#thiruvallarai

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2019
  • மிக பெரிய கோவில் ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியை விட பழமையான கோவில். வழி திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளறை என்று கேட்டு இறங்கவும்

Komentáře • 9

  • @raman.r3842
    @raman.r3842 Před 3 lety +2

    Muthraiyar

  • @atchaya.t9455
    @atchaya.t9455 Před 3 lety +1

    My oru

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před 3 lety +3

    @0:16, ..The Temple name is Sri Pundarikaksha Perumal Thirukkovil.
    The Meaning of Pundarikaksha (Sanskrit name) is..' The One with the eyes like the Lotus flower '.

  • @vishwanathanvishwanathan6644

    இந்த திருவெள்ளறை கோவிலுக்கு நான் சென்று வந்துள்ளேன்.மிகப்பழமையான கோவில்.முன் பிறவி புண்ணியம் செய்திருந்தால் நிச்சயம் இங்கு சென்று வர முடியும்.இந்த கோவில் அருகே ஸ்வஸ்திக் கிணறு(அதிசய கிணறு)உள்ளது.இந்த கிணறு தொல் பொருள் இலாகா கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த கோவிலும் அதனை சுற்றியுள்ள(ஸ்வஸ்திக் கிணறு உட்பட) பகுதிகளும் சீரமைக்காமல் நிறைய பழுதுகள் உள்ளன.சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முயற்சி செய்தால் பழமை அழியாமல் இந்தியாவின் புராதனங்கள் காப்பற்றப்படும்.

    • @sathishshobu
      @sathishshobu  Před 2 lety

      மிகச்சரியாக கூறியிருக்கிறீர்கள் விரைவில் அது சரி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது

  • @karthoo2k
    @karthoo2k Před 4 lety +3

    எத்து நூல் எண்ணாயிரம்பொன்:
    இதன் பொருள் கோவில் பணி என்று துவங்கிவிட்டு ஒரு கட்டத்தில் கணக்கு பார்த்தோமே என்றால் எத்து நூல் ,அதாவது காவி வண்ணம் பூசப்பட்ட marking thread , கற்தச்சு கட்டுவேலையில் இதைக் கட்டி கிடைமட்டமும் , நேர்ஒழுங்கும் பார்ப்பார்கள் , இதை வாங்கிய வகையிலே எண்ணாயிரம் பொன் வருமாம்,அப்படியென்றால் இதர வேலைகளுக்கு எவ்வளவு வரும்?!!!
    இந்த சொலவடையை கங்கைகண்ட சோழபுரம் கட்டிய அமைச்சரின் கனவில் தோன்றிய கணக்குவிநாயகர் ,அவரிடம் திடீரென கோயில் கட்டுமான செலவுக் கணக்கு கேட்ட மன்னனுக்கு சொல்லச் சொல்லி சொன்னதாம்.
    திருவெள்ளறை புண்டரீகாக்‌ஷ பெருமாள் கோவிலில் (செந்தாமரைக்கண்ண பெருமாள் ) பன்நெடுங்காலமாக கல்லும் முள்ளும், சிதிலங்களும், இடிபாடுகளாகவும் இருந்த கோட்டைச் சுவர் மற்றும் அதன் பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் நடைபாதையை , பணிஓய்வு பெற்ற தன்னார்வ தொண்டு ட்ரஸ்டிகள் இருவர் சேர்ந்து, தாமே முன்னெடுத்து மேற்கொண்டு தம் சொந்தப் பணம் ரூபாய் இரண்டரை கோடி செலவு செய்து புணரமைத்து மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர், 6.5 ஏக்கருக்கு மேலான மலைக் குன்று மீது அமைந்த மிகப் பெரிய கோவில் வளாகம் இது, இன்று அழகாக வாசனை மலர்களால் பூத்துக் குலுங்குகின்றது, அத்தனை ரம்மியமான திருத்தலமாகத் திகழ்கிறது,இது 108 திவ்யதேசத்தில் நான்காவது திவ்யதேசம்
    படியேறி நுழைந்ததுமே இருந்த மணவாள மாமுனிகள் சந்நதியில் குருக்கள் ,எங்களிடம் இந்தச் செய்தியைச் சொன்னவர், கோபுரத்துக்கு எதிரே ஓரமாக நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் இருவர் தான் இந்த திருப்பணி கைங்கர்யத்தைச் செய்தது ,
    அவர்கள் இப்போது, மன்னர் காலத்தில் எழுப்பப்பட்டு 800 ஆண்டுகளுக்கு முன் அந்நியர் படையெடுப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட நுழைவுவாயில் மற்றும் இரண்டரை மாடி உயர நிலைக்கு மேலாக இன்னும் ஐந்தரை நிலைக்கு 162அடிகள் உயரத்திற்கு ராஜகோபுரம் எழுப்ப ஆயத்தம் செய்து வருவதையும் சொன்னார், இந்த conservation திட்டத்திற்கு ஐஐடி சென்னை தான் technical consultant
    நாங்கள் அவர்களை நெருங்குகையில் பொறியாளருடன் பணி குறித்து பேசிக்கொண்டிருந்தனர், அந்த கோவில் முழுக்க செய்யப்பட்ட திருப்பணியில் எங்கும் அவர்கள் பெயர் இல்லை,
    அந்த பெயர் எங்கும் குறிப்பிடாத நகரத்தார் இருவரைப் பார்த்து அறிமுகம் செய்து நன்றி சொல்லி வந்தோம், அவர்கள் எழுந்து நின்று கைகூப்பி கூனிகுருகிவிட்டனர்,சிறு பெருமிதக் கீற்று கூட அவர்கள் கண்ணில் தெரியவில்லை.
    நாங்கள் சந்தித்த ட்ரஸ்டிகளில் ஒருவர் பொறியாளர் திரு.v.s.ஜெயபால் (பொறியாளர் ) , மற்றொருவர் அவரது இளைய சகோதரர் s.வேலுமணி , இவர் ஒரு டாக்டர்,கோவை பூர்வீகம், ஆனால் ட்ரஸ்டிகள் தங்களை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்,
    இந்த திருவெள்ளறை கோயில் கோபுர conservation பற்றிய கருத்தரங்கு காணொளியில் திரு.ஜெயபால் மற்றும் இக்கோவிலின் ஸ்தபதி திரு.குமரகுரு அவர்கள் பேசும் பேச்சை அவசியம் கேளுங்கள்,
    இந்த 2 மணிநேர கருத்தரங்கு காணொளி ஒவ்வொரு பொறியாளரும் பார்த்து தன்னை புடம் போட்டுக்கொள்ள வேண்டும்.
    m.czcams.com/video/ulpxLuRDVeo/video.html
    இன்று எத்தனையோ வானுயர்ந்த கோபுரங்கள் , ஆலயங்கள் , அதன் உற்சவங்கள், மண்டகப்படிகளை நாம் கண்ணுறுகிறோம், இவற்றுக்குப் பின்னால் இப்படிப் பட்ட உயர்ந்த உள்ளங்கள் தம் பெயரையோ படத்தையோ கூட எங்கும் பிரசுரிக்க விரும்பாமல் கடமையைச் செவ்வணே செய்தனர், செய்கின்றனர்,
    வலக்கை தருவது இடக்கை அறியாவண்ணம் அதைச் செய்கின்றனர்
    இக்கோவிலின் புராணக்கதை மூன்று யுகங்களாக இக்கோவில் இருப்பதாகச் சொல்கிறது, கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கண்திறந்த நிலையில் இருக்கிறார், 12 வருடங்களுக்கு அரை அங்குலம் வளர்கிறார்.
    பெருமாள் வலக்கையில் பிரயோக சக்கரம் தாங்கியுள்ளார்,இடக்கையில் சங்கம், இடப்புறம் பூமாதேவி தவம் செய்ய, வலப்புறம் மார்கண்டேய ரிஷி தவம்,சிபி சக்ரவர்த்தி மற்றும் கருடனை இருபுறமும் அணைத்து அபயஹஸ்தம் தருககிறார், மேலே இடதுபக்கம் பிரம்மா, வலதுபக்கம் சிவன் என பிரம்மாண்டமான திருக்கோலம்,
    தைலக் காப்பு திருமேனி, தாயார் பங்கஜவல்லி, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் சந்நதிகள் பெரிதாக உண்டு,கச்சி வரதரைப் போலவே இங்கும் உத்திராயண வாசல் , தட்சிணாயன வாசல் என இரு மாடிப்படி நுழைவு வாயில்கள் உண்டு.
    கோவில் வளாகப் படங்கள் tour
    m.facebook.com/story.php?story_fbid=10157950598846340&id=750161339
    www.thehindu.com/news/cities/Tiruchirapalli/rajagopuram-to-come-up-at-tiruvellarai-temple/article8260429.ece
    #தானதர்மம்,#திருவெள்ளறை,#பிரதட்சினப்பாதை,#மொட்டைகோபுரம்

  • @karthin890
    @karthin890 Před 4 lety +1

    Nice anna

  • @arunforestoffice9032
    @arunforestoffice9032 Před 5 lety +1

    Super