செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக கமிட்டி அமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக கமிட்டி அமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 27-1-24 ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் செங்கல்பட்டு ரங்கா ரெசிடென்சி ஹாலில் நடைபெற்றது.
    இக்கூட்டத்திற்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ஓம் சக்தி R ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தலைமை தாங்கி அமைப்பின் நோக்கம் செயல்பாடுகள் மாவட்டங்களில் அமைப்பை ஏன் உருவாக்க வேண்டும் என்பதின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
    பொருளாளர் திரு KM ரவி முதலியார் அவர்கள் முன்னிலை வகித்து சமுதாயத்தின் தற்போதைய சூழ்நிலையை அனைவரும் எண்ணிப் பார்த்து ஆக்கபூர்வமான செயல்பாட்டால் மட்டும் தான் சமுதாயத்தை மேம்படுத்த முடியும் அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என எடுத்துரைத்தார்.
    உயர் மட்ட கமிட்டியின் பொறுப்பாளரும் பிசினஸ் கனெக்ட் பொறுப்பாளருமான திருமதி பூங்கொடி கேசவ மூர்த்தி அவர்கள் இறைவணக்க பாடலை பாடியும் வரவேற்புரையும் நிகழ்த்தினார்.
    அமைப்புச் செயலாளர் திரு போடி N ரவி பிள்ளை அவர்கள் பேசுகையில் நமது இனத்தின் பாரம்பரிய அடையாளங்கள் தொடர்ந்து அரசியல் சூழ்ச்சியின் காரணமாக அழிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது அதை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    மகளிர் அணி தலைவர் தமிழ் செம்மல் பேராசிரியர் வேலம்மாள் முத்தையா அவர்கள் பேசுகையில் பெண்களின் சக்தி ஒருங்கிணைந்து சமுதாயத்திற்கு உரிய வகையில் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபட வேண்டும் பெண்கள் சுயதொழில் முன்னேற்றத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
    கிரேட்டர் சென்னையின் தலைவரும் பீட்டா கல்விக் குழுமங்களின் தலைவருமான டாக்டர் வழக்கறிஞர் VK பழனியப்பன் அவர்கள் பேசுகையில் கிரேட்டர் சென்னை அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கிரேட்டர் சென்னையின் முழு ஒத்துழைப்பு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
    வழக்கறிஞர் திருமதி கற்பக சரவண பிரியா அவர்கள் பேசுகையில் மாவட்டங்கள் தோறும் வழக்கறிஞரை இணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது செங்கல்பட்டு மாவட்டத்திலும் வழக்கறிஞர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் விரைவில் தமிழக அளவில் வழக்கறிஞர்களின் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
    திருமதி திலகவதி வெங்கடேசன் அவர்கள் முன்னாள் டி என் பி எஸ் சி சேர்மன் கலந்து கொண்டு பேசுகையில், சமுதாய மக்கள் அரசு போட்டி தேர்வுகளில் உயர்ப்பதவிகளில் அமர வேண்டும் அதற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவதாக உறுதிமொழி அளித்தார்.
    திருமதி சிந்து அவர்கள் பேசுகையில் நமது சமுதாயப் பெண்களை மேம்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் பாடுபட தயாராக இருப்பதாகவும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் அமைப்பை உருவாக்க ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வேன் என உறுதிமொழி அளித்தார்.
    கிரேட்டர் சென்னையின் சார்பாக செயலாளர் செயல்வீரர் திரு GDS மணி என்ற G தெய்வ சிகாமணி அவர்கள், பொருளாளர் திரு சற்குண சேகரன் அவர்கள், தமிழக அளவில் சமுதாய மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தனது குறிக்கோளாகவும்/ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளைப் பற்றி தரும் நோக்கத்தில் பாடுபட்டு கொண்டிருக்கும் திரு நித்தியானந்தம் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
    கூட்டத்தில் ரங்கா ரெசிடென்சி ஹோட்டலின் உரிமையாளர் திரு M ரவி முதலியார் அவர்களை செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டு திரு S குணசேகரன் அவர்கள் திரு M சீனிவாசன் அவர்கள் திரு M கந்தசாமி அவர்கள் திரு VP கார்த்திகேயன் அவர்கள் திரு A சீனிவாசன் அவர்கள் திரு J வில்வநாதன் அவர்கள், திரு M பர்குனன் அவர்கள், திரு J கணேஷ் அவர்கள் திருமதி CR தாட்சாயணி @ தாரா ராமானுஜம் அவர்கள் திரு CV முத்துக்குமார் அவர்கள் திரு C முருகன் அவர்கள் திருமதி T சங்கர கோமதி அவர்கள் திரு சிவா முதலியார் அவர்கள் திரு R சந்திரசேகரன் அவர்கள் ஆகியோர் அடங்கிய பதினாறு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. 16 பேர் கொண்ட கமிட்டி தொடர்ந்து கலந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அமைப்பின் பொறுப்பாளர்களை தேர்வு செய்யவும் அமைப்பை செங்கல்பட்டு மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
    திரு N சரவண பெருமாள் அவர்கள், திரு N பால சுப்பிரமணியன் அவர்கள், திரு S இளம்மதி அவர்கள், திரு SH பாஸ்கர் அவர்கள், திரு CR ஹரிகிருஷ்ணன் அவர்கள், திரு T குமார செல்வம் அவர்கள், திரு ராதாகிருஷ்ணன் அவர்கள், திரு சீனிவாசன் (ரங்கா டயர்ஸ்) அவர்கள் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    மதியம் 2 மணி அளவில் கூட்டம் நிறைவு பெற்று தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.
    இங்ஙனம்,
    போடி N ரவிபிள்ளை
    அமைப்பு செயலாளர்
    அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்
    28-1-24
    #allindiamudaliyarpillaimarassociation #chengalpattu

Komentáře •