இரவு 7.00 மணி DD தமிழ் செய்திகள் [12.07.2024]

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • 1) எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா ஒத்துழைப்பை நல்கும் - பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி உறுதி
    2) ஜூன் 25 ம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு -1975 ம் ஆண்டு அவசர நிலையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக இது அமையும் என பிரதமர் மோதி தகவல்
    3) இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் தயார்.
    4) மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் - கள்ளச்சாராயத்தை தயாரித்து, விற்பனை செய்வோருக்கு ஆயுள் தண்டனை
    5) முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு- தலைமைச்செயலகம் செல்ல தடை
    6) முதலமைச்சர் மு க ஸ்டாலினுடன் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி செய்வதாக புகார்.
    7) நாடு முழுவதும் மீன்வளத்துறை மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகிறது - மதுரையில் நடைபெற்ற மீன்வளத்துறை மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜீவ்ரஞ்சன் சிங் பேச்சு
    8) தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
    Visit : TamilNews - Doordarshan
    EMAIL : PodhigaiNews2007@gmail.com
    INSTAGRAM : / ddpodhigainews
    FACEBOOK : / ddpodhigainews
    TWITTER : / tamilnews-doordarshan@...
    CZcams : / tamilnewsdoordarshan

Komentáře •