நேர்காணல் | அடையாள அரசியலை ஒரு தமிழ் எழுத்தாளன் முன்வைப்பதில் இருக்கும் சிக்கல்கள்? - சுரேஷ் பிரதீப்

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2024
  • சுரேஷ் பிரதீப் - நேர்காணல்
    Suresh Pradheep
    #TamilLiterature #ShrutiTVLiterature
    00:00 - கேள்வி சுனில் கிருஷ்ணனிடமிருந்து.. நீங்கள் குறுகிய காலத்தில் நிறைய சிறுகதைகள் எழுதி இருந்தாலும் நாவலசிரியராகவே உணர்வதாக சொல்லியிருக்கிறீர்கள். ஏன் அப்படி?
    02:22 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. தஞ்சை மண் பெரிய அளவில் நிலத்தகராறு சாதிச்சண்டைகள் நிகழாத ஊர். தஞ்சை எழுத்தாளர்கள் நிலம் சார்ந்து எழுதியவையை விட மனித உணர்ச்சிகள் சார்ந்த எழுதியவை அதிகம். நீங்களும் அந்த வரிசையில்தான் வருகிறீர்கள்.
    04:41 - கேள்வி அனோஜன் பாலகிருஷ்ணனிடமிருந்து.. லட்சியவாதத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அவநம்பிக்கை விமர்சனம், தங்களுக்கு நாட்டமான காந்தியத்துடன் எப்படி உரையாடுகிறது?
    07:50 - கேள்வி சுனில் கிருஷ்ணனிடமிருந்து.. ஒரு கரு சிறுகதைக்கு உரியதா நாவலுக்கு உரியதா என்பதை எப்படி தீர்மானிக்கிறீர்கள் ?
    11:25 - கேள்வி சுனில் கிருஷ்ணனிடமிருந்து.. எழுத்தாளர் ஏதோ ஒரு வகையில் நிலத்தின் குரலாக ஒலிப்பவர் எனும் நம்பிக்கை உண்டு. வளமான நவீன இலக்கிய பாரம்பரியம் கொண்டது தஞ்சை. அவ்வகையில் உங்கள் கதையில் நிலத்தின் குரல் ஒலிக்கிறதா? தஞ்சை எழுத்து பாரம்பர்யம் உங்களுள் நீட்சி கொள்கிறதாக உணர்கிறீர்களா?
    14:58 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. தஞ்சையின் நிலம் சார்ந்த கதைகள் அதிகம் எழுதப்படவில்லை. இப்போதுதான் சிறுகதை (ரா.செந்தில்குமார்), நாவல் (தீம்புனல்) என எழுந்து வருகிறது.
    18:03 - கேள்வி சுனில் கிருஷ்ணனிடமிருந்து.. அயோத்திதாசரின் சிந்தனை முறை அறிவியலுக்கு புறம்பானவை, வரலாற்றுபூர்வமானவை அல்ல எனும் விமர்சனம் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்.
    22:58 - கேள்வி சுனில் கிருஷ்ணனிடமிருந்து.. டி. தருமராஜ் உங்கள் ஆசிரியர்களில் ஒருவர். அவருடைய முக்கிய பங்களிப்பு என எதை சொல்வீர்கள்? அவரிடமிருந்து நீங்கள் பெற்றது என்ன?
    26:06 - கேள்வி அனோஜன் பாலகிருஷ்ணனிடமிருந்து.. அயோத்திதாசரின் கருத்தியல் மீள் வருகை எந்த விதத்தில் தலித்தியர்களின் விடுதலைக்கு உதவக்கூடியது?
    39:10 - கேள்வி சுனில் கிருஷ்ணனிடமிருந்து.. நீங்கள் கணிசமாக மதிப்புரைகளும் விமர்சனங்களும் எழுதியவர். புனைவு எழுத்தாளர் கட்டுரைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனும் எண்ணம் பல புனைவு எழுத்தாளர்களுக்கு உண்டு. அது மொழியை குலைக்கும் என்பார்கள். உங்கள் பார்வை என்ன?
    41:46 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. பெண்கள் மற்றும் காமம் குறித்த விடலைத்தனமான கற்பனையிலிருந்து உங்கள் எழுத்து மாறுபட்டது. அதேநேரம் உங்கள் கதைகளில் பெண்களை அதிகம் எதிர்மறையாக புனைந்து தருகிறீர்கள். இது மதங்கள் வற்புறுத்தும் ஒழுக்கவியல் சிந்தனைக்கு பலம் சேர்ப்பது போல உள்ளதே? இது குறித்து ஆலோசிக்கிறீர்களா?
    44:37 - கேள்வி அனோஜன் பாலகிருஷ்ணனிடமிருந்து.. அடையாள அரசியலை ஒரு தமிழ் எழுத்தாளன் முன்வைப்பதில் இருக்கும் சிக்கல்கள்?
    48:28 - கேள்வி அனோஜன் பாலகிருஷ்ணனிடமிருந்து.. மனித உறவுகளுக்கு அடியில் புதையுண்டு இருக்கும் குரூரம் வாழ்வின் எதார்த்தமாக உங்கள் படைப்புகள் வழியாக திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன. உங்கள் திருமண வாழ்க்கை இந்தப் பார்வையில் ஏதாவது மாற்றத்தை உண்டு செய்யுமா?
    52:30 - கேள்வி சுனில் கிருஷ்ணனிடமிருந்து.. அவநம்பிக்கைவாதத்தை ஒரு மெய்யியல் நிலைபாடாக கொள்ளமுடியுமா? அது ஒரு எதிர்வினை மட்டும்தானே?
    55:06 - கேள்வி அனோஜன் பாலகிருஷ்ணனிடமிருந்து.. கூட்டுக் குடும்பத்தின் பெரிய புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு ஏற்படும் பதட்டத்தின் காரணம் என்ன?
    59:33 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. இஞ்சினியரிங் படித்து அஞ்சலகத்தில் வேலைபார்க்கும் எழுத்தாளர் என்பது ஆர்வமூட்டுகிறது. இஞ்சினியரிங் படித்தால் இன்ஜினியர் மட்டும் ஆக முடியாது என்கிற இன்றைய கிண்டல் மீம் களுக்கு எழுத்தாளராக சீரியஸான பதில் என்ன?
    1:03:21 - கேள்வி சுனில் கிருஷ்ணனிடமிருந்து.. ஒளிர் நிழல் ஒருவகையான மோனொலாக் என எனக்கு தோன்றியதுண்டு. குணா சக்தி ஆகியோரின் ஒன்றின் இரு பிரதிநிதிகள் என்பது போல. எல்லா படைப்புகளுமே ஒருவகையில் மோனோலாக் தான் என்றாலும். ஒளிர் நிழல் எனும் இந்த உள் உரையாடல் நிகழ எது உந்தியது? அந்த உரையாடல் நாவலாக முடிந்த பின் நீங்கள் அடைந்தது என்ன?
    1:04:50 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. தஞ்சை மாவட்டத்திற்குள்ளும் புலம் பெயர்வது நிகழ்கிறது. பிழைப்புக்காக வெளிநாடு சென்றவர்களும் தஞ்சையில் மிகுதி..
    1:06:04 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. காவிரிக்கரை ஆளான உங்களுக்கு நிலம் சார்ந்து எழுதும் எண்ணம் உண்டா ?
    1:07:00 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. உளவியல் உங்களுக்கு ஆர்வமான துறையா என உங்கள் புத்தகங்களை படிக்கையில் தோன்றுகிறது. உங்களுடைய பாத்திரங்கள் குறித்த உளவியல் முன்முடிவுகள் எல்லாம் அது சார்ந்த வாசிப்பின் அடிப்படையா அல்லது கற்பனையானதா?
    1:08:04 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. உங்கள் கதைகளில் பல வகைப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். அனைவரும் ஒரு பயணத்தில் காணத்தக்க அருகாமையான மனிதர்களாகவும் உள்ளனர். இந்த நுட்பமான பிரித்தெடுத்தல் உங்களின் தனிச்சிறப்பு. அதற்கு வாழ்த்துகள். 'மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்' என்பது போன்ற ஒற்றை வரியில் சுருக்க சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்
    1:09:20 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. பேரிலக்கிய வாசிப்பின் பாதிப்பு இன்றைய எழுத்தாளர்களிடம் உண்டு. உங்களிடம் கூட தஸ்தவ்யேஸ்கி மற்றும் ஜெயமோகனின் இருள் எழுத்தின் பாதிப்பு இருக்கிறது. அதை கவனமாக தவிர்க்க எண்ணுவதுண்டா அல்லது இயல்பாக விடுகிறீர்களா
    1:10:07 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. ஒளிர்நிழலில் தலித் அரசியல் சார்ந்து மெல்லிய விமர்சனம் உண்டு. அதை குறித்த உங்கள் பார்வையை விரித்து எழுத உத்தேசம் இருக்கிறதா?
    1:11:55 - கேள்வி காளிப்ரஸாத்திடமிருந்து.. உங்கள் விமர்சன கட்டுரைகள் படைப்பை வாசிப்பவருக்கு உதவியாக இருக்கவேண்டும் என கருதுவீர்களா அல்லது உங்களுக்காக தொகுத்துக்கொள்வதா?

Komentáře • 13

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Před 2 lety

    சிறப்பு

  • @whyyes7561
    @whyyes7561 Před 2 lety

    அருமையான கேள்விகள். ஆழமான பதில்கள். கேள்வியைக் கேட்பவர் ஒருமுறை வாசித்துப்பார்த்துவிட்டுக் கேட்கலாம். இன்னும் தெளிவாக இருக்கும். அல்லது அவர் கேட்பதைக் கத்தரித்துவிடலாம். சிறு வேண்டுகோள்.

  • @dhanda1977
    @dhanda1977 Před 2 lety +1

    suresh : casual and backdrop is really beautiful and refreshing

  • @mylifemywaynandinibaskaran

    Suresh super 👍👍

  • @balaji-108
    @balaji-108 Před 2 lety +1

    மிகவும் அருமை, நேர்த்தியான பதில், மாறுபட்ட கண்ணோட்டம்.
    இவ்விடம் எங்கு உள்ளது.
    (எழுத்தாளரின் பின் உள்ள)

    • @ShrutiTv1
      @ShrutiTv1 Před 2 lety

      திருவாரூர். சுரேஷ் பிரதீப் சொந்த ஊர்

  • @mahalakshmimarimuthu9594
    @mahalakshmimarimuthu9594 Před 2 lety +1

    Sir very casual interview and simple and detailed explanations u r always rocking my hearty wishes for ur priceless literary works

  • @absolute5517
    @absolute5517 Před 2 lety

    👍

  • @aravindan4438
    @aravindan4438 Před 2 lety +1

    Bloopers podunga... Sir

  • @dhivyam5262
    @dhivyam5262 Před 2 lety

    Hi sir

  • @dhivyam5262
    @dhivyam5262 Před 2 lety

    How is priyadharshini

  • @thirunavukkarasusivagnanam8847

    Aazhamana nutpamana paarvai