பாடல் பிறந்த வரலாறு/பரலோகமே என் சொந்தமே/பாடல் பிறந்த கதை/paralogamey en sonthamey/July 8, 2020

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மிகுந்த பெலவீனமடைந்து, மரணப்படுக்கையில் கிடந்த அந்த இளம் வாலிபன், தன்னைச் சூழ்ந்து நின்ற தன் தாயார், இளம் மனைவி, மற்றும் இரு குழந்தைகளை நோக்கிப் பார்த்தான். தன்னை சிறுவயது முதல் அன்பாய்ப் பராமரித்து வளர்த்த தன் தாயாரிடம், தன் மனைவியையும், இரு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை, வேதனையுடன் ஒப்படைத்தான். அனைவரின் கண்களிலுமிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    இந்துப் பின்னணியிலிருந்து ஆண்டவரை ஏற்ற அத்தாயாரும், அவனது மனைவியும் பிள்ளைகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆதரவற்றோருக்கு ஆறுதலளிக்கும் ஆண்டவரின் வாக்குத்தத்;தங்களைப் பற்றிக் கொண்டு, ஒவ்வொருவராகப் போராடி ஜெபித்தனர். நெரிந்த நாணலை முறியாத, மங்கியெரிகிற திரியை அணையாத தேவனின் சந்நிதியில், அவரிகளின் ஜெபம் எட்டியது.
    வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நின்ற அவ்வாலிபனின் உள்ளமோ, மரணத்தையும் தாண்டி, பரலோக வாழ்வை நாடி, வாஞ்சித்தது. அனைவரும் ஜெபித்து முடித்த பின்னர், கண்களைத் திறந்த அவ்வாலிபன், ஆவியானவர் தந்த நல்நம்பிக்கையால் நிறைந்து, “பரலோகமே, என் சொந்தமே” எனும் இப்பாடலின் முதல் இரு சரணங்களையும் எழுதினார். அதைத் தொடர்ந்து, “கர்த்தாவே, என் பெலனே, உம்மில் அன்பு கூருவேன்” என்ற நம்பிக்கை நிறைந்த மற்றொரு பாடலின் முதல் இரு சரணங்களையும் அந்நேரமே எழுதினார்.
    “உன் விண்ணப்த்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்” (II இராஜாக்கள் 20:5) என்று எசேக்கியா இராஜாவுக்கு வாக்களித்து, அற்புத சுகமளித்த ஆண்டவர், இக்குடும்பத்தாரையும் தேற்றினார். அவ்வாலிபன் ஒரே வாரத்தில் சுகம் பெற்றான்.
    மரணத்தருவாயில், இந்த அருமையான நம்பிக்கையூட்டும் ஆறுதல் பாடலை இயற்றிய அவ்வாலிபன், போதகர் M.வின்சென்ட் சாமுவேல் ஆவார். அவர் தனது சிறுவயது முதல் தமிழ் மொழியில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இளம் வாலிப நாட்களில், தாள வாத்திய இசைக் கலையரானார். இசையில் தாலந்து மிக்க, வாலிபர்களான சத்தி விக்டர், சுவென் பீட்டருடன் இணைந்து, ஒரே குழுவாக, கிறிஸ்தவ இன்னிசைக் கச்சேரிகளை, திருச்சபை நிகழ்ச்சிகளிலும், மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், கிறிஸ்மஸ் பாடல் ஆராதனைகளிலும் நடத்தினார்.
    வின்சென்ட் சாமுவேல் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள விரும்பினார். ஆனால், அவரது பெற்றோரோ தேவ சித்தத்தின்படி, அவரை சென்னை பெந்தெகொஸ்தே சபை (MPA) நடத்திய வேதாகமக் கல்லு}ரிக்கு அனுப்பி வைத்தனர். வின்சென்ட் 1972ல் தனது இறையியல் படிப்பை முடித்து, அக்கல்லு}ரியிலேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1973ம் ஆண்டு சாந்தகுமாரி என்ற பெண்மணியைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு, பிரேம்நாத் என்ற மகனும், ரூத் பிரியா சலோமி என்ற மகளும் பிறந்தனர்.
    அந்நாட்களில் வின்சென்ட் சாமுவேல் MPA திருச்சபையின் பத்திரிகையான “சத்திய சமய சஞ்சீவி” யில், பல கவிதைகள் , கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இவர் இயற்றிய முதல் பாடல், “ஒப்புவிக்கிறேன் ஐயனே” என்பதாகும். MPA திருச்சபையின் தலைமைப் போதகரான காலம் சென்ற பிரபுதாஸ் வாசு, அத்திருச்சபையின் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களுக்குப் பாடல்கள் எழுதுமாறு, வின்சென்ட் சாமுவேலை உற்சாகப்படுத்தினார்.
    எனவே, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கென, அந்தந்த ஆண்டின் கருப்பொருளைச் சார்ந்து, போதகர் வாசு தெரிந்தெடுக்கும் வேத வசனங்களை மனதில் கொண்டு, பல பாடல்களை இயற்றுவது வின்சென்ட் சாமுவேலின் வழக்கமாயிற்று. சகோ. சத்தி விக்டர் இப்பாடல்களுக்கு ராகம் அமைத்துக் கொடுப்பார். சில வேளைகளில், சத்தி விக்டர் முதலில் இராகம் அமைக்க, அதற்கேற்றபடி, பாடல்களை போதகர் வின்சென்ட் சாமுவேல் எழுதுவதுமுண்டு. ஒவ்வொரு பாடலையும் இம்மூவரும் சேர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதை இன்னும் மெருகேற்றுவதற்கான மாறுதல்களைச் செய்வார்கள்.
    சுகமடைந்த வின்சென்ட் சாமுவேல், தனது பெலவீன நிலையில் எழுதிய இப்பாடலைப் போதகர் வாசுவிடம் காண்பித்தார். 1980ம் ஆண்டின் MPA கன்வென்ஷன் கூட்டத்திற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்ததால், அக்கூட்டத்தின் கருப்பொருளுக்குப் பொருந்தும் வகையில், இன்னும் பல சரணங்களை இயற்றிச் சேர்க்குமாறு போதகர் வாசு, வின்சென்ட் சாமுவேலைக் கேட்டுக் கொண்டார். வாசு கொடுத்த வேத வசனங்களின் அடிப்படையில், மீதமுள்ள சரணங்களையும் வின்சென்ட் சாமுவேல் எழுதி முடித்தார்.
    !
    பரலோகமே, என் சொந்தமே,
    என்று காண்பேனோ?
    என் இன்ப இயேசுவை
    என்று காண்பேனோ?
    1. வருத்தம் பசி தாகம்
    மனத் துயரம் அங்கே இல்லை
    விண் கிhPடம் வாஞ்சிப்பேன்
    விண்ணவர் பாதம் சேர்வேன்
    - பரலோகமே
    2. சிலுவையில் அறையுண்டேன்
    இனி நானல்ல, இயேசுவே
    அவரின் மகிமையே
    எனது இலட்சியமே
    3. இயேசு என் நம்பிக்கையாம்
    இந்த பூமியும் சொந்தமல்ல
    பரிசுத்த சிந்தயுடன்
    இயேசுவைப் பின்பற்றுவேன்
    - பரலோகமே
    4. ஒட்டத்தை ஜெயமுடன்
    நானும் ஓடிட அருள் செய்வார்
    விசுவாசப் பாதையில்
    சேராது ஓடிடுவேன்
    - பரலோகமே
    5. பரம சுகம் காண்பேன்
    பரன் தேசம் அதில் சேர்வேன்
    இராப் பகல் இல்லையே
    இரட்சகர் வெளிச்சமே
    6. அழைப்பின் சத்தம் கேட்டு
    நானும் ஆயத்தமாகிடுவேன்
    நாட்களும் நெருங்குதே
    வாஞ்சையும் பெருகுதே
    - பரலோகமே
    7. பளிங்கு நதியோரம்
    சுத்தர் தாகம் தீர்த்திடுவேன்
    தூதர்கள் பாடிட
    தூயனைத் தரிசிப்பேன்
    #பாடல் பிறந்த வரலாறு
    #பாடல் பிறந்த கதை
    #கிறிஸ்தவ பாடல்கள்
    #தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
    #கிறிஸ்தவ பாமாலை
    #கிறிஸ்தவ கீர்த்தனைகள்
    #கன்வென்சன் பாடல்கள்
    #பாமாலை பாடல்கள்
    #tamil Christian songs
    #Hymns
    #history of Christian songs
    #christian songs
    #paadal pirantha varalaru
    #paadal pirantha Kathai
    #பரலோகமே என் சொந்தமே

Komentáře • 13

  • @Anonymous-zi9dt
    @Anonymous-zi9dt Před 9 měsíci

    Amen❤

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před rokem +1

    இரண்டு பாடல்கள் மிகவும் அருமையான நல்ல பாடல் வரிகள் கொண்டது உபத்திரவங்கள் மத்தியிலும் பாடுகளின் மத்தியிலும் உருவாக்க பட்ட நல்ல பாடல்கள் வாழ்த்துக்கள் சார் கர்த்தர் உங்களோடிருப்பாராக!!

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 7 měsíci

    Pastor lyaa nandri for important information...on song .s composer dr vincent samuel composer of song paralogamey en sonthmey

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze Před 7 měsíci

    நன்றி 🎉❤❤🎉

  • @christfellowship6726
    @christfellowship6726 Před 2 lety +1

    Amen

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Před 2 měsíci

    Praise the lord 🎚🕯📖🎚
    God bless you

  • @anidhayal
    @anidhayal Před 2 lety

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST...

  • @emimalemimal8503
    @emimalemimal8503 Před rokem

    Amen 🙏

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Před rokem

    Amen amen amen 🙏🙏🙏

  • @issacadam9039
    @issacadam9039 Před rokem

    Amen 🙌🙌💒💒👼👼

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 7 měsíci

    Correction on song.s composer. ....dr vincent samuel......paralogamey en sonthamey

  • @samuvelmca7876
    @samuvelmca7876 Před 3 lety

    👌👌👌👏👏👏👏