ஜப்பான்காரன் மூளையே மூளை..! "இந்த ஸ்பூன் உங்க வீட்ல இருந்தா... நோயே வராது..."

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • ஜப்பான்காரன் மூளையே மூளை..!
    "இந்த ஸ்பூன் உங்க வீட்ல இருந்தா...
    நோயே வராது..." சும்மா நாக்கிலே நடனம் தான்..!
    #Japan #Technology #ElectricSaltSpoon
    சாப்பாட்டில் இனி உப்பை குறைக்க தேவையில்லை, இந்த ஸ்பூன் இருந்தால் போதும் உப்பு சுவையும் குறையாது, நோயும் வராது எனக் கூறுகிறது, ஜப்பான் நிறுவனம் ஓன்று.
    இந்தியாவில் சுமார் 22 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன...
    இந்த உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள் என்று காலம் காலமாக மருத்துவர்கள் நமக்கு அறிவுரை வழங்கி வந்தாலும்... ருசிக்கு அடிமையான நாக்கு அதை கேட்க மறுக்கிறது.
    தினசரி ஒருவர் ஐந்து கிராம் அளவிற்கு உணவில் உப்பு எடுத்துக் கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. ஆனால் இந்தியர்களோ நாளொன்றுக்கு எட்டு கிராம் அளவிற்கு உணவில் உப்பு சேர்த்துக் கொள்கிறார்கள்...
    நாம்தான் இப்படி என்று பார்த்தால்... ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களாக அறியப்படும் ஜப்பானியர்கள் நம்மை விட சாப்பாட்டில் நாளொன்றுக்கு 10 கிராம் அளவிற்கு அதிக உப்பு எடுத்துக் கொள்கிறார்களாம்.
    இந்த நிலையில் தான்... பல புது விதமான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன ஜப்பானியர்கள்... இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க இம்முறை எலெக்ட்ரிக் ஸ்பூன் ஒன்றை அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறார்கள்.
    இந்த ஸ்பூன் மூலம் சாப்பிட்டால் ஒருவர் ருசியை காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டிய நிலை வராது என்பதுதான் அவர்கள் நமக்கு கொடுக்கும் கேரண்டி.
    அதாவது உணவில் இருக்கும் உப்பு சுவையை மூன்று மடங்கு அதிகமாக நம் நாக்கு உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த எலெக்ட்ரிக் ஸ்பூன்.
    இது எல்லாமே தொழில்நுட்பத்தின் மேஜிக்கால் சாத்தியமாகி இருப்பது தான் ஆச்சரியம்.
    லித்தியம் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்பூன் கொண்டு உணவை நாம் உட்கொள்ளும் பொழுது, ஸ்பூனில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும்.
    இதன் மூலம் நமது நாக்கிற்கு லேசான மின்னூட்டம் செலுத்தப்படும்... இது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளில் சோடியம் அயன்களை அதிகரிக்க செய்து.... உப்பு சுவையை நாம் அதிகம் உணர வழி வகுத்து விடும்.
    இதன் மூலம்... சாப்பாட்டில் உப்பை குறைக்காமலேயே உயர் ரத்த அழுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவது குறையும் என நம்புகின்றனர், ஜப்பான் விஞ்ஞானிகள்.
    மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ள இந்த ஸ்பூன் இந்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது.
    முதற்கட்டமாக 200 ஸ்பூன்கள் விற்பனைக்கு வரும் என்றும் வெளிநாட்டு சந்தைக்கு அடுத்த ஆண்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்பூன் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய மதிப்புபடி, இந்த ஸ்பூன் ஒன்றின் விலை 10 ஆயிரம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த காஸ்ட்லி ஸ்பூனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்....
    -
    Uploaded On 21.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 41

  • @KALAVATHIvlogs1071
    @KALAVATHIvlogs1071 Před 23 dny +32

    அடுத்த நோயிக்கு தயாராக வேண்டும்

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr Před 23 dny +28

    உப்பு நல்லது... யாரும் இதை சொல்வதில்லை...
    உப்பு நல்ல உப்பு இல்லை...இதையும் யாரும் சொல்வதில்லை...
    உப்பு உப்பக இல்லை... கல் உப்பு வாங்குங்க... உப்பு என்பது காற்று சூடு பட்டு பிசுபிசுப்பு இருக்க வேண்டும்... அந்த பிசுபிசுப்பு கொண்ட உப்பு அதற்கென சாடி இருக்கும்... அந்த உப்பை வேரு பாத்திரங்களில் போட்டு வைத்திருக்க முடியாது... அப்படி வேரு பாத்திரங்களில் போட்டு வைக்க முடியும் என்றால் அது உப்பு இல்லை... நமக்கான வியாதி... கல் உப்பு நல்லது...

    • @limboslim4296
      @limboslim4296 Před 19 dny

      Konjam uppu eduthu sapital yen udambu thaneer ketkiradhu? Ipdi nam udambal sagikka mudiyadha uppu epdi namakku nalladhagum?

    • @Haifriends791
      @Haifriends791 Před 17 dny

      ​@@limboslim4296தண்ணீர் தேவை உடலுக்கு முக்கியமான ஒன்று. உப்பு அந்த தேவையை உணர்த்துகிறது. தண்ணி குடிக்கலனா. மலசிக்கல் குடல் சீரன கோளாறு தோல் வறட்சி . முன்னோர் அறிவில்லாமல் சேர்த்து நமக்கு ருசி உணர்த்தி உள்ளார்கள். அதிகமா சாப்பிட கூடாது எதுவும் ஒரு அளவோட இருக்கும் போது அது நன்மையே.

  • @suba8158
    @suba8158 Před 23 dny +14

    நரம்பு மண்டலம் என்னவாகும? (நாக்கு?)

  • @Haifriends791
    @Haifriends791 Před 17 dny +3

    முன்னோர்கள் அறிவில்லாமல் இல்லை.எல்லாம் பார்த்து பக்குவடைந்த உணவுக்கு உப்பு அவசியம் உப்பு சேர்த்து நமக்கு ருசி உணர்த்தி உள்ளார்கள்.உப்பு உடல் தேவையை உணர்த்துகிறது. தண்ணி குடிக்கலனா. மலசிக்கல் குடல் சீரன கோளாறு தோல் வறட்சி . அதிகமா சாப்பிட கூடாது எதுவும் ஒரு அளவோட இருக்கும் போது அது நன்மையே.

  • @sureshkumarr4165
    @sureshkumarr4165 Před 17 dny +2

    அடுத்த வருசம்மா சினாக்காரன் இந்த வருசமே டுப்ளிகட் ட கொன்டு வந்துருவான்

  • @gvbalajee
    @gvbalajee Před 19 dny +1

    wonderful

  • @shanthiyoga1901
    @shanthiyoga1901 Před 21 dnem

    OMG! Incredible!!!

  • @rajeskailas
    @rajeskailas Před 24 dny +10

    Just 10,000 only 😂

    • @FreeTibet4451
      @FreeTibet4451 Před 19 dny +1

      விலையை கேட்டாலே உயர் ரத்த அழுத்தம் தானா வந்துரும்😂

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Před 23 dny +3

    Later...tongue...will be affected
    And people cannot talk

  • @sumathibalakrishnan2891

    உப்பை மண் பானையில் போட்டு வைத்தால் உப்பின் கரிப்பு தன்மை குறையும் ; உடலுக்கும் கெடுதல் இல்லை. பழைய வழக்கங்கள் வர வேண்டும்.

  • @nazeemabanu3955
    @nazeemabanu3955 Před 19 dny

    🎉🎉🎉

  • @girijasadasivam6182

    Vantha santhaila vilaikurayum

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh Před 21 dnem +6

    வாய் கெட்டுப்போறது உறுதி

  • @raja-kalai
    @raja-kalai Před 19 dny +3

    Shock adichaa? 😂😂

    • @idhayasrikrishnachandran1212
      @idhayasrikrishnachandran1212 Před 19 dny

      அதான் நாக்கு நடனம் ஆடும்னு சொல்றாரே..😂

  • @gamingtamil6034
    @gamingtamil6034 Před 24 dny +7

    சொறன இருக்காது

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs Před 16 dny

    🎉Rate 10k va😮

  • @jjs5979
    @jjs5979 Před 22 dny +2

    அப்ப...... நாக்குல சூடு வைக்கனுமா???🔥

  • @shivaprakash2486
    @shivaprakash2486 Před 14 dny

    What’s the name of this guy?

  • @logeshkumarn
    @logeshkumarn Před 23 dny +2

    China will clone this sponge in a couple of days

  • @user-ff4qj1qr9l
    @user-ff4qj1qr9l Před 15 dny

    kanji kutithapa nallathan irunthom

  • @amirthavasan7044
    @amirthavasan7044 Před 17 dny

    Next disease ready?

  • @nandhawth4097
    @nandhawth4097 Před 17 dny

    Mmmm,,,,spooonoya,,, decease varap pogudhu😂😂😂😂😂😂

  • @chitrav2494
    @chitrav2494 Před 19 dny

    😅😮😅

  • @prabhusp6993
    @prabhusp6993 Před 19 dny

    😂😂😂Kandippa adutha noikku ready aagi da vendiyathaan

  • @rajeshskr2041
    @rajeshskr2041 Před 19 dny

    But this will be not applicable in tamilnadu because we all only by hands😂

  • @subbulakshmi5595
    @subbulakshmi5595 Před 19 dny

    Mothala korana varatha maruthu kadu pidika solugha

  • @pks001
    @pks001 Před 17 dny

    This will cause electro magnet effect in our body in the long term. It might cause new issues in the body

  • @akilanofficial2021
    @akilanofficial2021 Před 19 dny

    சாவு நிச்சயம்

  • @invisibledon4060
    @invisibledon4060 Před 17 dny

    Mooku kodapa iruntha ipdi ellam yosika thonum😂
    Enda ithu thevaiya...upu sathum namaku thevai corectana alavula apo tha iodine kidaikum thyroid pondra prechanai varathu..

  • @HistroyofTamil
    @HistroyofTamil Před 23 dny

    ஊருட்டு ஊருட்டு 😜😜😜

  • @firesarathy
    @firesarathy Před 21 dnem

    Poya

  • @babustr2612
    @babustr2612 Před 17 dny

    Loosup....