திருஅஞ்சைக்களம் | thiruanjaikalam | thiruvanjikulam | சேரமான் பெருமான் | Kerala | திருவாஞ்சிகுளம்

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • திருச்சிற்றம்பலம்
    தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 79
    ஊர் - திருஅஞ்சைக்களம்
    தற்போது - திருவாஞ்சிகுளம்
    வரிசை - மலை நாடு
    மூலவர் - அஞ்சைகளத்தப்பர்
    அம்பாள் - உமையம்மை
    பாடியவர் - திருஞானசம்பந்தர் -0
    திருநாவுக்கரசர் -0
    சுந்தரர் -1
    தேவாரம் - "தலைக்கு தலைமாலை"
    விருக்ஷம் - சரக்கொன்றை
    தீர்த்தம் - சிவகங்கை
    நடைதிரப்பு - காலை - 6-11
    மாலை -4 - 8
    மாவட்டம் - திருச்சூர் (Kerala)
    சிறப்பு :
    276 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களில் 260க்கும் மேற்பட்ட ஸ்தலங்கள் தமிழகத்தில் இருந்தாலும் பிற மாநிலமான கேரளாவில் ஒரே ஒரு தேவார பாடல் பெற்ற ஸ்தலமே உள்ளது அது இது மட்டுமே. இருந்தும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் முக்திக்கு முன்பு தரிசித்து கடைசியாக தேவாரம் இயற்றிய ஸ்தலமும் இதுவே.
    சிவமயம்
    தசாவதாரத்தில் ஒரு பெருமாளான பரசுராமர் தன் அன்னையை கொன்ற பழி தீர வழிபட்ட ஸ்தலம் இது. அஞ்சை என்பதற்கு அன்னை என்று பொருள் இதன் பொருட்டே இந்த ஸ்தலத்திற்கு திரு அஞ்சை களம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அரபிக் கடலோரம் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமத்தில் உள்ளது இந்த ஸ்தலம். கோயில் அஸ்திவாரம் தமிழக பாணியில் இருந்தாலும் மேற்கூரைகள் கொச்சின் மன்னர்களால் கட்டப்பட்டதால் கேரள பாணியில் உள்ளது. இங்கு பல பூஜைகள் தமிழக ஆகமத்தின் படியே நடைபெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களை தேடி ரசிப்பவர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் இந்த ஸ்தலம். நிச்சயம் வாழ்வில் ஒரு முறையேனும் பயணம் செய்து இங்குள்ள இறைவனை தரிசனம் செய்து பாருங்கள்.
    திருச்சிற்றம்பலம்...........
    maps.app.goo.gl/BNgf3oWHoSTcz...
    hope this video will help your temple pilgrimage
    I will meet again an another padal petra sthalam.....
    Thank u
    Thedikandukonden
    Ganesh mani
    Contact us
    WhatsApp - 8056179430
    mail- ganeshrm80@gmail.com

Komentáře • 18

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 28 dny +3

    🙏🌿🌹சிவ சிவ🙏🌺திருநீலகண்டம்🐚🙏Nambi Arruran Ponnar Thiruvadigal Potri Potri Potri 💮🌺🙏

  • @dhanasekarannarayanasamy1585

    Jai Shree Namachivaya ohm Shivaya Jai Shree Sanathana Tharmam

  • @gomathiramesh1638
    @gomathiramesh1638 Před 27 dny +5

    நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.சிவாயநம

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 27 dny +1

      மிக்க நன்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @user-yr7np9wk3m
    @user-yr7np9wk3m Před 16 dny +2

    ஓம் நமசிவாய

  • @user-gt4dz9qh8x
    @user-gt4dz9qh8x Před 18 dny +2

    சிவாயநம🙏

  • @Ayshwariya
    @Ayshwariya Před 27 dny +3

    🙏🙏🙏

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Před 27 dny +3

    🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
    பிரதோஷ நாளில் சிறப்பான தரிசனம் செய்யவைத்தமைக்கு மகிழ்ச்சி பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐💐💐
    தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே? சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே?
    அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே? அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே?
    மலைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,
    அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!
    பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே? பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே?
    பொடித்தான் கொண்டு மெய்ம் முற்றும் பூசிற்று என்னே? புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே?
    மடித்து, ஓட்டந்து, வன் திரை எற்றியிட, வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய,
    அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!
    2
    சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே! சிறியார் பெரியார், மனத்து ஏறல் உற்றால்;
    முந்தித் தொழுவார் இறவார்; பிறவார்; முனிகள் முனியே! அமரர்க்கு அமரா!
    சந்தித் தடமால் வரை போல்-திரைகள் தணியாது இடறும் கடல் அம்கரை மேல்,
    அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
    3
    இழைக்கும்(ம்) எழுத்துக்கு உயிரே ஒத்தியால்; இலையே ஒத்தியால்; உளையே ஒத்தியால்;
    குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால்; அடியார் தமக்கு ஓர் குடியே ஒத்தியால்
    மழைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு
    அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
    4
    வீடின் பயன் என்? பிறப்பின் பயன் என்? விடை ஏறுவது என், மதயானை நிற்க?
    கூடும் மலை மங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே?
    பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என்? நிதியம் பல செய்த கலச் செலவில்
    ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
    Go to topஇரவத்து இடு காட்டு எரி ஆடிற்று என்னே? இறந்தார் தலையில் பலி கோடல் என்னே?
    பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே? பரமா, பரமேட்டி, பணித்து அருளாய்!
    உரவத்தொடு, சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,
    அரவக் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!
    6
    ஆக்கும் அழிவும் அமைவும், நீ என்பன், நான்; சொல்லுவார் சொல்பொருள் அவை, நீ என்பன், நான்;
    நாக்கும் செவியும் கண்ணும், நீ என்பன், நான்; நலனே! இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்-
    நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டு, ஏற நுந்தி
    ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
    7
    வெறுத்தேன், மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்; விளங்கும் குழைக் காது உடை வேதியனே!
    இறுத்தாய், இலங்கைக்கு இறை ஆயவனை, தலை பத்தொடு தோள் பல இற்று விழ;
    கறுத்தாய், கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்; கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று
    அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
    8
    பிடிக்குக் களிறே ஒத்தியால்; எம்பிரான்! பிரமற்கும் பிரான்; மற்றை மாற்கும் பிரான்;
    நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரியச் சிலை தொட்டவனே! உனை நான் மறவேந்-
    வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு
    அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
    9
    எம் தம்(ம்) அடிகள், இமையோர் பெருமான், எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்,
    அம் தண்கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை,
    மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர் கோன்-நம்பி ஊரன்-சொன்ன
    சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே .
    🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769  Před 26 dny +1

      திருச்சிற்றம்பலம் அஞ்சைக்களத்தப்பர் திருவடிகள் போற்றி போற்றி

  • @vijis2786
    @vijis2786 Před 16 dny +1

    அருமை 🙏🏻

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 27 dny +3

    Om namasivaya

  • @natarajanchokkalingam3990

    அருமையான பதிவு ஐயா ❤❤❤

  • @vimalambikaiammalgurumoort1293

    Excellent 👌 last year we went to this temple and had good tharsanam 🙏🙏🙏 Sing the Devaram of Sundarar swamikal in front of Mahadev ❤ A very pleasant peace full temple 🙏🚩🌸
    May God bless you to have Dharsanam of the all 276 PPT.🔱🚩🌺👍

  • @Sujitha-zz5pi
    @Sujitha-zz5pi Před 27 dny +3

    வாழ்த்துகள் அண்ணா 😊