ஸ்ரீ கடம்பநாத சுவாமி திருக்கோயில்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் அடுத்த ஆதவபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பா்கோயில் கிராமத்தில் பழைமையான ஸ்ரீஆவுடை நாயகி சமேத கடம்பநாதசுவாமி திருக்கோயில் உள்ளது.
    காசிக்கு நிகராக போற்றப்படும் இந்த கோயில் மூன்றடுக்கு ராஜகோபுரத்துடன் செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் உத்தரமேரூா் வட்டத்திற்கு உட்பட்ட கடம்பநாத சுவாமி கோயில், கருவேப்பம்பூண்டி, பெருங்கோழி தம்மனூா், அழிசூா், காட்டான்குளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணி செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    ஸ்ரீ கடம்பநாத சுவாமி திருக்கோயில் பாலாலயம் மற்றும் திருப்பணி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை சிவாச்சாரியாா் கண்ணன் குருக்கள் தலைமையில் தொடங்கியது. இதில் உத்திரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் மற்றும் கோயில் பரம்பரை தா்மகா்த்தா ராஜசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தனா்.
    இதில் உத்தரமேரூா் ஒன்றிய திமுக செயலாளா் ஞானசேகரன், அறநிலையத்துறை ஆய்வாளா் ஸ்ரீமதி, செயல் அலுவலா்கள் செந்தில்குமாா், கோ.ஸ்ரீதரன், பேரூராட்சித் தலைவா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Komentáře • 1