Video není dostupné.
Omlouváme se.

செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் தொகுப்பைத் தற்போது காணலாம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2019
  • Click here to watch Live updates on election results: • 🔴LIVE: Captain News Li... Chennai Mango | செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் தொகுப்பைத் தற்போது காணலாம்
    கார்பைடு கற்களைக் கொண்டு பழங்களை பழுக்க வைப்பதாக ஆண்டுதோறும் குற்றச்சாட்டு எழுவது வழக்கம். இந்த முறைக்கு அரசு தடை விதித்ததையடுத்து எத்தலின் போடப்பட்டு பழங்கள் பழுக்க வைக்கப்பட்டன. இதுவும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகளை உருவாக்கத் தொடங்கியதால் இந்த முறைக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கோடைகால கால பழங்களான பப்பாளி, தர்பூசணி, கிர்ணி, மற்றும் மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால் பழங்கள் பழுக்க நாளாவதால் மக்களுக்குத் தேவையான பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட முறையில் பழங்கள் பழுக்க வைக்க ஏதுவாகும் என்பதால், மக்களின் உடல் நலனைக் காக்கும் வகையில் செயற்றை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் புதிய முறையை உணவு பாதுகாப்புத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
    (பைட்)
    இதன்படி, 100 பிபிஎம் அளவு கொண்ட எத்திலின் செட்டை, நீரில் ஊற வைத்த பின், 5 கிலோ பழங்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் சின்ன பேழையில் 24 மணி நேரம் வைக்கப்படுகிறது. இதன் மூலம் எத்திலின் வாயு வெளியேற்றப்பட்டு பழங்கள் செயற்கை முறையில், பழுக்க வைக்கப்படுகிறது. அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த முறை தவிர, நேரடியாக பழங்களுக்கிடையே எத்திலின் வைத்தோ, கார்பைடு கற்கள் வைத்தோ பழுக்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் புதிய முறை குறித்து வியாபாரிகளுக்கு விளக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    (பைட்)
    மேலும், தடை செய்யப்பட்ட முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எப்படி கண்டறிவது என்பது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விற்பனை அங்காடிகளிலும், பழக் கடைகளிலும் துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாகைகளை வைத்துள்ளது உணவு பாதுகாப்புத்துறை. அதன்படி, இயற்கையாக பழுக்கப்பட்ட பழங்களை விட செயற்கையாக பழுக்கப்பட்ட பழங்கள் எடைக்குறைவாக இருக்கும். தோலானது வெளிறிய மஞ்சள் நிறமாக இருக்கும். மணம் குறைவாகவும் புளிப்புச் சுவையுடனும் இருக்கும். வெளிப்புறத்தில் பழமாகவும் உள்புறத்தில் காயாகவும் இருக்கும். 2 அல்லது 3 நாள்களில் கருப்பாக நிறம் மாறும். இதன் மூலம் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம். உணவுப் பாதுகாப்புத்துறையின் இந்த நடவடிக்கை, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. #unartificial #mango #fruits
    #CaptainNews | #TamilNews
    Like: / captainnewstv
    Follow: / captainnewstv
    Web: www.captainnews...

Komentáře • 1

  • @elangkumanan9080
    @elangkumanan9080 Před 4 lety +1

    புதிய மொந்தையில் பழைய கள் ,தூ தூ தூ