சார நாராயண பெருமாள் கோவில், திருவடிகை

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சி தருகிறார். பெருமாள் கோவில்களில், நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தரும் ஒரே தலம் இதுதான் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
    பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடாழ்வார், கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் அஞ்சலி முத்திரையுடன் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார் இரு கைகளையும் கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் காட்சி தருவது ஒரு அபூர்வமான தோற்றமாகும். பெருமாள் இந்த கருடாழ்வாருக்கு, சங்கு சக்கரத்தை திரிபுர சம்ஹாரத்தின் போது கொடுத்தார் என்று புராணம் கூறுகின்றது.
  • Hudba

Komentáře • 1