ஆட்டையாம்பட்டி TO அமெரிக்கா பறக்கும் சேலம் முறுக்கு | Salem Attayampatti Muruku | ABP Food story

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • ஆட்டையாம்பட்டி TO அமெரிக்கா பறக்கும் சேலம் முறுக்கு | Salem Attayampatti Muruku | ABP Food story
    #Salem #Attayampatti #Muruku #Abpfoodstory #Attayampattimuruku
    ஆட்டையாம்பட்டி to அமெரிக்கா... இது ஒரு முறுக்கின் கதை!!!
    ஆட்டையாம்பட்டி டு அமெரிக்கா ஏன் தெரியுங்களா? ஆட்டையாம்பட்டியில் தயாரிக்கப்படும் முறுக்குகள் அமெரிக்காவில் பேமஸ்... அப்படி என்னதான் இருக்கு இந்த முறுக்குலா... வாங்க பார்க்கலாம்....
    சேலத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உத்தமசோழபுரம் - திருச்செங்கோடு செல்லும் வழியில் ஆட்டையாம்பட்டி எனும் ஊரில் தயாரிக்கப்படும் முறுக்கனது அமெரிக்கா வரை பறக்கின்றதாம்...
    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி என்னும் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக இக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் முறுக்கு செய்யும் தொழிலை நடத்தி வருகின்றனர். குடிசைத் தொழில் மூலம் அக்கிராமத்துப் பெண்கள் நடத்தி வருகின்றனர்.
    ஆட்டையாம்பட்டியில் தயாரிக்கப்படும் முறுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உறவினர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
    ஆட்டையாம்பட்டி முறுக்கின் சிறப்பு:
    மற்ற ஊர் முறுக்கு அச்சு கொண்டு உருவாக்கப்படுவதாகவும், ஆட்டையாம்பட்டியில் தயாரிக்கப்படும் முறுகனது முழுவதுமாக இயந்திர உதவி இல்லாமல் மனிதர்களை கொண்டு உருவாக்கப்படுவதால் மற்ற முறுக்குகளை விட சுவையாக இருப்பதாக கூறுகின்றனர்.
    மேலும், அதில் சேர்க்கப்படும் மூலப்பொருட்கள் ஓமம், மிளகு, இடித்த கடலைமாவு உள்ளிட்டவை மருத்துவ குணம் கொண்டதாகவும், எளிதில் செரிக்கும் தன்மையை அதிகரிக்கும் உணவாக உள்ளது.
    சுத்தமாக செய்யப்படுவதால் ஒரு மாதங்கள் வரை கெடாமல் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் ஆட்டையாம்பட்டி முறுக்கு பிரியர்கள்.
    முறுக்கு குறித்து அங்கு பல ஆண்டுகளாக வேலைப்பார்க்கும் பாட்டியிடம் கேட்டபோது...
    ஆட்டையாம்பட்டியில் தயாரிக்கப்படும் முறுக்கனது, காரா அரிசி கொண்டு தயாரிக்கப்படுகிறது மற்றும் கைகளில் சுற்றப்படும் ஆட்டையாம்பட்டி முறுக்கு மிகவும் சுவையாக இருக்கிறது என்று கூறினார்...
    கடை உரிமையாளர் மீனா கூறுகையில்...
    இங்கு உருவாக்கப்படும் முறுக்கனது அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது, சுக்கு, கள்ள மாவு, அரிசி மாவு, மிளகு மற்றும் ஓமம் கொண்டு அச்சுக்கள் எதுவுமின்றி கைகளால் உருவாக்கப்படுவதால் தனி சுவை என்று கூறினார்...
    கடையின் வாடிக்கையாளர் சித்ரா கூறுகையில்...
    பாம்பே கல்கத்தா போன்ற பல நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் இங்கிருந்து அனுப்புவார்கள், ஒரு மாதம் வரை கெடாமல் இருப்பதால் நான் சென்னையில் உள்ள என் மகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.
    CREDITS:
    Reporter: Sathish
    Editing: Reegan JNR
    Voice Over: Arunmozhivarman
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 11

  • @girigiri7715
    @girigiri7715 Před 3 lety +6

    குறுக்கு வழியில் சம்பாதிக்காமல் முறுக்கு வழியில் சம்பாதித்தற்க்கு பாராட்டுக்கள்

  • @SRJN480
    @SRJN480 Před rokem

    சூப்பர் சார்

  • @shamalivignesh2091
    @shamalivignesh2091 Před 2 lety

    Enga ooru muruku

  • @jayachandru2686
    @jayachandru2686 Před 3 lety

    Sathish anna all the best 👍❤️

  • @jeyam6998
    @jeyam6998 Před 3 lety

    Iam in Coimbatore epidi order pannur thu sollu

  • @jeyam6998
    @jeyam6998 Před 3 lety

    Anna ethu edpi order pannur thu 😊 sollu ga Anna 😊

    • @maheshwaran5263
      @maheshwaran5263 Před 3 lety

      Na vena vangi tharen... Enaku oru 50 rs commission kedaikuma 🤣

    • @kumareshyuvan7790
      @kumareshyuvan7790 Před 2 lety

      @@maheshwaran5263 ok bro unga number kudunga