před 4 lety +1

    Thank you sir for the video!! Please share more information about Kannadasan Sir very frequently.. waiting for your next video. One request, if possible pls do video every day.. For me, a day would not complete without listening Kanndasan song or talk.

  • @arunraj8144
    @arunraj8144 Před 4 lety

    Super sir

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 Před 4 lety +9

    அண்ணே.., நான் 'கவியரசர்'ஐ, பூஜிக்கும் பக்தன், என்பதை முதலில் சொல்லி விடுகிறேன், திரு. சுஜாதா, அவர்கள்.., அந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரத்தை மெருகேற்ற ஒரு பெரிய கவிஞரை விட திறமை வாய்தவன் என்பதை சொல்ல வந்திருக்கலாம், அவரைப் பொருத்தவரை மட்டும் அல்ல, நம் அனைவரைப் பொருத்தரை இன்றலவும் பெரிய கவிஞர் 'கவியரசர்'தானே.., ஆகவே அந்த கதாப்பாத்திரத்தை கொஞ்சம் Bildup' பண்ண எண்ணிருப்பாரோ.., என தோன்றுகிறது, நீங்கள் சொன்ன நிகழ்வை பார்த்தால் (கேட்டால்) ஆகவே 'கவியரசர்'க்கு நிகர் 'கவியரசர்'தான், அவரை வெல்ல இன்று வரை யாரும் இல்லை, வணங்குகிறேன்,

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu Před 4 lety

    Super

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před 3 lety +1

    ஒருவேளை அந்த அருமைராசன் என்ற கதாபாத்திரமே கண்ணதாசனாக அவர் நினைத்திருக்கலாமோ...ஏனென்றால் கண்ணதாசனை மிஞ்சி ஒரு கவிஞனை அந்த இடத்தில் கொண்டுவர சுஜாதா நினைத்திருக்க வாய்ப்பில்லை.அதை என் போன்ற கண்ணதாசன் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை தாங்கள் வெளியிட்ட எந்த வீடியோக்களிலும் கண்ணதாசன் அவர்களுக்கு இப்படி பாதியில் எழுந்து செல்லும் குணமிருந்ததாக குறிப்பிடவில்லை. அதனால் இதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனறே தோன்றுகிறது.நன்றி!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety +1

    👌

  • @gandhan
    @gandhan Před 4 lety

    கவிஞர் என்றுமே ஜென்டில் மேன் ஆக வாழ்ந்திருக்கார்

  • @dharsanelango9253
    @dharsanelango9253 Před 4 lety +2

    Vaali sir with kannadasan sir relationship ..
    Pls post videos regarding this uncle🙏🙏

  • @naveenkumars1417
    @naveenkumars1417 Před 4 lety +1

    ஐயா,கடைசி வாரம்,குமுதம் இதழில் கவிஞர் பெத்தடின் போட்டு கவிதை எழுதியதாக குறிப்பிட்டிருந்தார்கள்...கவிதையும் இடம்பெற்றிருந்தது...அது உண்மையா ஐயா???...அதை பார்த்தவுடன் உங்கள் நினைவுதான் வந்தது....

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 Před 4 lety

    கவிஞர் 💚

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 Před 4 lety

    Kannadasan ayya great speech

  • @kalai1469
    @kalai1469 Před 4 lety

    Writer Sujatha was intelligent;but perverted intelligent. Before he came to Cine field, he uttered numerous sarcastical/cynical comments on many cine giants as well as tamil scholars in "KANAYAZHI" letters.His thought was that he is above all. In his novels & stories , he showered his perversions while narrating ladies. Atlast in BOYS movie also , he exposed his perversion..Apart from these weaknesses, he is a good writer.

    • @vikramlakshmanan3651
      @vikramlakshmanan3651 Před 4 lety +1

      Sir, with due respect to you, I wish to point out, in kavignar's many songs direct and indirect reference to sex is there. Commercial compulsions make such creative persons to stoop to that level. If you want to call sujatha a pervert, it applies to kavignar also. I can quote 100s of songs of kavignar which bear direct reference to sex act. It is like throwing stone from a glass House. I wish to add that both are great creators and I feel Sujatha would never have thought of any insult to kavignar.

  • @kalai1469
    @kalai1469 Před 4 lety +3

    DEAR VIKRAM, A love song which narrates love feelings between a male & female can not be called perversion. World Literatures in all languages are constituted with sex. But In between the novels & stories, writer Sujatha will make some remarks with regard to ladies.Eg. AVAL ODIA POTHU, IRRANDU POONAIKKUTTIKAl, CHAKKU PAIKKUL THULLUVATHU POL THULLINA. one of his film dialogues:-LEMON SIZE TO SOME FRUIT varai (I am ashamed of telling its.name) we can see in this place ; Are these sex acts or perversions.?
    In his KANAYAZHI Pages, he unecessarily attacked SRIDHAR's "NENJIL ORU ALAYAM" and he wrongly criticised in an uncivilised manner ALANGUDI SOMU's KANNGALUM KAVADI SINTHAGATTUM. Comment box does not allow me to quote further. Inspite of all drawbacks, I whole heartedly agree that he is a good writer.

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast Před 4 lety

    New logo is good👍

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 4 lety +1

    அப்பாவின் நேர்மையை சுஜாதா எடுத்துக்கூறியது அவர் பெருந்தன்மையை காட்டுகிறது

  • @sivakumar-nz9tp
    @sivakumar-nz9tp Před 4 lety +3

    Is it true?, during Ninaithale inikkum movie songs composition, panchu arunasalam was not with Kannadasan, Panchu Started his new career by that time very successfully with Illayaraja. Hence how comes true Sujatha's statement about Panchu in that composing session?

    • @ATHIRIPUTHIRI2621
      @ATHIRIPUTHIRI2621 Před 4 lety

      Panchu..wrote in MGRs kalangarai vilakkam itself.. Ponnezhil poothathu..was written by himself. Ilayaraja was introduced by Panju...so he wrote all songs himself in his production..

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 Před 4 lety +2

    ஒரே நிகழ்வைப்பற்றி இரு வேறு பதிவுகள் உள்ளன. ஸ்ரீதரின் ஒரு படத்திற்கு பாடல் எழுதும்போது ஒரு டீ பாயை யெம்மெஸ்வி கருத்து கேட்டபோது வரவன் போறவனைக் கேக்கிறியே என கவிஞர் கேட்டதாகவும் அதற்கு அவர் அவனைப்போன்றவர்க்குத் தானே பாட்டுபோடுறோம் எனச் சொன்னதாகவும் உள்ளது. வேறு சமயத்தில் அவன்தான் மனிதன் பாடல்பதிவில் காக்கை மூக்களவே அதன் தண்ணீர் தேவை என்பதை எல்லோரும் ஏற்றதை கவிஞர் திருப்தியடையாமல் டீ பாயைக் கேட்டு மாற்றியதாகவும் உண்டு. எல்லாம் ஒரு மூடு தான். தவிர சுஜாதா கணையாழியின் எழுதிய ஆரம்ப எழுத்துக்களில் ஒரு கட்டுரையில் கண்ணதாசனை பழைய இலக்கியப் பாடல்களைக் காப்பியடிப்பவரென்றும்,வாலியை அவரைக் காப்பியடிப்பவரென்றும் எழுதியுள்ளார். கவிதை என்பதற்கு அவரது கருத்தே வேறு. ஆனால் கவிஞரும்,கதைஞரும் தமிழின் தவிர்க்கமுடியாத தனி ஆளுமைகள்தான். இருவரும் தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் என்று சொல்லப்படுபவர்களால் இலக்கியவாதிகளாக ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள்தான்.

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 Před 4 lety

      Sir,. ரொம்பவும் சரியாக சொன்னீர்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
      உண்மையும் அதுதான்.

    • @ko6946
      @ko6946 Před 4 lety

      1. கருப்பு சிவப்பு வெளுப்பு தொடருக்கு எதிர்ப்பு வந்ததன் முதல் காரணம், (அந்த இரண்டாவது வாரத்தில்)நாயகி அறிமுக வர்ணனை, கூசவைத்தது. பெண்ணைத் தரக் குறைவாகக் காட்டியது. அந்த வரிகளைக் கிழே ஒரு உறவு கொடுத்துள்ளார்.
      2. கவிஞர் 'காப்பி' அடிப்பது போல் சிலர் குறிப்பிட்ட துண்டு.
      சுஜாதா எழுதினார். கலைஞர் சாடைமாடையாக.....
      இவர்களுக்கெல்லாம் கவிஞர் நடத்திய கவியரங்கஙகளையோ வெளியிடப்பட்ட இதழ்கள் நூல்கள் பற்றியோ கவனமில்லை.
      கவிஞரே கூறியுள்ளார், இலக்கிய பெருஞ்சுவைகளை மக்களுக்கு எடுத்துக் கொண்டு சேர்க்கிறேன் என்று.
      இதை நான் அறியக் கொடுத்தது எங்கள் தமிழாசிரியர்!!

  • @rveeresh4224
    @rveeresh4224 Před 4 lety

    ஐயா வணக்கம் நீங்கள் அப்பா மாதிரி பேசியது அருமையாக இருக்கிறது முடிந்தால்
    ஓரு நிகழ்ச்சி முழுவதும் கேழ்வி பதில் மாதிரி நீங்கள் கேள்வி கேட்க அப்பா பதில் சொன்னால்
    அருமையாக இருக்கும் முயற்சிக்கவும் நன்றி

  • @user-ep9wh3il9i
    @user-ep9wh3il9i Před 4 lety

    👌👏👏👏🙏

  • @pskchannel866
    @pskchannel866 Před 4 lety

    👍

  • @gandhan
    @gandhan Před 4 lety

    Kavignar always gentle man

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 Před 4 lety

    நல்லது ஐயா மு தணிகை பம்மல்

  • @ravisundaram3431
    @ravisundaram3431 Před 4 lety +2

    சுஜாதா நேரில் பார்த்த அத்தனை அனைத்தையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து நினைவில் வைத்துக்கொள்வார். அவருடைய கதா பாத்திரங்கள் மிகவும் இயல்பாக இருப்பதற்கு காரணம் அவர் கவனித்து நினைவில் கொண்ட விவரங்களை அந்த கதா பாத்திரத்தின் மேல் பூசி விடுவார். எனவே அந்த பாடல் கம்போஸிங் பார்த்ததின் தாக்கம் ஒரு கதையில் கற்பனை பாத்திரமாக வந்தது. தேடினால் சுஜாதாவின் ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கு பின்னால் ஒரு நிஜ மனிதர் இருக்கக்கூடும். கணேஷ் வசந்த் உட்பட. ஆகவே இது கண்ணதாசனை தாக்கவோ, இழிவு செய்யவோ நினைத்தோ திட்டமிட்டோ நடந்த செயல் அல்ல.

  • @servalarsekar6713
    @servalarsekar6713 Před 3 lety

    62th video you tube la search panna mudiyala😭😭😭

  • @selvimahadevan
    @selvimahadevan Před 4 lety

    வணக்கம் சார். சுஜாதாவின் தொடர் அதிகமாக குமுதம் பத்திரிகையில் வந்தது. அதேபோல் குமுதத்தில் நிறுத்தப்பட்ட தொடர் கருப்பு வெளுப்பு சிகப்பு. அதே தொடர் பிறகு இரத்தம் ஒரே நிறம் என்ற பெயரில் வந்தது.

  • @sreekkanthraghunathan6812

    Kanavu Thozhir Chaalai - published in Ananda Vikatan

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 4 lety

    கவியரசர் மடை திறந்த வெள்ளம். திறப்பதற்குத் தாமதமாகலாம் ஆனால் திறந்த பின்...

  • @hariharan1965
    @hariharan1965 Před 4 lety

    Kanaavu Thozhirchalai came in Ananda Vikatan. Ratham ore Niram came in Kumudham which replaced the original Karauppu-Sivappu-Vellupu

  • @M.chandurukumar
    @M.chandurukumar Před 4 lety

    கண்ணதாசன் அவர்கள் புத்தகம் படிப்பது போன்ற புகைப்படம் அவர் கைபேசியை பயன்படுத்துவது போல இருக்கிறது. அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எங்கு கிடைக்கும் தயவுசெய்து கூறுங்கள் நான் படிக்க வேண்டும்.

  • @nandharaja9860
    @nandharaja9860 Před 4 lety

    அருமை. கனவுத் தொழிற்சாலை - விகடனில் வெளிவந்த தொடர். ஏன் அப்படி எழுதினார் சுஜாதா? தெரியவில்லை.

  • @shaikallaudin2715
    @shaikallaudin2715 Před 3 lety

    Gg

  • @k.aarthy2669
    @k.aarthy2669 Před 4 lety

    Kannadasan great man

  • @palanisamyramasamy7950

    Ilayaraja avargal sonna maathiri kavignar enral athu kannathaasan avargalai mattumae kurikkum !

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl Před 4 lety

    Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir

  • @ramachandrannarayanan1630

    Every upcoming person first step will be controversy example rajani ajithi etc because they don't have backing to get famous people think how bold this new person later if they have talent they grow and behave totally different my experience

  • @vijismartone6931
    @vijismartone6931 Před 4 lety +1

    EPS modify EPISODE
    நன்றி...

  • @naguchitra9952
    @naguchitra9952 Před 4 lety

    அண்ணாதுறை...ஏன் TMS பற்றி எதுவுமே சொல்றதில்லையே. ஏன்..

  • @brindarao29
    @brindarao29 Před 4 lety +1

    நீங்கள் அத்தனை பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு இருந்த பொழுது சுஜாதா அவர்களிடம் நேரிடையாகவே கேட்டு விளக்கம் பெற்றிருக்கலாம். இப்பொழுது இதை கூறுவதால் சம்பந்தப்பட்ட இருவரும் நம்மிடையே இல்லை விளக்கி கூற...இருவருமே மாமேதைகள்..... சுஜாதாவின் நக்கல் நையாண்டி மற்றவரை காயப்படுத்தியதில்லை என்பதே என் கருத்து.

    • @maruthum7830
      @maruthum7830 Před 3 lety

      ஜெயகாந்தன் - கண்ணதாசன் - சொல்லுங்கள்

  • @ATHIRIPUTHIRI2621
    @ATHIRIPUTHIRI2621 Před 4 lety

    சுஜாதா ஒரு கீழ்த்தரமான மனிதர்..பொறாமையால் வெந்தவர்..கவிஞரையே அவர் குறிப்பிட்டிருப்பார்..அவரது பாணியே அது தான்...எனக்குத் தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியும்..

    • @coldermot
      @coldermot Před 3 lety +2

      எனக்கு கூட வீரபாண்டிய கட்டபொம்மனை தனிப்பட்ட முறையில் தெரியும்....இருவரும் நேற்று தான் பாஞ்சால்குறிச்சியில் 5g network வசதி குறித்து பேசிக்கொண்டிருந்தோம்

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 8 měsíci

      தவறு. சுஜாதா உயர்வாக எழுதியுள்ளார்.

  • @kittusamys7963
    @kittusamys7963 Před 4 lety

    எதையும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பேசக்கூடியவர் எங்கள் கவியரசர்,
    ஆனால் நேரடியாக சொல்லாத ஒரு பதிவிற்கு விளக்கம் தருவது தேவையற்றது என கவியரசர் நினைத்து தான் சுஜாதாவின் பதிவிற்கு பதிலளிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது,
    அத்துடன் விமர்சனங்களை என்றுமே கவியரசர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

  • @viratjeeva3459
    @viratjeeva3459 Před 4 lety

    Super