பூனைக்கும் அருள்புரிந்த புனுகீசர்!

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • ‘இறைவனை தேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் மட்டும்தான் வணங்கவேண்டுமா, பூச்சிகளுக்கும், விலங்குகளுக்கும், பறவை களுக்கும் அந்த உரிமை இல்லையா’ என்று கேட்பவர்களுக்கு, ‘ஏன் இல்லாமல்... எத்தனையோ தலங்கள் இருக்கின்றன’ என்று சொல்வதுபோல், திருக்காளத்தி, திருவானைக்கா, திருக்குரங் காடுதுறை, திருமயிலை, திருமயிலாடுதுறை என்று பல தலங்கள் உள்ளன.
    இந்த வரிசையில், புனுகுப்பூனை ஒன்று பூர்வ ஜன்ம நல்வினைகளின் பயனாக, இறைவனை வழிபட்டு அவரை அடையும் பேறுபெற்ற தலம் ஒன்றும் உண்டு.
    அது, மயிலாடுதுறையின் ஒரு பகுதியாகத் திகழும் `கூறைநாடு'. முற்காலத்தில் இந்தப் பகுதி தனியூர் என்று அழைக்கப்பட்டதாம்.மயிலாடுதுறை பேருந்துநிலையத்திலிருந்து நடந்தே சென்றுவிடலாம், புனுகீசர் கோயிலுக்கு!
    அந்தக் காலத்தில், மயிலாடுதுறைக்கு மேற்கே அமைந்திருந்த வனத்தில் எண்ணற்ற புனுகுப் பூனைகள் வாழ்ந்து வந்தன. அதன் காரணமாக அந்த வனத்தின் காற்றில் புனுகு மணம் கமழ்ந்தது.
    அங்கு வசித்த புனுகுப்பூனைகளில் ஒன்று, முற்பிறவி வாசனையின் காரணமாக இறை ஞானம் பெற்று, அந்த வனத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபடும் பேற்றினைப் பெற்றது.
  • Hudba

Komentáře • 3